Saturday 15 July 2023

அஷ்டாவக்ரமணிகள் மணி 2 ஓசை 4

அஷ்டாவக்ர மணிகள்

மணி 2          ஓசை 4


கர்த்ருத்ர்வம்-போக்த்ருத்வம்


ஜனகன் ‘ நான் முக்தி பெற வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் ?’ என்று கேட்ட்தற்கு அஷ்டாவக்கிரர் ஆரம்பத்திலேயே, ‘இந்த்ரிய விஷயங்களை விஷமெனத் த்யஜிக்க வேண்டும். அது மட்டும் போதாது;  க்ஷமை, நேர்மை, தயை,போதுமென்ற மனப்பாங்கு, அதனாலுண்டாகின்ற சந்தோஷம், எல்லாவற்றிற்கும் மேலாக சத்தியம் பிறழாமை என்கின்ற குணங்களை அமுதெனப் பருக வேண்டும் .’ என்றார்.
 ‘நீ தேஹமல்ல, நீ பஞ்சபூதங்களுமல்ல; நீ எந்த வர்ணத்தை சேர்ந்தவனுமல்ல; நீ பிரம்மசாரி முதலிய எந்தவொரு ஆசிரமத்தைச் சேர்ந்தவனுமல்ல. நீ சர்வசாக்ஷி மட்டும் தான் ‘
இதே கருத்தை ஹஸ்தாமலகனும்  ஆதி சங்கரனின் ‘ நீ யார்?” என்ற கேள்விக்கு பதிலாகச் சொல்கிறான்.
ஆதி சங்கரர் கேட்டார்:

कस्तवम् शिशो, कस्य कुतोसि गन्ता

किम् नाम् ते त्वम् कुत् आगतोसि !

एतन्मयोक्तम् वद चार्भकत्वम्

मत्प्रीतये प्रीतिविवर्धनोसि !

கஸ்தவம் சிசோ, கஸ்ய குர்தொஸி கந்தா

கிம் நாம் தே த்வம் க்ருத ஆகதோஸி!

ஏதன்மயோக்தம் வத சார்பக்த்வம்

மத்ப்ரீதயே ப்ரீதிவிவர்தனோஸி!!

பகவான் ரமணரின் மொழிப் பெயர்ப்பு:

இங்குறு நீயார் பிள்ளாய் யாருடை மைந்த நீதா

நெங்குசெல் கின்றா யுன்பே ரென்ன நீ யெங்கி ருந்து

மிங்குவந் தனையென் நுள்ள மின்புற விசைப்பா யென்று

சங்கரனவிலப் பாலன் சாற்றிட வாய்தி றந்தான்.

ஹஸ்தாமலகன் சொன்னான்:

नाहम् मनुष्यो न च देवयक्षौ

न ब्राह्मणक्षत्रियवैश्य्स्शूद्रा: !

न ब्रह्मचारि न ग्रुहि वनस्थो

भिक्षुर्न चाहम् निजबोधररूपह:


நாஹம் மனுஷ்யோ ந ச தேவய்க்ஷோ

ப்ராஹ்மணக்ஷத்ரியவைஸ்யசூத்ர: !

ப்ரஹ்மசாரி ந க்ருஹி வனஸ்தோ

பிக்ஷுன சாஹம் நிஜபொதரூபஹ: !!

ரமணர் இதை கீழ்க்கண்டவாறு மொழிபெயர்த்துள்ளார்:

--பாலன் சாற்றிட வாய்தி றந்தான்

நரனலன் சுரனி யக்க நானல் நந்த ணன்மற்

றரசனும் வணிகன் சூத்ர நல்லனற் பிரம சாரி

கிரகியும் வான ப்ரத்தன் கேட்கல் சன்னியாசி

நிரையினி லாரு மல்லே நிசபோத வடிவனாமே !

நீ’ அல்லது ‘நான்’ எந்த வர்ணத்தையும் சேர்ந்தவனல்ல; எந்த ஆசிரமத்தையும் சேர்ந்தவனல்லன்; அப்படியென்றால் நான் யார்? நான் நிஜ போத சொரூபமான சத் சிதானந்தமான பிரம்மமே’
மேலும் அஷ்டாவக்கிரர் கூறுவார்:

धर्माधर्मा सुखम् दु:खम् मानसानि न ते विभो !

न कर्ताअसि न  भोक्ताअसि मुक्त एवासि सर्वदा !!



தர்மாத்ர்மா சுகம் துக்கம் மானஸானி ந தே விபோ !

ந கர்தாஅசி ந போக்தா அசி முக்த ஏவாஸி ஸர்வதா  !!


“நன்மை, தீமை, மற்றும் சுகம்- துக்கம் என்பன மனதின் செய்கையால் விளைவை; ‘நீ’ உளவாக்குவதல்ல. எங்கும் நிறைந்திருக்கும் பரமாத்மாவே ‘நீ’ . கர்த்தாவும் அல்ல; போக்தாவும் அல்ல. ’நீ’. எப்பொழுதும் முக்தனாகவேயிருக்கிறாய்.”
அஹம் இருப்பது வரை அது எதையாவது செய்து கொண்டிருக்கும்; அல்லது செய்தவற்றின் பலனை அனுபவித்துக்கொண்டிருக்கும். அஹம் புற உலகுடன் தொடர்பு கொள்ளும்பொழுது அஹம்காரம் ஜனிக்கின்றது. ‘நான் அதைச் செய்தேன்; இதைச் செய்தேன்’ என்று சொல்ல/எண்ண வைக்கிறது
அதே அஹம் உள்ளத்தில் நான் சந்தோஷமாக இருக்கிறேன்; ருசிக்கிறேன்; நான் வருந்துகிறேன் என்றெல்லாம் எண்ண வைத்து ‘போக்தா’ என்ற உணர்வை உண்டு பண்ணுகிறது.
இந்த இரண்டு உணர்வுகளும்- ‘நான் செய்கிறேன் என்ற கர்த்த்ருத்த்வ’ மனப்பாங்கும் ‘நான் அனுபவிக்கின்றேன்’ என்ற எண்ணமும்- ‘போக்த்ருத்வ’ மனப்பாங்கும் சேர்ந்து பொய்யான அஹம்காரத்தை உளவாக்கின்றது.
;அஹம்; சும்மா இருப்பதில்லை; புறப் பிரபஞ்சத்தில் செயல்படும் பொழுது அது நல்லவைகளையும் நாடுகின்றது; தீயவைகளையும் நாடுகின்றது. ‘  நான் கர்தா’ என்கின்ற எண்ணம் உள்ளவரை நல்லது-கெட்டதுகளில் ஈடுபடாமல் இருக்க இயலாது. அப்படி ஈடுபடும்பொழுது அதன் பலன்கள் இன்பம் உளவாக்குவதாகவோ துன்பம் உளவாக்குவதாகவோ இருக்கும். அவையின் தாக்கத்திலிருந்து தப்பிக்க இயலாது.
இந்த ‘இரட்டை’ களின் தாக்கம்  அஹத்தை அலைக்கழிக்கத்தான் செய்யும்.
ஆனால் இந்த இரட்டைகள் மனதின் உற்பத்திகள் தானே தவிர, ஆத்மாவிற்கு- நிஜ ‘நானுக்கு’ எந்த தொடர்பும் உடையதல்ல. ‘நான்; வெறும் சாக்ஷி மாத்திரம் தான்.
நன்மை-தீமை என்பது அஹம் புத்தியின் உற்பத்தி என்றால் இன்ப-துன்பங்கள் மனோ விருத்தியின் விளைவுகள் ஆக உள்ளது.
அஷ்டாவக்கிரர் ஜனகருக்கு அளித்த உபதேசங்களில் மிகவும் முக்கியமான ஒன்று இந்த இரு வரிகளில் அடங்கியுள்ளது. மனிதன்- அல்லது ஜீவாத்மாக்கள் எதிர்க்கொள்ளும் இன்ப- துன்பங்களுக்கும் சுக-துக்கங்களுக்கும் அடிப்படைக் காரணம் ‘தேக-மனோ’ சிக்கலை உணராதது தான்.
இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால், ஸ்தூல சரீரமும் அதனில் குடியிருக்கும் புத்தியஹங்கார சித்தமும் தான் ‘ நான்’ என்ற எண்ணமும் தான் இதற்கெல்லாம் காரணம். இந்த எண்ணத்திற்கு உரமூட்டுவது, மனோ-புத்தியஹங்காரத்தின் தூண்டுதலால் ஆற்றப்படும் கர்மங்களையெல்லாம் ‘  நான்’ ஆற்றியதாக எண்ணும் கர்த்த்ருத்துவ மனப்பாங்கும், அந்த கர்மங்களினால் விளையும் வினைப் பயன்களை ‘நான்’ அனுபவிப்பதாக நினைக்கும் போக்த்ருத்துவ மனப்பாங்கும் தான்.’
இந்த எண்ணங்கள் தான் ‘இது சரி’ ‘இது தவறு’ என்றும் ‘ இது இன்பம் பயிர்க்கின்றதென்றும் இது துன்பம் படைக்கின்றதென்றும்’ எண்ணத் தூண்டுகிறது. இந்த எண்ணங்களெல்லாமே மனதின்= புத்தியின்= அஹம் காரத்தின் படைப்புக்களே.
உண்மையில் ‘நான்’ நடப்பதில்லை; நினைப்பதில்லை; உண்பதில்லை;பேசுவதில்லை; ஏன்? மூச்சுக்கூட விடுவதில்லை. எல்லாமே அந்த விசுவாத்மாவின்- பரமாத்மாவின் செய்கைகளே. இந்த ஸ்தூல சரீரம் பரமாத்மாவின் ஒரு கருவி மாத்திரமே. ஆகவே எந்த செயலும் ‘நான்’ செய்வதில்லை.
ஆனால் ஸ்தூல சரீரத்தில் பிரவேசித்துவிட்ட ஆத்மா தனக்கும் பரமாத்மாவிற்குமுள்ள வேறுபடுத்த முடியாத- பிரிக்க முடியாத உறவை மறந்து விடுகிறது. தன்னை ஸ்தூல சரீரத்துடன் இணைத்துக்கொண்டு அதன் பரிமிதிகளுக்கு- எல்லைகளுக்கு ஆட்பட்டு தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்கிறது.
‘ ஆகவே, ஜனகா, எந்த நிமிடம் நீ இந்த உண்மையை உணருகிறாயோ, அந்த நிமிடமே நீ முக்தியடைந்தவனாகிறாய்’.
அஷ்டாவக்கிரர் இந்தக் கருத்தை அடுத்த வரிகளில் மேலும் தெளிவாக்குகிறா’நார்:

ஏகோ த்ருஷ்டாஸி ஸர்வஸ்ய முக்தப்ராயோஅஸி ஸர்வதா!

அயமேவ ஹி தே பந்தோ த்ருஷ்டாரம் பஸ்யஸிதரம்!!

एको द्रुष्टासि सर्वस्य मुक्तप्रायोसि सर्वदा !

अयमेव हि ते बन्दो द्रुष्टारम् पश्यसितरम् !!

‘நான்’ கர்தாவுமல்ல; போக்தாவுமல்ல என்றால், ‘நான்’ யார்?இந்த கேள்விக்கு அஷ்டாவக்கிரர் பதில் கூறுகிறார்:
‘நீ எல்லாவற்றையும் காண்கின்ற ஒரே ஒருவன்- ‘நீ’
 நீ காண்கின்ற எதனாலும் பாதிக்கப்படாதவன்; பந்திக்கப்படாதவன்.  நீ பந்திக்கப்படுவதெல்லாம் ‘நான் காண்பவனிலிருந்து வேறுபட்டவன்; நான் காணப்படும் காட்சிகளிலிரும் மாறுபட்டவன்’ என்ற நினைப்பு மட்டும் தான்.’
நம்முள்ளிலிருந்து கொண்டு ஒளிவீசி நம் இந்திரியங்களையும், மனது, மற்றும் புத்தியையும் செயல்படுவதற்கு உதவுவதும் இந்த ஆத்மா தான் .கண், காது, நாசி போன்ற இந்திரியங்களெல்லாம் அவன்- ஆத்மா பயன்படுத்தும் கருவிகளே. புறப் பிரபஞ்சத்திலுள்ள வஸ்துக்களைக் காண்பதற்கும் உணருவதற்கும், உணர்ச்சிவயப்படுவதற்கும் நினைப்பதற்கும் ஆன கருவிகளே.
ஆகவே ஆத்மா மட்டும் எல்லாவற்றையும் காண்கின்றவன். இதே ஆத்மா தான் பிரபஞ்சத்திலுள்ள எல்லா வஸ்துக்களிலும், ஜீவராசிகளிலும், அசேதன வஸ்துக்களிலும் நிறைந்து நிற்கின்றது. அது ஒன்றே.—ஏக சாக்ஷி. ஆகவே ‘தத் த்வம் அஸி’- அது நீயாக இருக்கிறாய்..
ஒரே ஒரு வித்தியாசம்—ஸ்தூல சரீரத்திலிருக்கும் மனோ-புத்தி இந்திரியங்கள் வசமாகியுள்ள நீ உன்னை அந்த சர்வ சாக்ஷியிலிருந்து வேறாகக் காண்கின்றாய் என்பது தான். இந்த நீ சூழ்நிலைகளினால் இந்திரியங்களின் தாக்கத்தால் உருவாக்கப் பட்டிருக்கிறாய்.
ஆத்மா- பரமாத்மா-சத் சிதானந்தன் மட்டும் தான் உண்மை. மற்றவையெல்லாம் மாயாமயக்கத்தினால் ஆத்மாவின் மீது படிந்த தூசு.  தூசை துடைத்து நீக்கிவிட்டால் உன் ஸ்வரூபம் உனக்குத் தெரியும்.
இந்தக் கருத்து கைவல்யோபனிஷத்தில் மிக வலிமையுடன் சொல்லப்பட்டிருக்கிறது.

अपाणिपादोहम्चिन्त्यशक्ति;पश्याम्यचक्षु; श्रुणोम्यकर्ण:.

अहम् विजनामि विविक्तरूपो न चस्ति वेत्ता मम चित्सातहम् !!

அபாணிபதோஅஹம்; அசிந்த்யசக்தி;

பஸ்யாம்ய சக்ஷு சாஸ்ரோனோம்ய கர்ண:

அஹம் விஜனாமி விவிக்தரூபோ

ந சஸ்தி வேத்தா மம சித்-சாத-அஹம் !!

‘ எனக்கு கால்களில்லை; கைகளில்லை; நினைத்துப் பார்க்க இயலாத சக்தி நான்; கண்களில்லாமல் காண்பவன்; செவிகளில்லாமல் கேட்பவன்; எந்த உருவமுமில்லாதவன்; எல்லாம் அறிந்தவன்; என்னை அறிந்தவன் யாருமில்லை;நானே எப்பொழுதும் மாசற்ற ஞானமாகவிருக்கிறேன்..’
அடுத்த வரிகளில் அஷ்டாவக்கிரர் சொல்கிறார்:
“ ஜனகா, நீ அஹங்காரம் எனும் காளசர்ப்பத்தால் தீண்டப்பட்டிருக்கிறாய்; ஆகவே,’ நான் செய்கிறேன்’ என்ற கர்த்ருத்வ எண்ணத்தில் ஆட்ப்பட்டிருக்கிறாய்.. ஆகவே ‘நான் கர்த்தா அல்ல’ என்ற அமுதைப் பருகு; நித்திய சந்தோஷத்தை அடைவாய்.”

 

அஹம் கர்தேத்யஹமானமஹாக்ருஷ்ணாஹிதம்ஸித: !

நாஹம் கர்தேதி விஸ்வாசாம்ருதம் பீத்வா சுகிபவ: !!


अहम् कर्तेत्यहमानमहाक्रुष्णाहिदम्शित: !

नाहम् कर्तेति विश्वासाम्रुत् पीत्वा सुखि भव !!

கர்த்ருத்வ மனோபாவம் அஹங்காரத்தின் வெளிப்பாடு; அது நமது எல்லா செயல்களிலும் பிரதிபலிக்கும்.’ நான் காண்கிறேன்’ ‘ நான் சொல்கிறேன்’, ‘நான் செய்கிறேன்’, ‘நான் நினைக்கிறேன்’,என்பன எல்லாமே அஹம்காரத்தின் வெளிப்பாடுகள் தான். இந்த பொய்யான அஹம்காரம் எழுவது எதனால் என்றால், நாம் நம்மை நமது கண்களாக, கால்களாக, கைகளாக, மனதாக, புத்தியாக நினைந்து அதனுடன் ஒன்றிப் போவதால்த் தான். இவை எதுவும் இல்லையென்றாலும் நீயிருப்பாய்.
மேலே குறிப்பிட்ட செயல்கள் யாவும் அதாது அவையவயங்களின் செயல்களே. ஆத்மாவாகிய ‘நீ’ இந்த செயல்களை உன் ஒளியால் பிராகாசிப்பிக்கின்றாய். அங்கங்களின் செயல்களை தனதாக மாற்றி ‘நான்; செய்தேன் என்று சொல்வது அஹம்காரத்தின் கரு.
இந்த கரு உருப்பெற்று செயல்படும் பொழுது அந்த செயல்களின் விளைவுகள் உன்னைத் தாக்குகின்றன. ‘நான் சந்தோஷப் படுகிறேன்’, நான் கோபப்படுகிறேன்’, ஒன்று கிடைத்தால் இன்னும் நிறைய வேண்டும் என்ற கிளர்ச்சி உண்டாகின்றது. அவைகளை அனுபவிக்க வேண்டும் என்ற உத்வேகம் உண்டாகிறது. இந்தக் கிளர்ச்சிகள் எப்படி காள சர்ப்பத்தின் விஷம் உயிரை அழிக்குமோ அது போல் ஆத்மாவை சாக்ஷாத்கரிக்கின்ற வாய்ப்பை தாமதப்படுத்துகின்றது; அழிக்கவும் செய்கின்றது.
இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி,’நான் கர்த்தா அல்ல’ என்ற எண்ணத்தை நம்மில் வலுப்பெறச் செய்யவேண்டும். அதற்கு இடைவிடாத அத்தியனம் தேவை.அசையாத நம்பிக்கை தேவை. இந்த விடா முயற்சியும் அசைக்க முடியாத நம்பிக்கையும் தான் காளசர்ப்பத்தின் விஷத்திற்கு மாற்று மருந்து; அது தான் அமுது. அதை உண்டால் விஷ முறிவு ஏற்படும்.

நரனலன் சுரனி யக்க நானல நந்த ணன் மற்

றரசனும் வணிகன் சூத்ர நல்லனற் பிரம்மசாரி

கிரகியும்  வான ப்ரஸ்தன் கேட்கல் சன்னியாசி

நிரையினி லாருமல்லே நிசபோத வடிவனாமே !

அஷ்டாவக்கிர முனிகள், மேலும் தொடர்கிறார்.

धर्माधर्म सुखम् दुखम् मानसानिन ते विभो

न कर्ताअसि न भोख्तासिसि मुक्त एवासि सर्वदा !


தர்மாதர்ம சுகம் துக்கம் மானசானி தே விபோ

ந கர்தாசி ந போக்தாசி முக்த ஏவாசி சர்வதா !

தர்மா--- தர்ம காரியங்கள்- நியாயமானவை= நல்லவை
அதர்மா—அதர்ம்மான காரியங்கள்- நியாயமல்லாதவை—கெட்டவை
சுகம்--  இன்பமதுக்கம்—துன்பம்
மனசானி—மனதை ஒட்டியது
தே விபோ--- நீ சம்பந்தப்படாதது
ந கர்தாசி—கர்த்தாவல்ல
 ந போக்தாசி—புஜிப்பவனும்—பயன் படுத்தப்வனும் அல்ல
முக்த—முக்தனாயிருக்கிறாய்
ஏவ—நிச்சயமாக
அசி—இருக்கிறை
சர்வதா—எப்பொழுதும்
நல்லது –கெட்ட்து, நியாய0 அநியாயம், இன்ப- துன்பம்  என்பவையெல்லாம் புத்தியையும் மனதையும் பொறுத்த்தே. அவைகளுக்கும் உனக்கும் சம்பந்தம் எதுவுமில்லை.


Sunday 9 July 2023

ரமணஜோதி 114

ரமணஜோதி 114

யார் பயன் பெற்றுள்ளார்?

     லாப நீ யிகபர லாபமி லெனையுற்று
   லாபமென் நுற்றனை யருணாசலா

எல்லோருடைய பரமமான இலட்சியமும் பரமனை அடைவதுதான். .வைஷ்ணவமாகட்டும் சைவமாகட்டும் எல்லா மதங்களின் நோக்கமும் ஒன்றே .இந்த இகலோக பிராரப்தங்களிலிருந்து விடுதலை வேண்டும்;.பரமனிடம் லயித்து நித்தியமான ஆத்ம சாந்தி பெற வேண்டும் என்பதே ஜீவாத்மாக்களின் ஒரே இலட்சியம். வழிகள் தான் மாறுபடுகின்றன. உன்னையடைந்து விட்டால் பரமானந்தம் கிடைத்து விடும் அதற்கு மேல் பெறுவதற்கொன்றுமில்லை. ஆகவே நீ தான் அறுதியான உறுதியான லாபம். அவ்வாறிருக்க நீ உன் பரம காருண்யத்தை என் மீது செலுத்தி என்னை உன் வசப்படுத்தி என்ன பயன் பெறுவாய்? என்கிறார் பகவான் ரமணர்.
சுயம்பிரகாசமான பரமனுக்கு மேற்பட்டதொன்றுமில்லை.இந்தக் கருத்தை பகவான் கிருஷ்ணர் கீதையில் இங்கனம் கூறுவார்:
ந மே பார்த்தாஸ்தி கர்தவ்யம் த்ரிஷுலோகேஷு கிஞ்சன !
நானவாப்தமவாப்தவ்யம் வர்த ஏவ ச கர்மாணி !!
‘பார்த்தா, மூவுலகிலும் எனக்கு செய்ய வேண்டிய கர்மங்கள் ஒன்றுமில்லை;அடையாத ஒன்று இனிமேல் அடைவதற்குமில்லை; இருந்தும் கர்மம் ஆற்றிக் கொண்டேயிருக்க்றேன்”
பரமனின் ஒரே கடமை எல்லோரிடமும் கருணை காண்பிபதும், எல்லோரிடமும் நீக்கமற நிறந்திருப்பதும் தான். பரமனிடம் லயித்து ஆத்மசாக்ஷாத்காரம் பெறும் வரை எல்லா ஆத்மாக்களும் குறையுள்ளவையே. யாரும் எல்லா பேறும் பெற்று விட்டோம் என்று மன நிறைவும் அடைய முடிபவதுமில்லை.
அப்படிப்பட்ட குறைகள் நிறைந்த என்னை அடைந்து அடைவதற்கு ஒன்றுமேயில்லாத நீ என்ன பலன் காணப்போகிறாய் ,அருணாசலா? இதுவல்லவோ “ஓங்காரப்பொருளாகிய, ஒப்புயர்வில்லா “உன் கருணை?என்று பகவான் வியக்கிறர்.
 இதையே மாணிக்கவாசகரும் கூறினார்,” நீ எனக்கு அளித்திருப்பது சர்வ வல்லமை பொருந்திய உன்னை; பெற்றுக்கொண்டிருப்பதோ இந்த அஞ்ஞானியான என்னை? இருவரில் யார் பயன் பெற்றுள்ளார் என்பதையும் நீயே அறிவாய். முடிவில்லா ஆனந்தானுபூதியை பெற்றுள்ள நானல்லவோ பாக்கியம் செய்தவன்?”


Tuesday 27 June 2023

ரமணஜோதி 120

ரமணஜோதி 120

  

 மரணம்- ஒரு லயனம்;இழப்பல்ல

வீடுவிட் டீர்த்துள வீடுபுக்குப் பையவுன்  

            வீடுகாட் டினையரு ளருணாசலா


“நான் எனது வீடு என்று நினைத்துக் கொண்டிருக்கும் இந்த தேகத்தை—தேகப் பற்றை விட்டு, உண்மையான வீட்டை மெல்ல மெல்ல அடையாளம் கண்டு உன் வீட்டை காட்டினாய் அருணாசலா” என்று கூறுகிறார் பகவான் ரமணர் இந்த சுலோகத்தில்.ஒரு விதத்தில் பார்த்தால் அவர் தனது கடந்த காலத்தை நினைத்து அருணாசலனுக்கு நன்றி சொல்லுவது போல் தோன்றும். இந்த சுலோகத்தின் கருத்து.திருச்சுழியில் பிறந்து மதுரை கல்வி பயின்று கொண்டிருந்த வெங்கட் ராமனை தன் வசம் ஈர்த்து, திருவண்ணாமலை வரவழைத்து மெல்ல மெல்ல ஆத்ம ஞானத்தை புகட்டி ஞானியாக்கி, பகவானாக்கிய அந்த அருணாசலனின் கருணையை நினைத்து வியக்குகிறார் ரமணர்.
ஆனால் எல்லோருமே இந்த மூன்று விதமான வீடுகளையும் அனுபவித்து ஆத்ம சாக்ஷாத்காரம் நேட வேண்டும் என்றால் அருணாசலனின் அருள் வேண்டு என்கிறார் பஜகவான் ரமணர்.
அதாவது முக்தி பெறுவது ஒரு நாள் விஷயமல்ல;(  ரமணர் போன்ற மஹான்களுக்கு அது ஒரு நிமிட விஷயமாக சம்பவித்திருக்கலாம்) ஆனால் சாதாரண ஜீவாத்மாக்களுக்கு மெல்ல மெல்ல நீண்ட கால அப்பியாசத்தினாலும் ஆத்ம விசாரணயினாலும் நிகழக்கூடியது.பரமனை மனதில் இருத்தி ஆத்ம விசாரணை ஆரம்பிக்க வேண்டும்.அப்படி தொடர்ந்து செய்யும்பொழுது நாம் இகலோக வீட்டிலிருந்து அகன்று பிரம்மத்தை நெருங்கி விடுவோம். ஆத்ம விசாரணை முடிந்து பரமனுடன் ஐக்கியமாகும் நிலையில் நாம் மூன்றாவது வீட்டிற்குள் ஐக்கியமாகிறோம். அது தான் முக்தி- மோக்ஷம்.
பகவத்கீதை எட்டாம் அத்தியாயம் எட்டாம் சுலோகத்தில் கீதாசாரியன் கீழ்கண்டவாறு கூறுகிறான்:
                             अभ्यासयोगयुक्तेन चेतसा नान्यगामिना !
                             परमम् पुरुशम् ढिव्यम् याति प्रार्थानुविचिन्तयन्!!

            அப்யாஸயோகயுக்தேன  சேதசா  நான்யகாமினா !

            பரமம் புருஷம் திவ்யம் யாதி பார்த்தானுசிந்தயன் !!

” பார்த்தா, வேறு விஷயங்களில் மனம் செல்லாது, அப்பியாசம் எனும் யோகத்தோடு கூடிய சித்தத்தால் தேஜோமயமான பரம புருஷனை சிந்திக்கின்ற ஜீவாத்மா அப்புருஷனை அடைகிறான்.”
ஒரே கருத்தை திரும்ப திரும்ப சொல்லுவது அப்பியாசமாகிறது.நாள் தோறும் பரம புருஷனை நினைக்க, 'தான்' தான் இந்த உடல் அல்லது இந்த உடல் தான் 'தான்' என்ற நினைப்பு மறைந்து போய்விடுகிறது.ஒரு காய் பழமாகும் பொழுது- பக்குவம் அடையும் பொழுது பழம் மேல் தோலினின்று கழன்று பிரிவது போன்றது தான் ஆத்ம போதமும்.அந்தபக்குவப்பட்ட நிலையில் தேக உணர்ச்சியை கடந்து நிற்கிறது.
தொடர்ந்து  செய்யப்ப்டுகின்ற தியானம் மூலம் அப்பியாசி யாரை தியானிக்கிறானோ அவனாகவே ஆகிவிடுகிறான்.நிரந்தரம் தியானத்தில்—ஒரே நினைப்புடன் இருப்பவன்- எல்லா ஜிவஜாலங்களிலும் பரமனே குடிகொள்கிறான் என்ற மஹாதத்துவத்தை உள்வாங்கிக் கொண்டிருக்கிறவன்,

 பரமம் திவ்யம் புருஷம் யாதி

எல்லையில்லா-ஆதியும் அந்தமுமில்லா அந்த பரம புருஷனாகவே ஆகிவிடுகிறான்.ஆத்ம சாக்ஷாத்காரம் அங்கு நிகழ்கிறது.ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றாகிவிடுகிறது.பிரபஞ்ச தத்த்துவம் நிரூபிக்கப்பட்டு விடுகிறது.
இந்த மாதிரியான அப்பியாசத்தைக்குறித்து பகவான் ரமணர் கூறுவார்:
“நித்யனாக இருக்கும் ‘ தன்’னைப் பார்க்காமல் அனித்யமாக இருக்கும் சரீராதிகளைப் பார்த்து பிரமையுறுகிறவனுக்கு அந்த பிரமையை நீக்க சாதனை தேவை.
‘தன்’னைப் பார்க்கிறவனுக்கு தனக்கு அன்னியமாக ஒன்றும் காணாது.” அப்படிப்பட்ட பக்குவம் அடைந்தவனுக்கு சாதனை அப்பியாசம் தேவையில்லை. அந்த நிலைமையை அடையும்பொழுது அவன் பரமனுடன் ஐக்கியமாகி விடுகிறான்.
பகவான் சொல்லுவார்,சாக்ஷாத்காரம் என்றால் பாவனாதீத சத்பாவ ஸ்திதி( மனத்தின் எண்ணங்களுக்கு அப்பாற்பட்ட நன்னெறியான உத்தம நிலையில் உறைவதே
இப்படிப்பட்ட பாவனாதீத சத்பாவ ஸ்திதி சாமானியர்களுக்கு சாத்தியமா? பகவான் விடை கூறுகிறார்:
“ஆமாம், ஐயா, ( சாமானியர்களுக்கு) சாதனை அவசியம் தான்;ஆனால் எதற்கு சாதனை? ‘தான்’ எப்பொழுதும் எங்கேயும் இருப்பது. ‘தன’க்காக முயற்சி செய்து எங்கிருந்தோ கொண்டு வரவேண்டிய அவசியமில்லை.’தான்’ ‘தானாக’நிற்பதற்கு தடையாக இருக்கும் சரீரம் முதலிய மயக்கங்களை‘ நீக்குவதற்கே சாதனை.
உண்மையான ‘தன்’’னைப் பார்க்காமல் ‘தன்’னால் பார்க்கப்படுகின்ற  அசத்யமான சரீரம் முதலிய உலகே சத்யம் என்று நினைப்பதால் பிராந்தியேற்படுகிறது.இந்த பிராந்தி போவதற்குத் தான் சாதனையே தவிர ‘தன்னை தான்” அடைவதற்கு சாதனை எதற்கு? ‘தன்’னை’க் கண்டவனுக்கு அன்னியமாக எதுவும் காணப்படாது”.
இன்னொரு முறை பக்தர் ஒருவர் கீதையில் கர்மயோகத்தை பிரதானமாக கிருஷ்ணர் சொல்கிறாரே,பகவான்’ சாதனை’ முக்கியமில்லை என்கிறாரே என்று கேட்டதற்கு பகவான் கீதையின் 9ஆம் அத்தியாயம் 16 சுலோகத்தை உத்தரித்து சொல்லுவார், கிருஷ்ணனே சொல்லியிருக்கிறார்,” கர்மங்களில் முக்கியமான வேள்வி,அதன் கர்த்தா,அதன் மந்திரம்,அதன் உபகரணம் யாவும் தானே “அப்படியென்றல் என்ன அர்த்தம்? தன்னை மிஞ்சின கர்மங்கள் ஒன்றுமிலை என்று தானே?

                                    அஹம் க்ரதுரஹம் யஜ்ன: ஸ்வ்தாஹம் அஹ்மௌஷதம் !

                                    மந்த்ரோஹம் அஹமே வாஜ்யம் அஹமக்னிரஹம் ஹூதம்!!

வேதத்தில் விதிக்கப்பட்டுள்ள க்ரது கர்மமாகட்டும், ஸ்மிருதியில் சொல்லப்பட்டுள்ள யக்ஞமாகட்டும், பித்ருக்களுக்கு படைக்கப்படும் ஸ்வதா-உணவாகட்டும்,குணமடைய கொடுக்கப்படுகின்ற மருந்தாகட்டும்,நல்லது நடக்கட்டும் என்ற எண்ண்மாகிய மந்திரமாகட்டும்,ஹோமத்தில் வார்க்கப்படுகின்ற வாஜ்யம் என்கின்ற நெய்யாகட்டும்,அந்த் நெய்யை கொழுந்து விட்டு எரிய வைக்கின்ற அக்னியாகட்டும் ,ஹூதம் எனும் வேள்வி வேட்டல் எனும் வினையாகட்டும் எல்லாமே நான் தான்.ஆகவே என்னையன்றி வேறு என்ன கர்மம் உளது? ஆகவே எல்லாமே பிரம்மம் தான் என்று கிருஷ்ணர் கூறியுள்ளார். பிரம்மத்தை: நினைப்பதை விட மேலான கர்மம் என்ன உளது.
அதே போல் நான்காம் அத்தியாயம் இருபத்தி நான்காம் சுலோகத்தில் கிருஷ்ணர் கூறுவார்:

செய்கின்ற வினைஅத்தனையும் பிரம்ம சொரூபமாகவே கருதுபவனை வினை கட்டுப்படுத்தாது

பொருள்களனைத்தும் பிரம்மமே என்பது தான் சத்தியாமான தத்துவம்.

இதை பாரமார்த்திக திருஷ்டிஎன்பார்கள்.

பகவான் மேற்கண்ட கருத்துக்களை மற்றொருவிதமாக ‘உள்ளது நாற்பது-அனுபந்தம்’20 ஆம் சுலோகத்தி கூறுகிறார்:

            இதயமலர்க் குகையகமா யிலகிறையே

                        குகேசனென வேத்தப் பட்டோ

            நிதமனைய குகேசன்யா நெனுஞ்சோகம்

                        பாவனைதா நின்னு டம்பிற்

            றிதமுறுனா  நெனுந்திடம்போ லப்பியாச

                        பலத்தாலத் தேவாய் நிற்கிற்

            சிதையுடனா நெனுமவித்தை செங்கதிரோ

                        நெதிரிருள்போற் சிதையு மன்றே

பரமனின் நிஜமான வாசஸ்தலம் நமது இதயமெனும் குகைதான்.பரமன் நமது இதயத்தில் வசிக்கும் தாமரையாக இருக்கிறான். இடைவிடாத சாதனையால்
“ நான் தான் அவன், அவன் தான் நான்” என்ற எண்ணம் நம்து சிந்தனையில் உறைத்துவிடுமேயானால் இந்த உடல் தான் நான் எனும் மித்யா போதம் அழிந்து விடும்.இது எது போல் என்றால் சூரியன் உதயமாகும்பொழுது எவ்வாறு இருள் இல்லாதாகிவிடுகிறதோ அதுபோல்..
இதே கருத்தை யோகவாஸிஷ்டத்திலும் காணமுடிகிறது.
யோக வாசிஷ்டம் 5 ஆம் அத்தியாயம் 78 பகத்தில் 38 ஆம் சுலோகத்தில் : வசிஷ்டர் சொல்லுவார் : தொடர்ந்து நிஜமான இதயத்தில் குடிகொள்ளும் நான்-சர்வ ஞானம் ’ மனதின் சிந்தைகளில் லயிக்கும்பொழுது , அங்கு மனோ நிக்ரகம் நிகழும்.ஆது தான் ஆத்ம சாக்ஷாத்காரம்.



“.