ரமணஜோதி 5
கடவுள் வணக்கம்
எந்த ஒரு முயற்சி மேற்க்கொள்வதற்க்கு முன்பும் இறை வழிபாடு அல்லது இறை வணக்கம் செய்வது மரபு..இதை மங்களாசரணம் என்று சிலர் கூறுவார்கள்.
அந்த மரபின் படி நான் இங்கு தாண்டவராயன் பிள்ளை நூற்றாண்டுகளுக்குமுன் இயற்றிய வரிகளையே இறை வணக்கமாக தருகிறேன்.(கைவல்ய நவனீதம்)
பொன்னில மாதராசை பொருந்தினர் பொருந்தா ருள்ளந்
தன்னிலந் தரத்திற் சீவ சாட்சி மாத்திரமாய் நிற்கு
மெந்நிலங் களினு மிக்க வெழு நில மவற்றின் மேலா
நன்னில மருவு மேக நாயகன் பதங்கள் போற்றி.
பொன்,மண்,பெண் {இன்றைய காலகட்டத்தில் பெண்ணாசை என்பதர்க்குப் பதிலாக பாலியல் ஆசைகள் என்று கூறலாம்} என்னும் முப்பெரும் ஆசைகளுடையவர்கள்- அறிவிலிகள், மற்றும் அவ்வாசைகள் எதுவும் இல்லாத ஞானிகள் எல்லாருடைய உள்ளிலும் ஆகாயம் போன்று ஜீவசாட்சி மாத்திரமாய் நிற்கின்ற, சான்றோர் கூறும் ஞான பூமிகளெல்லாவற்றையும் விட மேலான, அயோத்தி ,காசி, மதுரை, மாயை,,காஞ்சி, அவந்திகை, துவாரகை, எனும் ஏழு புண்ணிய தலங்கலையும் விட மேலான திருப்பதியில் எழுந்தருளியிருக்கும் ஏகநாயகனாகிய நாரயணனை வணங்குகின்றேன்.
தாண்டவராயன் பிள்ளை அத்துடன் நிறுத்தவில்லை.அவர் அடுத்ததாக ஆன்ம சொரூபத்தை வணங்குகிறார் .எப்படிப்பட்ட ஆன்ம சொரூப் மென்றால் ஞான சூரியனாக சதா சர்வகாலமும் தானே ஒளிருகின்ற நிர்மலமான ஆன்ம சொரூபம். இந்த ஆன்ம சொரூபம் மாயையின் ரஜத ,சத்துவ ,தாமச குணங்களால் உலகத்தை படைத்து, காத்து,அழிக்கவும் செய்கின்ற பிரமனாகவும், விஷ்ணுவாகவும்,ஈஸ்வரனாகவும் இருக்கின்ற அனந்த மூர்த்தியே தான் என்று தாண்டவராயன் பிள்ளை கூறுகிறார்..இந்த அனந்த மூர்த்தி ஒரு பெரும் ஆனந்தகடல். அந்த பரிபூரண முக்தன் இந்த உலகத்திலிருக்கும் சகல இருளையும் போக்கி வெளிச்சம் பகருகிறான். ஆதலால் அவனை வணங்கி இந்த முயற்சியைத் தொடங்குகின்றேன். .
ஈன்றளித் தழிக்குஞ் செய்கைக் கேதுவா மயனாய் மாலா
யான்றவீ சனுமாய்த் தானே யனந்தமூர்த் தியுமாய் நிற்கும்
பூன்றமுத் தனுமா யின்பப் புண்ணரியா தவனாய் நாளுந்
தோன்றிய விமல போத சொரூபத்தைப் பணிகின் றேனே
ஆண்டவனை ம்ட்டும் வணங்கினால் போதாது என்றறிந்த அவர் அடுத்தாற்ப் போல் குரு வந்தனை செய்கிறார்.
எவருடை யருளால் யானே யெங்குமாம் பிரம மென்பால்
கவருடைப் புவனமெல்லாங் கற்பித மென்ற றிந்து
சுவரிடை வெளிபோல் யானென் சொரூபசு பாவ மானே
னோ அவருடைப் பதும பாத மநுதினம் பணிகின்றேனே.
யாருடைய கருணையினால் “நானும் நீயும் எல்லாம் ஒன்று தான்.நானும் பிரம்மம் நீயும் பிரம்மம்.எங்கும் நிறைந்த்திருப்பதும்
பிரம்மமே.” என்று தெரிந்துகொண்டேனோ அந்த குருவை வணங்குகின்றேன்.
‘எங்கும் நிறைந்திருக்கும் பிரம்மம் நானே என்று தெரிந்துகொண்டு,இந்த உலகமெல்லாம் மனித மனத்தின் கற்பனையே;சுவரின் இடையே தெரியும் ஆகாயம் எல்லாம் ஒன்றே;இவையெல்லாம் தெரிந்துகொண்ட என்னுடைய நிஜ சொரூபம் பிரம்மமே’ என்று எனக்கு உணர்த்திய என்னுடைய குருவின் தாமரை போன்ற பாதங்களை தினமும் வணங்கி நான் இந்த முயற்சியை ஆரம்பிகின்றேன்...(இதுவே தான் “அஹம் பிரஹ்மாஸ்மி” என்ற மஹா வாக்யத்தின் பொருளும்.)
No comments:
Post a Comment