Wednesday, 19 November 2014

றமணஜோதி 15

ஏனிந்த வுறக்கமெனப்பிற ரிழுக்க  
விதுவுனக் கழகோ வருணாசலா

நான் உன்னை நினைத்து கண்ணை மூடித் தியானிக்கும்போது நீ வந்து என்னை யாட்க்கொள்ளாவிட்டால் என் மனம் மற்றவர் இழுப்புக்கு சென்றுவிடாதோ? ஜீவான்மா பிரமனிடம் லயிக்காவிட்டால் மனம் இந்திரியங்களின் கட்டுப்பாட்டிற்குள் போய்விடும் அருணாசலா.
மனம் ஒரு குரங்கு என்று சும்மாவா சொல்கிறார்கள்?
சிவனந்த லஹரியில் ஆதி சங்கரர் கூறுகிறார். “மனம் ஒரு குரங்கு;அது கிளைக்கு கிளைதாவும். ஒரு ஆசைக் குவியலிலிருந்து இன்னொரு ஆசைக் குவியலுக்கு த் தாவும்..அது மாயை எனும் காட்டுக்குள் சுற்றி வரவே விரும்பும்.”
அவர் பரமசிவனிடம் இறைன்சுகிறார்,” இந்த மனக் குரங்கை என்னுடைய காணிக்கையாக ஏற்றுக்கொள். அதை பக்தி எனும் பாசக் கயிற்றால் நன்றாக் கட்டிவிடு.”
பிரஹலாதன் நரசிமம முர்த்தியிடம் கூறுவான்,” இந்தமனக் கரடி இந்திரியங்களுக்கு பிடித்தமான போகப்பொருளிடம் தான் அன்பு செலுத்துகிறது.அந்த அன்பை உன்பால் திருப்பிவிடு.அடற்கு நீ என் இதயத்தை விட்டு அகலாமல் இருக்க வேண்டும்”
மனமாகப் பட்டது போகப் பொருள்கன் மீது நாட்டங்கொண்டு அவைகள் பின்னாலேயே ஓடிக்கொண்டிருக்கும்..
அது விஷயானந்தத்திலேயே மூழ்கிக் கிடக்கும்..
நிழலை நிஜம் என்று நம்பி அதன் பின்னாலேயே போகும்.
இம்மாதிரி மற்றவர்கள் நம்மை கேலி பேசாமல் இருப்பதற்கு பகவான் ரமணர் உபதேச உந்தியாரில் சில வழி முறைகளை விவரிக்கிறார்.
அந்த ஸ்லோகங்களை பார்ப்பதற்கு முன் உபதேச உந்தியாரைக் குறித்து ஒரு சில வரிகள்.
உபதேச உந்தியார் , குரு வாசகக் கோவை, உள்ளது நாற்பது இந்த மூன்றும் தான் பகவான் ரமணரின் நூல்களில் முக்கியமானவை. உபதேச உந்தியார் 1927 ல் முருகனாரின் வேண்டுகோளிற்கு இணங்கி பகவானால் இயற்றப்பட்ட 30 சுலோகங்கள்..முருகனாரால் இயற்றப்பட்ட பல கடவுள்களின் லீலைகளில் சிவலீலைப் பகுதி வந்தபோது முருகனார் பகவான் ரமணரின் உபதேசங்களை விவரிக்க வேண்டும் என்று விரும்பினார்.அவர் பகவானிடம் அந்த சுலோகங்களை இயற்றித் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.. அப்பொழுது பகவான் அருளிய உபதேச சுலோகங்கள் தமிழ் உந்தியார் மெட்டில் அமைந்தது
போன மடலில் முதல் மூன்று சுலோகங்களைப் பார்த்தோம்.
4-வது சுலோகத்திலிருந்து 7-வது சுலோகம்  வரை எப்படி நாம் ஜீவன்மாவை பரமாத்மாவில் ஒருங்கிணைப்பது என்பதை சொல்கிறார் பகவான்.
திடமிது பூசை செபமுந் தியான
முடல்வாக் குளத்தொழி லுந்தீபற
வுயர்வகு மொன்றிலொன் றுந்தீபற
                உ.உ 4
பூசை முதலிய சத்கர்மங்கள் செய்வது,ஜபம் செய்வது ,தியானம் செய்வது எல்லாமே உடல் ரீதியான கர்மங்களே.
இருந்தாலும் உடலால் செய்கின்ற பூஜையை விட மனதால் செய்கின்ற ஜபமும் ஜபத்தை விட உள்ளத்தால் செய்கின்ற தியானமும் மேலானது
ஆனால் அப்படி செய்ய்யும் போது நாம் எண்ணும் பொருளெல்லாம் ஈசனே என்று நினைத்து செய்ய வேண்டும் என்கிறர் பகவான் அடுத்த சுலோகத்தில் .

எண்ணுரு யாவு மிறையுரு வாமென்
வெண்ணி வழிபட லுந்தீபற
வீசனற் பூசனையுந்தீபற
உ.உ 5
ஏழவது சுலோகத்தில் பகவன் கூறுகிறார்-
இந்த தியானம் இடைவிடத நெய் வீழ்ச்சி போல் இருக்க வேண்டும்.விட்டு விட்டு செய்யும் தியானத்தால் பலனில்லை.இடைவெளி விட்டுவிட்டால் மனக்குரங்கு வாசனா விஷயங்களைத் தேடிப் போய்விடும். அது நமது சாதாரண உறக்கத்திற்கு சமானமாகும். உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தால் நமது இகலோக வாசனைகள் நம்மை பற்றிக்கொள்ளும்.

விட்டுக் கருதலி நாறுநெய் வீழ்ச்சிபோல்
விட்டிடா துன்னலே யுந்தீபற
விசேடமா முன்னவே யுந்தீபறா
              உ.உ.7

இந்தவிடத்தில் நமக்கொரு சந்தேகம் வரலாம்.நாம் ஈசனை இடை விடாமல் தியானம் செய்ய வேண்டும் என்று பகவான் கூறுவதன் மூலம் நாமும் ஈசனும் வெவ்வேறாகி விடுகிறோமல்லவா?இது அடிப்படையில் அத்வைத சித்தாந்தத் திற்கு எதிராக உள்ளதே..பகவான் ‘நான் யார்” என்ற விசார மார்க்கத்தின் மூலம் எல்லாமே பிரமம் தான். நம்மை விட்டு வேறொன்றில்லை என்றல்லவா கூறிவ்ந்திருக்கிறார்?
இந்த சந்தேகங்களுக்கு எட்டாவது சுலோகத்தில் பதில் கூறுகிறார் பகவான்.

அனியபா வத்தி னவனக மாகு
மனனிய பாவமே யுந்தீபற
வனைத்தினு முத்தம முந்தீபற
              உ.உ.8
நமது தியானம் ஈசன் என்ற ஒரு அன்னிய வஸ்துவில் நோக்கியல்லாமல் “நான் “ என்பதிலே உருக்கொண்டிருந்தால் நமது மனம் சுத்தமடையும்.
“நான்” வேறு “ஈசன்” வேறு என்ற எண்ணம் இரட்டை(duality) மனோபாவத்தை உண்டு பண்ணுகிறது. இந்த “அன்ய பாவ”ம் ,அத்வைத சித்தாந்தத்திற்கு மாறானதாக இருக்கிறது.
நமது தியானம் இந்த “அனன்ய” பாவத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். என்கிறார் பகவான்.
அஹம் ப்ரமாஸ்மி என்ற அடிப்படையில்த் தான்  -நான் நானாகவே”(self meditation) இருக்கவேண்டும். இதுவே உத்தமமான தியானம்.
எல்லாவிதமான யோக முறைகளுக்கும் குறிக்கோள் எப்படி ‘நானை” அந்த “பிரம்ம”த்தில் அடைக்கலமாக்கிறது என்பது தான்.அது இடை விடாத விசர மார்க்க்த்தின் மூலம் மட்டும் தான் இயலும்

 


Thursday, 13 November 2014

ரமணஜொதி 14

ரமணஜோதி14

மனம் ஒரு குரங்கு


உனையே மாற்றி யோடா  துளத்தின்மே
லுறுதியா யிருப்பா யருணாசலா

ஊர்சுற்றூளம்விடா துனைக்கண் டடங்கிட
வுன்னழ கைக்காட் டருணாசலா

மனத்தின் இயக்கம் ஒரு விசித்திரமானது.அது தன்னையே ஏமாற்றிக்கொள்வதில் மிகவும் திறமை வாய்ந்தது..மனத்தை இயக்குவது இந்திரியங்கள்..இந்திரியங்களால் இயக்கப்படுகின்ற மனம் ஒரே நேரத்தில் பல திசைகளில் சஞ்சரிக்ககூடியது.
மன அடக்கம் என்பது மிகவும் கடினமான ஒரு காரியம்.
ஒரு தமிழ் புலவர் கூறினார்,” மனத்தை அடக்குவதை விட எளிது தண்ணீரில் நடப்பதும் நெருப்பின் மீது உட்காருவதும்”.

பகவத் கீதையில் கிருஷ்ண பகவான் அர்ஜுனனிடம் கூறுவார்,’,மனத்தை அடக்க முயல்வதும் காற்றை தடுத்து நிறுத்த முயல்வது ஒரு போல்த் தான்.”
கபிலன் சிவபெருமானிடம் ஒருமுறை கூறினாராம்,” இந்த மனத்தை என்னிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்;அதை பக்தி என்கின்ற கயிறால் கட்டிப் போட்டு விடுங்கள்.”
அதே போல் பகவான் ரமணர் அருணாசலரிடம் தன் உள்ளத்தில் உறுதியாக உட்கார்ந்து விடக் கூறுகிறார்.
“அப்படி என் மனம் எங்கேயாவது அலைந்து திரிய முற்பட்டால்,அருணாசலா நீ உன் அழகை காட்டி கட்டிப் போட்டு விடு.”
க்ரோதத்பவதி சம்மோஹ்ஃ சம்மோஹாத்ஸ்ம்ருதிவிப்ரம்ஃ
ஸ்ம்ருதிப்ர்ம்சாத்புத்தினாசோ புதினாசத்ப்ரணச்யதி
பகவத் கீதை இரண்டாம் அத்தியாயம் சாங்கிய யோகம்,63 ஆம் ஸ்லோகம்
சினத்தால் மனக்குழப்பம், குழப்பத்தால் நினைவின்மை; நினைவு நாசத்தால் புத்தி நாசம்; புத்தி நாசத்தால் நிரந்தரமான அழிவு ஏற்படுகிறது. என்கிறது பகவத் கீதை இந்திரியங்களை பல விஷயங்களில் அலையவிடுவதால் நாம் கட்டுப்பாட்டை இழக்கிறோம். ஆசையும் காமமும் கட்டுப்பாடின்மையிலிருந்து உண்டாகிறது. எரியும் தீயை விறகுக்கட்டை வளர்ப்பது போல் மனத்தில் உருவாகும் எண்ணங்கள் ஆசையை கொழுந்து விட்டு எரியச் செய்கிறது.
ஆசையை தணிப்பதற்கு எடுக்கும் முயற்சிகள் தோல்வியடையும் போது கோபம் உண்டாகிறது. அது பரஸ்பர விரோதத்தையுண்டாக்கிறது. விரோதம் சண்டையிலும் நாசத்திலும் சென்று முடிகிறது.
விஷயாதிகளால் கவரப்படும் மனத்தை எப்படி மீட்டெடுத்து இறைவன் பால் நிறுத்த முடியும்?
அதற்கு அந்த அருணாசலத்தின் அருள் தான் வேண்டும்
புயலில் சிக்கிய கப்பல் ஒரு நிலை கொள்ளாமல் அலைக்கழிக்கப் ப்டுவது போல் மனம் ஆசைப்  புயலால் அலைக்கழிக்கப்பட்டு நம் நிம்மதியை அழிக்கிறது.

பகவான் ரமணர் அருணாசலத்தை உளத்தின் மேல் உறுதியாக இருக்கும்படி வேண்டுகிறார். பகவான் இன்னொரு நூலான உபதேச வுந்தியாரில் உளமும் அருணாசலமும் ஒன்றே தான் என்ற் சாதிக்கிறார்.




இருக்கு மியற்கையா லீசசீவர்க
ளொருபொருளேயாவருந்தீபற
வுபாதி யுணர்வேவே றுந்தீபற
                ஸ்லோகம் 24,உபதேசவுந்தியார்

இயற்கையில் ஈசனும் (பரமாத்மாவும்) ஜீவாத்மாவும் ஒரு பொருளேயாவர். அதை உணர்வதில்த்தான் வேறுபாடுள்ளது.
அடுத்த ஸ்லோகத்தில் இதை இன்னும் தெளிவு படுத்துகிறார்.

தன்னை யுபாதிவிட் டோர்வது தானீசன்
றன்னை யுணர்வதா முந்தீபற
தானா யொளிர்வத லுந்தீபற
                           ஸ்லோகம் 26,உபதேசவுந்தியார்
தான் என்ற உணர்வை விட்டொழிப்பதின் மூலம் ஈசனை நாம் அடையாளம் காண்கிறோம். நாம் யார் என்றறிந்துவிட்டால் ஈசனை அடைந்தவர்களாகிறோம். ஈசன் தானே நம்முள்: ஒளிர் விட்டுக் கொண்டிருக்கின்றார்.
ஆகவே மனதை ஒருமுகப்படுத்துவதற்கு ஒரே வழி “நான் யார்” என்ற விசார மார்க்கமே.
அந்த மார்க்கத்தில் பயணம் செய்தால் தானாகவே அருணாசலத்தின் அழகு தென்படும். நாமும் அருணாசலமும் ஒன்றே தான்; வேறு சிந்தைக்கு இடமில்லை என்பது புரியும்
அதன் தொடர்ச்சியாகத்தான் பகவான் அருணாசலேசுவரரிடம் அவரது அழகை தனக்கு உணர்த்தச் சொல்கிறார். அந்த வெளிச்சம் நமக்கு தென்ப்பட்டு விட்டால் அப்புறம் நம் மனம் வேறு ஒன்றையும் நாடாது


ரமணஜோதி

ரமணஜோதி 

தாயன்பே இறையன்பு


அருணாசலத்தின்
 பலனை எதிர்பாராமல் அரவணைக்கும் கருணையை பகவான் அடுத்த ஈரடிகளில் தாயின் கருணையோடு ஒப்பிடுகிறார்.

ஈன்றிடு மன்னையிற் பெரிதருள் புரிவோ
யிதுவோ வுனதரு ளருணாசலா

 நாம் ஏற்கனவே ரமணரின் தாயின் மீதுள்ள அன்பை அவரது செய்கைகளில் கண்டோம். அதை இங்கே அவர் வார்த்தைகளில் சொல்கிறார்.
தாய் எந்த பிரதிபலனையும் எதிர் பாராமல் அன்பை செலுத்துகிறாள்.தன் கடமைகளை நிறைவேற்றுகிறாள்.. பத்து மாதம் தன்னுள்ளே சுமந்து, தான் உண்ணும் உணவின் ஒரு பகுதியை அந்தக் குழந்தைக்கு அளித்து, தான் இழுக்கும் ஒவ்வொரு மூச்சின் மூலம் அதற்கு உயிர் மூச்சை அளித்து பெற்றெடுக்கிறாள்..பெற்றெடுத்த பின்னும் குழந்தையை தன்னிலிருந்து வேறுபடுத்திப் பார்க்காமல் தன்னின் ஒரு பாகமாகவே காண்கிறாள்..
எப்படி நாம் அனைவரும் அந்த சத் சித் ஆனந்த்தின் ஒரு பகுதியோ அது போல். அந்த சத் சித் ஆனந்தமும் நம்மை கை விடார் என்று பகவான் இந்த ஈரடிகள் மூலம் உணர்த்துகிறார்.

கர்ப்பப் பையில் குழந்தையை சுமக்கும் போது அவள் குழந்தைக்கு உணவும் உயிர்மூச்சும் மட்டுமல்ல கொடுக்கிறாள்..
அவள் காண்கின்ற கனவுகள்,பார்க்கின்ற காட்சிகள்,செய்கின்ற செயல்கள் ,ஏன் நினைக்கின்ற எண்ணங்கள் கூட அந்த குழந்தையில் தாக்கத்தை உண்டு பண்ணுகிறது.. ஆகவே தான் தாய்மையடைந்திருக்கும் போது
அவர்கள் கோரமான/கொடுமையான காட்சிகளைப் பார்க்கக் கூடாது,தவறான வார்த்தைகள் பேசக்கூடாது என்று நம் பெரியோர்கள் கூறினார்கள். பலாக்காயை,பூசணிக்காயை கர்ப்பிணிகள் துண்டு போடக்கூடாது என்றார்கள்.
அப்படி துண்டாடும் போது அவள் தெரியாமலையே அறுக்கின்ற விதைகளும், அவை அறுபடும்போது அவள் கர்ப்ப பையில் இருக்கின்ற குழந்தையில் ஏற்படுத்துகின்ற தாக்கமும் அந்தக் பிஞ்சு சிசுவின் பிற்கால வாழ்வைப் பாதிக்கக் கூடும் என்பதால் தான் அவர்கள் அப்படிக் கூறியிருக்கக் கூடும்
ஆனால் இன்று தொலைக்காட்சி தொடர்களில் வருகின்ற மனிதர்களையும் அவர்கள் காட்டிக்கூட்டுகின்ற கோமாளித்தனங்களையும் இரவென்றும் பகலென்றும் பாராமல் பார்த்துக் கொண்டிருக்கின்ற இன்றைய தலமுறை அடுத்த தலமுறையின் மீது ஏற்படுத்துகின்ற எதிர்மறையன விளைவுகளை நினைத்தால் கவலைப் படாமல் இருக்க முடியாது.
இவைகளை மூட நம்பிக்கை என்று எள்ளி நகையாடுபவர்கள் ஏராளம்..நமக்குத் தெரியாத உண்மைகள் எல்லாம் மூட நம்பிக்கை தான்.
கலீலியோ உலகம் உருண்டை என்ற போது அவரைப் பார்த்து பைத்தியம் என்று கூறிய உலகம் தானே இது.
அது இருக்கட்டும்..
அப்படிப்பட்ட தாயின் பேரன்பிற்கு மேலான அன்பு இந்த அருணாசலரின் அன்பு..
ஆகவே தான் அவரை தாயுமானவர் என்று கூறுகிறோம். அதே காரணத்தினால்த் தானோ என்னவோ பகவான் தன் தாயரின் சமாதி மீது கட்டப்பட்ட கோவிலில் மாதுருபூதேஸ்வரரை பிரதிஷ்டை செய்தார்.
https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif


ரமணஜோதி 13

ரமணஜோதி 13  

ஏகமும் அனேகமும்


எனையழித் திப்போ தெனைக்கல வாவிடி
லிதுவோ வாண்மை யருணாசலா

நாயகி-நாயக பாவத்தில் இந்த ஈரடிகள் இயற்றப் பட்டுள்ளது. நாயகி நாயகனிடம் இறைஞ்சுகிறாள், “ நீ இப்போது வந்து என்னை யாட்க்கொள்ளாவிட்டால் நான் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகிவ்டுவேன். நீ என்னை ஆட்க்கொள்ளாவிட்டால் உன் ஆண்மையை இந்த உலகம் பழிக்கும்”.

ஜீவான்மா பரமான்மாவிடம் கலப்பது இயற்கை.ஜிவான்மாவின் அந்த வேழ்க்கை இயற்கையானது.அதை நிறைவேற்ற வேண்டியது பிரமனின் கடைமை.

ஆண்-பெண் கல்வியேற்ப்படும்போது இருவரும் இரண்டற கலந்து விடுகிறார்கள்.
உண்ணும்போதும் உறங்கும்போதும் மற்ற எந்த ஒரு கர்மத்தில் ஈடுபடும்போதும் மனித மனம் அந்த கர்மத்திலிருந்து விலகி வேறு பலதையும் சிந்திக்கும். ஆனால் ஆண்-பெண் கலவியில் மட்டும் வேறு சிந்தனை ஏற்படாது..
அது போல் ஜீவான்மா பரமான்மா ஒருமிக்கும்போதும் வேறு சிந்தனை ஏற்ப்பட முடியாது.
ஒரே ஒரு வித்தியாசம்- நோக்கத்தில் மட்டும் தான். சிற்றின்ப நாட்டமும் பேரின்ப நாட்டமும் ஒரே போல் இருந்தாலும் பரமாத்மாவுடன் ஐக்கியமாகிவிட்ட ஜீவாத்மாவிற்கு மற்ற ஆசா பாசங்கள் எதுவும் ஏற்படாது.. எல்லாவற்றிலிருந்தும் முக்தனாகிவிடுகிறான். சிற்றின்பத்திலீடுபடுகிறவன் மற்ற இந்திரிய ஜனிதமான ஆசாபாசங்களிலிரிந்து விடுதலை பெறுவதில்லை. கடலில் உண்டாகின்ற சுழலில் அகப்பட்ட கப்பல் போல் அதிலேயே உழலுகிறான். இந்த இகலோக வாழக்கைக்கே உரித்தான கோப தாபங்களுக்கும் போட்டி பொறாமைகளுக்கும் ஆளாகிறான்.
முன்னது காமிய கர்மம்; பின்னது நிஷ்காமிய கர்மம்.
காமிய கர்மத்தை ஊக்கத்துடன் செய்கிறவன் களைத்துப் போய் நன்றாக உறங்குவான். அந்த உறக்கத்திலிருந்து திரும்பவும் விழித்து எழுந்து விடுவான். அவனது  பழைய நினைவுகள் கவலைகள். ஆசா பாசங்கள் எல்லாம் அவனை மறுபடியும் பிடித்துக்கொள்ளும்.
நிஷ்காமிய கர்மம் செய்கிறவன் களைப்பதும் இல்லை, மறுபடியும் விழிப்பதும் இல்லை. அவனுக்கு நித்ய முக்தி கிடைக்கிறது.
நிஷ்காமிய கர்மத்தால் மனம் தெளிவடைகிறது.
மனத்தெளிவு என்பதும் சித்த சுத்தி என்பதும் ஒன்றே. சித்த சுத்தியிலிருந்து ஒற்றுமை,சமத்துவம்,உண்மை,ஒழுக்கம்,உறுதி,அஹிம்சை நேர்மை,போன்ற நற்குணங்களுக்கு அவன் உரித்தாகிறான்.
நிஷ்கமிய கர்மம் அனுஷ்டிப்பவனுக்கு சப்தம்,ஸ்பரிசம் முதலிய இந்திரியங்கள் சம்பந்தப் பட்ட எந்த பாதிப்பும் இல்லை.
அவன் மனதில் எந்த விதமான கற்பனைகளும் உதிப்பதும் இல்லை.அவன் மனம் அலைகள் இல்லாத கடல் போல் சாந்தமாக  இருக்கும்.
உபதேச வுந்தியாரில் பகவான் கூறுகிறார்-

கன்மம் பயன்றரல் கர்த்தன தாணையாற்
கன்மங் கடவுளோ வுந்தீபற
கன்மஞ் சடமதா லுந்தீபற
                உ.உ 1
கர்மங்கள் நமக்கு முக்தியை தராது, ஏனென்றால் கர்மங்கள் முன்னாலேயே பிரமனால் நிச்சயிக்கப் பட்டவை.. அவை ஜடம்
ஆனால்
வினையின் விளைவு விளிவுற்று வித்தாய்
வினைக்கடல் வீழ்த்திடு முந்தீபற
வீடு தரலிலை யுந்தீபற
                     உ.உ.2
கர்மங்கள் ஜடமாகயிருந்த்தும் அவையிருந்திலிருந்து விழக் கூடிய விதைகள் வேறு பல ஆசா பாசங்களை கிளப்பிவிடுவதால் முக்தி நல்கா.
பகவான் இங்கே கர்மங்கள் என்று கூறுவது காமிய கர்மங்களையே.

கருத்தனுக் கக்குநிட் காமிய கன்மங்
கருத்தைத் திருத்தியஃ துந்தீபற
கதிவழி காண்பிக்கு முந்தீபற

ஆனால் பலனை எதிர்பார்க்காமல் அந்த அருணாசலேஸ்வரனை மட்டும் நினைத்து செய்யும் கர்மங்கள் நமக்கு அருணாசலேஸ்வரனை நெருங்குவதற்க்கு வழி காண்பிக்கும். ஏனென்றால் அப்படிப்பட்ட நிஷ்காமிய கர்மங்கள் மனதை சுத்தப் படுத்தி ஏனைய உலக ரீதியான இஷ்யானிஷ்டங்களிலிருந்து விடுதலையளிக்கும்..
நிஷ்காமிய கர்மங்கள் முக்தியை நேரடியாக நல்காவிட்டாலும் ஜீவன்மா பரமனில் லயிப்பதற்கான முதல் படி என்கிறார் ரமணர்..ஆகவே நிஷ்காமிய கர்மங்கள் பக்தியின் முதல் படி.
https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif