ரமணஜோதி 120
மரணம்- ஒரு லயனம்; இழப்பல்ல!
வீடுவிட் டீர்த்துள வீடுபுக்குப் பையவுன்
வீடுகாட் டினையரு ளருணாசலா
“நான் எனது வீடு என்று நினைத்துக் கொண்டிருக்கும் இந்த
தேகத்தை—தேகப் பற்றை விட்டு, உண்மையான வீட்டை மெல்ல மெல்ல அடையாளம் கண்டு உன்
வீட்டை காட்டினாய் அருணாசலா” என்று கூறுகிறார் பகவான் ரமணர் இந்த சுலோகத்தில்.ஒரு
விதத்தில் பார்த்தால் அவர் தனது கடந்த காலத்தை நினைத்து அருணாசலனுக்கு நன்றி
சொல்லுவது போல் தோன்றும் இந்த சுலோகத்தின் கருத்து.திருச்சுழியில் பிறந்து மதுரையில் கல்வி பயின்று கொண்டிருந்த வெங்கட் ராமனை தன் வசம் ஈர்த்து, திருவண்ணாமலை
வரவழைத்து மெல்ல மெல்ல ஆத்ம ஞானத்தை புகட்டி ஞானியாக்கி, பகவானாக்கிய அந்த
அருணாசலனின் கருணையை நினைத்து வியக்குகிறார் ரமணர்.
ஆனால் எல்லோருமே இந்த மூன்று விதமான வீடுகளையும் அனுபவித்து
ஆத்ம சாக்ஷாத்காரம் நேட வேண்டும் என்றால் அருணாசலனின் அருள் வேண்டு என்கிறார்
பகவான் ரமணர்.
அதாவது முக்தி பெறுவது ஒரு நாள் விஷயமல்ல; ( ரமணர் போன்ற மஹான்களுக்கு அது ஒரு நிமிட
விஷயமாக சம்பவித்திருக்கலாம்) ஆனால் சாதாரண ஜீவாத்மாக்களுக்கு மெல்ல மெல்ல நீண்ட
கால அப்பியாசத்தினாலும் ஆத்ம விசாரணயினாலும் நிகழக்கூடியது.பரமனை மனதில் இருத்தி
ஆத்ம விசாரணை ஆரம்பிக்க வேண்டும்.அப்படி தொடர்ந்து செய்யும்பொழுது நாம் இகலோக
வீட்டிலிருந்து அகன்று பிரம்மத்தை நெருங்கி விடுவோம். ஆத்ம விசாரணை முடிந்து
பரமனுடன் ஐக்கியமாகும் நிலையில் நாம் மூன்றாவது வீட்டிற்குள் ஐக்கியமாகிறோம். அது
தான் முக்தி- மோக்ஷம்.
பகவத்கீதை எட்டாம் அத்தியாயம் எட்டாம் சுலோகத்தில் கீதாசாரியன் கீழ்கண்டவாறு கூறுகிறான்:
अभ्यासयोगयुक्तेन चेतसा नान्यगामिना !
परमम् पुरुशम् ढिव्यम् याति प्रार्थानुविचिन्तयन्!!
அப்யாஸயோகயுக்தேன சேதசா நான்யகாமினா !
பரமம் புருஷம் திவ்யம் யாதி பார்த்தானுசிந்தயன் !!
” பார்த்தா, வேறு விஷயங்களில் மனம் செல்லாது, அப்பியாசம் எனும் யோகத்தோடு
கூடிய சித்தத்தால் தேஜோமயமான பரம புருஷனை சிந்திக்கின்ற ஜீவாத்மா அப்புருஷனை
அடைகிறான்.”
ஒரே கருத்தை திரும்ப திரும்ப சொல்லுவது அப்பியாசமாகிறது.நாள் தோறும் பரம
புருஷனை நினைக்க, 'தான்' தான் இந்த உடல் அல்லது இந்த உடல் தான் 'தான்' என்ற நினைப்பு
மறைந்து போய்விடுகிறது.ஒரு காய் பழமாகும் பொழுது- பக்குவம் அடையும் பொழுது பழம்
மேல் தோலினின்று கழன்று பிரிவது போன்றது தான் ஆத்ம போதமும்.அந்தபக்குவப்பட்ட
நிலையில் தேக உணர்ச்சியை கடந்து நிற்கிறது.
தொடர்ந்து செய்யப்ப்டுகின்ற தியானம்
மூலம் அப்பியாசி யாரை தியானிக்கிறானோ அவனாகவே ஆகிவிடுகிறான்.நிரந்தரம் தியானத்தில்—ஒரே
நினைப்புடன் இருப்பவன்- எல்லா ஜீவஜாலங்களிலும் பரமனே குடிகொள்கிறான் என்ற
மஹாதத்துவத்தை உள்வாங்கிக் கொண்டிருக்கிறவன்,
பரமம் திவ்யம் புருஷம் யாதி
எல்லையில்லா-ஆதியும் அந்தமுமில்லா அந்த பரம புருஷனாகவே ஆகிவிடுகிறான்.ஆத்ம
சாக்ஷாத்காரம் அங்கு நிகழ்கிறது.ஜீவாத்மாவும் பரமாத்மாவும்
ஒன்றாகிவிடுகிறது.
பிரபஞ்ச தத்த்துவம் நிரூபிக்கப்பட்டு விடுகிறது.
இந்த மாதிரியான அப்பியாசத்தைக் குறித்து பகவான் ரமணர் கூறுவார்:
“நித்யனாக இருக்கும் ‘ தன்’னைப் பார்க்காமல் அனித்யமாக இருக்கும் சரீராதிகளைப்
பார்த்து பிரமையுறுகிறவனுக்கு அந்த பிரமையை நீக்க சாதனை தேவை.
‘தன்’னைப் பார்க்கிறவனுக்கு தனக்கு அன்னியமாக ஒன்றும் காணாது.” அப்படிப்பட்ட
பக்குவம் அடைந்தவனுக்கு சாதனை அப்பியாசம் தேவையில்லை. அந்த நிலைமையை அடையும்பொழுது
அவன் பரமனுடன் ஐக்கியமாகி விடுகிறான்.
பகவான் சொல்லுவார்,” சாக்ஷாத்காரம் என்றால் ‘ பாவனாதீத
சத்பாவ ஸ்திதி’( மனத்தின் எண்ணங்களுக்கு அப்பாற்பட்ட
நன்னெறியான உத்தம நிலையில் உறைவதே
இப்படிப்பட்ட பாவனாதீத சத்பாவ ஸ்திதி
சாமானியர்களுக்கு சாத்தியமா? பகவான் விடை கூறுகிறார்:
“ஆமாம், ஐயா, ( சாமானியர்களுக்கு)
சாதனை அவசியம் தான்;ஆனால் எதற்கு சாதனை? ‘தான்’ எப்பொழுதும் எங்கேயும் இருப்பது.
‘தன’க்காக முயற்சி செய்து எங்கிருந்தோ கொண்டு வரவேண்டிய அவசியமில்லை.’தான்’
‘தானாக’நிற்பதற்கு தடையாக இருக்கும் சரீரம் முதலிய மயக்கங்களை‘ நீக்குவதற்கே
சாதனை.
உண்மையான ‘தன்’’னைப் பார்க்காமல்
‘தன்’னால் பார்க்கப்படுகின்ற அசத்யமான
சரீரம் முதலிய உலகே சத்யம் என்று நினைப்பதால் பிராந்தியேற்படுகிறது.இந்த பிராந்தி
போவதற்குத் தான் சாதனையே தவிர ‘தன்னை தான்” அடைவதற்கு சாதனை எதற்கு? ‘தன்’னை’க்
கண்டவனுக்கு அன்னியமாக எதுவும் காணப்படாது”.
இன்னொரு முறை பக்தர் ஒருவர் கீதையில்
கர்மயோகத்தை பிரதானமாக கிருஷ்ணர் சொல்கிறாரே,பகவான்’ சாதனை’ முக்கியமில்லை என்கிறாரே
என்று கேட்டதற்கு பகவான் கீதையின் 9ஆம் அத்தியாயம் 16 சுலோகத்தை உத்தரித்து
சொல்லுவார், கிருஷ்ணனே சொல்லியிருக்கிறார்,” கர்மங்களில் முக்கியமான வேள்வி,அதன்
கர்த்தா,அதன் மந்திரம்,அதன் உபகரணம் யாவும் தானே “அப்படியென்றல் என்ன அர்த்தம்?
தன்னை மிஞ்சின கர்மங்கள் ஒன்றுமிலை என்று தானே?
அஹம் க்ரதுரஹம் யஜ்ன: ஸ்வ்தாஹம் அஹ்மௌஷதம் !
மந்த்ரோஹம் அஹமே வாஜ்யம் அஹமக்னிரஹம் ஹூதம்!!
வேதத்தில் விதிக்கப்பட்டுள்ள கர்தா கர்மமாகட்டும், ஸ்மிருதியில் சொல்லப்பட்டுள்ள யக்ஞமாகட்டும், பித்ருக்களுக்கு படைக்கப்படும் ஸ்வதா-உணவாகட்டும்,குணமடைய கொடுக்கப்படுகின்ற மருந்தாகட்டும்,நல்லது நடக்கட்டும் என்ற எண்ணமாகிய மந்திரமாகட்டும்,ஹோமத்தில் வார்க்கப் படுகின்ற வாஜ்யம் என்கின்ற நெய்யாகட்டும்,அந்த நெய்யை கொழுந்து விட்டு எரிய வைக்கின்ற அக்னியாகட்டும் ,ஹூதம் எனும் வேள்வி வேட்டல் எனும் வினையாகட்டும் எல்லாமே நான் தான்.ஆகவே என்னையன்றி வேறு என்ன கர்மம் உளது? ஆகவே எல்லாமே பிரம்மம் தான் என்று கிருஷ்ணர் கூறியுள்ளார். பிரம்மத்தை: நினைப்பதை விட மேலான கர்மம் என்ன உளது?.
அதே போல் நான்காம் அத்தியாயம் இருபத்தி நான்காம் சுலோகத்தில் கிருஷ்ணர் கூறுவார்:
செய்கின்ற வினைஅத்தனையும் பிரம்ம சொரூபமாகவே கருதுபவனை வினை கட்டுப்படுத்தாது“
பொருள்களனைத்தும் பிரம்மமே என்பது தான் சத்தியமான தத்துவம்.
இதை ‘பாரமார்த்திக திருஷ்டி’ என்பார்கள்.
பகவான் மேற்கண்ட கருத்துக்களை மற்றொருவிதமாக ‘உள்ளது நாற்பது-அனுபந்தம்’20 ஆம்
சுலோகத்தி கூறுகிறார்
இதயமலர்க் குகையகமா யிலகிறையே
குகேசனென வேத்தப் பட்டோ
நிதமனைய குகேசன்யா நெனுஞ்சோகம்
பாவனைதா நின்னு டம்பிற் றிதமுறுனா நெனுந்திடம்போ லப்பியாச பலத்தாலத் தேவாய் நிற்கிற சிதையுடனா நெனுமவித்தை செங்கதிரோ நெதிரிருள்போற் சிதையு மன்றே
பரமனின் நிஜமான வாசஸ்தலம் நமது இதயமெனும் குகைதான்.பரமன் நமது இதயத்தில்
வசிக்கும் தாமரையாக இருக்கிறான். இடைவிடாத சாதனையால்
“ நான் தான் அவன், அவன் தான் நான்” என்ற எண்ணம் நமது சிந்தனையில்
உறைத்துவிடுமேயானால் இந்த உடல் தான் நான் எனும் மித்யா போதம் அழிந்து விடும்.இது
எது போல் என்றால் சூரியன் உதயமாகும்பொழுது எவ்வாறு இருள் இல்லாதாகிவிடுகிறதோ அதுபோல்..
இதே கருத்தை யோகவாஸிஷ்டத்திலும் காணமுடிகிறது.
யோக வாசிஷ்டம் 5 ஆம் அத்தியாயம் 78 பகத்தில் 38 ஆம் சுலோகத்தில் :
வசிஷ்டர் சொல்லுவார் : தொடர்ந்து நிஜமான இதயத்தில் குடிகொள்ளும் நான்-சர்வ ஞானம் ’
மனதின் சிந்தைகளில் லயிக்கும்பொழுது , அங்கு மனோ நிக்ரகம் நிகழும்.ஆது தான் ஆத்ம
சாக்ஷாத்காரம்.
No comments:
Post a Comment