Wednesday, 14 January 2015

ரமணஜோதி 54

ரமணஜோதி 54

என்னுள்ளே நீ

தீரமி லகத்திற் றேடியுந் தனையான்
          றிரும்பவுற் றேனரு ளருணாசலா      
“எல்லையில்லாத உன்னிருப்பிடத்தை, நீ காட்டிய வழியில் சென்று கண்டுவிட்டேன் அருணாசலா. நீ என்னுள்ளே தான் இருக்கிறாய் என்று தெரியாமல் வெளியே எல்லாம் தேடி விட்டு கடைசியாக உன்னிடம் திரும்பி வந்துள்ளேன் அருணாசலா” என்று பகவான் கூறுகிறார்.
‘ தீரமில்’ என்ற பதத்தின் மூலம் பகவான் பரமாத்மா சர்வ வியாபி,எங்கும் நிறைந்திருப்பவன்,ஆதியும் அந்தமும் இல்லாதவன் என்பதை குறிப்பிடுiகிறார். இதயம் என்பது நமது பூதவுடலிலுள்ள இதயத்தை குறிக்கவில்லை. அது சூக்ஷ்மமான ‘நான்’ என்ற இதயதை குறிக்கிறது, யோக வாசிஷ்டத்தில் ஸ்ரீ ராமனின் ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில் வசிஷ்டர் கூறுவார்,நமக்கு இரு இருதயம் உள்ளது;ஒன்று பூதவுடல் இதயம்;இன்னொன்று ஆன்மாவின் இருப்பிடம்,அல்லது அது ஆன்மாவே;”
அது உள்ளிலும் இருக்கலாம்,வெளியிலும் இருக்கலாம்.அதற்கு பிறப்பும் இல்லை,இறப்பும் இல்லை.அது சுத்த சைதன்யம். அது ஆன்மாவின் மறு;. பெயர் என்று கூறலாம்

பகவான் ரமணர் உள்ளது நாற்பதில் ஏழாம் சுலோகத்தில் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்:
          உலகறிவு மொன்றா யுதித் தொடுங்கு மேனு
     முலகறிவு தன்னா லொளிரு –முலகறிவு
தோன்றிமற் தற்கிடனாய்த் தோன்றிமறை யாதொளிரும் பூன்றமா மதே பொருளாமா—லேன்றதாம்.
அந்தர்யாமியாகவிருக்கும் அந்த பரமாத்மா சர்வஞனாகவும் இருக்கிறான்.அவன் ‘தன்னாலொளிரும் சுயம் பிரகசிக்க கூடியவனாகவும் இருக்கிறான். அவனே உலக அறிவு. உலகம் என்று ஒன்று உள்ளது. என்ற அறிவு   நான் என்ற எண்ணம்  தோன்றும் போதே உல்கம் உண்டாகின்றது நான் மறையும் போது உலகமும் மறைகிறது
இந்த நானை தேடிக்கண்டு பிடிப்பதற்கு விவேகமும் வைராக்யமும் வேண்டும்..’
நான் யார் என்று விசாரித்து அறிவதே  அந்த நானை அழிப்பதற்கான் வழி. நான் எனும் அஹங்காரம் அழிந்து விட்டால்  நான் .,நீ அது இது என்ற பாவ பேதமே இராது.இது தான் ஆன்மாவின் இயல்பு நிலை.அஹங்காரம் சிறிது சிறிதாக் தேய்ந்து முழுவதுமாக பரமாத்மாவில் அடைக்கலமாகி விட்டால் நான் இயல்பு நிலைக்கு திரும்பி விடுகிறது.உடல்-உலக தோற்றங்களும்,எண்ண எழுச்சிகளும் தேய்ந்து மறைந்து விடும்.
இதை மாணிக்க வாசகர் அழகாக கூறுகிறார்:
          இன்றெமக்கு அருளி, இருள் கடிந்து உள்ளத்தே
          எழுகின்ற ஞாயிறே போன்று
          நின்ற நின் தன்மை நினைப்பற நினைன்தே
          நீயலால் பிறிது மற்றொன்று இல்லை
          சென்று சென்று அணுவாய் தேய்ந்து தேய்ந்து ஒன்றாம்
     திருப்பெருந்துறை சிவனே!
          ஒன்று நீ, பிறிது மற்றொன்றில்லை
          யாருன்னை அறியகிற்பாரே!
ஆதி சங்கரர் இந்த நிலையை அடைவதற்கு இரு மார்க்கமுண்டு என்கிறார்; ஒன்று பிரவர்த்தி மார்க்கம்,;இன்னொன்று நிவர்த்தி மார்க்கம்
ப்ரவர்த்தி என்பது வெளியுலக விஷயங்களால் ஆகர்ஷிக்கப்பட்டு இந்திதிரியார்த்தமான செயல்களில் ஈடுபடுவது.
நிவ்ரித்தி பரமனை மையமாககொண்டு செயலாற்றுவதாகும்.
ப்ரவர்த்தி மார்க்கத்தில் சஞ்சரிப்பவர்களெல்லாம் தவறிழைப்பவர்கள் என்று இதற்க்கு பொருளில்லை சம்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டே ஆனால் அது தான் வாழ்வின் இலட்சியம் என்று மயக்கத்தில் மூழ்காமல் இருக்க வேண்டும்.அப்படியிருந்தவர்களும் உண்டு;இருப்பவர்களும் உண்டு.
அப்படியிருப்பவர்களை இந்த உலகத்தில் சிலர்,” அதற்கென்ன?சுத்த ஜடமாயிற்றே!”  என்று கேலி பேசுவதும் உண்டு.
நமது வேதங்களிலும் ஸ்ருதி-ஸ்ம்ரிதிகளிலும் புருஷார்த்தம் என்றால் ‘தர்மம், அர்த்தம்,காமம்,மோக்ஷம்’என்று நான்கு வகைப் பட்டது என்று கூறப்பட்டுள்ள்து
அர்த்தம் என்பது உலகாயதமான தேவைகளை பூர்த்தி செய்வதற்கான பொருள்கள் என்று புரிந்துகொள்ளவேண்டும்.. இந்த உலகத்தில் பிறந்து விட்டால் உயிர் வாழ்வதற்கு உணவும்,சமூகத்தில் வாழ்வதற்கு உடையும், மழை,வெயில் போன்ற பருவ தாக்குதல்களிலிருந்து பாதுகாத்து கொள்வதற்கு இருப்பிடமும் தேவைப் படுகிறது. மனோ-உடல் ரீதியான சில தேவைகளுக்காக சம்சாரத்தில் ஈடுப்பட்டவர்கள் மனைவி மக்களை தேடிக்கொள்கிறார்கள்.
மோக்ஷம் இந்த வாசனைகளிருந்து விடுபட்டு பரமாத்மவுடன் லயித்து ஆத்மாசாக்ஷாத்காரம் அடைவதற்கான முயற்சியாகும்
அர்த்த-காமத்திலும் சரி, மோக்ஷ காமனயிலும் சரி தர்மம் பொதுவான ஒரு அம்சமாக இருக்க வேண்டும்.
காஷாய வஸ்திரம் தரித்துக்கொள்வதும்,தலயை முண்டனம் செய்வதும் மட்டும் மோக்ஷத்திற்கான வழியாகாது. ‘நான்” என்ற உணர்வும் (அஹங்காரமும்),எனது என்ற மமாகாரமும் ஒழியாத வரை சன்யாசியும் நிவ்ருத்தி மார்க்கத்திற்கு போய்விட்டார் என்று கூற முடியாது. காவி வேஷத்திலுள்ள சம்சாரியே ஆவார்கள்.
மோக்ஷம் கிடைக்க வேண்டுமென்றால் ‘நான்’ யார் என்று உணர வேண்டும்;ஆத்ம ஞானம் வர வேண்டும்.
அதற்கு ‘விவேகமும்’ வைராக்யமும் வேண்டும். விவேகம் என்றால் நித்தியம் எது அனித்தியம் எது என்று பகுத்தறியும் ஞானம்
வைராக்யம் என்பது ஐம்புலங்களின் சேஷ்டைகளிலிருந்து விடுபடுவதற்கான மன் உறுதி.
.ஒரு முறை பகவான் ரமணர் பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தார். ஒரு பக்தர் ஒரு தார் வாழைபழம் கொண்டு வந்து பய பக்தியோடு வைத்தார்.அப்பொழுது ஒரு குரங்கு அந்த தாறிலிருந்து ஒரு வாழைப் பழத்தை பறிப்பதற்காக முயன்றது.பகவானின் பக்தர்களில் ஒருவர் ஒரு தடியை எடுத்துக் கொண்டு ஒடி வந்து குரங்கை விரட்ட முயன்றார்.இதைப் பார்த்த பகவான் கூறினார்: “ அவளை விரட்டாதீர்கள்.அவளுக்கு என்ன பசியோ! அவளுக்கு வேண்டியதை எடுத்துக் கொள்ளட்டும்”.
பிறகு அந்த குரங்கிடம் திரும்பி,” வா அம்மாம்,வா; ஓ! பிள்ளை குட்டிக்காரியா? (அந்த குரங்கின் பிடியில் ஒரு குழந்த குரங்கு இருந்தது )அதுதான் இவ்வள்வு வேகமாக பழத்தை எடுக்க வருகிறாயா? உனக்கு வேண்டியதை எடுத்துக்கொள் அம்மா”.என்றார்
பகவான் எப்பொழுதும் பறவைகளானாலும் மிருகங்களானாலும் அது இது எனறு சொல்லமாட்டார்,அவன்-இவள் என்றெல்லாம்தான் கூறுவார்.
அந்த குரங்கு மெல்ல மெல்ல அங்குமிங்கும் பார்த்துக் கொண்டு வந்து அந்த வாழைக்குலையிலிருந்து ஒரேயொரு பழத்தை எடுத்துக்கொண்டு ஒடிப் போயிற்று.
அப்பொழுது பகவான் சொல்லலானார்:
“பார்த்தீர்களா ஐயா அவளை! ஒரே ஒரு பழத்தை எடுத்துக்கொண்டு போகிறாள்.அவளுக்கு இன்றைய தேவை அவ்வளவு தான்.
நாமெல்லாம் சன்னியாசிகள் என்று கூறிக்கொள்கிறோம்.ஆனால் நாமோ கிடைப்பதெயெல்லாம் எடுத்துக்கொண்டு போய் உக்கிராண அறையில் பூட்டி வைக்கிறோம். நாமா சன்னியாசிகள்? அந்த குரங்கல்லவா நிஜமான சன்னியாசி?”
எப்படி அழகாக கர்ம சன்னியாசியின் இலக்கணத்தை பகவான் சுட்டிக் காட்டுகிறார்.
பகவத் கீதையில் கர்ம சன்னியாசத்தைக் குறித்து கூறப்பட்டுள்ளதை சற்றே பார்ப்போமா.?
பகவத் கீதையில் கர்ம யோகம்,கர்ம சன்னியாச யோகம், மற்றும் சன்னியாச யோகம் என்ற் மூன்று அத்தியாயங்கள் உள்ளது. அந்த அத்தியாயங்களின் சாரத்தை அடுத்த மடல்களில் பார்ப்போம்.
      

 

No comments:

Post a Comment