Friday, 30 January 2015

ரமணஜோதி 63

ரமணஜோதி 63

முன்னேற்றத்தில் ஏற்படும் தடைகள்

தைரிய மோடுமுன் மெய்யக நாடையான்

            றட்டழிந் தேனரு ளருணாசலா


தைரியமாக நான் உன்னைத்தேடினேன்,;உன்னைக் கண்டேன்; உண்மையைப் புரிந்துகொண்டேன்.எனது வாசனைகள் எல்லாம் அழிந்து தூயவனாக உன்னுடன் லயித்துவிட்டேன்,அருணாசலா’ என்கிறார் பகவான் ரமணர்.
அறிவில்லாமல் நான் உன்னைத் தேடி புறப்பட்டுவிட்டேன்.வழிதெரியாமல் நட்டாற்றில் விழுந்து மூழ்கிப் போக உள்ளேன்,அருணாசலா! உன்னருளைத் தந்து காப்பாற்று,அருணாசலா’ .என்று பகவான் கூறுகிறார் என்றும் புரிந்து கொள்ளலாம்.
ஏனென்றால் நான் யார் என்ற விசார மார்க்கம் அவ்வளவு எளிதானதல்ல.அதில் வெற்றி அடைய வேண்டுமென்றால் பரமனின் அருள் வேண்டும்.
நாம் எவ்வளவு குறியாக நான் யார் என்ற விசார மார்க்கத்தில் சஞ்சரித்தாலும் இந்த பிரபஞ்ச வாசனைகள் நம்மை அவ்வளவு எளிதில் விட்டு விடாது. அவைகள் போடுகின்ற ஆரவாரத்தில் நம் சித்தம் கலங்கி குறிக்கோளை மறக்க ஏது உண்டு.

சப்த ஜாலம் மஹாரண்யம்

சித்த ப்ரமண காரணம்”

ஆதி சங்கரர் கூறியது .
நாம் நீண்ட நாட்களாக கேட்டு ஆடிக்கொண்டிருந்த மனக்குறளியை ஒதுக்கிவைத்து விட்டு சுதந்திரமாக உள்ளதை உள்ளபடி பார்ப்போமானால்
‘நான் யார்’ என்ற கேள்விக்கு விடை கிடைக்கும்.’நான் யார்’ என்பது கேள்வியே அல்ல; அது தத்துவங்களின் முடிவு என்கிறார் பகவான்.ஆகவே தான் ‘நான் யார்’ க்குப் பின் கேள்விக்குறியே பகவான் போடவில்லை.
 நமது மனம் எண்ணங்கள் எனும் குப்பை கூளங்களால் மூடப்பட்டுள்ளது.அவைகளை நீக்கிவிட்டுப் பார்த்தால் நம் சுயரூபம் தெரியும்.ஆத்ம சாக்ஷாத்காரம் உண்டாகும்.ஆனால் அது அவ்வளவு எளிதானதல்ல.ஆகவே தான் பகவான் அருணாசலனின் அருளை வேண்டுகிறார்.
இதையே தான் திருஅருட்பாவில் அருணகிரி நாதரும் கூறுகிறார்
அருணகிரினாதர் பாடுகிறார்:

            தரைதலத் தெனை நீ எழுமையும் பிரியாத்

            தம்பிரான் அல்லையோ மனத்தைக்

            கரைத்துளே புகுந்தென் உயிரினுட் கலந்த

            கடவுள் நீ அல்லையோ எனைத்தான்

            இரைத்திவ் ணளித்தோர் சிற்சபை விளங்கும்

            எந்தை நீ அல்லையோ நின்பால்

            உரைத்தலென் ஒழுக்கம் ஆதலால் உரைத்தேன்

            நீஅறி யாததொன் றுண்டோ


“ நீ ஒருகணமும் என்னைப் பிரியாமல் என் மனத்தை இல்லாமல் பண்ணி என் உயிருடன் கல்ந்தே இருக்கும் பரமனல்லவா நீ? உன்னிடம் சொல்வது என் கடைமை.ஆகவே உரைத்தேன்”
ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே தான் என்ற அத்வைத சித்தாந்த்தை எப்படி தெள்ளத் தெளிவாக அவர் எடுத்துரைக்கிறார் பார்த்தீர்களா?
மேலும் அவர் கூறுகிறார்:

எள்ளலாம் பயத்தால் துயரினால் அடைந்த

            இளைப்பெல்லாம் இங்குநான் ஆற்றிக்

            கொள்ளவே அடுத்தேன் மாயையா திகள்என்

                  கூடவே அடுத்ததென் அந்தோ

            வள்ளலே என் வாழ் முதற் பொருளே

                  மன்னவா நின்னலால் அறியேன்

            உள்ளல்வே றிலைஎன் உடல் பொருள்ஆவி

                  உன்னதே என்னதன் றெந்தாய்


‘ நான் பட்ட துன்பங்களையெல்லாம் துடைத்தெறிந்து விட்டு நீயே அடைக்கலம் ---மாயையினால் நான் பட்ட அவதிகளையெல்லாம் சொல்லி மன ஆறுதல் அடையலாம் என்று தான் உன்னை நாடி வந்துள்ளேன்.என் உடல் பொருள் ஆவி எல்லாம் நீயல்லவோ”?”  எங்கிறார் அருணகிரி நாதர். நீ வேறு நான் வேறல்ல என்ற உத்தம தத்துவத்தை தெள்ளத் தெளிவாக கூறுகிறார்.
நாம் பழைய நினைவுகளை வெடிந்து வருங்காலத்தைக் குறீத்து கவலை கொள்ளாமல் நிகழ் காலத்தில் வாழ்ந்தால் மனம் கட்டுக்குள் வரும்.
இதை கௌதம புத்தர் அழகாக கூறுவார்:”  நீ ஒரே ஆற்றில் இருமுறை குளிக்க முடியாது”.
ஆகவே அடுத்து வரும் வெள்ளம் என்னை கொண்டு போய்விடுமோ நதி நீர் எவ்வளவு அழுக்காக இருக்கிறது என்றெல்லாம் கவலைப் பட ஏது இல்லை.
பகவான் கூறுவார்,” நேரம்,காலம் என்பது கற்பனையே.---நிகழ் காலத்தைப் பொறுத்தேசென்ற காலம் ,வருங்காலம் என்ற இரண்டும் தோன்றும். இரண்டும் அவை நிகழும்போது அவையும் நிகழ்காலமாகவே தோன்றும்.----நம்மிடமுள்ள குறை என்னவென்றால் கடந்த காலத்தில் நாம் எவ்வாறு இருந்தோம்,எதிர் காலத்தில் எப்படி இருப்போம் என்ற் தெரிந்துகொள்ள முற்படுகிறோம்.----நிகழ் காலத்தின் உண்மை இயற்கையை-நிரந்தர,சாஸ்வத,இருப்பு நிலையை தெரிந்து கொள்ள முயற்சி செய்வதற்கென்ன?”
இதே கருத்தை கபீர்தாசும் சொல்வார்.நம் மனதில் பரமனை நினைத்துவிட்டால் வேறு எதற்கும் இடமில்லை. நம் மனம் ஒரு குறுகிய ஒற்றயடிப் பாதை.அதில் ஒருவர் தான் சஞ்சரிக்கமுடியும். “நான்” இருந்தால் பரமன் இல்லை;பரமன் வந்து விட்டால் நான் இல்லாமலாகி விடுவேன்:”

            ஜப் மை தா,தப்குரு நாஹி

            அப்குரு ஹை ஹம் நாஹி

            ப்ரேம் கலி அதி ஸாங்கடி

            தா மே தோ ந ஸமாயே


 நாம் ஆன்மீக சாதனையில் இடுபடும்போது பல் தடைகள் வரும்.இந்த தடைகள் மூன்று விதமான காரணங்களால் ஏற்படுகிறது;.

1.ஆதி தைவிகம்

நமக்கு புரியாத காரணங்கள். பிராரப்த கர்மங்கள் காரணமாக ஏற்படும் தடைகள்.

2.ஆதி பௌதிகம்

அன்னியரால் பிற ஜீவராசிகளினால் ஏற்படக்கூடியது.

3.ஆதியாத்மிகம்

தானே உண்டுபண்ணிக்கொள்வது.
மூன்றாவது மட்டும் தான் நம் கட்டுக்குள் அடங்கியது .மற்றவை இரண்டும் நம்மை மீறி நடப்பவை.
பதஞ்சலி யோகசூத்திரமும் சாங்கிய காரிகையும் இந்த மூன்று விதமான காரணங்களாலுண்டாகக் கூடிய துன்பங்களை மீண்டும் பல உட்பிரிவுகளாக பிரிக்கின்றன.
பதஞ்சலி முனிவர் கூறுவார்: நான் யார் என்று தெரிந்துகொள்வதற்கான நீண்ட பயணத்தில் இரண்டு அடிப்படை தத்துவங்களை புரிந்து அனுஷ்டிக்க வேண்டும்.அவை முறையே யமம் மற்றும் நியமம் என்றும் சொல்லப்படுகிறது.
யமம் என்பது ஸத்யம்,அஹிம்சை,ஆஸ்தேய( பிறன் பொருளுக்கு ஆசைப்படாமை), பிரம்மசரியம் ,அபரிக்ரஹா ( அன்பளிப்புக்களை நிரசித்தல்)
நியமம் என்பது ஷௌசம் (சுத்தம்-உள் சுத்தம்,புற சுத்தம்),சந்தோஷம் (போதும் என்ற மனப்பாங்கு) தபஸ் ( எளிமை ),ஸ்வாத்யாயம் ( புனித கிரந்தங்கள் படிப்பது ),ஈஸ்வர சரணாகதி.
யம நியமங்களை எவன் ஒருவன் வழுவாமல் கடை பிடிக்கிறானோ அவன் எளிதில் ஆத்ம சாக்ஷாத்காரம் அடைவான்.
யம நியமங்களை கடை பிடிப்பதில் ஏற்படும் சங்கடங்களை பதஞ்சலி கீழ்க்கண்டவாறு தரம் பிரித்துள்ளார்:
1         நோய்:
2         சத்தானம்
3         ஸம்ஸயம்
4         ப்ரமாதம்
5         ஆலஸ்யம்
6         விஷய வாசனைகள்
7         மனமயக்கம்
8         அலப்த பூமித்வம்
9         அனவஸ்தித்வம்
ஸாங்கிய காரிகை நூறு விதமான தடைகளை கூறுகிறது.இவைகளை மூன்ற் கூறுகளாக தரம் பிரிக்கின்றது.
1 விபரியம் ---தவறான ஆறிவு
2அசக்தி-----------பலவீனம்
3.துஷ்டி----------திருப்தி
விபரியம் மேலும் ஐந்து வகை =அறியாமை,அஹங்காரம்,கவர்ச்சி,வெறுப்பு, லோக விஷயங்களில் தீவிர  ஆஸக்தி
அசக்தி  பதினெட்டு விதமான பலவீனங்கள்-முக்கியமாக ஆன்மீக பலவீனங்கள்
துஷ்டி முழுமையான ஆன்மீக அறிவு பெறுவத்ற்கு முன்னமையே திருப்தி படல்
இந்த தடைகளையெல்லாம் மீறி பரமாத்மாவை அடைவதற்கு இடைவிடாத இசுவர தியானம் செய்ய வேண்டும்.அது முடியாவிட்டால் சத்சங்கங்களில் ஈடுபட வேண்டும்

சத்சங்கத்வே நிஸ்சங்கத்வம்

நிஸ்சங்கத்வே நிர்மோஹத்வம்

நிர்மோஹத்வே  நிஷ்ஃஸல தத்துவம்

நிஷ்சல தய்வே ஜீவன் முக்தி

ஆதிசங்கரர்.

எதுவுமே கைகொடுக்க விட்டால் நிபந்தனையற்ற சரணாகதி ஒன்று தான் வழி.எந்த விதமான சந்தேக சம்சயங்களுக்கும் இடம் கொடாத சரணாகதி.
இதைத்தான் பகவாபன் ரமணர் நாம் அறிய முயன்றுகொண்டிருக்கும் சுலோகத்தில் கூறுகிறார்.’நான் என் சக்தியின் மீது நம்பிக்கை வைத்து உன்னை தேடினேன்.எல்லாம் இழந்து இன்று திக்கு திசை தெரியாமல் நிற்கிறேன்.நீ எனக்கு வழி காட்டருணாசலா ‘ என்கிறார்

No comments:

Post a Comment