ரமணஜோதி 50
ஞானமா,பக்தியா?
ஞானமில் லாதுன் நுறுதியா
னாடி நின்னுறுவே னருணாசலா
நான் எத்தனை
காலம் உன் மீது பக்தி செலுத்திக்கொண்டு இப்படியேயிருப்பேன் அருணாசலா? என்று நீ
எனக்கு ஞானமருளி ஆத்ம ஸாக்ஷாத்காரம் நேடித் தருவாய்,அரூணாசலா?” என்று பகவான் இந்த
செய்யுளில் கேட்கிறார்.
பக்தி
போற்றத்தக்கதே;ஆனால் ஞானம் சென்றடையாத பக்தி அலுப்பூட்டும் ;மனத் துயரத்தை.
அதிகரிக்கும். ;பக்தியின் பலனே இந்த உலக மாயாஜாலங்கள் தானோ என்ற சந்தேகம் வந்து
விடும். பரமாத்மாவின் உண்மை சொரூபம் தெரிந்து கொள்வது அவர் நம்மிலிருந்து
மாறுபட்டிருக்கிறார் என்று புரிந்துகொள்வதற்காக அல்ல. அவரும் நாமும் ஒன்று தான்
என்று புரிந்து கொள்வதற்காகத் தான்.பரமாத்மாவின் சொரூப சுபாவமும் ஜீவாத்மாவின்
சுபாவ சொரூபமும் அடிப்படையில் ஒன்றே; இடையில் ஏற்படுகின்ற மனோமய மயக்கங்கள் நம்மை
பரமாத்மாவிலிருந்து அகற்றி விடுகின்றன என்பதை புரிந்து கொண்டு அவருடன் ஐக்கியமாக
வேண்டும் என்பது தான் பக்தியின் இலட்சியமாக இருக்கவேண்டும்.
நாம் தொடர்ந்து
பக்தி மார்க்கத்தில் சஞ்சரிக்கும்போது நாம் இலக்கை நெருங்கிவிட்டோம் என்று அறிந்து
விட்டால் ஒருவிதமான உள்ளக் கிள்ர்ச்சி ஏற்படும் அப்பொழுது இன்னும் தீவிரமாக பக்தி
மார்க்கத்தில் முன்னேற முடியும்.
பகவத் கீதையில்
அர்ஜுனனிற்கு தளர்ச்சி ஏற்படாமல் இருக்கத் தான் விசுவரூப தரிசனம் காண்பித்தான்
கண்ணன்.
நமது வேதங்களும் உபனிஷத்துக்களும் பரமாத்மாவை
அடைவதற்கு மூன்று பாதைகளைக் காட்டியுள்ளார்கள்.
முதல் மார்க்கம்
பக்தி;அடுத்தது கர்ம மார்க்கம்;மூன்றாவது ஞான மார்க்கம்.மார்க்கங்கள் வேறானாலும்
குறிக்கோள் ஒன்று தான் எல்லா மார்க்கங்களின் முடிவும் பகவானுடன் ஐக்கியமவது. தான்.
பக்தி
மார்க்கமானது அன்பின் அடிப்படையில் ,பூரண சரணாகதியின் அடிப்படையிலானது. இது உணர்வு
சம்பந்தப் பட்டது.பக்தியின் உன்னதமான நிலையை அடையும்போது பரபக்தியானது ஞானபக்தியாக
மாறுகிறது.அத்வைதத்தின் பிதாமஹர் என்று வருணிக்கத் தகுந்தவர் ஆதி சங்கர பகவத்
பாதாள்.அவர் ஹரியின் ஹரனின் தேவியின் சிறந்த உபாசகர். இராமகிருஷ்ண பரமஹம்சர் தலை
சிறந்த காளிபக்தர்.
கீதையின்
பதினோராவது அத்தியாயத்தின் கடைசி சுலோகம் மேலோட்டமாக பார்க்கும்பொழுது பக்தி தான்
தலை சிறந்த மார்க்கம் என்று சொல்வது போலிருக்கும்.ஆழமாக சிந்தித்துப்
பார்த்தோமானால் நமக்கு பகவான் மூன்று மார்க்கங்களையும் எப்படி ஒருங்கிணைக்கிறார்
என்று புரியும்.
மத்கர்மக்ருன் மத் பரமோ மத்பக்த:
ஸங்கவர்ஜிர்வைர: ஸர்வபூதேஷூய:ஸ் மாமேதி பாண்டவ !!
எனக்காக யார் ஒருவன் கர்மம் செய்கிறானோ ,யாரொருவன் என்னையடைவதையே இலட்சியமாக கொண்டுள்ளானோ,என்மீது பக்தி செலுத்துகிறானோ எவனொருவன் பற்றற்றவனாகவும் எல்லா உயிரினங்களிடமும் வெறுப்பற்றவனாகவும் இருக்கிறானோ அவன் என்னை அடைகிறான்.
இதன் முதற் பகுதியில் சொல்லியுள்ள ‘எனக்காக கர்மம் செய்கிறவன்’.
என்று சொல்லியிருப்பது பகவான் ரமணர் அடிக்கடி வலியுறுத்தி வந்துள்ள கர்த்த்ருத்வ மனோத: !
நிபாவமில்லாத கர்மம் என்பதை ஒத்திருக்கிறது. தன்னுடைய சுய லாபத்திற்காக அல்லாமல் ஒருவன் கர்மம் செய்தால் அவன் பரமாத்மாவை அடைய தகுதியானவனாகிறான்.
களங்கமற்ற ஈடுபாடுள்ளவன் என்கின்ற வார்த்தைகள் மூலம் பகவான் கிருஷ்ணர் பக்தி மார்க்கத்தின் பரமோன்னத நிலையை குறிப்பிடுகிறார்.
பன்னீரண்டாவது அத்தியாயத்தில்
6-7 சுலோகங்களில் பக்தி மார்க்கத்தைக் குறித்து மேலும் கூறுகிறார்:
யே து ஸர்வாணி
கர்மாணி மயி ஸமன்யஸ்ய மத்பரா: !
அனன்யேனைவ யோகேன
மாம் த்யாயந்த: உபாஸதே !!
தேஷாமஹம்
ஸமுத்தர்தா ம்ருத்யுஸம்ஸாரஸாகராத் !
பவாமி நசிராத்பார்த்த மய்யாவேசிதசேதசாம்!!
‘யாரொருவன்
வினையத்தனையும் எனக்கு அர்ப்பணித்துவிட்டு என்னையே பரகதியாககொண்டு சிதைவுறா
யோகத்தால் என்னை தியானித்து வணங்குகிறானோ
சித்தத்தை என்பால் வைத்த அவனை நான் சம்சார சாகரத்திலிருந்து விரைவில்
கரையேற்றுவேன்” என்கிறார் பரமாத்மா.
அடுத்த
சுலோகத்தில் பகவான் பக்தியின் நிறைவை மீண்டும் தெளிவுற விள்க்குகிறார்:
மய்யேவ மன ஆதத்ஸ்வ மயி புத்திம் நிவேசய !
நிவஸிஷ்யஸி மய்யேவ அத ஊர்த்வம் ந ஸம்ஸய: !!
என்னிடத்தில் மனதை வைத்து என்னிடத்தே புத்தியை செலுத்துக. என்னிடத்தைலேயே நீ வசிப்பாய் என்பதில் சந்தேகமில்லை” எங்கிறார் கிருஷ்ணர்.
உணர்ச்சிமயமயிருப்பது மனது.திருமானிக்கும் சக்தியுள்ளது
புத்தி.அகம் எங்கிருக்கிறதோ புறம் அங்கே இருக்கும்.உள்ளத்தை பூரணமாக
பரமாத்மாவினிடம் வைத்து விட்டால் நாம் உடல் ரீதியாக எங்கிருந்தாலும் என்ன
அனுபவங்களுக்கு ஆளானாலும் நாம் பாதிக்கப் படமாட்டோம்.
இந்த எளிதான முறையில் ஒருவன் பரமாத்மாவை அடைய
முடியாவிட்டால்,சில அப்பியாசங்கள் மூலம் அடையலாம்.இதை விளக்குகிறார் பகவான்
கிருஷ்ணர் அடுத்த சுலோகத்தில்.
அத சித்தம் ஸமாதாதும் ந சக்னோஷி மயி ஸ்திரம் !
அப்யாஸயோகேன ததோ மாமிச்சாப்தும் தனஞ்சயா !!
சித்ததை
பரமாத்மாவின் பால் உறுதியாக வைக்க முடியாதவர்களுக்கு அப்பியாச யோகத்தை சிபாரிசு
செய்கிறார் கிருஷ்ணர்.
அதிலும் ஒருவன்
வெற்றியடையாவிட்டால் கிருஷ்ணர் கர்ம மார்க்கத்தை கடைப் பிடிக்கும் படி கூறுகிறார்.
அப்யாஸேப்யஸமர்த்தோம்ஸி மத்கர்மபரமோ பவ !
மதர்த்தமபி கர்மாணி குர்வன் ஸித்திமவாப்ஸ்யஸி
!!
அப்பியாசத்தில்
வல்லமையில்லாதவர்கள் பகவான் பொருட்டு கர்மங்களை செய்ய்ய சொல்கிறார் கிருஷ்ணர்.
பகவான் ரமணர்
இதுகுறித்து கூறியுள்ளார்:
“என்றும் நிரந்தரமாக இருப்பது சத் வஸ்துவான ஆன்மா ஒன்றே மேலும் அதன் ஒளியிலேயே அனைத்து
பொருள்களும் காணப்படுகின்றன.இதைத் தான் சிதாபாசம் எங்கிறார்கள் .அதை மறந்து விட்டு
நாம் தோற்றங்களில் மட்டும் கவனத்தை செலுத்தும் போது நாம் மாயை வசப் படுகிறோம்..
இதை விட்டு விட்டு நாம ரூபங்களை கடவுள் என்று
வழிபடுகிறார்கள் சிலர். தியானம்,ஜபம் எல்லாவற்றின் இலட்சியமும் ஒன்றே: ஆன்மா அல்லாத
எல்லாவற்ரையும் மறப்பதே மந்திரமும் ஜபங்களும் மனதை ஒருமுகப்படுத்த உதவுகின்றன.அந்த
சாதனையில் நாம் வெற்றிப் பெற்று விட்டால்,நாளடைவில் எந்த ஒரு சிந்தனையில் மனதை
ஒருமுகப்படுத்துகிறோமோ அந்த ஒரு சிந்தனையும் மறைந்து போய்விடும் ஆகவே சாதனா
முறையும் உபயோகமானதே.”
ஆனால் ஒரே ஒரு
உண்மையை மட்டும் மறந்து விடலாகாது அல்லது அந்த உண்மையை அறியும் வரை உன் தேடலை
நிறுத்தலாகாது.அந்த உண்மை:யை பற்றி வள்ளலார் இப்படி பாடியுள்ளார்:
என்னுள்ளே அரும்பி என்னுள்ளே மலர்ந்து
என்னுள்ளே
விரிந்த என்னுடைய
அன்பே !
அருளொளி விள்ங்கிட ஆணவம் எனுமோர்
இருளை வென்றுளத்து ஏற்றிய விளக்கே
உன்னொளி ஓங்கிட உயிரொளி விளங்கிட
வெள்ளொளி காட்டிய
மெஇபடும் கனலே
அந்த உள்ளொளியை மறந்து விடலாகாது.எல்லாமே அந்த உள்ளொளி
தான்.அதற்கன்னியமாக ஒன்றுமில்லை.இட்மணர் அருமையாக உபதேச உந்தியாரில் கூறியுள்ளார்.
வெளி விடயங்களை விட்டு
மனம் தன்
ஒளியுரு ஓர்தலே உந்தீபற
உண்மை உணர்ச்சியா உந்தீபற
உதித்த இடத்தில் “நான் “ எனும் முதல் எண்ணம் உதிக்கின்ற மூலமான அகத்தில்,ஒடுங்குபவதே ஞான நெறி.அதை எப்படி பயில்வது எனபத்ற்கான் வழிவெளி விஷயங்களிலுள்ள ஈடுபாடுகளையெல்லாம் விட்டு விட்டு அந்த பிரபஞ்ச அறிவை பெறுவதற்கான அறிவு எங்கிருந்து வருகிறதோ அந்த ஆன்ம பேரொளியை அறிந்து அதனுடன் ஐக்கியமாவது தான் நமது இலட்சியமாக இருக்க வேண்டும் என்கிறார் பகவான்.
ஆகவே தான் அக்ஷர மணமாலையின் இந்த சுலோகத்தில் “ஞானன் தெரித்தருள ருணாசலா”
ப்க்தியின் முதல் படியாம் நாமரூப சாதனைகளிலிருந்து என்னை கை
பிடித்து மேலே தூக்கி ஞான ஒளியைக் காண்பி என்கிறார் பகவான் ரமணர்.
No comments:
Post a Comment