ரமணஜோதி 12
என்னை கை விடாதே
ஆருக் காவெனை யாண்டனை யகற்றிடி
லகிலம் பழித்திடு மருணாசலா
மிகுந்த சிரமத்திற்குப் பின் உன்னிடம்
“ஐக்கியமாயுள்ளேன். இனிமேல் என்னை விட்டு நீ
அகன்றாலோ உன்னை விட்டு நான்
அகன்றாலோ இந்த உலகம் உன்னை சும்மா விடாது.
நீ தீராத பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடும். ஆகவே என்னை உன்னிடமே
வைத்துக் கொள்ள வேண்டும் அருணாசலா” என்கிறார் ரமணர்.
பகவான் இந்த ஈரடிகள் மூலம் நமக்கு உணர்த்த முயல்வது
என்ன்வென்றால் தாற்காலிகமான தியானமோ தவமோ பிரயோசனப்பாடாது.
தொடர்ந்து நான் யார் என்று விசரமார்க்கத்தில் ஈடுபட்டு நாம்
அந்த பரமனிடம் ஐக்கியமாக வேண்டும் என்பது தான்.
சிலருக்கு திடீரென்று ஏற்படுகின்ற ஞான வெளிப்பாடுகளைப்
பற்றி நாம் கேள்விப்
பட்டிருக்கிறோம். பல மேற்கத்திய புத்தகங்களிலும் இப்படிப்பட்ட அனுபவங்களைக்
குறித்து எழுதப்பட்டிருக்கிறது.
சாது அருணாசலா (A.W.சாட்விக்) தனது நினைவு குறிப்புக்களில் Dr.Bucke என்பவர் எழுதிய ஒரு
புத்தகத்தை குறிப்பிடுகிறார். Dr.Bucke தனது புத்தகத்தில்
பலருக்கு ஏற்பட்ட இம்மாதிரியான் அனுபவங்களை தொகுத்து வழங்கியுள்ளார்..
ஸ்ரீ பகவான் ரமணர் இம்மதிரியான அனுபவங்களைக் குறித்து என்ன
கூறுகிறார்?
“இப்படி திடீரென்று வெளியாகும் சித்விலாசங்களினால் ஏற்படும் உயரிய
தெளிவுகள் ஒருசில நாட்களே தங்கி,காலப்போக்கில் மறைந்து
விடும்” என்கிறார் ரமணர்.
எது திடீரென்று தோன்றியதோ அதன் மறைவும் அப்படியே திடீரென்று
நிகழும். ஆகவே ஒருவன் இப்படி
அனுபவித்தது ஆன்ம ஞானமன்று. “
இவர்களில் நான் என்ற அகந்தை மறைவதில்லை.இவ்வகந்தையே
முழுமையான ஞான அனுபவத்திற்கு தடையாகவும் உள்ளது.
அதனால்த் தான் பகவான், பிரம்மனிடம் “என்னை ஒரு
முறை ஆட்க்கொண்டு விட்டால் என்னை விட்டு விடாதே” என்று வேண்டுகிறார்.
நாம் சாதாரணமாகத் தியானம் செய்யும் போது நம்
மனம் ஒரு நிலைப்படுகிறது. ஆனால் நாம் ஏதோ ஒரு பொருளின் மீது அல்லது நினைவின் மீது
மனதை ஒருமுகப்படுத்த முயல்கிறோம். அப்படி முயலும் போது“நான்” என்ற அகமும் நாம் மனதை
ஒருமுகப்படுத்துகின்ற ஒரு பொருள் அல்லது நினைவு என்று இரண்டு உண்டாகின்றது அதன்
காரணமாக அந்த அனுபவம் நிரந்தரமாக இருப்பதில்லை.சிறிது நேரம் அல்லது காலத்திற்குப்
பின் மறைந்து விடுகிறது.
இம்மாதிரியான எண்ணங்களற்ற நிலையை மனோலயம் என்று கூறலாம்.
இப்படிப்பட்ட மனோலயத்தை அடைவதற்கு ஏன் நாம் கஷ்டப்பட்டு தியானம் செய்ய வேண்டும்
என்ற கேள்வி நம் மனதில் எழுவது இயற்கையே. .இம்மாதிரியான நிலையை நல்ல உறக்கத்திலும்
நமக்கு கிடைக்கலாம்.அல்லது morphine, chloropharm போன்ற ரசாயனப் பொருள்களின்
மூலமும் கிடைக்கலாம்.
ரமணர் இந்த மாதிரியான அனுபவத்தை குறித்து ஒரு கதை கூறுவார்.
கங்கைகரையில் ஒரு சாமியார் இருந்தார் மிகுந்த ஞானி .நினைத்த நேரத்தில் சமாதி
நிலையை அடையும் சித்தி உடையவர். ஒரு நாள் தன் சீடனிடம் தாகத்திற்கு தண்ணீர் கொண்டு
வருமாறு கூறினார்..சீடன் தண்ணீர் கொண்டு வருவதற்குள் சாமியார் சமாதி நிலைக்குப்
போய் விட்டார். நீண்ட சமாதிக்குப் பின் சாமியார் கண் விழித்துப் பார்த்தார்.சீடனைக்
காணோம்;அவனின் எலும்புக் கூடு தான் இருந்தது. எனென்றால் சாமியார் ஆயிரம் வருடம்
சமாதி நிலையில் இருந்த் விட்டார்.கண் விழித்ததும் அவருக்கு தாகம் எடுத்தது.
ஏனென்றால் அவரின் நான் அழியவில்லை.சமாதி/மனோலயம் எவ்வளவு தீர்க்கமாக் இருந்தாலும்
நிரந்தரமில்லையென்றால் பலன் ஒன்றுமில்லை
சமாதி நிலைகளை மூன்றாக பிரிக்கலாம்
1.ஸவிகல்ப ஸமாதி
2.நிர்விகல்ப ஸமாதி
3.ஸஹஜ ஸமாதி.
ஸவிகல்ப ஸமாதி
இது ஆழ்ந்த தியான நிலை இந்த நிலையில் அவன் தனது தனித்
தன்மையை இழப்பது இல்லை. இது சாதாரண தியானத்தை(meditation) விட மேலானது.
நிர்விகல்ப ஸமாதி
இன்னிலையில் சாதகன் தன் தனித்தன்மையை இழந்து ஆன்மாவில்
லயித்து விடுகிறான்.ஆனால் இதுவும் தாற்காலிக்மானது தான்.முடிவில் அவன் விழித்து
எழுந்து ஜாக்ரத்(விழிப்பு) நிலைக்கு வந்தாக வேண்டும்.இது தான்
.ஸஹஜ ஸமாதி
இது தான் முடிவான நிலை, இந்த
நிலையில் ஒருவன் ஆன்மாவோட முழுதும் கலந்து விடுகிறான். இந்த நிலையில் அவன் தினசரி
வாழ்க்கையில் செய்ய்ய வேண்டியது எல்லாவற்றையும் செய்துகொண்டிருப்பான். ஆனால் அவன்
ஆன்மாவோடு ஒன்றிவிட்டதால் இகலோக பற்றெதுவும் இல்லாமல் பலன் எதிர்ப்பார்ப்புக்கள்
இல்லாதவனாக இருப்பான்.
பகவான் ரமணர் இந்த நிலையை முதல் இரு நிலைகளுக்கும்
செல்லாமலேயே எட்டிவிட்டார் தனது பதினாறாவது வயதிலேயே. ஆகவே தான் அவர்
பகவான்-மஹரிஷி !
No comments:
Post a Comment