Showing posts with label அகக்கண் திறக்கட்டும். Show all posts
Showing posts with label அகக்கண் திறக்கட்டும். Show all posts

Friday, 19 December 2014

ரமண ஜோதி 29

ரமண ஜோதி 29


முதலையை வதம் செய்வோம்


கெஞ்சியும் வஞ்சியாய்க் கொஞ்சமு மிரங்கிலை
யஞ்சலென் றே யருளருணாசலா

பகவான் ரமணர் பக்தர்கள் சார்பில் அருணாசலரிடம் சொல்கிறார்:
நான் எவ்வளவு கெஞ்சியும் நீ இரக்கம் காட்டி என்னை உன்னோடு சேர்த்துக்கொள்ள மாட்டேனென்கிறாய்.;பரவயில்லை; குறைந்த பட்சம் ‘கவலைப்படாதே  அஞ்ச வேண்டாம், நான் இருக்கிறேன் ,பார்த்துக்கொள்கிறேன்’என்றாவது சொல்லக்கூடாதா?”
இரண்டு சுலோகங்களுக்கு முன்னால் அருணாசலரரை கிருபாக்கடல் என்று வருணித்து விட்டு இப்பொழுது கொஞ்சமும் இரக்கமில்லாமல் என்னை வஞ்சிக்கிறாய் என்று பகவான் சொல்கிறாரே என்று எண்ண வேண்டாம்.
இது ஒரு விதமான வஞ்சப் புகழ்ச்சி. அருணாசலர் இரக்கமில்லாமல் கைவிடமாட்டர் என்று உறுதியாகக் கூறுவதற்கு பதிலாக எதிர்மறையாக கூறுகிறார். பகவானுக்கு அருணாசலரரிடம் அவ்வளவு உரிமை.
இதையே தான் பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் சொல்கிறார்.
யே து ஸர்வாணி கர்மாணி மயி ஸம்ன்யஸ்ய மத்பரா !
அனன்யேனைவ யோகேன மாம் த்யாயந்த உபாஸதே !!

தேஷாமஹம் ஸமுத்தர்தா ம்ருத்யுஸம்சாரஸாகராத் !
பவாமி நசிராத்பார்த்த மய்யாவேசித சேதஸாம் !!
                   கீதை அத்.12 சுலோ 6-7

எவனொருவன் தன் கர்மமங்கள் அனைத்தையும் பகவானுக்கு அர்ப்பித்துவிட்டு பகவானே சரணம் என்று அலைக்கழிக்கப்படாத மனதுடன் தியானம் செய்கிறானோ அவனை இந்த ஜனன மரணம் எனும் சம்சார சாகரத்திலிருந்து நிச்சயம் கரையேற்றிவிடுவார்.
இம்மாதிரியான ஒரு உறுதி மொழியைத் தான் பகவான் அருணாசலரரிடம் வேண்டுகிறார் அல்லது அருணாசலர் சார்பில் நமக்கு அளிக்கிறார்.

பிறந்தவரெல்லாம் இறக்கத்தான் வேண்டும்.ஆனால் இறப்பதற்கான நேரம் அவரவர் பிராரப்தத்தைப் பொறுத்து இருக்கிறது. ஆனால் இந்த உடல் அழியாவிட்டாலும் நம் பகவானிடம் பூரண சரணாகதி அடைந்து மனதை முழுவதுமாக செலுத்திவிட்டோமானால் நாம் இருக்கிமிடம் பூலோகமாக இருந்தாலும் அது சொர்க்க லோகமாகிவிடும்.

ஏனென்றால், ஒவ்வொரு மனிதனும் பிறக்கும் போது வித்யா, அவித்யா என்ற இரண்டு விதமான குணங்களுடன் பிறக்கிறான். அவித்யா குணத்தை விட்டொழித்து வித்யா குணத்தை விருத்தி செய்துகொண்டால் படிபடியாக உலக வாசனைகளில் உள்ள ஈடுபாடு குறைந்து பிரமனை நெருங்கிவிடுவோம். நமக்கு ஆத்ம சாக்ஷத்காரம் கிடைத்து விடும்.
 மய்யேவ மன ஆதத்ஸ்வ மயி புத்திம் நிவேசய !
நிவஸிஷ்யஸி மய்யேவ அத ஊர்த்வம் ந் சம்சய: !!
                     கீதை அத்.12 சுலோ 8

அருணாசல பஞ்சரத்னத்தில் நாலாவது ஐந்தாவது சுலோகங்களில் பகவான் கூறுகிறார்.:

வெளிவிடயம் விட்டு விளங்குமரு ணேசா
வளியடக்க நிற்கு மனத்தா------லுளமதனி
லுன்னைத் தியானித்து யோகி யொளிகாணு
முன்னி லுயர்வுறுமீ துன்
வெளிவிஷயங்களின் மிதுள்ள எல்லா ஈடுபாட்டையும் உதறித் தள்ளி விட்டு உன்னை இடைவிடாது த்யானித்துக் கொண்டிருக்கும் யோகி நான்..எனக்கு நீ ஒளி காட்டு என்கிறார்..
இந்த இடத்தில் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். பகவான் ரமணரின் உபதேசம் எல்லாம்‘ஒன்றைத் தவிர வேறொன்றில்லை” என்கின்ற உண்மையை அடிப்ப்படையாக கொண்டது..வெளி விஷயங்களிலுள்ள ஆசாபாசங்களையெல்லாம் விட்டு விட்டு உன்னை த்யானித்தால் என்று கூறும்பொழுது,’உன்னை’ என்பது யாரைக் குறிக்கிறது என்ற கேள்வி எழுகிறது. வெளி விஷயங்கள் எல்லாம் மாயை என்றால் அந்த ‘உன்னுக்கு’ உருவமும் கிடையாது பெயரும் கிடையாது. அதற்கு இருப்பிடமும் நம்முள்ளேயே தான். ஒளி காண்பதும் நம்முள்ளே தான் அருணேசன் என்றால் யார்? அதுவும் நாம் தான்.
அதனால்த் தான் மேலும் கூறுகிறார்:

உன்னிடத்த லொப்புவித்த வுள்ளத்தா லெப்பொழுது
முன்னைக்கண் டெல்லாமு முன்னுருவா-----யன்னியமி
லன்புசெயு மன்னோ நருணாச லாவெல்கு
மின்புருவா முன்னிலாழ்ன் தே

எப்பொழுதும் என்றால் ஜாக்ரத்,சொப்ன,சுஷுப்தி,துரிய ஆகிய நான்கு அவஸ்தயிலும் உன்னை கண்டு எல்லா உருவிலும் நீ தான் என்று புரிந்துகொண்டு உன்னையன்றி வேறொன்றில்லை என்று உன்னிலேயே ஆழ்ந்து கிடகின்றேன். அதாவது உன்னில் நான் லயித்து விட்டேன். ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றாகிவிட்டால் பரமான ந்தமே விஞ்சும்.

இந்த இடத்தில் பாகவதத்தில் வரும் கஜேந்திர மோக்ஷம் கதை ஞாபகத்திற்கு வருகிறது. முதலையிடம் பிடிபட்ட  கஜேந்திரன் மனமுருகி பகவானை காப்பாற்றும்படி இறஞ்சிக் கேட்ட பொழுது கரூடாரூடனாய் வந்து முதலையை கொன்று கஜேந்திரனுக்கு மோக்ஷம் கொடுத்தார் மஹாவிஷ்ணு என்று சொல்கிறது பாகவதம்..
அந்தக் கதை மிகுந்த ஆழமான கருத்துள்ள ஒரு கதையாகும். முதலில் கதையை பார்ப்போம்.
இந்த கதை பாகவதத்தில் எட்டாம் ஸ்கந்தத்தில் இரண்டிலிருந்து நாலு வரை அத்தியாயங்களில் விவரிக்கப் பட்டுள்ளது.
அர்ஜுனனின் பேரனும் அபிமன்யுவின் புதல்வனுமான பரீக்ஷித் மஹாராஜா கேட்டுக் கொண்டதற்கு இணங்க சுகப் பிரம்ம மஹரிஷி இந்தக் கதையை கூறுவதாக வருகிறது மஹா பாகவதத்தில்.
அடர்ந்த வனாந்திரத்தில் திரிகூட மலையடிவாரத்தில் கஜேந்திரன் என்ற ஒரு பெரிய யானை வசித்து வந்தது. கஜேந்திரன் ஒரு யானைக்கூட்டத்திற்கே தலைவனாக இருந்தான்..
ஒரு முறை காட்டில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. யானைகள் கூட்டமாக தண்ணீர் தேடி வெகு தூரம் சென்றது. அப்பொழுது அவர்கள் ஒரு அழகிய பூங்காவனத்தையும் அதன் நடுவே மிகவும் விசாலமான ஒரு ஏரியையும் கண்டார்கள். எல்லா யானைகளும் ஆனந்தமாக ஏரியில் இறங்கி நீராடினார்கள்.
நேரம் இருட்டியதும் யானைகள் ஒவ்வொன்றாக கரையேற ஆரம்பித்தன். தலைவன் என்ற முறையில் கஜேந்திரன் கடைசியாக கரையேற முற்பட்டான்.. ஆனால் அவனால் அசைய முடியவில்லை. அவன் கீழே துழாவிப் பார்த்தான். ஒரு கரிய பெரிய முதலை அவனது காலை கவ்விப் பிடித்துக் கொண்டிருந்தது.
கஜேந்திரன் தனக்குத் தானே சொல்லிக்கொண்டான்,” இந்த சிறிய நீரில் வாழும் பிராணி எல்லோரையும்போல என்னையும் நினைத்து விட்டது. நான் கஜேந்திரன்.இதோ ஒரு நொடியில் இந்தக் கொசுவை தூக்கி வீசுகிறேன்.”

தன் தும்பிக்கையால் முதலையை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றான். முடியவில்லை. தன் சக்தி முழுவதையும் உபயோகித்து கரையை நோக்கி நகர முயன்றான். முடியவில்லை. தன் கூட்டாளிகளை உதவிக்கு அழைத்தான். அவர்களும் தம் தம் தும்பிக்கையை நீட்டி கஜேந்திரனின் தும்பிக்கயுடன் இணைத்து கஜேந்திரனை கரைக்கு இழுக்கப் பார்த்தார்கள்.  பயனில்லை. எல்லோரும் மிகவும் களைப்படந்து விட்டார்கள். நேரமும் இருட்டிக்கொண்டு வந்தது. இடமும் பழக்கமில்லாதது. இனிமேல் இங்கிருந்தால் நமக்கும் ஆபத்து என்று எண்ணி அவர்கள் ஒவ்வொருவராக போக ஆரம்பித்தார்கள்.
கஜேந்திரனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ‘இத்தனை நாளும் இவர்களுக்கு வழிகாட்டியாகவும் காவலனாகவும் இருந்த எனக்கு ஒரு ஆபத்து வந்த பொழுது இவர்கள் இப்படிய நடந்து கொள்கிறார்களே?’ என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டு அடுத்து என்ன செய்ய்யலாம் என்று யோசித்தான்.

முன் ஜன்ம புண்ணியமோ என்னவோ அவனுக்கு சில விஷ்ணு ஸ்துதிகள் ஞாபகத்திற்கு வந்தது.மனமுருகி சொல்லலானான்:

“ஓம் நமோ பகவதே தஸ்மை யத ஏதச்சிதாத்மகம் !
புருஷாயாதிபிஜாயபரேசாயாபிதீமஹி !!

“எந்த ஒரு சைதன்யத்தின் காரணமாக இந்த ஜட சரீரமும் மனதும் சைதன்யவத்தாய்த்  தீருகிறதோ அந்த ஸ்த் சித் ஆனந்தனை அந்த பரமாத்மாவை ஓங்கார சப்தத்தின் வாயிலாக நான் நம்ஸ்கரிக்கிறேன்” என்று துவங்கி முப்பது சுலோகங்களில் கஜேந்திரன் மஹாவிஷ்ணுவை பிரார்த்திக்கிறான்.
பத்தொன்பதாவது சுலோகத்தில் யாரொருவன் சகலவிதமான காம குரோத லோபாதிகளிலிருந்து முக்திவேண்டும் என்ற ஆசை கூட இல்லாமல்,- யாரொருவன் உன்னை நினைக்கிறானோ அவனுக்கு நீ ஜனன மரணத்திலிருந்து முக்தியளிக்கிறாயோ.அதே போல் என்னையும் இந்த ஆபத்திலிருந்து காப்பாற்று என்று மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறான்.
இருபத்தி ஒன்பதாம் சுலோகம் வரை அனன்ய பக்தியும்,பூரண சரணாகதியும் ததும்பி நிற்கின்ற பக்தி சுலோகங்களாக பாகவதத்தின் இந்த பகுதியில்.நமக்கு அருளிச் செய்கிறார் வியாச மஹிரிஷி
அதற்கு பின் விஷ்ணு தனது சுதர்சன சக்ரத்தால் முதலையைக் கொன்று கஜேந்திரனைக் காப்பாற்றுகிறார்.
அடுத்த அத்தியாத்தில் கஜேந்திரனின் மற்றும் முதலையின் பூர்வ ஜன்ம கதை விவரிக்கப்பட்டுள்ளது.
கஜேந்திர மோக்ஷ கதையிலிருந்து  ‘மித்’(myth-)ஐ ஒதுக்கிவிட்டு பார்த்தோமானால் நமக்கு நிறைய படிப்பினைகள் கிடைக்கும்
கஜேந்திரனைப் போல் நாமும் அஹந்தையால் உந்தப் பட்டு இந்த சம்சார சாகரத்தில் மூழ்கி திளைத்துக் கொண்டிருக்கிறோம். அப்படியிருக்கும் பொழுது அதன் அர்த்தமின்மை நமக்கு புரிவதில்லை. நாம் எப்பொழுது நினைக்கிறோமோ அப்பொழுது கரையேறிவிடலம் என்று நினைக்கிறோம்.
பலரும் மது ஆரம்பிக்கின்ற பொழுது இப்படித்தான் கூறுவார்கள். “நான் எல்லாரையும் போல் இல்லை .எப்பொழுது வேண்டுமானாலும் இந்த பழக்கத்தை விட்டு விடுவேன்”
ஆனால் ஒரு முறை அடிமையாகிவிட்டால் அதிலிருந்து மீள்வது அவ்வளவு எளிதன்று.
நாம் உடல் தளர்ந்து அல்லது காலத்தின் கட்டாயத்தால் போதும் இதிலிருந்து மீண்டு கரையேறுவோம் என்று நினைக்கும் பொழுது நம்மால் ஏற முடியாது. நம்மை கடந்தகால ஆசாபாசங்கள்,பந்தங்கள் எனும் முதலைகள் அந்த சாகரத்திற்குள்ளே மீண்டும் இழுக்கும். அதிலிருந்து கரையேறுவதற்கு நமது மனைவி மக்களோ மற்ற சொந்த பந்தங்களோ உதவ மாட்டார்கள். நாம் உள்ளுருகி பரமாத்மாவைப் பிரார்த்திபதன் மூலம் மட்டும் தான் கரையேறமுடியும் என்கின்ற தத்துவத்தை விளக்குகிறது கஜேந்திரனின் கதை.

இதையே வள்ளலார் வேறுவிதமாக கூறியுள்ளார் திரு அருட்பாவில்:
“என்னை ஆண்டருளி என்பிழை பொறுத்த
இறைவனே திருசிற்றம் பலத்தே
என்னைஆண்டஞ்சேல் உனக்கு நல் அருளிங்
கீதும் என்ற என் குருவே
என்னை வேறெண்ணா துள்ளதே உண்ர்த்தி
எனக்குள்ளே  விளங்கு பேரொளியே
என்னை ஈன்றளித்த தந்தையே விரைந்திங்
கேற்றருள் திருச்செவிக் கிதுவே”

நமக்குள்ளேயே இருக்கும் ஒளிதான் அந்த திருச்சிற்றம்பலத்தான் என்றும் அவன் அஞ்சேல் என்று நமக்கு ஆறுதல் அளிப்பான் என்றும் அஹம் ப்ரம்மஸ்மி என்பதை உளதையே உணர்த்துவான் என்றும் வள்ளலார் பெருமானும் கூறுகிறார்.

மேலும் வள்ளலார் பெருமான் கூறுகிறார்:

“கோபமே வருமோ காமமே வருமோ
     கொடியமோ  கங்களே வருமோ
சாபமே அனைய தடைமதம் வருமோ
தாமதப் பாவிவந் திடுமோ
பாபமே புரியும் லோபமே வருமோ
பயனில்மாற் சரியம் வந் திடுமோ
தாப ஆங்கார மேஉறுமோஎன்
றையநான் தளர்ந்ததும் அறிவாய்


காமமா மதமாங்காரமா திகள்என்
கருத்தினில் உற்றபோ தெல்லாம்
நாமமார் உளத்தோ டையவோ நான்தான்
நடுங்கிய நடுக்கம் நீ அறிவாய்
சேம்ம உலகில் காமமா திகளைச்
செறிந்தவர் தங்களைக் கண்டே
ஆமைபோல் ஒடுங்கி அடங்கினேன் அதுவும்
ஐயநின் திருவுளம் அறியும்”

இப்படி எல்லாம் தெரிந்திருந்தும் நீ இரங்காவிட்டால் நான் என்ன செய்வது வென்று பகவான் ரமணரும் கேட்கிறார்:


கெஞ்சியும் வஞ்சியாய்க் கொஞ்சமு மிரங்கிலை
யஞ்சலென் றே யருளருணாசலா
Description: https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif

 

ரமணஜோதி 19

ரமணஜோதி 19


அகக்கண் திறக்கட்டும்

கண்ணுக்குக் கண்ணாய்க் கண்ணின்றிக் காணூனைக்
                             காணுவ தெவர்பா ரருணாசலா

நாம் நமக்கு வெளியிலுள்ள வஸ்த்துக்களை காண்பது நமது கண்களால் என்பது நாம் எல்லாம் அறிந்த உண்மை.
பகவான் ரமணர் இந்த ஸ்தூல கண்ணுக்கு கண்ணாயிருப்பதைக் குறித்து கூறுகிறார் இந்த சுலோகத்தில்.
நமது ஸ்தூல சரீரத்தில் இருக்கின்ற அங்கங்களில் மிகவும் முக்கியமானது கண்கள் தான். கண்களில்லையென்றால் நாம் இந்த உலகத்தை காண்முடியாது
.ஒளி இருந்தால்த் தான் பொருள்கள் நம் கண்களுக்குத் தெரியும். ஒளியிருந்தாலும் கண்கள் இல்லாவிட்டால் பொருள்கள் நமக்கு தென்படமாட்டா.
ஆனால் இந்த கண்களை இயக்குவது எது?
அது தான் நமது மனம்.
கண்கள் திறந்திருந்தாலும்,நமது மனம் காண்பவையில் லயிக்காவிட்டால் கண் முன்னால் உள்ள பொருட்கள் நமக்கு தென்பட மாட்டா. மனம் காணுகின்ற கட்சிகள் தான் நமக்குத் தெரியும்
 நாம் கண் இருந்தும் குருடர்களாவோம்.
நாம் கண்ணை மூடிக்கொண்டிருந்தாலும் நிறைய காட்சிகள் நம் முன்னே ஓடிக்கொண்டேயிருக்கும்..
அது எப்படி?
நமது மனம் அதன் ஸ்ருஷ்டி சக்தியால்(கிரியா சக்தியால்) கண்களையும் மற்ற இந்திரிய உறுப்புக்களையும் கற்பனையில் உருவாக்கி நமக்கு காண்பதற்கான கேட்பதற்கான,வாசனையை கிரஹிக்கக் கூடிய சக்தியை அளிக்கிறது.
ஆனால் இந்த மனமும் செயல் இழந்திருக்கும் பொழுது- அதாவது உறக்கத்தில்- சொப்னாவஸ்தையில் நாம் பல காட்சிகளைக் காண்கிறோம், ஒலிகளை கேட்கிறோம். அதற்கான ஊக்க சக்தியை அளிப்பது / உருவாக்குவது “நான்”என்ற ஆன்மா தான்.. உறக்கத்தில் இல்லாததை இருப்பதாகக் காட்டுவதும் விழிப்பில் (ஜாக்ரத்) அவஸ்தயில் இருப்பதை மறைப்பதும் இந்த ஆன்மாவே தான்.
உறங்காத கண்களாம் இந்த ஆன்மாவை பகவான்,”உள்ளது நாற்பது” என்கின்ற நூலில் ‘அந்தமிலாக் கண்’ என்று குறிப்பிடுகிறார்.
இந்த ஆன்மா தான் ‘நான்’. அந்த நான் தான் கடவுள்; பிரம்மம்
நம் கண்களுக்கு காணும் சக்தி வேண்டும் என்றால் அந்த பிரம்மதின்/ கடவுளின்  உதவி வேண்டும்; ஆனால் பிரம்மத்திற்கு காண்பதற்கு யார் உதவியும் தேவை இல்லை.
இந்த ஆன்மா,அல்லது கடவுள் அல்லது பிரம்மம் என்பது ஒரு ஸ்தூல மல்ல. அது ஒரு அனுபவம்; ஒரு அனுபூதி.
அதை அனுபவித்துத் தான் உணர வேண்டும். அதை உணர வேண்டுமென்றால் நாம் பக்குவப் பட வேண்டும்
இப்படிப்பட்ட பக்குவம் எளிதாக்க் கிடைக்காது.. பகவான் ரமணர் அப்படிப்பட்ட ஒரு ஞானத்தை/ ஆத்மானுபூதியை சிறுவயதிலேயே அடைந்துவிட்டார்.

எது ஒன்று எல்லாவற்றிற்கும் ஆதி காரணமாக இருக்கிறதோ,அதுவே தான் அதன் விளைவாகவும் இருக்கிறது..
அந்த பிரம்மனைப் பார்க்கமுடியுமா?
உள்ளங்கை நெல்லிக்கனியெனத் தெரியும் அந்த உண்மை சொரூபத்தைப் பார்க்கவும் வேண்டுமோ?
அதனிலிருந்து உண்டாகும் மற்றெல்லா வஸ்துக்களும் வெறும் பெயர்களே.
இவ்விஷயத்தில் நமது உபனிஷத்துக்களும் மற்ற வேத கிரந்தங்களும் பிரம்மத்திற்கு ஐந்து கோணங்களுண்டு என்று கூறுகின்றன. சத்- சித்-ஆனந்த- நாம- ரூப.
இதில் முதல் மூன்றும் சத்யமானவை. கடைசி இரண்டும் மாயை-இருப்பது போல் தோற்றமளிக்ககூடியவை.
இந்த சந்தர்ப்பத்தில் ரமணர் கூறின ஒரு கதையை நினைவு கூறுவது தவறகாது.
மனிதன் ஞானம் பெறுவதற்கு பல விதமான பிரதிபந்தங்கள் உள்ள்ன .இவைகளைப் பற்றி விளக்கிக் கூறுமாறு ஒரு பக்தர் பகவானிடம் கேட்டதற்கு இணங்கி பகவான் கீழ்கண்ட கதையைக் கூறினார்.
பிரதிபந்தங்கள் பல விதமனவை
“...அவைகளைத் தான் பூத-பவிஷ்யத்-வர்தமான ( இறந்தகால, எதிர்கால, நிகழ்கால) பிரதிபந்தங்கள் என்பார்கள். அந்த மூன்றில் பூத பிரதிபந்தத்திற்கு உதாரணமாக உபனிஷத்திலும், வாசுதேவ மனனத்திலும் ஒரு கதை சொல்லப்பட்டிருக்கிறது.
பெரிய குடும்பியான ஒரு பிராமணன் ஜீவனத்திற்காக ஒரு எருமையை வளர்த்தான். அது கொடுக்கும் பால்,தயிர், நெய் முதலானவற்றை விற்று குடும்பத்தை பராமரித்து வந்தான். எருமைத் தீனிக்காக பசும்புல், பருத்திக்கொட்டை, முதலியவை சேகரிப்பதிலும், எருமையை கவனிப்பதிலும் குறியாக இருந்தான். கர்ம வசத்தினால் அவனுடைய மனைவி, குழந்தைகள் எல்லோரும் வரிசையாக சிறிது காலத்திற்குள்ளேயே இறந்தார்கள்.
அதன் பிறகு அவனுக்கு எருமையின் மீது பிரியம் இருமடங்காயிற்று. சில வருடங்களில் அந்த எருமையும் இறந்துவிட்டது.
தன்னந்தனியனாகிவிட்ட அவனுக்கு இகலோக வாழ்க்கையில் வெறுப்பு வந்து சந்நியாசியாகி ஒரு சத் குருவின் சந்நிதியில் சிரவண மனனங்கள் செய்து கொண்டு வந்தான்.. அவனால் சிரத்தையாக சிரவண மனனங்களில் ஈடுபட முடியவில்லை.
குரு இதைக் கவனித்து அவனது பூர்வ கால வாழ்க்கையும் அப்பொழுது அவனுக்கு ஏற்பட்ட பந்த பாசங்களும் தான் அவனது சன்னியாசி வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கிறது என்று தெரிந்து கொண்டார்.
ஒரு நாள் குரு அவனை அழைத்து சொல்லலானார்:
பிரம்மத்தை அஸ்தி, பாதி, பிரியம் என்று சொல்வார்கள்.அஸ்தி ( இருக்கிறது), என்றால் உள்ள பொருள் (சத் வஸ்து ) பாதி என்றால் பிரகாசிப்பது, பிரியம் என்றால் அன்பானது. உன்னுடைய எருமை உனக்கு பிரியமானதால் அதுவும் பிரம்மம் தான். ஆனால் அதற்கு நாமமும் ரூபவும் ஏற்பட்டிருக்கிறது. இப்பொழுது நீ செய்ய வேண்டியது என்னவென்றால், உன்னுடைய நாம ரூபத்தையும் விலக்கி அதனுடைய நாம ரூபத்தையும் விலக்கிவிட வேண்டும். அப்போது உள்ளது பிரம்மம் ஒன்று தான்..”
சிஷ்யனும் நாம ரூபங்களை விட்டு விட்டு ஆன்ம சிந்தனையில் ஈடுபட்டான்; ஞானமும் அடைந்தான்.”
பகவன் சொன்னார், ‘ பொருள்கள் பலதானாலும் உள்ள பொருள் ஒன்றே தான். அவை நாம ரூபத்தில் தான் வேறு படுகின்றன.”
நாம் அஸ்தியும் பாதியும் பிரியமும் பிரம்மத்தின் உருவகங்களே என்று தெரிந்து கொண்டால், இவையெல்லாம் சகஜ சொருப லக்ஷணங்கள் என்று புரிந்து கொண்டால் இவையெல்லாம் சத்-சித்-ஆனந்தத்தின் மறு பெயர்களே என்று புரிந்துகொண்டால் நமது அகக் கண் திறக்கப்பட்டுவிடும். நாம் ஆத்ம சாக்ஷாத்காரத்தை  நெருங்கி விட்டோம் என்று அர்த்தம்.

அக்ஷரமணமாலயின் இந்த சுலோகத்தில் கூறியிருப்பதே தான்
கேனோ உபனிஷத்தில் வேறு விதமாக கூறப்பட்டுள்ளது.
   “யச்சக்ஷ்ஷா ந பஸ்யதி  யேன சக்ஷும்ஷி பஸ்யதி
ததேவ ப்ரம்மதுவம் வித்தி நேதம் யதிதமுபாசதே”

யத் சக்ஷுஷா---------எதை கண்களால்
ந பஸ்யதி--------------பார்க்க முடியவில்லையோ
யேன சக்ஷும்ஷி—எதன் காரணமாக நாம் கண்களால்
பஸ்யதி----------------வஸ்த்துக்களை புரிந்துகொள்கிறோமோ
தத் ஏவ---------------அதே தான்
ப்ரம்மத்துவம் வித்தி-----பிரமம் என்று அறிந்து கொள்க
யத் இதம்--------உபாசனை வேற்றுமையோடு
உபாசதே ------உபாசிக்கின்றாயோ
இதம் ப்ரம்ம ந-----இது பிரம்மில்லை

ஸ்தூலக் கண்களால் பார்க்க முடியாததும்,ஆனால் அந்தக் கண்கள் இயங்குவதற்கு காரணமான அந்த சுத்த சைதன்யம் தான் பிரம்மம் என்று அறிக.நீ உபாசிக்கின்ற மற்றவையெல்லாம் பிரம்மமல்ல.என்கிறது உபனிஷத்.

காணுகின்றவர் ( பார்க்கின்ற) கண்களுக்கு கண்ணாக இருந்து கண் இல்லாமலேயே சகலமும் காண்போனாகிய அந்த சத்-சிதானந்தனை எப்படி காண முடியும் என்று பகவான் அக்ஷர மண மாலையில் கேட்கிறார். அதற்கு நீ தான் துணை நிற்க வேண்டும் என்கிறார்.
இதே கருத்தை ஆன்ம வித்தைக் கீர்த்தனத்தில்    கீழ்கண்டவாறு கூறூகிறார்.
  விண்ணாதிய விளக்கும் கண்ணாதிய
பொறிக்கும் கண்ணாய் மனக்கணுக்குங் கண்ணாய்
வேறு ஒரிடத்தில் இப்படி கூறப்பட்டுள்ளது
காணொணாத கண் காட்சி பற்பல
காட்டினாய் மனக் கண்ணுளே
காண்பவன், காணப்படும் பொருள், காணுகின்ற செயல் எல்லாம் பிரம்மனின் செயலே..நானும் பிரமம், நீயும் பிரமமம், எல்லாமே பிரமமம் என்று புரிந்து கொண்டு நான் என்ற அகந்தையை அழித்து விடு.
“அதற்கான அருளை எனக்கு தர வேண்டும் அருணாசலா” என்று பகவான் நமக்காக பரமனிடம் வேண்டுகிறார்