Thursday, 6 November 2014

ரமணஜோதி 11

ரமணஜோதி

அத்தியாயம் 11

இதயம்-இறைவனின் ஆலயம்

மனம் ஆசைகளின் ஒரு கூடரம்.கீதையில் கூறியிருப்பதுபோல்,பொறிகள் புலங்களிடத்தில் ஒன்றுபடுவதால் நாம் இன்ப்-துன்பத்தை இந்த இக வாழ்வில் அனுபவிக்கிறோம்.ஆனால் இந்த இந்திரிய ஜனிதமான இன்ப-துன்பங்கள் தாற்காலிகமானவை.
அவை நிரந்தரமன்று. ஒரு நேரத்தில் இன்பமாக தோன்றுவது இன்னொரு நேரத்தில் துன்பமாக படுகிறது.ஆகையால் அவை அனைத்தும் அனித்தியமானவை. ஜீவாத்மாவும் அப்படியே.
ஆனால் பரமாத்மா வசிக்கின்ற இதயமோ புனிதமானது; கறை படியாதது; நித்தியமானது.
அந்த பரமனால் மட்டுமே நமது ஜீவாத்மாவை இந்த ஆசா பாசங்களிலிருந்து விடுவித்து அவனது வாசஸ்தானமான அந்த குகைக்குள் கொண்டு செல்ல முடியும்.
நமது முயற்சி இருந்தால்,.அவன் அதை எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் செய்வன்
இதை மனதில்க் கொண்டு பகவான் ரமணர் சொல்கிறார்:

அகம்புகுந் தீர்த்துன் னககுகை சிறையா
யமர்வித்த தென்கொ லருணாசலா 


என்னுள்ளே புகுந்து என்னை சிறை பிடித்து உன்னுடைய இதய குகைக்குள் எதற்காக வைத்தாய்?
பகவான் ரமணர் தெரியாமல் இதை கேட்கவில்லை.அவருக்குத் தெரியும் பரமன் எந்த எதிர்பர்ப்பும் இல்லாமல் இதை செய்கிறான் என்று.
பகவான் சூசகமாக உணர்த்த விரும்புவது என்ன்வென்றால்
இந்திரியங்கள் உடலை விட சூக்ஷ்மமானது.உடலை இயக்கி வைக்கின்றவையே அவை தான்.
ஆனால் மனமோ இந்திரியங்களை விட வலிமையானது.
மனதால் பலவிதமாக கற்பனை செய்ய முடியும்.
இல்லாததை உள்ளதாகவும் உள்ளதை இல்லாததாகவும் கற்பனை செய்கிறது.
கயிறை பம்பாகவும் முத்துச்சிப்பியை வெள்ளியாகவும் கட்சியளிக்க செய்கிற்து.
இந்த மனதை விட புத்தி இன்னும் வலிமையானது.
ஆனால் புத்தியால் கூட ஆன்மாவை அடையாளம் காணமுடியாது.
ஆசாபாசங்களும் கோபதாபங்களும் ஆன்மாவை மறைக்கின்றன.
பழத்தின் தோலை உரிப்பது போல நாம் ஒவ்வொரு தோலாக இந்திரியங்களால் படைக்கப்பட்ட ஆசா பாசங்கலைத் துறந்து மனம் புத்தி இவைகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடு பட்டால்த் தான் சூக்ஷ்மமான ஆன்மாவை அடையளம் காணமுடியும்.

தாண்டவராயன் பிள்ளை கைவல்ய நவ நீதத்தில் சொல்கிறார்:

என்னுடை மனது புத்தி யின்திய சரீர மெல்லா
மென்னுடை யறிவினாலே யிரவிமுன் னிமமேயாக்கி
யென்னுடை நீயு நானு மேகன்றைக்யங்செய்ய

கதிரவனைக் கண்ட பனிபோல் என்னுடைய மனது ,புத்தி இந்திரியங்கள் எல்லாம் மறைந்து போக நீயும்  நானும் ஒன்றே என்று ஆக்கி அருள் செய்வாயாக.
இதையேதான் பகவான் வேறு வார்த்தைகளில் கூறுகிறார்.
என்னுடைய் உள்ளத்தில் புகுந்து நீ என்னுடைய ஆசாபாசங்களையெல்லாம் அழித்து என்னை சிறை செய்து உன்னுடன் ஐக்கியமக்கிக்  கொண்டாய்,அருணாசலா.என்று.
நாம் இந்த நேரத்தில் பகவன் ரமணர் மதுரையிலிருந்து திரு அருணை வந்து பதினேழு வருடம் ஒம்கார வடிவமான விரூபாக்ஷ குகையில் தவமிருந்தார் நினைவுகூர வேண்டும்.
https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif


ரமணஜோதி 12

ரமணஜோதி 12

என்னை கை விடாதே



ஆருக் காவெனை யாண்டனை யகற்றிடி
லகிலம் பழித்திடு மருணாசலா

மிகுந்த சிரமத்திற்குப் பின் உன்னிடம்
ஐக்கியமாயுள்ளேன். இனிமேல் என்னை விட்டு  நீ அகன்றாலோ உன்னை விட்டு நான் அகன்றாலோ இந்த உலகம் உன்னை சும்மா விடாது.
நீ தீராத பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடும். ஆகவே என்னை உன்னிடமே வைத்துக் கொள்ள வேண்டும் அருணாசலா என்கிறார் ரமணர்.
பகவான் இந்த ஈரடிகள் மூலம் நமக்கு உணர்த்த முயல்வது என்ன்வென்றால் தாற்காலிகமான தியானமோ தவமோ பிரயோசனப்பாடாது.
தொடர்ந்து நான் யார் என்று விசரமார்க்கத்தில் ஈடுபட்டு நாம் அந்த பரமனிடம் ஐக்கியமாக வேண்டும் என்பது தான்.

சிலருக்கு திடீரென்று ஏற்படுகின்ற ஞான வெளிப்பாடுகளைப் பற்றி  நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். பல மேற்கத்திய புத்தகங்களிலும் இப்படிப்பட்ட அனுபவங்களைக் குறித்து  எழுதப்பட்டிருக்கிறது.
சாது அருணாசலா (A.W.சாட்விக்) தனது நினைவு குறிப்புக்களில் Dr.Bucke  என்பவர் எழுதிய ஒரு புத்தகத்தை குறிப்பிடுகிறார். Dr.Bucke   தனது புத்தகத்தில் பலருக்கு ஏற்பட்ட இம்மாதிரியான் அனுபவங்களை தொகுத்து வழங்கியுள்ளார்..
ஸ்ரீ பகவான் ரமணர் இம்மதிரியான அனுபவங்களைக் குறித்து என்ன கூறுகிறார்?
இப்படி திடீரென்று வெளியாகும் சித்விலாசங்களினால் ஏற்படும் உயரிய தெளிவுகள் ஒருசில நாட்களே தங்கி,காலப்போக்கில் மறைந்து விடும் என்கிறார் ரமணர்.
எது திடீரென்று தோன்றியதோ அதன் மறைவும் அப்படியே திடீரென்று நிகழும்.  ஆகவே ஒருவன் இப்படி அனுபவித்தது ஆன்ம ஞானமன்று. 

இவர்களில் நான் என்ற அகந்தை மறைவதில்லை.இவ்வகந்தையே முழுமையான ஞான அனுபவத்திற்கு தடையாகவும் உள்ளது.
அதனால்த் தான் பகவான், பிரம்மனிடம் என்னை ஒரு முறை ஆட்க்கொண்டு விட்டால் என்னை விட்டு விடாதே என்று வேண்டுகிறார்.
நாம் சாதாரணமாகத்  தியானம் செய்யும் போது நம் மனம் ஒரு நிலைப்படுகிறது. ஆனால் நாம் ஏதோ ஒரு பொருளின் மீது அல்லது நினைவின் மீது மனதை ஒருமுகப்படுத்த முயல்கிறோம். அப்படி முயலும் போதுநான் என்ற அகமும் நாம் மனதை ஒருமுகப்படுத்துகின்ற ஒரு பொருள் அல்லது நினைவு என்று இரண்டு உண்டாகின்றது அதன் காரணமாக அந்த அனுபவம் நிரந்தரமாக இருப்பதில்லை.சிறிது நேரம் அல்லது காலத்திற்குப் பின் மறைந்து விடுகிறது.
இம்மாதிரியான எண்ணங்களற்ற நிலையை மனோலயம் என்று கூறலாம். இப்படிப்பட்ட மனோலயத்தை அடைவதற்கு ஏன் நாம் கஷ்டப்பட்டு தியானம் செய்ய வேண்டும் என்ற கேள்வி நம் மனதில் எழுவது இயற்கையே. .இம்மாதிரியான நிலையை நல்ல உறக்கத்திலும் நமக்கு கிடைக்கலாம்.அல்லது morphine, chloropharm போன்ற ரசாயனப்  பொருள்களின் மூலமும் கிடைக்கலாம்.
ரமணர் இந்த மாதிரியான அனுபவத்தை குறித்து ஒரு கதை கூறுவார். கங்கைகரையில் ஒரு சாமியார் இருந்தார் மிகுந்த ஞானி .நினைத்த நேரத்தில் சமாதி நிலையை அடையும் சித்தி உடையவர். ஒரு நாள் தன் சீடனிடம் தாகத்திற்கு தண்ணீர் கொண்டு வருமாறு கூறினார்..சீடன் தண்ணீர் கொண்டு வருவதற்குள் சாமியார் சமாதி நிலைக்குப் போய் விட்டார். நீண்ட சமாதிக்குப் பின் சாமியார் கண் விழித்துப் பார்த்தார்.சீடனைக் காணோம்;அவனின் எலும்புக் கூடு தான் இருந்தது. எனென்றால் சாமியார் ஆயிரம் வருடம் சமாதி நிலையில் இருந்த் விட்டார்.கண் விழித்ததும் அவருக்கு தாகம் எடுத்தது. ஏனென்றால் அவரின் நான் அழியவில்லை.சமாதி/மனோலயம் எவ்வளவு தீர்க்கமாக் இருந்தாலும் நிரந்தரமில்லையென்றால் பலன் ஒன்றுமில்லை

சமாதி நிலைகளை மூன்றாக பிரிக்கலாம்
1.ஸவிகல்ப ஸமாதி
2.நிர்விகல்ப ஸமாதி
3.ஸஹஜ ஸமாதி.
ஸவிகல்ப ஸமாதி
இது ஆழ்ந்த தியான நிலை இந்த நிலையில் அவன் தனது தனித் தன்மையை இழப்பது இல்லை. இது சாதாரண தியானத்தை(meditation) விட மேலானது.

நிர்விகல்ப ஸமாதி

இன்னிலையில் சாதகன் தன் தனித்தன்மையை இழந்து ஆன்மாவில் லயித்து விடுகிறான்.ஆனால் இதுவும் தாற்காலிக்மானது தான்.முடிவில் அவன் விழித்து எழுந்து ஜாக்ரத்(விழிப்பு) நிலைக்கு வந்தாக வேண்டும்.இது தான்

.ஸஹஜ ஸமாதி
இது தான் முடிவான நிலை, இந்த நிலையில் ஒருவன் ஆன்மாவோட முழுதும் கலந்து விடுகிறான். இந்த நிலையில் அவன் தினசரி வாழ்க்கையில் செய்ய்ய வேண்டியது எல்லாவற்றையும் செய்துகொண்டிருப்பான். ஆனால் அவன் ஆன்மாவோடு ஒன்றிவிட்டதால் இகலோக பற்றெதுவும் இல்லாமல் பலன் எதிர்ப்பார்ப்புக்கள் இல்லாதவனாக இருப்பான்.

பகவான் ரமணர் இந்த நிலையை முதல் இரு நிலைகளுக்கும் செல்லாமலேயே எட்டிவிட்டார் தனது பதினாறாவது வயதிலேயே. ஆகவே தான் அவர் பகவான்-மஹரிஷி !


Monday, 3 November 2014

ரமணஜோதி 9

ரமணஜோதி 9
நூல்
அருணா சலசிவ  அருணா சலசிவ
அருணா சலசிவ  அருணா சலசிவ
அருணா சலசிவ  அருணா சலசிவ
அருணா சலசிவ  அருணா சலசிவ

இந்த நாலடிகள் தான் அக்ஷர மணமாலையின் மூலமந்திரம். அருணாசலமே சிவன்; சிவனே அருணாசலம்  
அருணசலம் ஒரு காலத்தில் அக்னிப் பிழம்பாக இருந்ததாம்.
கிரிதா யுகத்தில் அருணாசலம் அக்னியாகவும் த்ரேதா யுகத்தில் வைரக் குவியலஆகவும் துவாபர யுகத்தில் தங்க மலையாகவும்,கலியுகத்தில் கல்லாகவும் காட்சியளிக்கிறது.என்றும் கூறுவார்கள்.

கிரிதா யுகத்தில்  பிரம்மாவும் திருமாலும் அருணாசலத்தின் அடியையும் முடியையும் தேடிப் போனார்களாம். கண்டுபிடிக்க முடியவில்லயாம். இது ஒரு ஐதீகம் அல்லது மக்களுடையே நிலவி வரும்  கதை.
இம்மாதிரியான கதைகளை ஆங்கிலத்தில் மித் (myth)  என்பார்கள். எல்ல மித்து (myth)க்களின் பின்னாலும் ஒரு தத்துவம் ஒளிந்திருக்கும். அந்த தத்துவத்தை விட்டு விட்டு கதையை மட்டும் நினைவில் வைத்துக் கொள்கிறோம்.
காளிதாசன் கூறினான்  நாம் உட்கர்ந்து கொன்டு இருக்கும் கிளையை வெட்டினால் நமக்கு மோக்ஷம்(சாவு) தான். நாம் உட்கார்ந்துகொன்டிருக்கின்ற கிளையை வெட்டினால் கீழே விழுந்து மரணம் அடைவோம் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.இது கூட தெரியாத காளிதாசன் ஒருமுட்டாள் என்று மக்களுடையே பரவியுல்ல கதை. அதன் பின்னால் ஒரு மகத்தான தத்துவம் உள்ளது என்று பெரும்பாலோரின் கண்களுக்கு /அறிவுக்கு தெரிவதில்லை. நாம் இந்த உலகிலுள்ள பந்த்தங்களையெல்லாம் வெட்டி விட்டால்த் தான் முக்தி அல்லது மோக்ஷம் கிடைக்கும் என்ற அடிப்படை உண்மையை மறந்து விடுகிறோம்.
அதே போல் அருணாசலத்தின் அடி முடியை பிரமனாலும் திருமாலாலும் காணமுடியவில்லை என்பதும் ஒரு மித்தாக்த் (myth)தான் இருக்க வேண்டும்.
  பரமனான் பரமேஸ்வரனுக்கு அல்ல்து கிருஷ்ண பரமாத்மாவிற்கு அல்லது அந்த அந்தமில்லா பிரம்மத்திற்கு ஆதியும் இல்லை அந்தமும் இல்லை என்பதே இதன் பொருளாக இருக்க வேண்டும்.
அருணாசலம் இன்றும் லிங்க வடிவிலேயே காணப்ப்டுகிறது.
பகவான் ரமணர் அருணாசலத்தைக் குறித்து கீழ்க்கண்டவாறு பாடியுள்ளார்:
கருணார்வமாய்க் கருதக் கதி யருணாசலமிதாம்
அக்ஷர மணமாலை முழுக்க ஒவ்வொரு ஈரடிகளுக்கும் பிறகு இந்த மூல மந்திரத்தை சொல்வதன் மூலம் நாம் அந்தபிரம்மத்துடன் நெருங்கி செல்கிறோம்.
அஹம் ப்ரம்மாஸ்மி
அருணா  சலமென வகமே  நினைப்பவ
ரகத்தைவே ரறுப்பா யருணா சலா


இந்த முதல் ஈரடிகளில் பகவான் அகம்’,’அஹம் இரு வார்த்தைகளைக் கொண்டு ஒரு சொல் சிலம்பம் ஆடியுள்ளார்.
அகம் என்றால் மனம் /உள்ளே என்று அர்த்தம்
.அஹம் என்றால் ணான் எனும் அஹந்தை என்று பொருள்.

மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் நாம் உள்ளத்தில் அருணாசலனை நினைத்துக் கொண்டிருந்தால் நம் அஹந்தை அழியும் என்று பொருள் கொள்ளலாம்.
சிறிது உள் புகுந்து யோசித்தால் வெளிப்படையான  நான் அல்லது மாய நான் எவ்வாறு உண்மையான் நானை உண்ர விடாமல் தடுக்கிறது என்றும் அதனால் நாம் இகபரமான இந்திரிய ஜனிதமான ஆசாபாசங்களால்,கோபதாபங்களால்,பொறாமை போட்டிகளால் அலைக்கழிக்கப்பட்டு அல்லல்ப் படுகிறோம்.
ஆகவே இந்த மாய நானை அழித்து உண்மையான பிரம்மத்துடன் ஐக்யமாக வேண்டியது இன்றியமையாத ஒன்றாகும்.
அதற்கு ஒரே வழி அருணாசலத்தை த்யானம் செய்து அவனுடன் ஒன்றாவதே.
இதைத் தான் பகவன் முதல் இரண்டு வரிகளில் குறிப்பிட்டுள்ளார்.




Sunday, 2 November 2014

ரமணஜோதி 8

நூறாண்டு காணும் அக்ஷர மணமாலை

அக்ஷரம் என்றால் க்ஷரமில்லாதது;அழிவு இல்லாதது..
மணமாலையின் நோக்கம் இரு ஆன்மாக்களை ஒன்று சேர்ப்பது ஆகும்.பகவான் ரமணர் இயற்றிய மணமாலையின் நோக்கம் ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் இணைப்பதற்காக என்று சொன்னால் தவறாகாது. இந்த மணமாலை அழிவில்லாதது.
அக்ஷரம் என்ற வார்த்தையின் மூலம் இந்த மணமாலைக்கு என்றுமே அழிவில்லை என்றும் உணர்த்தப்படுகிறது.
இன்னொரு விதத்தில் வியாக்கியானம் செய்தால் தமிழின் முதல் எழுத்தாம்  வையும் சம்ஸ்கிரதத்தின் கடைசி எழுத்தான க்ஷவையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட ஒரு மணமாலை என்றும் சொல்லலாம்.
என்றும் நம்முடன் இருக்கும் சிரஞ்சீவியான பகவான் ரமணர் இயற்றிய மாலை என்றும் கொள்ளலாம்.
பகவான் இதை விரூபாக்ஷ குகையில் வசிக்கும் காலத்தில்.1914 ஆம் ஆண்டு இயற்றினார்.இந்த ஆண்டு  அக்ஷர மணமாலையின் நூறாவது ஆண்டு.
 இதை இயற்றுவதற்கு பகவான் முயற்சி எதுவும் எடுக்கவில்லை.
பகவானது பக்தர்கள் பகவானிடம் நாங்கள் பிட்சைக்கு பொகும்போது அல்லது கிரி வலம் போகும் போது பாடுவதற்கு ஏற்ற ஒரு பாமாலை இயற்றித் தரவேண்டும் என்று ஒரு நாள் கேட்டார்கள்.பகவான் உடனடியாகப் பதில் ஏதும் கூறவில்லை.தேவாரம்,திருவாசகம் போன்ற மிகச் சிறந்த பாமாலைகள் இருக்க பிறிதொன்று எதற்கு?என்று நினைத்தாரோ என்னவோ.!
பிறிதொரு நாள் கிரி வலம் சென்று கொண்டிருக்கும் பொழுது,திடீரென்று பகவான் மடை திறந்த வெள்ளம் போல் இந்த செய்யுள்களை சொல்ல ஆரம்பித்தார்.அன்பர் பழனிச்சாமி உடனையே எங்கிருந்தோ ஒரு பேப்பரும்  எழுதுகோலும் கொண்டுவந்து கொடுத்தார். இன்ப பெருவெள்ளம் போல் பகவானிடமிருந்து பாமாலைகள் வந்து விழுந்தன.
இந்த மணமாலையின் சிறப்புக்கள் சொல்லிலடங்கா. ஒரு சிலதை இங்கு குறிப்பிடுகிறேன்.
*      பக்தி மார்கமும் ஞானமார்கமும் ஒருங்கிணைந்து பாமாலைகளாக தரப்பட்டுள்ளன. இருமனம் கலந்தல் திருமணம் என்பதுபோல்.
*      ரமணரின் தனிவழியான நான் யார் மார்கமும் பாமரர்களுக்கு உதவும் சரணாகதி மார்க்கமும் ஒன்றுசேர மணமாலையாக உருவெடுத்திருக்கிறது.
*      இந்த நூல் இருவரிக் கண்ணிகளாக அமைந்துள்ளதால் சூத்திரம் போல் எளிதாக புரியும்படியும் பொருட்செறிவுள்ளதாகவும் இருக்கின்றன.
*      ஓங்காரத்தின் முதலெழுத்தாம் அகரத்தில் தொடங்கும் இந்த அக்ஷர மணமாலை எல்லா ஜீவராசிகளுக்கும் ஆதாரமான பரமாத்மாவை நினைவூட்டும் விதத்திலும் உள்ளது.
*      ஸ்ரீ கிருஷ்ண பகவான் பகவத் கீதையில் கூறுகிறார்-அக்ஷராணாம் அகாரோஸ்மி-அக்ஷரங்களில் நான் அகரமாயிருக்கிறேன்.அந்த முதன்மைத் தன்மையை நினைவூட்டும் விதத்தில் அக்ஷர மணமாலை என்ற பெயர் கொடுக்கப் பட்டுள்ளது.
*      பக்தியோடு ஓதும் பக்தர்களுக்கு சிவசாயூஜ்யம் என்ற முக்தி கிடைக்க பேருதவியாக இருக்கும் என்பதால் இது ஒரு மணம் பரப்பும் மாலை .
*      அக்ஷரங்களாலான மணம் பரப்பும் மாலை இது.
*      அருணாசலா என்று 108 முறை கூற வைக்கும் மாலையிது.
*      அழியாப் பொருளான ஞான மார்கத்தை போதிப்பதால் இது அக்ஷர மணமாலை
*      அக்ஷர மணமாலையில் பலப் பல பாவங்கள் வெளிப்படுகின்றன:
o       தாஸ்ய பாவம்.
கெஞ்சியும் வஞ்சியாய்  கொஞ்சமு மிரங்கிலை
யஞ்சலென் றேயரு ளருணாசலா                     (21)       
ஞமலியிற்  கேடா நானென் னுறுதியா
னாடிநின் னுறவே   னருணாசலா                    (39)       
பைங்கொடி யா நான் பற்றின்றி வாடாமற்
ப்ற்றுக்கோ டாய்க்கா  வருணசலா                    (72)

மிஞ்சிடிற் கெஞ்சிடுங் கொஞ்ச வறிவனியான்  
வஞ்சி யாதருளெனை  யருணாசலா                  (78)       
மீகாம னில்லாமன் மாகாற் றலைகல
மாகாம்ற் காத்தரு     ளருணாசலா                  (79)
o       நட்புரிமை
ராப்பகலில்லாமல் வெறு வெளி வீட்டில்
ரமித்திடு வோம் வா வருணாசலா                   (91)

மூக்கிலன் முன்காட்டு முகுரமா காதெனைத்
தூக்கி அணைந்தருளருணாசலா.                      (81)

மலைமருந் திட நீ மலைத்திட வோஅருண்
மலைமருந்  தயொ ரருணாசலா                   . (76)


பீதியி லுனைச்சார் பீதியி லெனை சேர்
பீதி யுன் றனக்கே நருணாசலா?                      (67)

ரமணனென்  றுரையத்தேன் ரோசங் கொளாதெனை
ரமித்திடச் செய வா வருணாசலா                     (90)
o       நாயகா -நாயகி பாவம்
எனையழித் திப்போ எனைக்கலவவிடி
லிதுவோ வண்மை யருணாசலா                      (9)
கேளா தளிக்குமுன் கேடில் புகழைக்
கேடுசெய் யாதரு ளருணாசலா

ஏனிந்த வுறக்கமெனைப்பிற் ரிழுக்க
விதுங்க் கழகோ வருணாசலா                        (10)

ஆருக் காவெனை யண்டனை யகற்றிடி
லகிலம் பழித்திடு மருணாசலா                       (4)

o       வழக்காடுதல்
ஔவை போ லெனக்ககுன் னருளைத் தந்தெனை
யாளுவ  துன்கட னருணாசலா                       (14)

முடியடி காணா முடிவிடுத் தெனைநேர்
முடிவிடக் கடனிலை யருணாசலா                    (80)


இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். நாமெல்லோரும் படித்து இன்புறவேண்டும் என்பதே என் அவா.மேலும் அந்தந்த செய்யுளை விவரிக்கும் போது மேலும் பார்ப்போம்.