ரமணஜோதி 119
நிஜமான சாதனை
விட்டிடிர்
கட்டமாம் விட்டிடா துனையுயிர்
விட்டிட வருள்புரி யருணாசலா
'நான் உனை விடாமல் நினைத்துக்
கொண்டேயிருக்கவும் அந்த நினைப்பிலேயே உயிர் விடவும் அருள்வாய் அருணாசல.இல்லயேல்
என் நிலைமை மிகவும் கஷ்டமாகிவிதும்' என்கிறார் பகவன்
ரமணர் இந்த சுலோகத்தில்.
வாழ் நாள் முழுவதும் நல்லதை செய்து கொண்திருந்தாலும் இறக்கும் தறுவாயில்
வேண்டாத எண்ணங்கள் மனதில் தோன்றுமேயானால் பிறப்பு-இறப்பு எனும் சம்சார சுழற்சியில்
அகப்பட்டுக்கொண்டுள்ள ஜீவாத்மாக்கள் கடைசி நினைப்பை நிறைவேற்றுவதற்காக மறுபிறவி
எடுத்து கஷ்டப் பட நேரிடும்.இந்த சுலோகத்தின் பொருளை சிறிது எதிர்மறையாக
சிந்தித்துப் பார்த்தால் வாழ் நாள் பூராவும் லௌகீக
சுகஙளிலும் இந்திரிய சம்பந்தமான பற்றுதல்களில் கத்துப்பத்து இருந்து விட்டு
கதைசிக் களத்தில் மட்டும் படமனை நினைத்துவித்தால் ஜீவாத்மாக்கள் பரமனை
சென்றடைந்த்துவிடமுடியுமா?
முடியாது.திட்டவட்டமாக முடியாது.நாம் வாழ்.நாள் முழுவதும் எதன் மீது பற்று
வைக்கிறோமோ அது தான் கடைசி காலத்தில் க்னாபகத்திற்கு வரும்.காலம் பூராவும் பரமனை
நினைத்துக்கொண்திருந்தால் பரமன் நினைவிற்கு வருவான்
இந்த இடத்தில் பகவத் கீதையில் எட்டாம் அத்தியாயத்தில் பகவன் கிருஷ்ணர் கூறுவது
நினைத்துப் பார்க்க தகுதியானது எனறு எண்ணுகிறேன்.
யம்
யம் வாபி ஸ்மரன்பாவம் ட்யஜத்யந்தே கலேவரம்
தம்
தமேவைதி கௌந்தேய ஸதா த்த்பாவபாவித:!!
ப.கீ
அரத்8 சுலோ 6
‘இறுதி காலத்தில் எப்பொருளை எண்ணிக்கொண்டு ஒருவன்
உடலை த்யஜிக்கிறானோ, எப்பொழுதும் அப்பொருளை பாவிப்பவனாகிய அவன், அதையே
அடைகிறான்.இந்த் சுலோகத்தில் முக்கியமான பகுதி, “ஸதா த்த்பாவபாவிதா:” எப்பொருளை
ஒருவன் தன் ஆயுட்க்காலம் முழுவதும்
நினைத்துக்கொண்டிருக்கிறானோ அந்தப்பொருளையே அவன் இறக்கும் தறுவாயிலும்
நினைப்பான்.ஆஅவர் ஆயுட்காலம் முழுவதும் பரமனை நினைந்து கொண்டு ஆத்மக்னானத்திற்காக
முயல வேண்டும்.அப்பொழுது தான் தேகத்தை விட்டு ப்போனதும் அவனுக்கு முக்தி
கிடைக்கும்னமது கர்மாக்கள் நம் ஆத்மாவில் மிகுந்த தாக்கத்தை உள்வாக்குகின்றன்.
ஒருவன் வாழ்னாள் பூராவும் பௌதீக சுகங்களுக்காக அலைந்து கொண்டிருந்து விட்டு சாகும்
தறுவாயில் ஆத்ம ஞானத்தை வேண்டினால் ஆத்ம ஞானம் கிடையாது என்பது மட்டுமல்ல அவனாலந்த
நேரத்தில் ஆத்ம ஞானத்தைப் பற்றி சிந்திக்க்கூட
இயலாது .அவன் வாழ் நாள் பூராவும் எதைத் தேடினானோ அது தான் அவன் சிந்தனையில்
மேலோங்கி நிற்கும்.ஏனென்றால் பௌதீக சுகங்களில் ஒருவன் ஒருனாளும் திருப்தி
காணமுடியாது.கானல் நீரைத் தேடி பாலைவனத்தில் ஓடும் மனிதனின் நிலை தான் அவனது
நிலை.சாகும்பொழுது அவன் நிஜ நீரை—உண்மையான சாந்தியை அடைய முடியாது.ஆகவே நாம் நல்ல
ஆரோக்கியத்துடன் இருக்கும்பொழுதே முக்திக்கு வழி தேட வேண்டும்; ஞானத்தை நோக்கிச்
செல்ல வேண்டும்.அப்பொழுது தான் ஒருவேளை நமது இந்த ஜன்மத்தில் ஆத்மசாக்ஷாத்காரம்
காணமுடியவில்லை என்றாலும் மறுபிறவியிலாவது அடைய முடியும்.
இதற்கு முந்தைய சுலோகத்தில் பகவான் கிருஷ்ணர்
இந்தக் கருத்திற்கு பலமான அஸ்திவாரம் அமத்திருக்கிறார்.
अन्त्काले च मामेव स्मरन्मुक्त्वा कलेवरम् !
य्: प्रयति स मध्भावम् याति नास्त्यत्र सम्य्: !!
அந்தகாலே ச மாமேவ ஸ்மரனமுக்த்வா கலேவரம் !
ய:
ப்ரயாதி ஸ மத்பாவம் யாதி நாஸ்ட்யற்ற சம்சய:!!
அந்தகாலே ச
கடைசிகாலத்திலும் ,மாம் ஸ்மரன் எனை நினைத்துக் கொண்டிருப்பவர்கள் ஸ
மத்பாவம் யாதி-எனது குண்னலங்களை பெறுகிறார்கள்.
ச:-- உம் கடைசிகாலயத்திலும் என்ற பத்த்தின்
மூலம் பகவான் எவனொருவன் வாழ்னாளிலும் தொடர்ந்து இந்த உடல நீக்கின்ற கடைசி
காலத்திலும் கூட என்னை நினைத்துக் கொண்டிருப்பவர்கள் அதாவது விடாது என்னை
நினைத்துக் கொண்டிருப்பவர்கள் என்று சொல்கிறார்.அவர்கள் என் குண்னலங்களை பெறுவர்
என்றால் அவ்ர்கள் நானாகவே ஆகிவிடுகிறார்கள்.பிரம்மத்தில் லயித்துவிடுகின்றனர்
என்று கூறுகிறார்.சாதாரணமாக வாழ்னாளில் பரமனை நினைத்துக் கொண்டிருப்பது அவ்வளவு
கஷ்டமல்ல. ஆனால் உடல் விட்டு
போகப் போகிறோம் என்ற்றியும் பொழுது இழப்பின்
தாக்கம் சிறிது பாதிக்கத்தான் செய்யும்.இனிமேல் இந்த உடலால்- இந்திரியங்களால் ஒரு
சுகமும் அனுபவிக்க முடியாது என்ற வெளிப்பாடு உண்டாகும்பொழுது வருத்தம் மேலோங்கி
வரும்.இன்னும் கொஞ்சம் நாள் வாழ்ந்தால் இந்திரிய உத்பன்ன்ங்களான சுகங்களை
அனுபவிக்கலாமே என்று தோன்றத்தான் செய்யும்.அப்படிப்பட்ட எண்ணங்கள் எழமல்
அப்பொழுதும் ஈசுவரனை நினைக்கின்றவர்கள் ஈசுவரனாகவே ஆகிறார்கள்.
பரமன நினைப்பது—பிரம்மத்தை-நினைப்பது என்றால்
என்ன? பிரம்ம்ம் ஒரு பொருள் அல்ல; நினைத்துப் பார்ப்பதற்கு.பிரம்மத்தை அறிவது
என்பது மற்றஅறிவ் போல அல்ல. ‘நானே பிரம்மம்’ என்பது ஒரு வெற்று வாக்கியமல்ல.அது
ஆத்ம ஞானம்.’நான் யார்’ என்ற உணர்வு.அதை நினைத்து பார்க்க முடியாது.ஒரு முறை அதை
உணர்ந்து விட்டால் அது நம்மை விட்டுப் போகாது. அதை மறக்கவும் முடியாது; நினைக்கவும்
வேண்டியதில்லை.ஆத்ம ஞானம் ஏற்பட்டவர்களுக்கு மரணம் எந்த இழப்பையும்
உளவாக்குவதில்லை.ஸ்மரனை என்ற பத்த்தை பகவான் ஒரு அலங்காரசொல்லாகத்தான்
பயன்படுத்தியுள்ளார்.
ய ப்ரயாதி என்ற சொற்றொடர் மூலம் உயிர்-ஆத்மா எங்கோ
பயணமாகிறது என்று அர்த்தம் கொள்ளலாகாது.பலூனிலிருந்து வெளிவரும் காற்று எங்கே
போகிறது? அதன் பிறப்பிடமான வாயுவில் லயிக்கின்றது. நதி காட்டிலும் மேட்டிலும்
ஒழுகி கடைசியில் சமுத்திரத்தில் கலக்கின்றது. சமுத்திர நீர் சூரியனின் தாபத்தினால்
ஆவியாகி மேகமாகி, வாயுவினால் உந்தப்பட்டு மலைகளில் முட்டி மோதி மழையாக பூமியை
வந்தடைந்து காட்டிலும் மேட்டிலும் பயணித்து அதன் உறைவிடத்திற்கு வந்து
சேருகிறது.அதுபோல் ஜீவாத்மாக்களும் 84 லக்ஷம் பிறப்புகளுக்கு பின் பிரம்மத்துடன்
கலக்கிறது.இது இறப்பல்ல; அங்கே ஒரு இழப்பும் நேருவதில்லை;ஆகவே வருந்துவதற்கு
ஏதுவுமில்லை.
இதைத்தான் பகவான் ரமணர் இந்த சுலோகத்தில்
ஜீவாத்மாவின் வேண்டுதல் உருவத்தில் அழகாக தந்துள்ளார்.
விடுவதில்—இந்த
தேகத்தை விடுவதில் எந்த கஷ்டமுமில்லை; என்னை கைவிடாமல் உன்னுடன் ஐக்கியமாக அருள்
புரிவாய் அருணாசலா என்கிறர்.
No comments:
Post a Comment