ரமணஜோதி 2
முடிவில்லாத தேடல்
மனிதன் தோன்றிய காலத்திலிருந்து பதில் காணப்படாமல் இருந்து வரும் ஒரே ஒரு கேள்வி, இந்த உலகத்தின் ஆரம்பம் எது? முடிவு எது?
மனிதன் தேடிக் கொண்டேயிருக்கிறான்.
இதற்க்கான பதில் பாரத தேசத்து புராதன குரு பரம்பரை அளித்த உப நிஷத்துக்களில் உள்ளது..
உபனிஷத்துக்கள் உறுதியாகக் கூறும் ஒரே உண்மை, “இன்று உலகத்தில் காணும் எல்லா பொருள்களும் ஒரு உருவமற்ற சத்யத்திலிருந்து உண்டானது.. அவை ஆடி அடங்குவதும் அந்த அருவமான சத்யத்தில் தான்..அந்த பரமமான சத்யத்தை சிலர் பிரம்மம் ,மற்று சிலர் பரப்பிரம்மம் என்றும் இன்னும் சிலர் பகவான் என்றும் கூறுகிறார்கள்.
ஓங்காரத்தின் பொருளும் இது தான்.
அகரம் சத்தையும், உகரம் சித்தையும் மகாரம் ஆனந்த்தையும் குறிக்கிறது
சத் சித் ஆனந்தம் தான் பகவான்.
கடலிலிருந்து எழும் அலைகள் தொடர்ந்து கரையில் வந்து சேர்ந்து கொண்டேயிருக்கிறது. அவை வரும்பொழுது தனித்தனியாக வருகிறது.அவைகளை ஒன்று இரண்டு என்று எண்ணலாம்.ஆனால் அவை எல்லாம் கடலிருந்துதான் வருகிறது..திரும்ப சென்றடைவதும் கடலில்த்தான். கடலுக்கு நீரிலிருந்து வேறுபட்ட ஒரு இயல்பு/இருப்பு அவைகளுக்கு கிடையாது. ஒவ்வொரு அலையும் வரும்பொழுது கணக்கிலடங்கா நீர்த்திவலைகள் தெறித்து விழுகின்றன.அந்த நீர்த்திவலைகளுக்கும் அலைகளிலிருந்தோ கடல் நீரிலிருந்தோ தனியான இருப்பு இல்லை. அதேபோல் நாமும் எல்லா சரா சரங்களும்-அசையும் அசையாமல் பொருட்களும்- அந்த பரப்பிரம்மத்தின் பகுதிதான்.
அந்த பரப்பிரம்மத்தின் அருளோடு நான் இந்த அலசல் பரம்பரையை தொடங்குகிறேன்
No comments:
Post a Comment