Saturday, 24 October 2015

ரமணஜோதி 125

ரமணஜோதி 125

உன் அருள்-என் முயற்சி-ரமணஜோதி


                             என்புரு கன்பர்த மின்சொற்கொள் செவியுமென்
                                  புன்மொழி கொளவருணாசலா
                             பொறுமையாம் பூதர புன்சொலை நன்சொலாப்
                                      பொறுத்தௌ ளிஷ்டம் பின்னருணாசலா

அக்ஷரமணமாலையின் கடைசி இரண்டு செய்யுள்களில் பகவான் தான் இயற்றியுள்ள பாக்களில் ஏதேனும் பிழைகள் இருந்தால் பொறுத்து அருளும்படி அருணாசலனிடம் வேண்டுகிறார். 
மாணிக்க வாசகர் போல் சிறந்த புலவர்களின் பாடல்களைக் கேட்ட நீ என் பாக்களில் நிறைய குறைகள் காணலாம். இருந்தாலும் என் மீது கருணைகூர்ந்து இவைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிறார். 
இதே கருத்தை சௌந்தரிய லஹரியின் கடைசி சுலோகத்தில் ஆதி சங்கரரும் வெளிப்படுத்தியுள்ளார்.

प्रदीपज्वालाभिर्द्वस्कर् नीराजन्विधि:
सुधासूतेश्चन्द्रोपलजललवैररध्य रचना,
स्व्कीयैर्म्भोभि: स्लीलनिधि सौहित्यकरणम्
त्वदीयाभिर्वाग्भिस्तव् जननि वाचाम् स्तुतिरियम्

ப்ரதீபஜ்வாலாபிர்திவசகர நீரஜ நவிதி:
ஸுதாஸூதேஸந்த்ரோபலஜலலவைராக்ய ரசனா
ஸறகீரம்போபி: ஸலிலனிதி ஸௌஹித்யகரணம்
த்வ்தீயாபிர்வாக்பிஸ்தவ ஜன்ஸ்னி வாசாம் ஸ்துதிரியம்

.”கைவிளக்கின் ஒளியால் நித்ய ப்ரகாசியான சூரியனை வெளிச்சம் போட்டு காட்டுவது போல், சந்திரகாந்த கல்லிலிருந்து உமிழும் குளிர்மையினால் சந்திரனை குளிர்விப்பது போலவும் சமுத்திரத்தை சிறு நீர்த்திவலகளினால் நனைப்பது போலவும் இருக்கிறது வாக்தேவதையான உன்னை நான் புகழ்ந்து பாடுவது.

125 மடல்களாக பகவான் ரமணரின் அக்ஷரமணமாலை குறித்து நான் எழுதி வந்த இந்த மின்னஞ்சல் பரம்பரை முடிவிற்கு வரும் இந்த தருணத்தில் நானும் பகவான் ரமணர் கூறியதைப்போல், பகவானின் திரு வசனங்களிலிருந்தும் அவரது அன்பர்கள் எழுதிய நூல்களிலிருந்தும் பாரத தேசத்து வேத-வேதாந்தங்களிலிருந்தும் நிறைய உதவிகள் பெற்று, எனது சிற்றறிவிற்கு எட்டிய விளக்கங்களையும் அளித்து எழுதியுள்ளேன்.ஆகவே அதன் நிறைகளுக்கு நம் முன்னோர்களும் பகவனும் அருளிய ஆசியும் தான் காரணம்.
பல அன்பர்கள் அளித்த ஊக்கமும் என் முயற்சி திருப்தியளிக்கும் வகையாக முடிக்க உதவின. குறிப்பாக, திரு ஆனந்த் வாசுதேவன், திரு பட்டாபி ராமன், ஷெண்பகம் ராமசந்திர மாமா, Dr.. ஸுந்தரம், திரு T.H. ஐயர், இன்னும் பலர் எனது நன்றிக்கு உரித்தாவார்கள்.
பகவான் ரமணர் அக்ஷர மணமாலை ஆரம்பிக்கும்பொழுது கூறினார்:
                             அருணாசல வரற்கேற்ற வக்ஷரமண மாலைசாற்றக்
                             கருணாகர கணபதியே கரமருளிக்காப்பாயே

நானும் இந்த மின்னஞ்சல் பரம்பரை முடிக்க எனக்கு தைரியமும் சக்தியும் தந்த கருணாகர கணபதிக்கு என் நமஸ்காரத்தை அர்ப்பணிக்கிறேன்.
                             மாலை யளித்தருணாசல ரமணவென்
                   மாலை யணிந்தரு ளருணாசலா
என்று பகவான் அக்ஷர மணமாலையை முடித்தார். நானும் அருணசலனை பிரார்த்திக்கிறேன்:’ என்னுடைய இந்த எளிய காணிக்கையை அதன் குறை நிறைகளுடன் ஏற்றுக்கொண்டு அருளவேண்டும் ‘
தாயுமானவரின் ஒரு பாடலுடன் இந்த அஞ்சலை பூர்த்தி செய்கிறேன்:
                                      அங்கிங் கெநாதபடி எங்கும் ப்ரகாசமாய்
                        ஆனந்த பூர்த்தியாகி
                   அருளொடு நிறைந்தெது தன்னருள் வெளிக்குள்ளே
                        அகிலாண்ட கோடியெல்லான்
                   தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்
                        தழைத்ததெது மனவாக்கினில்
                   தட்டாமல் நின்றதெது சமயகோ டிகளெலான்
                        தந்தெய்வம் எந்தெய்வெமென்
                   றெங்குன் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது
                        எங்கணும் பெருவழக்காய்
                   யாதினும் வல்லவொரு சித்தாகி இன்பமாய்
                        என்றைக்குமுள்ள் தெதுஅது
                   கங்குல்பக லறனின்ற எல்லையுள் தெதுஅது                
கருத்திற் கிசைந்ததுவே
                   கண்டன வெலாமோன வுருவொளிய தாகவுங்
                             கருதியஞ் சலிசெய்குவாம்

                                      ரமணஜோதி பரம்பரை முற்றிற்று; ஜோதி தொடர்ந்து ஒளிர்கிறது       



Friday, 23 October 2015

ரமணஜோதி 124

ரமணஜோதி 124

அன்பருக்கு அன்பன்


அன்பொடுந் நாமங்கே ளன்பர்த மன்பருக்-
                                      கன்பனா யிடவரு ளருணாசலா
                             என்போலுன் தீனரை யின்புறக் காத்து நீ
                                      யென்னாளும் வாழ்ந்தரு ளருணாசலா
“உன் அடியார்க்கடியனாய்யிருக்க அருளருணாசலா ! என்னைப்போலுள்ள் எளியோர்களைக் காத்து நீ என்றும் எங்களுடன் இருக்க வேண்டும் அருணாசலா ! இந்த நாங்கு வரிகளில் பகவான் கூறுவதெல்லாம் அருணாசல நாம-ரூபங்களுக்கெல்லாம் அதீதமானவன். இருந்தும் அவன் நாமத்தை நினைக்கும் அடியோருக்கடியோனாய் இருக்கும் எனக்கருள வேண்டும்.என்பது தான்.என்னாமம் கொண்ட் அழைத்தாலும் அருணாசலன் அந்த சத்சிதானந்தனே.அவன் நாமத்தை நினைவுகொள்ளும் அடியொரெல்லாம் அவன் அம்சமே; அப்படிப்பட்ட அடியோருடன் ஒன்றிப் போன –தத்துவமஸி என்ற கோட்பாட்டை அறிந்த—என்னை காத்தருளவேண்டுமருணாசலா எங்கிறார்.
தாயுமானவரும் தனது பாடலில் ஓரிடத்தில் கூறியுள்ளார்:” உன் அடியாருக்கு தோண்டு செய்யும் பாக்கியத்தை எனக்களிப்பாய், ஆண்டவ,; அதைவிட பலக்கியம் எனக்கு வேறு எதுவுமில்லை” என்று.
தாயுமானவர் மேலும் பாடினார்:
                   செய்யுன் தவஞ்சற்று மில்லாத நானுன் திருவடிக்கே
                   கொய்யும் புது மல ரிட்டுமெய் யன்பர் குழாத்துடனே
                   கையுஞ் சிரமிசைக் கூப்பினின் றாடி கசிந்துருகி
                   உய்யும் படிக்கருள் செய்வதென் றோபுலி யூரத்ஹானே
“ தவம் ஏதும் செய்ய இயலாத நிலையில்,நான் புது மலர்களை கொய்து உன் திருவடிலகளில் சமர்ப்பிக்கிறேன்;அதுவும் தனியாக அல்ல; உன் மெய்யன்பர் குழாத்துடன்.கையும் சிரசும் கூப்பி கசிந்துருகி உன் முன் நிற்கும் எனக்கு முக்தியளிப்பாய், ஈசனே” எங்கிறார் தாயுமானவடர். மெய்யன்பர் குழாமுடன் என்று சொல்லுவதன் மூலம் ஆடியொருக்கு தொண்டு செய்வது எவ்வளவு சிறந்தது என்று காட்டுக்றார் தாயுமானவர்.
தாயுமானவர் மேலும் கூறுவர்:எங்கும் வியாபித்துள்ள ஈசனே,உணர்வாய், ஒளியை என்னுள் குடிகொண்டிர்ப்பவனே,என் துயரங்கள் தெரியாதவண்னம்,துன்பங்களை தடஇ செய்.குழந்து உள்ளுருகி பிரார்த்திக்கும் அன்பர்களை -அடியார்களை , உன் அளவிலா கருணை வெள்ளத்தால் ஆசீர்வதிப்பாய், பூரண போதமானவனே”.                                 
எங்கும் வியாபித் துணர்வாய் உனக்கென் இதயத்துள்ளே
                             தங்குன் துயரன் தெரியாத வண்ணன் தடை செய்தார்
                             அங்கங் குழைந்துள் ளுருகுமன் பாளர்க் கணைகடந்து
                             பொங்குங் கருணை கடலேசம் பூரண போதத்த்னே
இந்த இகலோக மாதர் தம்மையும், பொன் பொருளையும்,மாயா அழுக்குகளையும்       இந்த பௌதீக உடலையும் உண்மையென்றும் உன் திருவடி தன் உண்மையையும், முக்தியையும்,வேதனூல்களையும் மித்யை-பொய் என்றும் எண்ணுகின்ற வீணர்களின் நட்பை விட்டு விடுவதன்றோ பரிபூரணம்!                      
வையக மாதர் சகத்தையும் பொன்னையும் மாயைமல
                             மெய்யையும் மெய்யென்று நின்னடி யார்தம்                              விவேகத்தையும்
                             ஐயமில் வீட்டையும் மெய்னூலை யும்பொய்யதாக எண்ணும்
                             பொய்யர்தம் நட்பை விடுவதென் றோபரி பூரணமே
                        துயரக்கடலில் மூழ்கி பிராரப்த பாரத்தையெல்லாம் கரைத்து, உன் அன்பெனும் இன்பக்கடலில் திளைத்து கண்ணிற் விடுவதால் விரைவில் கிட்டுமே அந்த பேரானந்தம் எங்கிறர் இன்னொரு சுலோகத்தில் தாயுமானவர்.       
துன்பக் கடலில் திளைத்தெலான் தீர்ந்ததே
                             இன்பக்கடலில் இருமென்ன-அன்பில்
                             கரைந்து கரைந்து ருகிக் கண்ணருவிகாட்ட
விரைந்து வரும் ஆனந்தமே
இதேகருத்தைத் தான் பகவான் முன் சொன்ன நாலுவரிகளில் பகவான் ரமணர் சொல்லுகிறார். இப்படி துன்பங்களையெல்லாம் பொறுத்துக்கொண்டு னீயே கதி என்று இருக்கும் அன்பர்களை என்றென்றும் காத்தருள வேண்டும் எங்கிறார் பகவான்
இதையே அப்பர்பெருமானும் கீழ்க்கண்டவாறு சொல்லியுள்ளார்:

                   முன்னம்வன் நாமம் கேட்டாள்
                   பின்னம்வன் கீர்த்தி கேட்டாள்
                   தன்னையே தந்து
                   பிச்சியானாள்

அன்பர்களின் நிலையை அப்பர் பெருமான் எவ்வளவு அழகாக கூறியுள்ளார்.

ரமணஜோதி 123 ஆத்மபோதமே அருள்

ரமணஜோதி 123

ஆத்மபோதமே அருள்

                  
அருணையென் றெ ண்ணயா நருட்கண்ணி பட்டேனுன்
                    நருள்வலை தப்புமோ வருணாசலா
                   சிந்தித் தருட்படச் சிலந்திபோற் கட்டிச்
                             சிறையிட் டுண்டனை யருணாசலா
“நான் மனதால் அருணாசலனை நினைத்தவுடனையே, நான் அவன் வலையில் விழுந்து விட்டேன். இதிலிருந்து நான் தப்பிக்க இயலுமோ அரூணாசலா?” என்று பகவான் இந்த முதல் இரண்டு அடிகளில் அங்கலாய்க்கிறார். அருணாசலனின் அருள் எப்பொழுதும் எங்கும் உள்ளது. நாம் அதை அறிந்து கொண்டு விட்டால், அந்த அருளுக்கு பாத்திரமாய் விடுவோம்; பிறகு அதிலிருந்து மீள நாம் விரும்ப மாட்டோம்.அப்படி அருணாசலனின் அருள்வலையில் புகுவதற்கு சிறிது காலம் பிடித்தாலும் பிடிக்கலாம்.
சாதாரணமாக, மீனவன் வலையில் சிக்கிய மீன் அதிலிருந்து எப்படி தப்பிப்பது என்று கவலைப்படும். அருணாசலனின் அருள் வலையில் சிக்கினவரோ அதிலிருந்து மீள முயலமாட்டார். வலையில் சிக்கிய மீன் சுதந்திரத்தை இழக்கிறது; அருணாசலனின் அருள் வலையில் சிக்கிய ஜீவாத்மாக்களோ விடுதலை
( மோக்ஷம்- முக்தி) பெறுகிறது.
அருணாசலன் தன் வலையை எங்கும் விரித்து நமக்காக காத்திருக்கிறான்; நாம் தான் கண்டுகொள்வதில்லை.பிரம்மம்—அந்த சுத்த சைதன்யமான சத் சிதானந்தன் எல்லோர் உள்ளிலும் குடி கொண்டிருக்கிறான்; அதை தெரிந்து கொள்ளாமல், நாம் அதைத் தேடி ஊரெல்லாம் அலைகிறோம்.பட்டினத்தார் கூறியது போல், ‘ உன்னை நாடி நாடு நகரமெல்லாம் அலைந்தேன்; நீ என்னுள்ளே இருப்பது தெரியாமல்.”
நம்மை சுற்றியிருக்கும் மாய வலையை அறுத்து எறிந்து விட்டு, நாம் அருணாசலனின் அருள்வலையில் சிக்கவேண்டும்; அப்பொழுது தான் நமக்கு நிஜமான விடுதலை கிடைக்கும்.அல்லது அந்த மாயவலையில் சிக்காமல் அருணாசலனின் பாதாரவிந்தங்களில் சரண் அடைய வேண்டும்.
இதைத் தான் பகவான் ரமணர் அக்ஷர மணமாலையின் மூன்றாவது சுலோகத்தில் சொன்னார்:
                   அகம்புகுன் தீர்த்துன் னககுகை சிறையா
                             யமர்வித்த தென்கொ லருணாசலா
நீ என்னுள் புகுந்து என்னை சிறை பிடித்து உன் அகக்குகைக்குள் சிறை வைத்தாய்’ என்கிறார்.
இதே கருத்தை அடுத்த இரண்டு வரிகளில் இன்னும் விளக்கமாக கூறுகிறார்:
‘நான் உன்னை எண்ணி எண்ணி, சிலந்தி போல் நீ பின்னிய வலையில் சிக்கிக்கொள்கிறேன்.சிலந்தியின் வலை அதன் உடலிலிருந்தே வருகிறது; அது போல் உன் அருள் வலையும் ஜீவாத்மாக்களின் உள்ளிலிருந்தே வருகிறது.அப்படிப்பட்ட வலையில் சிக்கிக் கொண்டால் நமக்கு விடுதலை கிடையாது. நாம் அழிந்து பரமாத்மாவுடன் லயித்து விடுகிறோம்.இந்த லயனத்திற்கு தான் நாம் படுகின்ற கஷ்டமெல்லாம்.
இந்த இரு சுலோகத்தின் மூலம் பகவான் கூறுவது என்னவென்றால் ,’’ ஜீவாத்மாவும் பரமாத்மாவும் இரண்டல்ல; ஒன்றே தான்; இந்த ஞானம் பெற்று விட்டோமென்றால், அந்த ஞானவலையில் சிக்கிகொண்டோமென்றால் , நமக்கு நிரந்தர விடுதலை தான்”
இன்னொரு விதத்தில் பார்த்தோமேயானால் என்றுமே நாம் முக்தர்கள் தான்.அதை நாம் தெரிந்து கொள்வதில்லை அவ்வளவு தான்.அந்த போதம்-ஞானம் இல்லாமல் நம்மைச் சுற்றி நாமே ஒரு வலை பின்னிக்கொள்கிறோம்.ஒரு பிரபஞ்சத்தை சிருஷ்டித்துக் கொள்கிறோம்.அந்த மாயா பிரபஞ்சத்திலுள்ள மற்ற ஜீவராசிகளிடமும், ஜீவனில்லாத ஏனைய பொருள்களுடனும் பந்தத்தை ஏற்படுத்திக்கொள்கிறோம்.அந்த பந்தங்களே பந்தனமாக மாறிவிடுகிறது.
அந்த பந்தங்களை என்று நாம் அறுத்து எறிகிறோமோ அன்று நமக்கு போதம்-ஞானம் உண்டாகிறது. நாம் முக்தர்களாகிறோம்
இதைத்தான் அஷ்டவக்கிரரும் கூறுகிறார்:
     ஆத்மாஞானாஜ்ஜகத்ததி ஆத்மஞானாத்ன பாசதே!
ரஜ்வத்ஞானாதஹிர்பாதி தஜ்ஞானாத்பாசதே!!
ஆத்மாஞானாத்-----ஆத்மாவின் உண்மை ஸ்வரூப ஸ்வபாவத்தை தெரியாமல் இருத்தல்
ஜகத் பாஸி------------பிரபஞ்சம் தோன்றுகிறது
ஆத்மஞானாத்----------ஆத்ம சொரூபத்தை அறிதல்
ஆத்மாவின் உண்மை சொரூபத்தை அறியாததால் இந்த பிரபஞ்சம் தோன்றுகிறது.அந்த ஆத்ம போதம் உண்டாகிவிட்டால் பிரபஞ்சம் மறைந்து விடுகிறது.
. உபனிஷத்களிலும் இந்த கருத்து விஸ்தரித்து சொல்லப்பட்டுள்ளது.
ஈசாவாஸ்ய உபனிஷத் ஆரம்பிப்பதே இந்த கருத்துடன் தான்:
                   ஈசாவாஸ்யமிதம்சர்வம்  யத்கிஞ்ச ஜகத்யாம் ஜகத்
இந்த உலகில் நாம் காண்கின்ற எல்லா பிரபஞ்ச சிருஷ்டியிலும் ஈசுவரன் வியாபித்துள்ளான் ஆகவே எல்லாமே ஒரே பிரம்மம்  தான்
அதே உபனிஷத்தின் நான்காம் சுலோகத்தில் கூறப்பட்டுள்ளது இன்னும் தெளிவாக உள்ளது:
                   அனேஜதேகம் மனஸோ ஜவீய
                        நைனத்தேவா ஆப்னுவந் பூர்வ்மர்ஷத் !
                   தத்தாவதோஅன்யான்அத்யேதி
                             திஷ்டத்தஸ்மின்னபோ மாதரிச்வாததாதி!!
அனேஜத்—இந்த ஆத்மா  சலனம்ற்றது
ஏகம்--------ஒன்றே(எல்லோருள்ளும்)
இந்த சலனமற்ற ஆத்மா இந்திரியங்களுக்கப்பாற்பட்டது, மனதை விட வேகமாக சஞ்சரிக்கக் கூடியது,ஆனால் ஏகமாக எல்லோருள்ளும் இருக்கக் கூடியது. இருந்தும் ஜீவாத்மாக்களின் அனுபவங்கள் ஏன் மாறுபடுகின்றன என்றால் அது முன்சன்ம பிராரப்தங்களின் அடிப்படையில் நிர்னயிக்கப்பட்டுள்ளதால்.
மேலும் ஈசாவாஸ்யம் கூறுகிறது:
                   யஸ்து ஸர்வாணி பூதானி ஆத்மன்யேவானுபஸ்யயதி !
          ஸர்வபூதேஷூ சாத்மானம் ததோ ந விஜுகுப்ஸதே !!
யாரொருவன் அனைத்து உயிரினங்களிலும்தன்னைக் காண்கின்றானோ,தன்னில் எல்லா உயிரினங்களையும் காண்கின்றானோ, அவன் போதமடைந்தவனாகிறான்; யாரையும் அவன் நிந்தனை செய்ய மாட்டான்.
கைவல்ய உப்னிஷத்திலும் மேற்கூறிய கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டிருக்கின்றன..
14 ஆம் சுலோகத்தில் கீழ்க்கண்டவாறு  கூறப்பட்டுள்ளது.
          யத் பரம் ப்ரம்மாஸர்வாத்மா
                   விஸ்வாஸ்யாயதனம் மஹத்
          ஸூக்ஷ்மத் ஸூக்ஷமதரம் நித்யம்
                   தத் த்வம் ஏவ த்வம் ஏவ தத் !
ஆத்மா என்பது பரமாத்மாவே தான்;அதுவே எல்லோர் உள்ளிலும் இருக்கிறது. இந்த பிரபஞ்சத்தின் ஆதாரமே அந்த ஆத்மா தான்.அது நித்தியமும் அணுவிலும் சிறியதும்,ஆக இருகிறது.அதுவே நீயாக் இருக்கிறாய்; நீயே அதுவாக இருக்கிறாய்.
23 ஆம் சுலோகத்தில் தெளிவாக சொல்லப் பட்டிருக்கிறது.
एवम् विदित्वा परमाथ्मा-रूपम्
गुहाश्यम् निषकलमड्विटीयम्.!
समस्त साक्षीम् सदस्द्विहीनम्
प्रयाति सुद्ढम् परमात्मरूपम् !!
     ஏவம் விதித்வா ப்ரமாத்மரூபம்
          குஹாஸ்யம் நிஷ்கலம்த்விதீயம்
          ஸமஸ்த ஸாக்ஷீ ஸதஸத்விஹீனம்
          ப்ரயாதி சுத்தம் பரமாத்மரூபம்
இப்படிப்பட்ட போதம்பெறுவது தான் பரமனின் அருள் போலும். சாதகர்கள் நீண்டகாலம் சாதகம் செய்து பெறுகிறார்கள்; பக்தர்கள் பகவானின் சரண கமலங்களில் அடைக்கலம் ஆவதின் மூலம் போதம் பெறுகிறார்கள்.
அருள் என்பது பெரிய தத்துவச் சொல் அல்ல;அது உண்மை நிலைகுறித்து நமக்கு ஏற்படுகின்ற போதம் தான்

இந்த சத்தியத்தை நான் யார் என்ற விசார மார்க்கம் வழியாக நாம் உணர வேண்டும் இது தான் பகவானின் உபதேச சாரம்

ரமணஜோதி 122 அஹம் நாஸ்தி

ரமணஜோதி 122


அஹம் நாஸ்தி


                   வைதலை வாழ்த்தா வைத்தருட் குடியா
                   வைத்தெனை விடாதரு ளருணாசலா
                   அம்புவி லாலிபோ லன்புரு வுனிலெனை
                        யன்பாக் கரைத்த்தரு ளருணாசலா
இந்த இரண்டு சுலோகங்களிலும் வாச்சியார்த்தப்படி, பகவான் ரமணர் அருணாசலனின் புகழ் பாடி அவன் அருளை வேண்ண்டுகிறார். “நான் எவ்வளவு இகழ்ந்து பேசினாலும்,அந்த வசவுகளையெல்லாம்,வாழ்த்தாகவே எடுத்துக்கொண்டு என்னை உன் ஆளுமைக்குள் கொண்டு வந்து என்னை விடாமல் ஆசீர்வதிப்பாய், அருணசலா” எங்கிறார் முதல் இரண்டடிகளில்.
அடுத்த இரண்டு அடிகளில் கூறுகிறார்: “ நீரில் மிதக்கும் பனிக்கட்டி போல் உன் அன்பில் மிதக்கும் ஜீவன் நான்;என்னைக் பனிக்கட்டி கரைவது போல் கரைத்து உன்னுடன் சேர்த்துக்கொள் அருணாசலா,>”
இந்த மணமாலையின் எந்த ஒரு கண்ணியை எடுத்துக் கொண்டாலும்,அதில் துல்லியமாக தெரிவது ஜிவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே; பரமாத்மா தான் எல்லா ஜீவ ராசிகளிலும் உள்ளிருந்து கொண்டு பிராகாசிக்கிறான். ஆனால் லௌகீக மாயையில் அகப்பட்டு ஜீவாத்மா இந்த உண்மையை உணராமல் இருக்கிறது; எந்த நிமிடம் அந்த உண்மை உணரப்படுகிறதோ,அந்த நிமிடமே ஜீவாத்மா, பனிக்கட்டி உருகி நீரோடு கலந்து விடுவது போல்,பரமனில் லயித்து விடும்.பிறகு அங்கு இரண்டில்லை.ஒன்றே தானுளது.
பனிக்கட்டியின் உதாரணம் மிகுந்த பொருள் பொதிந்தது. பனிக்கட்டி என்பது ஒரு பொய்யான தோற்றம்.உண்மையில் அது நீரே தான்.அதே போல் நமது மனது,புத்தி, விகார விசாரங்கள் எல்லாம் நிஜமல்ல்; அவைகளுக்கு தனியாக இருப்பு கிடையாது. இந்த உடல் தான் ‘நான்’ என்ற எண்ணம் தோன்றி நம்மை ஒரு மாய வலையில் சிக்க வைத்து,பரமாத்மாவிலிருந்து நமக்கு தனியாக இருப்புள்ளது என்ற தோற்றத்தை உருவாக்குகிறது. அந்த மாயை விலகும் பொழுது எஞ்சி நிற்பது உண்மையான ‘நான்’ –அதாவது சத் சித் ஆனந்தனாகிய பரமன் மட்டும் தான்.
சிறிதே ஆழ்ந்து சிந்தித்தோமென்றால்,இந்து நிஜம், இது மாயை என்கின்ற தர்க்கத்திற்கே  இடம் கிடையாது, ‘நான் யார் என்று தெரிந்து கொண்டு விட்டோமென்றால்.இதை பகவான் தனது “உள்ளது நாற்பது” நூலில் மிக அழகாக சொல்லுவார்:
                                                     --கொன்னே
                             உலகுமெய்பொய்த் தோற்ற முலகறிவா மன்றென்
                             றுலகுசுக மன்றென் றுரைத்தெ---நுலகுவிட்ட்த்
                             தன்னையோர்மூ தொன்றிரண்டு தானற்று நானற்ற
                             வ்மூனிலையெல் லார்க்குமொ ப்பாம்-----
                                உ.  நா   சுலோ 3
கொன்னே-----வீண்
எது வீண்? இந உலகம் மெய்யா ,பொய்யா என்கின்ற விவாதம் வீண்.
“இந்த உலக வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்தது; இல்லை, இல்லை; இந்த வாழ்வு துன்ப மயமானது;” என்கின்ற வாதங்களெல்லாம் வீண்.
இந்த் உலகமே ‘சத்’;(உண்மை); இதுவே ‘சித்’(மகிழ்ச்சி நிறைந்தது)’இதுவே ‘ஆனந்தம்’ இல்லை, இல்லை, இந்த வாழ்க்கை துன்பம் நிறைந்தது” என்கின்ற வாதங்களெல்லாம் வீண்.
எப்பொழுது? இந்த உலகை மனதிலிருந்து   நீக்கி விட்டு, அந்த மனதையும் நிக்ரகம் செய்து விட்டு,’நான்’ மட்டும் தான் நிஜம்; அங்கு ‘ஒன்றல்லாமல் வேறொன்றில்லை’, ‘நானும்’ இல்லாதாகி விடும் நிலையில் இந்த வாதப்பிரதி வாதங்களெல்லாம் வீண். இதுதான் எல்லோருக்கும் மஹா சாந்தியை அளிக்க வல்ல நிலை,
பகவான் ரமணர் இந்த சுலோகத்தின் மூலம் நம்மையெல்லாம் இந்த் லௌகீக வாழ்வை விட்டு விட்டு காட்டிற்கு ஓடச் சொல்கிறாரா? இல்லை.இந்த உலக வாழ்வின்மீதுள்ள பற்றை விட்டு விட சொல்கிறார்; நிஷ்காமியமாக கர்மங்களை செய்ய சொல்கிறார்.உலகில் பிறந்தவர்களெல்லாம் அவரவர் பிராப்தங்களின் படி கர்மங்கள் இயற்றியே ஆகவேண்டும்.அப்படி கர்மங்கள் ஆற்றும்பொழுது, அதன் பலன்கள் மீது பற்று வைத்து விருப்பு வெறுப்புக்களுக்கு இடமளிக்காதீர்; விருப்பு வெறுப்புக்கு இடமளித்தீர்களேயானால் உங்களது கர்ம பாரம் அதிகரித்துக்கொண்டே போகும். பற்றற்று கர்மங்கள் ஆற்றும் பொழுது நமது பிராப்த கர்மங்கள் அழிவதுடன், மேற்கொண்டு பாரம் ஏறாமலும் இருக்கும்.
           அம்மாதிரியான வாழ்வை தேடுவது, ‘நான் யார்” என்று யோசிக்க ஆரம்பித்தால் எளிதாகும்.’நான்’ என்பது அந்த சத் சித் ஆனந்த ரூபமான பிரம்மமே; அது நம்முள்ளும் இருக்கிறது ;எல்லா ஜீவராசிகளினுள்ளும் இருக்கிறது என்று உணருங்கள்;உங்களுக்கு நித்திய சாந்தி கிடைக்கும் “ எங்கிறார் பகவான்.
இதுபவே “தத்துவமஸி”, ‘அஹம் பிரமாஸ்மி”, அஹம் நாஸ்தி” போன்ற மஹாவாக்கியங்களின் பொருளும்.