ரமணஜோதி 124
அன்பருக்கு அன்பன்
அன்பொடுந் நாமங்கே
ளன்பர்த மன்பருக்-
கன்பனா யிடவரு
ளருணாசலா
என்போலுன் தீனரை யின்புறக் காத்து நீ
யென்னாளும் வாழ்ந்தரு ளருணாசலா
“உன் அடியார்க்கடியனாய்யிருக்க அருளருணாசலா ! என்னைப்போலுள்ள் எளியோர்களைக் காத்து நீ என்றும் எங்களுடன் இருக்க வேண்டும் அருணாசலா !” இந்த நாங்கு வரிகளில் பகவான் கூறுவதெல்லாம்
அருணாசல நாம-ரூபங்களுக்கெல்லாம் அதீதமானவன். இருந்தும் அவன் நாமத்தை நினைக்கும்
அடியோருக்கடியோனாய் இருக்கும் எனக்கருள வேண்டும்.என்பது தான்.என்னாமம் கொண்ட்
அழைத்தாலும் அருணாசலன் அந்த சத்சிதானந்தனே.அவன் நாமத்தை நினைவுகொள்ளும்
அடியொரெல்லாம் அவன் அம்சமே; அப்படிப்பட்ட அடியோருடன் ஒன்றிப் போன –தத்துவமஸி என்ற
கோட்பாட்டை அறிந்த—என்னை காத்தருளவேண்டுமருணாசலா எங்கிறார்.
தாயுமானவரும் தனது பாடலில் ஓரிடத்தில் கூறியுள்ளார்:” உன் அடியாருக்கு தோண்டு
செய்யும் பாக்கியத்தை எனக்களிப்பாய், ஆண்டவ,; அதைவிட பலக்கியம் எனக்கு வேறு
எதுவுமில்லை” என்று.
தாயுமானவர் மேலும் பாடினார்:
செய்யுன் தவஞ்சற்று மில்லாத நானுன் திருவடிக்கே
கொய்யும் புது மல ரிட்டுமெய் யன்பர்
குழாத்துடனே
கையுஞ் சிரமிசைக் கூப்பினின் றாடி கசிந்துருகி
உய்யும் படிக்கருள் செய்வதென் றோபுலி யூரத்ஹானே
“ தவம் ஏதும் செய்ய இயலாத நிலையில்,நான் புது மலர்களை கொய்து உன்
திருவடிலகளில் சமர்ப்பிக்கிறேன்;அதுவும் தனியாக அல்ல; உன் மெய்யன்பர்
குழாத்துடன்.கையும் சிரசும் கூப்பி கசிந்துருகி உன் முன் நிற்கும் எனக்கு
முக்தியளிப்பாய், ஈசனே” எங்கிறார் தாயுமானவடர். மெய்யன்பர் குழாமுடன் என்று
சொல்லுவதன் மூலம் ஆடியொருக்கு தொண்டு செய்வது எவ்வளவு சிறந்தது என்று காட்டுக்றார்
தாயுமானவர்.
தாயுமானவர் மேலும் கூறுவர்:’ எங்கும் வியாபித்துள்ள ஈசனே,உணர்வாய், ஒளியை என்னுள் குடிகொண்டிர்ப்பவனே,என் துயரங்கள் தெரியாதவண்னம்,துன்பங்களை தடஇ செய்.குழந்து உள்ளுருகி பிரார்த்திக்கும் அன்பர்களை -அடியார்களை , உன் அளவிலா கருணை வெள்ளத்தால் ஆசீர்வதிப்பாய், பூரண போதமானவனே”.
எங்கும் வியாபித்
துணர்வாய் உனக்கென் இதயத்துள்ளே
தங்குன் துயரன் தெரியாத வண்ணன்
தடை செய்தார்
அங்கங் குழைந்துள் ளுருகுமன் பாளர்க் கணைகடந்து
பொங்குங்
கருணை கடலேசம் பூரண போதத்த்னே
‘இந்த இகலோக மாதர் தம்மையும், பொன் பொருளையும்,மாயா அழுக்குகளையும் இந்த பௌதீக உடலையும் உண்மையென்றும் உன் திருவடி
தன் உண்மையையும், முக்தியையும்,வேதனூல்களையும் மித்யை-பொய் என்றும் எண்ணுகின்ற
வீணர்களின் நட்பை விட்டு விடுவதன்றோ பரிபூரணம்!
வையக மாதர் சகத்தையும் பொன்னையும் மாயைமல
மெய்யையும் மெய்யென்று நின்னடி யார்தம் விவேகத்தையும்
ஐயமில் வீட்டையும் மெய்னூலை யும்பொய்யதாக
எண்ணும்
பொய்யர்தம் நட்பை விடுவதென் றோபரி பூரணமே
துயரக்கடலில்
மூழ்கி பிராரப்த பாரத்தையெல்லாம் கரைத்து, உன் அன்பெனும் இன்பக்கடலில் திளைத்து
கண்ணிற் விடுவதால் விரைவில் கிட்டுமே அந்த பேரானந்தம் எங்கிறர் இன்னொரு
சுலோகத்தில் தாயுமானவர்.
துன்பக் கடலில் திளைத்தெலான் தீர்ந்ததே
இன்பக்கடலில் இருமென்ன-அன்பில்
கரைந்து கரைந்து ருகிக் கண்ணருவிகாட்ட
விரைந்து வரும் ஆனந்தமே
இதேகருத்தைத் தான் பகவான் முன் சொன்ன நாலுவரிகளில் பகவான் ரமணர் சொல்லுகிறார்.
இப்படி துன்பங்களையெல்லாம் பொறுத்துக்கொண்டு னீயே கதி என்று இருக்கும் அன்பர்களை
என்றென்றும் காத்தருள வேண்டும் எங்கிறார் பகவான்
இதையே அப்பர்பெருமானும் கீழ்க்கண்டவாறு சொல்லியுள்ளார்:
முன்னம்வன் நாமம்
கேட்டாள்
பின்னம்வன் கீர்த்தி கேட்டாள்
தன்னையே தந்து
பிச்சியானாள்
அன்பர்களின் நிலையை அப்பர் பெருமான் எவ்வளவு அழகாக கூறியுள்ளார்.
பகவான் ரமணரைப் பற்றி தெளிவாக ,எடுத்து எழுதி வருகிறீர்கள். அதை படிக்கவும் அதை பற்றி சிந்தித்து தெளிவு பெறவும் மனிதர்கள் தயாராக இல்லை. வேண்டுமானால் அவர் படத்திற்கு மாலைபோட்டு ஏதாவது வேண்டுதலை வைத்து சூடம் காட்ட மட்டும் சிலர் ஆர்வம் காட்டுவர்
ReplyDelete