ரமணஜோதி 59
துப்பறிவு எனும் விவேகம்
துப்பறி வில்லா விப்பிறப் பென்பய
நொப்பிட வாயே னஅருணாசலா
‘விசார மார்க்கத்தில் சென்று எது மித்யை எது சத்யம் என்று அறியமுடியாவிட்டால் இது என்ன வாழ்க்கை,அருணாசல? ‘
என்று கேட்கிறார் பகவான் ரமணர் இந்த சுலோகத்தில்/
“என்னால் என்னை அழித்து உன்னை அறிய முடியவில்லையே,அருணாசலா. அப்புறம் இது என்ன வாழ்க்கை? என்னை அழித்தாலல்லவா உன்னை சரணாகதியடைந்தவனாவேன்.அப்படித்தானே நான் ஆத்ம சாக்ஷாத்காரம் அடையமுடியும்’.
பிறவிகளிலையே மனிதப் பிறவி தான் மேலானது என்று சுருதி(sruthi) சொல்கிறது.
ஆதி சங்கரர் விவேக சூடாமணியில் கூறுகிறார்: “.
துர்லபம் த்ரயமேவைதத் தைவானுக்ரஹ ஹேதுகம் !
மனுஷ்யத்வம் முமுக்ஷத்வம் மஹாபுருஷஸம்ஸ்ரய: !!
பிரம்ம தத்துவத்தை புரிந்துகொள்வதற்கு மூன்று அவசிய தகுதிகள் என்ன என்பதை ஆதிசங்கரர் விவேக சூடாமணி மூன்றாம் சுலோகத்தில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
முதலாவதாக மனிதப்பிறவிகள் மட்டும் தான் பிரம்ம தத்துவத்தை புரிந்து கொள்ள முடியும்
இரண்டாவதாக அதை புரிந்துகொள்ளவேண்டும் என்ற ஜிக்ஞாசை ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் தான் அதைப் புரிந்துகொள்ள முடியும்.
இந்த இரண்டு தகுதிகளும் இருந்தாலும் மூன்றாவதாக ஜீவன்முக்தனான ஒரு ஞானியின் துணை வேண்டும்.
பகவான் தனக்கு முதல் இரண்டு தகுதிகளும் உள்ளது. அருணாசலனையே தனது குருவாக வரித்துக் கொண்டு விட்டவர் பகவான்.. கவானது வழிகாட்டி அருணாசலனேதான்.. ஆகவே தான் அருணாசலனிடம் மேற்கண்டவாறு முறையிடுகிறார்.
‘துப்பறிவில்லாத’ என்ற வார்த்தை மிகவும் முக்கியமானது. துப்பறிவது என்றால் ஒன்றிலிருந்து மற்றொன்றை பிரித்துப் பார்ப்பது.தூய்மையான அறிவு என்று அர்த்தம் கொள்ளலாம். பொய்மையின் கலப்படமில்லாத அறிவு.
ஜிவாத்மாவை பரமாத்மாவிலிருந்து வேறுபடுத்தி பார்ப்பதா? இருக்க முடியாது. பகவான் தன் வாழ் நாள் முழுவதும் கூறிவந்த ஒரே சித்தாந்தம் ஜிவாத்மாவும் பரமாத்மாவும் வேறல்ல. ஒன்றன்றி வேறில்லை என்பதேயாகும். இதை புரிந்துகொள்வதைத்தான்
பகவான் இந்த சுலோகத்தில் கூறிப்பிட்டிருக்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம்
ஜாக்ரத்திலும் சொப்னாவஸ்தையிலும் நாம் காணும் இந்த லோகம் முழுவதும் மித்யை பிரம்மம் மட்டும் தான் சத்யம் என்பதை உணர்வது
பகவான் கூறியுள்ள துப்பறிவாக இருக்கலாம்.
ஆதி சங்கரர் கூறியிருக்கிறார், ‘பிரம்மம் ஸத்யம்,ஜகன் மித்யா, ஜீவோ ப்ரம்மைவனபர:’ என்று.
எது அக்ஷரம்,எது க்ஷயிக்கக் கூடியது என்பதை பகுத்தறியும் ஞானத்தை பகவான் குறிப்பிட்டிருக்கலாம்
இல்லை பகவத் கீதயில் கூறியுள்ள யஞசங்கலப சஹிதமான கர்மம் எது, ,யக்ஞத்திலிருந்து வழுதிவிட்ட கர்மம் எது என்கின்ற பாகுபாடாக இருக்கலாம்
விஷய வாசனைகளிருந்து உண்டாகின்ற சிற்றின்பம் மேலானதா,பிரம்மத்தை அறியும் பொழுது ஏற்படுகின்ற பேரின்பம் மேலானதா என்று பகுத்தறியும் ஞானத்தைக் குறிப்பிட்டிருக்கலாம்.
விவேக சூடாமணியில் ஆதிசங்கரர் கூறுகிறார்,” பிரம்மனை அல்லது ஆத்மாவை படிப்பினாலோ, உலகளவில் பாண்டித்யம்
அடைவதாலோ,க்ஷேத்திராடங்களாலோ,யாகங்கள் செய்வதாலோ சம்பத்தாலோ காணமுடியாது.” பிறகு எப்படி காண முடியும்? காண முடியாது.அனுபவிக்கத்தான் முடியும்.ஆத்மா பரமாத்மா ஐக்கியத்தால் அனுபவிக்க முடியும்.
படந்து சாஸ்த்ராணி யஜந்து தேவான் குர்வந்து கர்மாணி பஜந்து தேவதா:!
ஆத்மைக்யபோதேன வினா விமுக்தி:! ந ஸித்தத்யதி ப்ரம்மசதாந்தரோபி!!
‘சம்யக் தரிசனம்” ஒரு குருவின் வழிகாட்டலின்படி விசார மார்க்கத்தில் போனால்த்தான் நாம் அந்த அனுபூதியை அடைய முடியும். நான் யார் என்று விசாரித்து நானும் மற்றவர்களும் வேறல்ல;எல்லோரும் ப்ரம்மத்தின் பரிச்சின்னங்களே;எல்லோரும் ப்ரம்மமே என்றறியும் பொழுது,ஒருவரும் நமக்கு நணபனுமல்ல,எதிரியுமல்ல,சகாவுமல்ல,போட்டியாளனுமல்ல என்று புரியும்.அப்படி புரியும் பொழுது நாம் இதுவரை அனுபவித்து வந்த சுகம் துக்கம் இன்பம் ,துன்பம் எல்லாம் பொருளற்றது என்று உணருவோம்.
சம்ஸார சாகரத்திலிருந்து கரையேற வேண்டுமென்றால் மனம் பண்பட வேண்டும்.பண்படுதல் என்றால் பகுத்தறியும் திறைமை உண்டாக வேண்டும்.
ஸ்தூல சரீர சம்பந்தமான எல்லா பிடிப்பும் விட்டுப் போகவேண்டும்..
இந்த சம்சார சாகரம் என்றால் என்ன? நான் என்பது இந்த உடல் என்ற எண்ணம் நம் மனதில் வேரூன்றியிருக்கிறது. ஆகவே உடலை பெற்றெடுத்த தாய்-தந்தையர் என் தாய்-தந்தையர் ஆகின்றனர்;இந்த உடல் எந்த தாயின் வயிற்றிலிருந்து வந்ததோ அந்த கர்ப்ப பாத்திரத்திலிருந்த வந்த எல்லோரும் என் சஹோதர-சஹோதரிகள் ஆகின்றனர்.
என்னை இந்த ஜன்மத்தில் கைபிடித்த பெண்மணி என் மனைவியாகிறாள்.எனக்கும் அவளுக்கும் இந்த ஜன்மத்தில் பிறக்கும் குழந்தைகள் எங்கள் குழந்தைகள் ஆகின்றனர். இபபடி ஒரு சொந்த பநத வலயத்தை நாமே நம்மைச் சுற்றி சிருஷ்டித்துக் கொள்கிறோம்..அப்படி ஏற்பட்ட சொந்த பந்தங்களுக்காக பல வித மான ஸ்தாவர ஜங்கம வஸ்துக்களை சேகரிக்க முயலுகிறோம்.நாம் நினைத்தது நடக்கும் பொழுது சந்தோஷமும் நடக்காத பொழுது துன்பமும் அடைகிறோம். ஒரு சமுத்திர சுழற்ச்சியில் அகப்பட்டது போல் தத்தளிக்கிறோம். நம் கனவில் எற்படுகின்ற இன்ப துன்ப அனுபவங்கள் நாம் விழித்துக் கொண்டதும் பொய்யானவை என்று உண்ணருகிறோம்.அதே போல் இந்த சம்சார வாழ்க்கையில் நமக்கு கிடைக்கின்ற சுகானுபவங்களும்,துன்பங்களும் பொய்யானது தான் ஆனல் அதை உணருவதற்கு நாம் விழித்தெழ வேண்டும்.அது எப்போது? எப்படி? என்பது தான் கேள்வி.
இதைத்தான்
கர்த்ருத்வ போக்த்ருத்வ லக்ஷண: சம்சார: !
என்கிறார்கள்.
ஒரு பட்டுப்புழு
எப்படி தன்னை சுற்றி கூடு அமைத்துக்கொள்கிறதோ அது போல் நாம் நம்மை சுற்றி ஒரு
வலையை பின்னி க்கொண்டுள்ளோம்.
பரமாத்மா
ஜீவராசிகளை படைக்கும் பொழுது எந்த விதமான சொந்த பந்தங்களை சிருஷ்டிப்பதில்லை.நாம்
உடலெடுத்தபின் நம் மனம் இந்த ப்ரபஞ்சத்தை சிருஷ்டிக்கிறது. .இது ஜீவசிருஷ்டி
என்சொல்லப் படுகிறது.
ஜீவாத்மாவ்ல் சிருஷ்டிக்கப்பட
சொந்தபந்தங்கள்தான் நம் இன்ப துன்பங்களுக்கெல்லாம் கார்ணம்.அதிலிருந்து விடுபடுவது
எப்படி? அதற்கான ‘துப்பறிவை’ பெறுவது எப்படி?
நம் கவனத்தை இந்த
சம்சார பந்தங்களிலிருந்து விலக்கிக்கொண்டு அந்த பரமனை மட்டும் நினைக்க முடிந்தால்
நல்லது.நாம் விரைவில் பரமாத்மாவை அடையாளம் கண்டுகொள்வோம்.நமக்கு விடுதலை
கிடைக்கும்.ஆனால் அது அவ்வளவு எளிதல்ல.
நல்லதோர் ஆசான்
வேண்டும், ப்ரம்ம ஞானியாகவுள்ள ஜீவன் முக்தன் தான் குருவாக முடியும். குருவே
பந்தங்களில் கட்டுண்டிருந்தால் அவரால் எப்படி மற்றவர்களுக்கு வழி காட்டமுடியும்?
நல்ல்தோர் குரு
கிடைத்தால் மட்டும் போதாது;சீடனும் அவருடைய உபதேசங்களை ஏற்றுக்கொள்வதற்கு
தகுதியானவனாக இருக்க வேண்டும்.
இதைத்தான் விவேக
சூடமணி பதினாறாம் சுகோகத்தில் ஆதி சங்கரர்
சொல்கிறார்:
மேதாவி புருஷோ
வித்வானூஹோபோஹவிசிக்ஷண:!
அதிகார்யாத்மவித்யாமுக்தலக்ஷணலக்ஷித:!
நம்மளவில் என்ன செய்ய்ய வேண்டும்?!
மீண்டும்
கீதையின் துணையை நாட வேண்டியுள்ளது. பகவத் கீதை இரண்டாம் அத்தியாயம் 61-62 சுலோகங்களில் கிருஷ்ணர் கூறுகிறார்:
த்யாதோ
விஷயான்பும்ஸ: ஸங்கஸ்தேஷூபஜாயதே !
ஸங்காத் ஸஞ்சாயதே
காம: காமாத்க்ரோதோபிஜாயதே!!
க்ரோதாத்பவதி ஸம்மோஹ: ஸம்மோஹாத்ஸ்ம்ருதி விப்ரம:!
ஸ்ம்ருதிப்ரம்சாத்புத்தினாச: புத்தினாசாத்ப்ரணஸ்யதி !!
விஷய வாசனைகளால்
பந்த பாசங்கள்-பற்றுதல் உண்டாகிறது. பற்று காலப்போக்கில் ஆசையாக பரிணமிக்கிறது.
காமம் பூர்த்தியாகாத பொழுது அது க்ரோதமாக உருவெடுக்கிறது.க்ரோதவசப்படும் பொழுது
மனிதனுக்கு சமனிலை பிறழ்கிறது. சமனிலை பிறழும்பொழுது புத்தி சரியாக வேலை செய்யாது.
அது சர்வ நாசத்திற்கு வழி வைக்கும்.
இதற்கு சரியான உதாரணம் மஹாபாரதம் தான்.
முன் மடல்களில் திருதராஷ்டிரரும் பீஷ்மரும் .. ராஜ்ஜியத்தை துரியோதனாதிகளுக்கும்
பாண்டவர்களுக்கும் பங்கு போட்டுக் கொடுத்த சம்பவத்தையும் அதற்குப்பின்
யுதிஷ்டிரர், ராஜசூய யாகம் நடத்தியதையும் கண்டோம். இந்திர ப்ரஸ்தத்தை
உருவாக்குவதற்கு யுதிஷ்டிரர் யாருடைய உதவிய நாடினான் தெரியுமா? அசுரர்களில் தலை
சிறந்த கட்டிட கலைஞனான மயனின் உதவியை.அந்த அசுரகுல வித்தகன் மயன் கட்டிய பளிங்கு
மாளிகை துரியோதனாதிகளின் மனதில் உளவாக்கிய பொறாமை சொல்லி மாளாது. அந்த பொறாமை
பாஞ்சாலியின் ஏளனச் சிரிப்பால் குரோதமாக உருவெடுத்தது. குரோதத்திலிருந்து உருவானது
பாணடவர்களை விருந்துக்கு அழைத்து தருமனின் சூதாட்ட சபலத்தை தூண்டிவிட்டு அவனை
அவமானத்திற்கு உள்ளக்க வேண்டும் என்ற சதி திட்டம்.
அந்த சதி வலையில் யுதிஷ்டிரர் எளிதாக விழுந்தான் தருமன்
என்ற பெயர்கொண்ட பாண்டவன்.
அவனது ஆசை கொழுந்து விட்டு எரிய ஒன்றொன்றாக பணயம் வைத்து
தோற்கிறான்..தருமத்தை மறக்கிறான்.புத்தி நாசம் உண்டாகி சகோதர்களையும் தன்னையுமே
அடமானம் வைக்கிறான் தருமவானான அரசன்
அன்று பாண்டவர்கள் அடைந்த அவமானம்-யுதிஷ்டிரனின்
காமக்ரோதத்தால் ஏற்பட்ட புத்தி நாசத்தால் ஏற்பட்டது. அது மஹாபாரத யுத்தமும் அதனால்
விளைந்த சர்வ நாசமும் –கணவனை இழந்த பெண்டிரும்,தந்தையை இழந்த மக்களும்,புதல்வர்களை
இழந்த தாய்மாரும்-மஹாபாரதத்தின் முடிவு.
எதையும் பணயம் வைக்கின்ற நாட்டின் நலத்தை விட தன்
காமனைகளுக்கு முக்கியத்துவம் அளிகின்ற கலாச்சாரம்9 கலாச்சார சீரழிவு) மஹாபாரத
காலத்திலிருந்து இன்று வரை நம் ஆட்சியாளர்களிடம் தொடருகிறது.அன்றைய இந்திரப்ரஸ்தம்
இன்றைய தில்லியில் யுதிஷ்டிரனின் ஆவி இன்னும் சுற்றிக்கொண்டிருக்கிறது போலும்.
ஆட்சியாளர்கள்,எந்த நிறத்தவராக இருந்தாலும் எந்த கட்சியினராக இருந்தாலும் அந்த
ஆவியிமன் தாக்கத்திலிருந்து விடுபட முடியவில்லை போலும்.
இப்படிப்பட்ட விஷய வாசனைகள் நம்மை பந்தனத்திற்குள்ளாக்கிறது.
அந்த பந்தனத்திலிருந்து விடுபடுவதற்கான வழி தெரியாமல் அந்த அருணாசலனை
சரணாகதியடைவது ஒன்றே .தீர்வு என்று கூறுகிறார் பகவான் ரமணர்.
நீயும்
கைவிட்டுவிட்டால் என்கதி என்னவாகிறது என்று கேட்கிறார் பகவான்,
. துப்பறி வில்லா
விப்பிறப் பென்பய
நொப்பிட வாயேனருணாசலா
!
No comments:
Post a Comment