ரமணஜோதி 122
அஹம் நாஸ்தி
வைதலை வாழ்த்தா வைத்தருட் குடியா
வைத்தெனை விடாதரு ளருணாசலா
அம்புவி லாலிபோ லன்புரு வுனிலெனை
யன்பாக்
கரைத்த்தரு ளருணாசலா
இந்த இரண்டு சுலோகங்களிலும் வாச்சியார்த்தப்படி, பகவான் ரமணர் அருணாசலனின்
புகழ் பாடி அவன் அருளை வேண்ண்டுகிறார். “நான் எவ்வளவு இகழ்ந்து பேசினாலும்,அந்த
வசவுகளையெல்லாம்,வாழ்த்தாகவே எடுத்துக்கொண்டு என்னை உன் ஆளுமைக்குள் கொண்டு வந்து
என்னை விடாமல் ஆசீர்வதிப்பாய், அருணசலா” எங்கிறார் முதல் இரண்டடிகளில்.
அடுத்த இரண்டு அடிகளில் கூறுகிறார்: “ நீரில் மிதக்கும் பனிக்கட்டி போல் உன்
அன்பில் மிதக்கும் ஜீவன் நான்;என்னைக் பனிக்கட்டி கரைவது போல் கரைத்து உன்னுடன்
சேர்த்துக்கொள் அருணாசலா,>”
இந்த மணமாலையின் எந்த ஒரு கண்ணியை எடுத்துக் கொண்டாலும்,அதில் துல்லியமாக தெரிவது ஜிவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே; பரமாத்மா தான் எல்லா ஜீவ ராசிகளிலும் உள்ளிருந்து கொண்டு பிராகாசிக்கிறான். ஆனால் லௌகீக மாயையில்
அகப்பட்டு ஜீவாத்மா இந்த உண்மையை உணராமல் இருக்கிறது; எந்த நிமிடம் அந்த உண்மை
உணரப்படுகிறதோ,அந்த நிமிடமே ஜீவாத்மா, பனிக்கட்டி உருகி நீரோடு கலந்து விடுவது
போல்,பரமனில் லயித்து விடும்.பிறகு அங்கு இரண்டில்லை.ஒன்றே தானுளது.
பனிக்கட்டியின் உதாரணம் மிகுந்த
பொருள் பொதிந்தது. பனிக்கட்டி என்பது ஒரு பொய்யான தோற்றம்.உண்மையில் அது நீரே
தான்.அதே போல் நமது மனது,புத்தி, விகார விசாரங்கள் எல்லாம் நிஜமல்ல்; அவைகளுக்கு
தனியாக இருப்பு கிடையாது. இந்த உடல் தான் ‘நான்’ என்ற எண்ணம் தோன்றி நம்மை ஒரு மாய
வலையில் சிக்க வைத்து,பரமாத்மாவிலிருந்து நமக்கு தனியாக இருப்புள்ளது என்ற
தோற்றத்தை உருவாக்குகிறது. அந்த மாயை விலகும் பொழுது எஞ்சி நிற்பது உண்மையான
‘நான்’ –அதாவது சத் சித் ஆனந்தனாகிய பரமன் மட்டும் தான்.
சிறிதே ஆழ்ந்து சிந்தித்தோமென்றால்,இந்து
நிஜம், இது மாயை என்கின்ற தர்க்கத்திற்கே
இடம் கிடையாது, ‘நான் யார் என்று தெரிந்து கொண்டு விட்டோமென்றால்.இதை
பகவான் தனது “உள்ளது நாற்பது” நூலில் மிக அழகாக சொல்லுவார்:
--கொன்னே
உலகுமெய்பொய்த் தோற்ற முலகறிவா மன்றென்
றுலகுசுக மன்றென் றுரைத்தெ---நுலகுவிட்ட்த்
தன்னையோர்மூ தொன்றிரண்டு தானற்று நானற்ற
வ்மூனிலையெல் லார்க்குமொ ப்பாம்-----
உ. நா
சுலோ 3
கொன்னே-----வீண்
எது வீண்? இந உலகம் மெய்யா ,பொய்யா என்கின்ற விவாதம் வீண்.
“இந்த உலக வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்தது; இல்லை, இல்லை; இந்த வாழ்வு துன்ப
மயமானது;” என்கின்ற வாதங்களெல்லாம் வீண்.
இந்த் உலகமே ‘சத்’;(உண்மை); இதுவே ‘சித்’(மகிழ்ச்சி நிறைந்தது)’இதுவே
‘ஆனந்தம்’ இல்லை, இல்லை, இந்த வாழ்க்கை துன்பம் நிறைந்தது” என்கின்ற
வாதங்களெல்லாம் வீண்.
எப்பொழுது? இந்த உலகை மனதிலிருந்து நீக்கி விட்டு, அந்த மனதையும் நிக்ரகம் செய்து
விட்டு,’நான்’ மட்டும் தான் நிஜம்; அங்கு ‘ஒன்றல்லாமல் வேறொன்றில்லை’, ‘நானும்’
இல்லாதாகி விடும் நிலையில் இந்த வாதப்பிரதி வாதங்களெல்லாம் வீண். இதுதான்
எல்லோருக்கும் மஹா சாந்தியை அளிக்க வல்ல நிலை,
பகவான் ரமணர் இந்த சுலோகத்தின் மூலம் நம்மையெல்லாம் இந்த் லௌகீக வாழ்வை விட்டு
விட்டு காட்டிற்கு ஓடச் சொல்கிறாரா? இல்லை.இந்த உலக வாழ்வின்மீதுள்ள பற்றை விட்டு
விட சொல்கிறார்; நிஷ்காமியமாக கர்மங்களை செய்ய சொல்கிறார்.உலகில்
பிறந்தவர்களெல்லாம் அவரவர் பிராப்தங்களின் படி கர்மங்கள் இயற்றியே
ஆகவேண்டும்.அப்படி கர்மங்கள் ஆற்றும்பொழுது, அதன் பலன்கள் மீது பற்று வைத்து
விருப்பு வெறுப்புக்களுக்கு இடமளிக்காதீர்; விருப்பு வெறுப்புக்கு
இடமளித்தீர்களேயானால் உங்களது கர்ம பாரம் அதிகரித்துக்கொண்டே போகும். பற்றற்று
கர்மங்கள் ஆற்றும் பொழுது நமது பிராப்த கர்மங்கள் அழிவதுடன், மேற்கொண்டு பாரம்
ஏறாமலும் இருக்கும்.
அம்மாதிரியான வாழ்வை
தேடுவது, ‘நான் யார்” என்று யோசிக்க ஆரம்பித்தால் எளிதாகும்.’நான்’ என்பது அந்த
சத் சித் ஆனந்த ரூபமான பிரம்மமே; அது நம்முள்ளும் இருக்கிறது ;எல்லா
ஜீவராசிகளினுள்ளும் இருக்கிறது என்று உணருங்கள்;உங்களுக்கு நித்திய சாந்தி
கிடைக்கும் “ எங்கிறார் பகவான்.
இதுபவே “தத்துவமஸி”, ‘அஹம் பிரமாஸ்மி”, அஹம் நாஸ்தி” போன்ற மஹாவாக்கியங்களின்
பொருளும்.
No comments:
Post a Comment