அருணாசலத்தில் பகவான் ரமணர்
பகவான் திருவண்ணாமலைக்கு 1896 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தேதி. வந்து சேர்ந்தார். அப்படி வந்து சேருவதற்கு அவருக்கு உதவிய ஒரு பெரியவர் எங்கிருந்து வந்தார் எங்கு போனார் என்று பகவானுக்கு தெரியாதாம். ஒருவேளை அருணாசலேஸ்வரரே மனித உருவில் வந்து உதவியிருப்பாரோ என்னவோ! வருகிற வழியில் கீழூரில் வீரேட்டேஸ்வரரை தரிசித்து விட்டு பசியால் வாடிப் போய் முத்துக்கிருஷ்ண பாகவதர் என்பவர் வீட்டில் பிட்சை ஏற்றுக் கொண்டார். திருவண்ணாமலைக்கு போவதற்கு கையில் பணம் இல்லாமல் என்ன செய்வது என்று குழம்பி போனார். 20 மைல் நடப்பதற்கு உடம்பில் வலுவும் இல்லை.
காதிலிருந்த கடுக்கனை முத்து கிருஷ்ண பகவதரிடமே அடகு வைத்து நாலு ரூபாய் பெற்றுக்கொண்டார். ஒருவழியாக ரயில் ஏறி திருவண்ணாமலை வந்து சேர்ந்தார்.
முதலில் அவர் அருணாசலேஸ்வரர் திருகோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் தங்கினார். யாருடனும் பேசவும் இல்லை; உண்ணவும் இல்லை
ஆனால் சில வாண்டு சிறுவர்கள் அவரை அங்கே நிம்மதியாக இருக்க விடவில்லை. அவர்கள் தொந்திரவு பொறுக்காமல் கோவிலுக்குள்ளிருந்த பாதாள லிங்க அறையில் மறைந்து வாழத் தலைப் பட்டார்.
அங்கேயும் அந்த சிறுவர்கள் நிம்மதியாக இருக்க விடவில்லை. அப்பொழுது தான் சேஷாத்திரி ஸ்வாமிகள் கடவுளால் அனுப்பப் பட்டவர் போல் வந்து அந்த சிறுவர்களிடமிருந்து பகவானை காப்பற்றினார்.
அன்று பாதள லிங்கம் மிகவும் மோசமான நிலையிலிருந்தது. ரமணரின் உடலை எறும்புகளும் பூச்சி புழுக்களும் துன்புறுத்திக்கொண்டிருந்தன. ஆனா ல் அவர் எதையுமே உணரவில்லை.
பாதாள லிங்கம்
சிறிது நாட்களுக்குப் பின் ஊர்க்காரர்கள் சிலர் சேர்ந்து அவரை வலுக்கட்டாயமாக தூக்கிக்கொண்டு வந்து சுப்பிரமண்ய சுவாமி கோவிலில் உட்கார வைத்தார்கள்.அந்த நல்ல மனிதர்கள் அவரை கட்டாயப்படுத்தி உண்ணவைத்தார்கள்.அதுவும் அவர் உணர்ந்தாரில்லை.இந்த சந்தர்ப்பத்தில்தான் அவருக்கு பிராமண சன்யாசி என்ற பெயர் வந்தது.பிறகு அதுவே ரமணராக மாறியது.
மதுரையில் ஏற்பட்ட மரணானுபவத்திற்கு பின் அவர் எந்த பெயரையும் உபயோகப்ப்டுத்தியது கிடையாது.வீட்டிலிருந்து புறப்பட்டு வரும்பொழுது தான் எழுதி வைத்து விட்டவந்த குறிப்பில் கூடஎந்த பெயரையும் எழுத வில்லை.பின்னொரு காலத்தில் ரமணாசிரமம் தயாரித்த உயில் பத்திரத்தில் கூட அவர் பெயர் எழுதவில்லை.அதுவே ஒரு பெரிய சட்ட பிரச்சினையாகி பிரிட்டீஷ் அரசாங்கம் ஒரு ஜுடீஷியல் கம்மிஷனை நியமிக்க வேண்டி வந்தது.ரமணர் உயிலை படித்து விட்டு அடியில் போட்டிருந்த ஒரு கோட்டையே அவரது கையெழுதாக அங்கீகரிக்கவும் செய்தது
ஆனால் அவர் தன்னை பிறர் ரமணர் என்று கூறுவதை புரிந்துகொன்டிருந்தார். எந்த பெயரை சொல்லிக் கூப்பிட்டிருந்தாலும் அவருக்கு இஷ்டமோ அனிஷ்டமோ இருந்திருக்காது.ஞானிகளுக்கு ஏது இஷ்டானிஷ்டங்கள்?