Wednesday, 19 November 2014

ரமணஜோதி 16

புலன்களின் விளையாட்டு
ஐம்புலக் கள்வரகத்தினிற் புகும்போ
தகத்திநீ யிலையோ வருணாசலா

ஓருவனா முன்னை யொளித்தெவர் வருவா
ருன்சூ தேயிது வருணாசலா

ஆன்மானுபூதி ஏற்படாவிட்டால் –ஜீவன்மா பரமாத்மாவுடன் லயீகவில்லை யென்றால்-மனம் இந்திரியங்களின் ஆளுகைக்கு உட்பட்டுவிடும்.
சாதாரண ஜீவான்மாவின் சந்தேகம் “ஏன் இப்படி நிகழ்கிறது?” என்பது தான்.
பரமாத்மா சர்வ சக்தனாயிருப்பதால் அவன் ஏன் நம்மை வலிய ஆட்க்கொண்டு இந்திரியங்களிடமிருந்து விடுதலை தரலாகாது?
பரமாத்மா தூக்கத்திலிருக்கிறாராஇல்லை;வேண்டுமென்றே சோதனை செய்கிறாராஅல்லது அவருடைய லீலையோ இது?
இப்படிப்பட்ட சந்தேகங்களை பகவான் நம் சார்பில் கேட்கிறார்.

பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார்.

இந்த்ரியஸ்யேந்த்ரியஸ்யார்த்தே ராகத்வேஷௌ
                             வ்யவஸ்திதௌ
தயோர்ந வசமாக்ச்சேத்தௌ ஹ்யஸ்ய பரிபந்தினௌ

மூன்று வகையான –தமோ,ரஜோ,சத்துவ- குண வித்தியாசங்களால் இந்த பிரபஞ்சம் உண்டாகியுள்ளது. அதே போல் ஐந்து இந்திரியங்களிடையேயுள்ள விருப்பு வெறுப்புக் களால் உயிர்களின் இயல்புகளிலும் வேறுபாடு உண்டாகிறது
இந்த விருப்பு வெறுப்புகளை மாற்றியமைப்பதில்த் தான் ஜீவான்மாவின் வெற்றியடங்கியிருக்கிறது.
அந்த இந்திரியங்களால் ஏற்படுகின்ற விருப்பு வெறுப்புக்கள் தான் நமது சத்ருக்கள்.

இந்த காம-குரோத சத்ருக்களை சம்ஹாரம் செய்வது அவ்வளவு எளிதல்ல என்கிறார். ராமகிருஷ்ண பரம ஹம்ஸர்.
இந்த காம குரோதங்கள் உலக விஷயங்கள் பற்றியதாக இருக்கும் வரை அது மிகவும் கஷ்டமே.
ஆகவே அந்த ஈர்ப்பை நாம் ஈசுவரினிடம் திருப்பி விட வேண்டும்.
உலக விஷயங்களிலுள்ள ஆசையை ஈசுவரனிடத்து பற்றாக மாற்ற வேண்டும்,
மற்ற ஜீவாத்மாக்களிடம் ஏற்படுகின்ற கோப தாபங்களை ஈசனை நோக்கித் திருப்பி விட வேண்டும்.
ஏன் அந்த பரமாத்மா இவ்வாறு ஒரு நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று யோசிக்க வேண்டும்.
அப்பொழுது நமக்கு புரியும் நாம்- ‘ஈசனை மறந்தோம் .அவனை நினைப்பதற்கு ஒரு சந்தர்ப்பமாகத் தான் ஈசன் இதை உருவாக்கியுள்ளான்



பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் கூறுவதை மீண்டும்  பார்ப்போம்:

மயி ஸர்வாணி கர்மாணி ஸ்ம்ன்யஸ்யாத்யாத்மசேதஸா!
நிராசீர்னிர்மமோ பூத்வா யுத்யஸ்வ விகதஜ்வர!

எல்லாம் ஈசன் செயல். எல்லாம் அவன் உடமைநாமெல்லாம் அவனின் அம்சங்கள்;இந்த எண்ணங்கள் வரும்பொழுது நாம் இந்தியிரியத் தாக்கத்திலிருந்து விடுபட்டு விடுவோம்.
கீதையின் இரண்டாம் அத்தியாயம் 62-ஆம் சுலோகத்திலும் மூன்றாம் அத்தியாயம் 34-ஆம் சுலோகத்திலும்சொன்னதை கிருஷ்ண பரமத்மா மூன்றாம் அத்தியாயம் 37-ஆம் சுலோகத்தில் மறுபடியும் வலியுறுதுகிறார்.

காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோகுண்ஸமுத்பவ:  !
மஹாசனோ ம்ஹாபாப்மா வித்த்யேன்மிஹ வைரிணம். !

ரஜோகுணத்திலிருந்து உதிக்கின்ற காமமும் குரோதமும் தான் நமக்கு சத்ருக்கள். அவை நம்மில் உண்டகும்போது ரஜொ குணம் மேலும் கொழுந்து விட்டு எரிய ஆரம்பிக்கிறது.
இந்த காம குரோதங்கள் தீனி கொடுக்க கொடுக்க அடங்குவதில்லை;நேர்மாறாக மேலும் மேலும் வளருகிறது

இந்திரியாணி மனோபுத்திரஸ்யாதிஷ்டான்முச்யதே !
ஏதைர்விமோ ஹயத்யேஷ ஞானமாவ்ருத்ய தேஹினம் !

காம குரோதங்களுடைய பிறப்பிடமும் இருப்பிடமும் இந்திரியங்களால் ஊக்கிவிக்கப்படுகின்ற மனதும் புத்தியும் தான்.. எங்கிருந்து சத்ரு இயங்குகிறான் என்று தெரிந்து விட்டால் அவைகளை அழிப்பது சுலபம். மனதை அழிக்க வேண்டும் என்று பொருள்.

தஸ்மாத்த்வமிந்த்ரியாண்யாதௌ நியம்ய பரதர்ஷப !
பாப்மானம் ப்ரஜஹி ஹ்யேனம் ஞானவிக்ஞானநாசனம். !

நாம் இந்திரியங்களை அடக்க பயின்றுவிட்டோமென்றால்
ஆசைகள் தானாகவே அழிந்து விடும்.ஆத்ம சொரூபத்தை மறைக்கின்ற ஆசை அழிந்து விட்டால் பிரமனிடம் லயிப்பது எளிதாகி விடும்.

இதையே தான் பகவான் ரமணர் உபதேச உந்தியாரில் கீழ்கண்டவாறு கூறுகிறார்.

பாவ பலத்தினாற் பாவனா தீதசற்
பாவத் திருதலே யுந்தீபற
பரபத்தி தத்துவ முந்தீபற
          உ.உ.9
நமது தியானம் கடவுளை நம்மிலிருந்து அன்னியமான ஒன்றாகக் கருதி இருக்குமேயானால்,நம் மனது பல திசைகளில் சிதறிப் போக வாய்ப்புண்டு..
கடவுள் நம்மிலிருந்து அன்னியமான ஒன்று இல்லை கடவுள் என்பது நம்முள்ளே இருக்கும் ஆத்மா தான் என்று திண்ணமாக நம்பி தியனம் செய்வோமேயானால்நம் மனம் சுத்தம் செய்ய்யப்படும்.
இதுதான் “அனன்ய பாவம்
அனன்ய பாவமாகப்பட்டது நமது மனதை ஒருமுகப்படுத்தி நமது கவனம் வேறு எங்கும் செல்லாமல் இருக்க உதவுகிறது.
இந்த “சத்-பாவம்”  நமது பாவனா சக்தியை மீறின அனன்ய பாவமாகும். இது பர பக்தி தத்துவத்தை அடிப்படையாகக்கொண்டதாகும்.
மற்றொரு விதத்தில் கூறினால்,பக்தி மார்க்கம் முதலிய நிஷ்காமிய கர்மங்கள்  நம்மை ஈசனிடம் எடுத்து செல்லுமென்றாலும் அவை அதற்கான முதல் படியேயாகும்.
முடிவு விசார விகாரமில்லாத அகர்ம அவஸ்தையே ஆகும்.அந்த நிலையில் நாமும் பிரம்மமும் ஒன்று தான் என்ற ஆத்மானுபூதி ஏற்படும்.அதற்கு “நான் யார்” என்ற விசார மார்க்கமே ஒரே வழி.
நாம் நமது உண்மையான சொரூபத்தில் லயிக்கும்போதுஜீவாத்மாவும் பரமாத்மவும் ஒன்று தான் என்ற விவேகம் வரும் போது  நாம் எங்கிருந்து வந்தோமோ அங்கேயே சென்று அடையும் போது,நமது அஹம் அழியும்.நமக்கு நிரந்தரமான ஆன்மானுபூதி ஏற்படும்.
இதைத்தான் பகவான் ரமணர் உபதேச உந்தியார் 10-வது சுலோகத்தில் கூறுகிறார்.
உதித்த விடத்தி லொடுங்கி யிருத்த
லதுகன்மம் பத்தியு முந்தீபற
வதுயோக ஞானமு முந்தீபற

இதையேதான் தாண்டவராயன் பிள்ளை கைவல்ய நவனீதத்திலும் சொல்கிறார்.

எவருடை யருளால் யானே யெங்குமாம் பிரம மென்பால்
கவருடைப் புவனமெல்லாங் கற்பித மென்ற் றிந்து
சுவரிடை வெளிபோல் யானென் சொரூபசு பாவ மானே
னவருடைப் பதும பாத மநுதினம் பணிகின்றேனே
                   கை.ந நீ-கடவுள் வணக்கம்

ஓம்  எனும்  பிரணவம்

ஓங்காரப் பொருள் ஒப்புயர் வில்லோய்
உனையார் அறிவார் அருணாசலா

ஓம் எனும் பிரணவ மந்திரத்திற்கு மேலான ஒன்று இல்லை என்பது வேதங்களிலும் உபநிஷத்துக்களிலும் கூறப்பட்டுள்ள ஒரு மிகப் பெரிய உண்மை.
ஓம் என்பது ” ‘’ “ம் என்கின்ற மூன்று எழுத்துக்களின் கூட்டால் உருவான ஒன்று.
அ முதலெழுத்து.
ம் என்பது கடைசி எழுத்து.
இவை இரண்டையும் சேர்த்து வைக்கிறது உ
 என்று சொல்கின்ற போது நம் உதடுகள் பிரிகின்றன.
ம் சொல்லி முடிக்கும்போது நம் உதடுகள் இணைகின்றன. அதற்குப் பின் வேறு ஒலி இல்லை.
ஓம் என்பது தான் எல்லா ஒலிகளுக்கும் மூலம். அதுவே முடிவும்.
இந்த ஓங்கரத்திலிருந்து தான் உலகமே பிறந்தது என்று கூறலாம்.
இன்னொரு விதத்தில் பார்த்தால்  என்றால் பிரமம்” “ம் என்பது மாயை.பிரமனையும் மாயையும் இணைப்பது .
ஓம் தத்துவமஸி என்ற தத்துவத்தை குறிக்கிறது.
 ஜீவாத்மாவை குறிக்கிறது.
காரம் பரமாத்மாவைக் குறிக்கிறது.
 காரம் ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் இணைத்து ஆத்ம சாக்ஷாத்காரம் உளவாக்கிறது.
இவைகளைத் தவிர வேறு பல முக்கியத்துவங்களும் ஓங்காரத்திற்குள்ளது.
” “” “ம் என்ற மூன்றெழுத்து கீழ்கண்ட பல முப்பெரும் சக்திகளின் ஒருங்கிணைப்பை உணர்த்துகிறது:
*      பிரம்மா-விஷ்ணு-சிவன்
*      நடந்தவை-நடப்பவை-நடக்க இருப்பவை
*      பிரகிருதி-ஜீவாத்மா-பரமாத்மா
*      விஸ்வம்-தைஜசம்-பிரக்ஞ்சை
*      விராட்-ஹிரண்யகர்ப-ஈஸ்வர
*      ஸத்வ-ரஜஸ்-தமஸ்
*      பிறப்பு-வாழ்க்கை-இறப்பு
*      சிருஷ்டி-பரிபாலனம்-சம்ஹாரம்
*      ஜாக்ரத்-ஸ்வப்ன-ஸுஷுப்தி

உபனிஷத்துக்களில் ஓம்
உபனிஷத்துக்களில் பிரணவ மந்திரமான ஓம்’ வில்லுடன் ஒப்பிடப்பட்டிருக்கிறது. வெறும் வில்லல்ல;அம்பு தொடுக்கப்பட்ட வில். ஜீவாத்மா என்ற அம்பை பரமாத்மா என்ற குறியீட்டை நோக்கி இயக்கபடவுள்ள வில்.

எப்பொழுது ஒரு யோகி தனது இந்திரியங்களை முழுவதுமாக தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டாரோ-எவரொருவர் யமா ,நியமா,ஆசனா,பிராணாயாமா,ப்ரத்யாஹாரா,தாரணா முதலிய நிஷ்டைகளின் மூலம் தன்னடக்கத்தை கண்டு விட்டாரோ அவர் ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் மூலம் பரமாத்மாவுடன் ஐக்கியமாகிவிடுகிறார். அவர் நிர்விகல்ப ஸமாதி நிலையை அடைந்து விடுகிறார்..இதைத்தான் கைவல்ய முக்திஎன்று கூறுகிறார்கள்.
ஓம் என்ற பிரணவ மந்திரத்தை மூன்றரை மாத்திரை நேரம் உச்சரிக்க வேண்டும்.
ஒரு மாத்திரை என்பது கண் சிமிட்டும் நேரமே.
அல்லது நாம் உறங்கும் போது ஒரு முறை மூச்சை இழுது விடுவதற்கான் நேரம்.
இந்த மந்திரத்தை சொல்லும்போது  நமது நாபியிலிருந்து கிளம்பி மெதுவாக நம் உச்சந்தலையிலுள்ளபிரம்மரந்த்ர என்ற ஸ்தானத்தை அடையும் போது உலக சிந்தனைகள் நம்மை விட்டு நீங்கிவிடும்.

ஈசாவாஸ்ய உபனிஷத்தில் ஸோஹம் ஜபத்தை குறித்து விவரணம் வருகிறது.
ஸோஹம் என்றால் ஸ-அஹம்.
ஸ வடமொழியில் அவன் என்பதை குறிக்கிறது.
அஹம் என்றால் நான்.
ஆகவே ஸோஹம் என்றால் அவனே நான்-நானே பிரம்மம்-அஹம் பிரம்மாஸ்மி.
ஸோஹம் என்பது ஓங்கார மந்திரத்தின் இன்னொரு பதிப்பு தான்.
அது ஜீவாத்மா-பரமாத்மா ஐக்கியத்தை குறிக்கிறது

அப்படிப்பட்ட ஓங்காரத்தை விட உயர்ந்தவன் நீ, அருணாசலா என்கிறார் பகவான் ரமணர்.

கடவுளை பலர் பல பெயர்களால் அழைக்கிறார்கள்.
எல்லா பெயர்களையும் விட மிகப் பொருத்தமான பெயர் ஓம் என்கின்ற பிரணவம் தான் என்று யோக ஸுத்ரம் சொல்கிறது.

மாண்டூக்ய உபனிஷத் கூறுகிறது-ஓம் என்றால் எதுவாக இருந்ததோ,ஏதுவாக இருக்கிறதோ, எதுவாக இருக்குமோ அது தான் ஓம்.அதற்கு கால தேச வரையறை கிடையாது.
ஆகவே ஓம் பெயரில்லாத ஒரு பெயர். ஒரு விதத்தில் பார்த்தால் அது ஒரு பெயர்.இன்னொரு விதத்தில் பார்த்தால் அது பெயரே இல்லை.
பெயரிட முடியாத பிரகிருதி-இயற்கை.
நம்மால் கால தேச பரிமிதிகளுக்கு உட்பட்ட நம்மால்- அப்படி ஒரு சக்தியை கற்பனை பண்ணிக் கூட பார்க்கமுடியாததால் நம் மனோதர்மத்திர்கு தகுந்த படி அதற்கு பெயர் சூட்டுகிறோம்.
ஆகவே தான் லிங்கம் அதற்குப் பொருத்தமான பெயர்.
லிங்கத்திற்கு பெயர் சூட்டமுடியாது.
அது ஒரு குறியீடு-சின்னம்.
ஆரம்பத்தில் நாம் பார்த்தது போல் லிங்கத்தின் தோற்றமே ஒரு அக்னிப் பிழம்பிலிருந்துதான்.
அதற்கு ஏது பெயர்? ஏது உருவம்.?
அதனால்த்தான் பகவான் கேட்கிறார்- அந்த ஓங்காரத்திற்கு இணை ஏது? இணையே இல்லாதபோது அதற்கு மேலானது எங்கிருந்து வரும்?
இதையேதான் அர்ஜுனன் கீதையில் பகவான் கிருஷ்ணனை பார்த்து கேட்கிறான்- உனக்கு ஈடானவர்கள் யாருமே இல்லை.அப்படி இருக்கும் போது உன்னைவிட மேலானவர்கள் எப்படி இருக்க முடியும்?
நம்மைப் போன்ற சாதாரண மனித மனத்தால் அந்த பிரம்மத்தை புரிந்து கொள்ளவும் முடியாது;தெரிந்து கொள்ளவும் முடியாது.
அது நம்மிலிருந்து வேறானால்த் தானே புரிந்து கொள்வதோ தெரிந்து கொள்வதோ என்கின்ற கேள்வி எழும்.
ஆகவே பகவான் ரமணர் நான் யார்  என்கின்ற விசார மார்க்கத்தின் மூலம் ஆத்மானுபூதி அடைந்து அந்த ஓங்கார பிரம்மத்தில் லயிக்க வேண்டும் என்கிறார்.








 

No comments:

Post a Comment