Wednesday, 14 January 2015

ரமணஜோதி 51

ரமணஜோதி 51

பக்குவம்

ஞிமிறுபோ நீயு மலர்ந்திலை யென்றே
நேர்நின் றனையென் னருணாசலா
“நான் இன்னும் பக்குவப்படவில்லையென்று  நீ என்னை அனுக்ரஹிக்காமல் தாமதிக்கிறாயே,அருணாசலா?இது நியாயமா? சூரிய உதயத்திற்கு பின்னும் தாமரை மொட்டு மலரவில்லை என்று வட்டமிடும் தேனீ போல் நீ என்னர்கே வந்தும் கூட என்னுள் வந்து என்னை ஆசீர்வதிக்க மாட்டேனென்கிறாயே,அருணாசலா?” இப்படி நமக்காக அரற்றுகிறார் பகவான் ரமணர்
இதன் மூல பகவான் சூசகமாக அறிவுறுத்துவதென்னவென்றால், பரமாத்மாவின் அருள் இல்லாமல் நாம் என்ன முயன்றாலும் ஆத்மசாக்ஷாத்காரம் ஏற்படாது என்பதைத் தான்.

அந்த அருணாசலன் தான் நம்மை பக்குவமடைய செய்ய்ய வேண்டும்.அப்படியிருக்க ‘நீ பக்குவப் படவில்லை .ஆகவே நீ என்னுடை ஐக்கியமாக முடியாது’ என்று சொல்வதில் என்ன அர்த்தம்?
இதே கருத்தை ஸ்ரீ அருணாசல பதிகத்திலும் காணலாம்:
கருணயா லென்னை யாண்ட நீ யெனக்குன்
                   காட்சிதன் தருளிலை யென்றா
          லிருணலி யுலகி லேங்கியே பதைத்திவ்
                   வுடல்விடி லென்கதி யென்னா
          மருணனை காணா தலருமோ கமல
                   மருணனுக் கருணனா மன்னி
          யருணனி சுரந்தங்க் கருவியாய்ப் பெருகு
                   மருணமா மலையெனு மன்பே
.”உனது கருணையால் என்னை அனுக்கிரகித்த நீ இப்பொழுது எனக்கு உன் தரிசனம் தரவில்லையென்றால்,நான் ஆத்ம தரிசனம் கிடாய்க்காமல் இந்த பூத உடலை
  விட்டுப் போக நேர்ந்தால்,அந்த துர்க்கதியை என்னவேன்று கூறுவது? அருணமலை எனும் கரூணா ஸாகரமே,வற்றாத நீர் வீழ்ச்சியென அருவியாய் பெருக்கெடுத்து  ஓடும் அறுணாசலா,நீ ஏன் என்னை கடாக்ஷிக்க மாட்டேனெங்கிறாய்? ஆதவனுக்கெல்லாம் ஆதவனாய் இருக்கின்ற  நீ என் இதயத் தாமரையை மலரச் செய்யக் கூடாதா? நீ நினைத்தால் தானே நான் பக்குவப் பட முடியும்?”
பக்தி மார்க்கத்தில் சஞ்சரிக்கின்ற எல்லாருக்கும் பரமனின் அனுக்கிரகம் வேண்டியுள்ளது. அதில்லாமல் பக்தியால் மட்டுமே ஆத்ம ஸாக்ஷாத்காரம் பெற இயலாது.
பக்தியே பலவிதமாக புராணங்களிலும் உப்னிஷத்துக்களிலும் வகைப் படுத்தப்
பட்டுள்ளது.
முக்கியமாக ஐந்து பிரிவுகள் உள்ளன

.1 ஞான பக்தி,
2.சுத்த பக்தி,
3.ப்ரேமி பக்தி,
4.ப்ரேமபரபக்தி,
5.ப்ரேமாதுர பக்தி
துருவன் நாராயணனை வேண்டி ஆறு மாதம் “ஒம் நமோ பகவதே வாசுதேவாயா” என்ற மந்திரத்தை ஜபித்து நாராயணனை தரிசிதான்.அன்ன ஆஹாரமின்றி அவனுடைய தவத்தை மெச்சி நாராயணன் அவனுக்கு தரிசனம் அளித்தார்.இருந்தும் துருவனது பக்தி தூய பக்தியாக கருதப் படவில்லை.ஏனென்றால் அவன் வேண்டியதெல்லாம் ராஜ்ஜியமும் அரசன் என்ற பதவியும்.அங்கே இகலோக ஆசைகள் அவனது பக்திக்கு களங்கமாகி விட்டன.
நம்மில் பலரும் ஆண்டவனிடம் ‘எனக்கு அது வேண்டும்,இது வேண்டும்’ என்று பிரார்த்திக்கிறோம்.அத்தகைய பகதர்கள் பக்தர்கள் அன்று;அவர்கள் ‘வணிக்குகள்’ அதாவது வியாபாரிகள் என்று பாகவதத்தில் பக்த பிரகலாதன் கூறுகிறான். நாம் பகவானிட பிக்ஷை கேட்பதின் மூலம் பகவானின் ‘சர்வஞ்ன்’ எல்லாம் தெரிந்தவன் என்ற தகுதிக்கு களங்கம் கற்பிக்கிறோம்.
பிரகலாதனிடம் பரமாத்மா தோன்றி ‘உனக்கு என்ன வேண்டும்,கேள்’ என்று கேட்ட பொழுது பிரகலாதன்.,’நான் உன்னை மறவாமலிருக்க வேண்டும்’ என்றானாம்.இதுவல்லவோ உத்தம பக்தி!
பாகவதம் ஏழாம் காண்டத்தில் பிரகலாத மஹாராஜன் பக்தியை ஒன்பது விதத்தில் பாலனம் செய்ய்யலாம் என்று கூறுகிறார்:
ஸ்ரவணம்: பரிக்ஷித் மஹாராஜவை இதற்கு உதாரணமாக கூறலாம்.பாகவதத்தை திரும்பத் திரும்ப ஸ்ரவணம் செய்ததால் அவர் அனுக்ரஹிக்கப் பட்டவராகிறார்.
கீர்த்தனம்: சுக பிரம்ம மஹரிஷியே இதற்கு முன்னுதாரணம்.ஏனென்றால் அவர் தானே பகவதத்தை பரிக்ஷித் மஹாராஜாவிற்கு கூறினார்
ஸ்மரணம்:பிரஹலாதான் இதற்கு சரியான உதாரணமவர் ஊணிலும் உறக்கத்திலும் பகவான் நாராயணன் ஞாபகமாகவே இருந்தார்.
பாத ஸேவனம்:மாதா மஹாலக்ஷ்மியே இதற்கு எடுத்துக்காட்டு.
அர்ச்சனம்:கோவில்களில் பொய் நாம் அர்ச்சனை செய்கிறோம் அல்லவா?மஹராஜா ப்ரது தன் எல்லா சொத்துக்களையும்
பரமனுக்கே அர்ப்பணித்து அர்ச்சனை செய்தார்.
வந்தனம்:  அக்ரூரர் இந்த பிரார்த்தனை முறைக்கு சிறந்த உதாரணம்
தாஸ்யம் . ஹனுமன் இந்த பக்தி முறைக்கு எடுத்துக்காட்டு.
ஸாக்யம் அர்ஜுனனின் பக்தி இதற்கு சிற்ந்த உதாரணமாகும்
ஆத்ம நிவேதனம்  மஹாபலி சக்கரவர்த்தி தனது இராஜ்ஜியத்தை மட்டுமல்ல தன்னையே அர்ப்பணித்தார்
பாகவதம் ஆறாம் காண்டத்தில் அஜாமலானின் கதை பரமனின் அனுக்கிரகத்திற்கு சிறந்த எடுத்துக் காட்டு.பாபங்களை செய்துகூட்டிய மிகவும் பாபியான அஜாமலன் மரணத்திலிருந்து எப்படி தப்பித்தான் தெரியுமா? மரணத் தறுவாயில் தன் மகனை “நாராயாணா” என்று கூப்பிட்டதின் காரணமாக அவனுக்கு தெய்வானுக்கிரகம் கிடைத்தது.
பகவான் ரமணர் பக்தி மார்க்கத்தை குறித்து கூறியுள்ளதை சற்றே பார்ப்போம்:
ஒரு பக்தர் பகவானிடம் கேட்டார்:
ஏதேனும் ஒரு ரூபத்தில் இறைவனை ரூபத்தியானம் செய்ய்யலாமா?
பகவான் சொன்னார்:
ஆஹா,செய்ய்யலாமே !உருவத்தியானம் நல்ல ஆன்மீக முன்னேற்றம் தரும்
பக்தர்:
இறைவனை உருவம் இல்லாதபடி அரூபத்தியானம் செய்ய்யலாமா?
பகவான் ரமணர்:
அரூப தியானமும் நல்ல பலனைத் தரும்
பக்தர்:
 ஆனால் பகவானே,சிலர் உருவத்தியானத்தை விட அரூப தியானம் தான் சிறந்தது என்று கூறுகிறார்களே?
பகவான்:
எந்த வழியில் சென்றாலும் அது ஆன்மீக முன்னேற்றம் தரும்.உங்களுக்கு உகந்த ஏதோ ஒரு வழியினைத் தேர்ந்தெடுத்து அதில் முழு மூச்சுடன் இடுபடுவதைவிட்டு,ஏன் அனாவசியமாக இது உயர்ந்ததா ,அது உயர்ந்ததா என்று கேள்வி கேட்டுக்கொண்டிருகிறீர்கள்.ஏதேனும் ஒரு வழியில் முழு மனதுடன் தீவிரமாக ஈடுபடுங்கள்..வீண் தர்க்கத்தால் பயனேதுமில்லை.



எவ்வளவு தீர்க்க தரிசன பார்வை. வெறும் வரட்டு வேதாந்தம் பேசாமல் நடைமுறைக்கு பொருத்தமான அறிவுரை. 

ரமணஜோதி 50

ரமணஜோதி 50

ஞானமா,பக்தியா?


ஞானமில் லாதுன் நுறுதியா

னாடி நின்னுறுவே னருணாசலா


நான் எத்தனை காலம் உன் மீது பக்தி செலுத்திக்கொண்டு இப்படியேயிருப்பேன் அருணாசலா? என்று நீ எனக்கு ஞானமருளி ஆத்ம ஸாக்ஷாத்காரம் நேடித் தருவாய்,அரூணாசலா?” என்று பகவான் இந்த செய்யுளில் கேட்கிறார்.
பக்தி போற்றத்தக்கதே;ஆனால் ஞானம் சென்றடையாத பக்தி அலுப்பூட்டும் ;மனத் துயரத்தை. அதிகரிக்கும். ;பக்தியின் பலனே இந்த உலக மாயாஜாலங்கள் தானோ என்ற சந்தேகம் வந்து விடும். பரமாத்மாவின் உண்மை சொரூபம் தெரிந்து கொள்வது அவர் நம்மிலிருந்து மாறுபட்டிருக்கிறார் என்று புரிந்துகொள்வதற்காக அல்ல. அவரும் நாமும் ஒன்று தான் என்று புரிந்து கொள்வதற்காகத் தான்.பரமாத்மாவின் சொரூப சுபாவமும் ஜீவாத்மாவின் சுபாவ சொரூபமும் அடிப்படையில் ஒன்றே; இடையில் ஏற்படுகின்ற மனோமய மயக்கங்கள் நம்மை பரமாத்மாவிலிருந்து அகற்றி விடுகின்றன என்பதை புரிந்து கொண்டு அவருடன் ஐக்கியமாக வேண்டும் என்பது தான் பக்தியின் இலட்சியமாக இருக்கவேண்டும்.
நாம் தொடர்ந்து பக்தி மார்க்கத்தில் சஞ்சரிக்கும்போது நாம் இலக்கை நெருங்கிவிட்டோம் என்று அறிந்து விட்டால் ஒருவிதமான உள்ளக் கிள்ர்ச்சி ஏற்படும் அப்பொழுது இன்னும் தீவிரமாக பக்தி மார்க்கத்தில் முன்னேற முடியும்.
பகவத் கீதையில் அர்ஜுனனிற்கு தளர்ச்சி ஏற்படாமல் இருக்கத் தான் விசுவரூப தரிசனம் காண்பித்தான் கண்ணன்.
   நமது வேதங்களும் உபனிஷத்துக்களும் பரமாத்மாவை அடைவதற்கு மூன்று பாதைகளைக் காட்டியுள்ளார்கள்.
முதல் மார்க்கம் பக்தி;அடுத்தது கர்ம மார்க்கம்;மூன்றாவது ஞான மார்க்கம்.மார்க்கங்கள் வேறானாலும் குறிக்கோள் ஒன்று தான் எல்லா மார்க்கங்களின் முடிவும் பகவானுடன் ஐக்கியமவது. தான்.
பக்தி மார்க்கமானது அன்பின் அடிப்படையில் ,பூரண சரணாகதியின் அடிப்படையிலானது. இது உணர்வு சம்பந்தப் பட்டது.பக்தியின் உன்னதமான நிலையை அடையும்போது பரபக்தியானது ஞானபக்தியாக மாறுகிறது.அத்வைதத்தின் பிதாமஹர் என்று வருணிக்கத் தகுந்தவர் ஆதி சங்கர பகவத் பாதாள்.அவர் ஹரியின் ஹரனின் தேவியின் சிறந்த உபாசகர். இராமகிருஷ்ண பரமஹம்சர் தலை சிறந்த காளிபக்தர்.
கீதையின் பதினோராவது அத்தியாயத்தின் கடைசி சுலோகம் மேலோட்டமாக பார்க்கும்பொழுது பக்தி தான் தலை சிறந்த மார்க்கம் என்று சொல்வது போலிருக்கும்.ஆழமாக சிந்தித்துப் பார்த்தோமானால் நமக்கு பகவான் மூன்று மார்க்கங்களையும் எப்படி ஒருங்கிணைக்கிறார் என்று புரியும்.
மத்கர்மக்ருன் மத் பரமோ மத்பக்த: ஸங்கவர்ஜிர்வைர: ஸர்வபூதேஷூய:ஸ் மாமேதி பாண்டவ !!
எனக்காக யார் ஒருவன் கர்மம் செய்கிறானோ ,யாரொருவன் என்னையடைவதையே இலட்சியமாக கொண்டுள்ளானோ,என்மீது பக்தி செலுத்துகிறானோ எவனொருவன் பற்றற்றவனாகவும் எல்லா உயிரினங்களிடமும் வெறுப்பற்றவனாகவும் இருக்கிறானோ அவன் என்னை அடைகிறான்.
இதன் முதற் பகுதியில் சொல்லியுள்ள ‘எனக்காக கர்மம் செய்கிறவன்’.
என்று சொல்லியிருப்பது பகவான் ரமணர் அடிக்கடி வலியுறுத்தி வந்துள்ள கர்த்த்ருத்வ மனோத: !
நிபாவமில்லாத கர்மம் என்பதை ஒத்திருக்கிறது. தன்னுடைய சுய லாபத்திற்காக அல்லாமல் ஒருவன் கர்மம் செய்தால் அவன் பரமாத்மாவை அடைய தகுதியானவனாகிறான்.
களங்கமற்ற ஈடுபாடுள்ளவன் என்கின்ற வார்த்தைகள் மூலம் பகவான் கிருஷ்ணர் பக்தி மார்க்கத்தின் பரமோன்னத நிலையை குறிப்பிடுகிறார்.
பன்னீரண்டாவது அத்தியாயத்தில் 6-7 சுலோகங்களில் பக்தி மார்க்கத்தைக் குறித்து மேலும் கூறுகிறார்:
யே து ஸர்வாணி கர்மாணி மயி ஸமன்யஸ்ய மத்பரா: !
அனன்யேனைவ யோகேன மாம் த்யாயந்த: உபாஸதே !!
தேஷாமஹம் ஸமுத்தர்தா ம்ருத்யுஸம்ஸாரஸாகராத் !
பவாமி நசிராத்பார்த்த மய்யாவேசிதசேதசாம்!!
 ‘யாரொருவன் வினையத்தனையும் எனக்கு அர்ப்பணித்துவிட்டு என்னையே பரகதியாககொண்டு சிதைவுறா யோகத்தால் என்னை தியானித்து வணங்குகிறானோ  சித்தத்தை என்பால் வைத்த அவனை நான் சம்சார சாகரத்திலிருந்து விரைவில் கரையேற்றுவேன்” என்கிறார் பரமாத்மா.
அடுத்த சுலோகத்தில் பகவான் பக்தியின் நிறைவை மீண்டும் தெளிவுற  விள்க்குகிறார்:
மய்யேவ மன ஆதத்ஸ்வ மயி புத்திம் நிவேசய !
நிவஸிஷ்யஸி மய்யேவ அத ஊர்த்வம் ந ஸம்ஸய: !!
என்னிடத்தில் மனதை வைத்து என்னிடத்தே புத்தியை செலுத்துக. என்னிடத்தைலேயே நீ வசிப்பாய் என்பதில் சந்தேகமில்லை” எங்கிறார் கிருஷ்ணர்.
உணர்ச்சிமயமயிருப்பது மனது.திருமானிக்கும் சக்தியுள்ளது புத்தி.அகம் எங்கிருக்கிறதோ புறம் அங்கே இருக்கும்.உள்ளத்தை பூரணமாக பரமாத்மாவினிடம் வைத்து விட்டால் நாம் உடல் ரீதியாக எங்கிருந்தாலும் என்ன அனுபவங்களுக்கு ஆளானாலும் நாம் பாதிக்கப் படமாட்டோம்.
இந்த எளிதான முறையில் ஒருவன் பரமாத்மாவை அடைய முடியாவிட்டால்,சில அப்பியாசங்கள் மூலம் அடையலாம்.இதை விளக்குகிறார் பகவான் கிருஷ்ணர் அடுத்த சுலோகத்தில்.
அத சித்தம் ஸமாதாதும் ந சக்னோஷி மயி ஸ்திரம் !
அப்யாஸயோகேன ததோ மாமிச்சாப்தும் தனஞ்சயா  !!
சித்ததை பரமாத்மாவின் பால் உறுதியாக வைக்க முடியாதவர்களுக்கு அப்பியாச யோகத்தை சிபாரிசு செய்கிறார் கிருஷ்ணர்.
அதிலும் ஒருவன் வெற்றியடையாவிட்டால் கிருஷ்ணர் கர்ம மார்க்கத்தை கடைப் பிடிக்கும் படி கூறுகிறார்.
அப்யாஸேப்யஸமர்த்தோம்ஸி மத்கர்மபரமோ பவ !
மதர்த்தமபி கர்மாணி குர்வன் ஸித்திமவாப்ஸ்யஸி !!
அப்பியாசத்தில் வல்லமையில்லாதவர்கள் பகவான் பொருட்டு கர்மங்களை செய்ய்ய சொல்கிறார் கிருஷ்ணர்.
பகவான் ரமணர் இதுகுறித்து கூறியுள்ளார்:
“என்றும் நிரந்தரமாக இருப்பது சத் வஸ்துவான ஆன்மா ஒன்றே மேலும் அதன் ஒளியிலேயே அனைத்து பொருள்களும் காணப்படுகின்றன.இதைத் தான் சிதாபாசம் எங்கிறார்கள் .அதை மறந்து விட்டு நாம் தோற்றங்களில் மட்டும் கவனத்தை செலுத்தும் போது நாம் மாயை வசப் படுகிறோம்..
இதை விட்டு விட்டு நாம ரூபங்களை கடவுள் என்று வழிபடுகிறார்கள் சிலர். தியானம்,ஜபம் எல்லாவற்றின் இலட்சியமும் ஒன்றே: ஆன்மா அல்லாத எல்லாவற்ரையும் மறப்பதே மந்திரமும் ஜபங்களும் மனதை ஒருமுகப்படுத்த உதவுகின்றன.அந்த சாதனையில் நாம் வெற்றிப் பெற்று விட்டால்,நாளடைவில் எந்த ஒரு சிந்தனையில் மனதை ஒருமுகப்படுத்துகிறோமோ அந்த ஒரு சிந்தனையும் மறைந்து போய்விடும் ஆகவே சாதனா முறையும் உபயோகமானதே.”
ஆனால் ஒரே ஒரு உண்மையை மட்டும் மறந்து விடலாகாது அல்லது அந்த உண்மையை அறியும் வரை உன் தேடலை நிறுத்தலாகாது.அந்த உண்மை:யை பற்றி வள்ளலார் இப்படி பாடியுள்ளார்:
என்னுள்ளே அரும்பி என்னுள்ளே மலர்ந்து
என்னுள்ளே விரிந்த என்னுடைய அன்பே !
அருளொளி விள்ங்கிட ஆணவம் எனுமோர்
இருளை வென்றுளத்து ஏற்றிய விளக்கே

உன்னொளி ஓங்கிட உயிரொளி விளங்கிட

வெள்ளொளி காட்டிய மெஇபடும் கனலே

அந்த உள்ளொளியை மறந்து விடலாகாது.எல்லாமே அந்த உள்ளொளி தான்.அதற்கன்னியமாக ஒன்றுமில்லை.இட்மணர் அருமையாக உபதேச உந்தியாரில் கூறியுள்ளார்.

வெளி விடயங்களை விட்டு மனம் தன்

ஒளியுரு ஓர்தலே உந்தீபற

உண்மை உணர்ச்சியா உந்தீபற

உதித்த இடத்தில் “நான் “ எனும் முதல் எண்ணம் உதிக்கின்ற மூலமான அகத்தில்,ஒடுங்குபவதே ஞான நெறி.அதை எப்படி பயில்வது எனபத்ற்கான் வழிவெளி விஷயங்களிலுள்ள ஈடுபாடுகளையெல்லாம் விட்டு விட்டு அந்த பிரபஞ்ச அறிவை பெறுவதற்கான அறிவு எங்கிருந்து வருகிறதோ அந்த ஆன்ம பேரொளியை அறிந்து அதனுடன் ஐக்கியமாவது தான் நமது இலட்சியமாக இருக்க வேண்டும் என்கிறார் பகவான்.
ஆகவே தான் அக்ஷர மணமாலையின் இந்த சுலோகத்தில் “ஞானன் தெரித்தருள ருணாசலா”
ப்க்தியின் முதல் படியாம் நாமரூப சாதனைகளிலிருந்து என்னை கை பிடித்து மேலே தூக்கி ஞான ஒளியைக் காண்பி என்கிறார் பகவான் ரமணர்.


Friday, 2 January 2015

About Harihara Sarma

About Harihara Sarma 


Born in a tiny hamlet namely Pathiyoor in Kerala state in India ,as fifth child to Ramaiyer Krishnammal.
Rama and Krishna are one and the same and may be therefore they christened the child as Hari Haran meaning Siva and Vishnu are one and the same.
Till his twnentififth year he grew up in the left oriented Kerala environment. After the early demise of his father when he was nine years, his family faced a lot of economic difficulties. In the circumstances he could not continue formal college education.Thinking if he could complete some short vocation course he can start earning and help his brothers who were struggling to support the family of nine brothers and sisters.
It is at this juncture , he met the deciple of Mahathma Gandhi Mrs Sountharam Ramachandran, who was athe Deputy Education Minister in the Union Cabinet and the founder of Gandhigram Rural Institute. With her support and encouragement  he joined the graduation course in the Gandhigram Rural University.
His stay in Gandhigram brought about a sea change in his outlook.
His meeting with Pandit Jawaharlal Nehru, the first Prime minister of India, Chakravarthi Raja gopalachari ( Rajaji),Pa. Jeevanantham versatile and genuine communist leader,U.N. Debar,prof. Manamathan and the like influenced his thinking  and brought about a new dimension to his leftist thinking.
Through Rajaji he was initiated to Anmika thoughts; Nehru instilled in him a deep national Spirit;Jeevanantham brought a human touch to his communist thinking. But these seeds did not germinate for many years.
He got a job in Reserve. Bank of India; got married to beautiful Lalitha and became father of two cute children.
After his son-daughter got married  and he retired from active service, he became restles despite having all the comforts of this world.  Then someone said, “Instead of going around  temples and different holy places,  go to Thiruvannamalai Ramanasiramam and stay for a few days;  You will have peace of mind. ” He  immediately  sent a long e-mail to the Ramanasiramam administrator.  He went without knowing anything about Bhagavan Ramanar and when he returned to Chennai a week later he was a new man.

 Went to Thiruvannamalai again and again.  He read books about Bhagavan  Ramanar.  He became involved in Advaita ideology.

 He studied Sankara, Ashtavakrar and Vashishtar. He further got clarified Ramana's path of inquiry.

 He listened to the lectures of Brahmasri Nochur Venkataraman, Swami Udit Chaitanya, Swami Paramarthananda etc.

 He read books by Swami Chinmayananda, Swami Sivananda, Swami Vivekananda etc.

 The idea was to share what he had learned from others, so that he would have a chance to correct his mistakes;

 If there is any useful information in what is going to be written here, the credit goes to the great souls  who have beenn mentioned above.  If there are any mistakes, they are of  Hariharan only who wrote this.

 கேரளக்கரையில் பத்தியூர் எனும் குக்கிராமத்தில் இராமய்யர்-கிருஷ்ணம்மாள் தம்பதியனருக்கு ஐந்தவது குழந்தையாக பிறந்தான் இந்த வியாக்கியானங்களின் தொகுப்பாளன்..


ராமனும் கிருஷ்ணனு ஒன்று தான் என்பது போல் ஹரியும் ஹரனும் ஒன்று தான் என்று தோன்றியதோ என்னவோ அந்தக் குழந்தைக்கு ஹரிஹரன் என்று பெயரிட்டு அழைத்தார்கள்.இருபத்தி ஐந்து வயது வரை கேரளக்கரைக்கே உரித்தான இடதுசாரி மனோபாவத்துடன் வளர்ந்து வந்தான்.


ராமனும் கிருஷ்ணனு ஒன்று தான் என்பது போல் ஹரியும் ஹரனும் ஒன்று தான் என்று தோன்றியதோ என்னவோ அந்தக் குழந்தைக்கு ஹரிஹரன் என்று பெயரிட்டு அழைத்தார்கள்.
தந்தையின் மறைவிற்கு பின் அவனது குடும்பம் பொருளாதாரத்தில் மிகவும் நலிவடைந்த காரணத்தால் அவனது கல்லூரிப் படிப்பு தொடர முடியாத நிலையேற்பட்டது..
குறுகிய கால படிப்பு எதையாவது முடித்து விட்டு ஏதாவது வேலையில் சேர்ந்தால் தனது அண்ணன்மார்களுக்கு உதவியாக இருக்கலாமே என்று முடிவிற்கு  வந்த தருணத்தில்—காந்திக்கிராமத்தின் நிறுவனரும் காந்திஜியின் உத்தம சிஷ்யையும் அன்றைய மத்திய மந்திரி சபையில் துணை கல்வி மந்திரியுமாயிருந்த  திருமதி சௌந்தரம் ராமச்சந்திரன் அவர்களை சந்திக்க நேரிட்டது. அவர்களது ஊக்கத்தாலும் உதவியாலும் காந்திக்கிராம கிராமீண பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பிற்கு சேர்ந்தான் ஹரிஹரன்.
காந்திக்கிராமத்தில் அவன் தங்கியிருந்த நான்கு வருட காலம் அவனில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
பண்டித   நேரு, இராஜாஜி, ப.ஜீவானந்தம், யூ.என்.தேபர்,பேராசிரியர்.மன்மதன் போன்ற பல தலைவர்களை சந்திக்கவும் பழகவும் சந்தர்ப்பம் கிடைத்தது.
கீதாச்சாரியனின் தர்மோபதேசங்களும் காந்திஜியின் கர்ம சன்யாசமும் நேருவின் நாட்டுப்பற்றும் ஜீவானந்தத்தின் தன்னம்பிக்கையும் அவனது இடதுசாரி மனோபாவத்தில் புதிய பரிமாணத்தை உருவாக்கியது  ஆன்மீக சிந்தனைக்கு ஒரு ஆழ்மான விதை ஊன்றப் பட்டது.
ஆனால் 26 ஆவது வயதில் திருமணம்,அழகான மனைவி, நான்கு வருடங்களில் ஒரு மகன்,ஒரு மகள், இந்திய ரிசர்வு வங்கியில் நல்ல ஒரு உத்தியோகம், 65 வயது வரை அந்த விதை முளைக்கவில்லை.
மகன்-மகள் திருமணம் முடிந்து உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றபின் இகலோக பார்வையில் எல்லா வசதிகளும் இருந்தும் அவனுக்கு மன நிம்மதி இல்லை. அப்பொழுது யாரோ ஒருவர், “இப்படி கோவில் குளங்கள் என்று சுற்றி வருவதற்கு பதிலாக திருவண்ணாமலை ரமணாசிரமம் சென்று சிறிது நாட்கள் தங்கிவிட்டு வா; உனக்கு மன நிம்மதி கிடைக்கும்”  என்று சொல்ல அவனும் ரமணாசிரம நிர்வாகிக்கு ஒரு நீண்ட மின்னஞ்சல் அனுப்ப உடனேயே அழைப்பு வந்தது. ரமணரைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் சென்ற அவன் ஒருவாரம் கழித்து சென்னை திரும்பிய பொழுது ஒரு புது மனிதனாகியிருந்தான்.
மீண்டும் மீண்டும் திருவண்ணாமலை சென்றான். ரமணரைப் பற்றிய புத்தகங்களை படித்தான். அத்வைத சித்தாந்தத்தில் ஈடுபாடுகொண்டான்.
சங்கரரையும் அஷ்டவக்கிரரையும் வசிஷ்டரையும் படித்தான்.ரமணரின் விசார மார்க்கத்தை மேலும் தெளிவுபடுத்திக்கொண்டான்.
பிரம்மஸ்ரீ நொச்சூர் வெங்கடரமன்,ஸ்வாமி உதித் சைதன்யா,ஸ்வாமி பரமார்த்தானந்தா முதலியவர்களின் உபன்யாசங்களை கேட்டான்.
ஸ்வாமி சின்மயானன்தா, ஸ்வாமி சிவானந்தா, ஸ்வாமி விவேகானந்தர் முதலியவர்களின் புத்தகங்களை படித்தான்.
தான் தெரிந்துகொண்டதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உதித்தது.அப்படி பகிர்ந்துகொள்வதன் மூலம் தனது தவறுகளை திருத்திகொள்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்;தான் தெரிந்து கொண்டது மேலும் மனதில் உறுதிப்படும் என்று எண்ணினான்.அதன் விளைவு தான் இந்த எழுத்துக்கள்.
இங்கே எழுதியிருப்பவைகளில் எழுதப் போவதில் எதேனும் உபயோகமான தகவல்கள் இருந்தால் அந்த பெருமை மேலே கூறிய-கூறாமல் விட்டுப் போன பெரியோர்களையே சாரும். ஏதேனும் தவறுகள் இருந்தாலோ இதை எழுதிய ஹரிஹரனையே சாரும்.



            


Amritha Varshini - News on 28th Issue & New Series

Amritha Varshini - News on 28th Issue & New Series

Inbox
x

amritha varshini amrithavarshini2012@gmail.com

Jan 2 (1 day ago)
to amrithavahini, 4brahmins, brahmintoday, iyer123, Pattars, Forum_USBrahmi., me, Ramachandran, Venkatachalam, P.R., O, Ravi, Damodara, renuka, Sivan, Shantha, Vs, Ramanathan, Rama
Namaskaram

We are glad to announce to all the readers that the 28th Issue of our eMagazine Amritha Varshini will be released on 6th January 2015 on the auspicious occasion of Jayanthi Mahotsavam of Bhagavan Sri Ramana Maharshi.

We are also delighted to announce that two new series are getting launched in the forthcoming issue.

Sri Harihara Sarma, a retired Professional, now based out of Coimbatore, who is well known to all of us through his Akshara Mana Malai series titled Ramana Jyothi has kindly consented to write a new series on “ASHTAVAKRA GEETHA”.  This will be our maiden series will be published in Tamizh.  I think this initiative will give us opportunity to touch base with readers in their native language and also open up opportunities for new authors and readers. 

Sri Harihara Sarma can be reached at his mail id [iyerha2@gmail.com].

Sri Ramachandran Venkataraman, a young Professional, hails from Coimbatore, now working in a leading company based out of Mumbai, has come out with a new idea of studying the lives ofGRIHASTAS or householders who have excelled.  The series is being written about those GRIHASTAS with a fervent hope that reading the lives of such noble men will inspire and improve us in our life. 

Sri Ramachandran can be reached at his mail id [kannan.v71@gmail.com].
Those who wish to receive Amritha Varshini eMagazine can mail to us [amrithavarshini2012@gmail.com]

Let us welcome 2015 which will help us progress in our Sadhana which will lead us to the Ultimate Surrender unto the Lotus feet of the Lord.

Pranams

Anand Vasudevan
Editor – Amritha Varshini
Moderator – Amritha Vahini