ரமணஜோதி 10
தத்துவமசி
அழகு சுந்தரம்போ லஹமும் னீயுமு
ற்ற்பின்னமா யிருப்போ மருணாசலா
தாச மார்க்கம்; சத் புத்திர மார்க்கம்;
நட்பு மார்க்கம்; மற்றும்
சன் மார்க்கம் என்ரு நாலு விதமான பக்தி மார்க்கங்கள் உண்டு என்று நாமறிவோம்.
.நம்மை பரமனின் அடியேனாக –வேலையளாக கருதி பக்தி
செலுத்துவது முதல் மார்க்கம்.
இரண்டாவது மார்க்கத்தில் நாம் கடவுளை தந்தை ஸ்தானத்தில்
காண்கிறோம்.
மூன்றாவது நாம் நட்புரிமை பாராட்டி கட்வுளுடன் நெருங்குகிறோம்;
நாலாவது எல்லாவற்றீலும் சால்ச் சிறந்தது.
அது நாம் கடவுளுடன் ஐக்கிமாகின்ற ஒரு நிலை.
ஒரு மார்கத்திலிருந்து அடுத்த மார்க்கத்திற்கு உயரும் பொது
நமக்கும் கடவுளுக்கும் உள்ள தூரம் குறைந்து கொண்டே வருகிறது. முன் ஈரடிகளில் சொன்ன மாய ‘நான்’(ego) அழிந்து நாம் கடவுளுடன்
ஒன்றாகும்போது,
‘நான் யார்’ என்ற பகவான் ரமணரின் சித்தாந்த்தின்
கடைசி படியை அடைகிறோம்.
மாய நான்
உண்மையான நான் என்று
இரண்டு கிடையாது.அது நமது அறிவீனதினால் உண்டாவது.அந்த அறியாமை அழியும் போது
நமும்-ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்று தான் என்ற அறிவுண்டாகிறது.நாம்
முக்தனாகிறோம்.
இதையே தான் பகவான் அடுத இர்ண்டு வரிகளில் கூறுகிறார்.
தமிழில் அழகு என்று சொல்வதும் வடமொழியில் சுந்தரம் என்று
சொல்வது ஒன்றயே குறிக்கிறது அவை இரண்டிற்கும் பின்னம் (வேறுபாடு) இல்லை.
எப்படி அவை அபின்னமாக இருக்கிறதோ அப்படி நாமும்
பரமாத்மாவுடன் ஒன்றாகவே இருக்க வேண்டும்.
அதர்க்கு அருணாசலர் அருள் புரிவாராக.
தத்துவமசி என்பதன் பொருளும் இதுவே தான்.
No comments:
Post a Comment