Tuesday, 20 January 2015

ரமணஜோதி 57

ரமணஜோதி 57

கீதையில் யக்ஞ சங்கல்பம் 2

பகவத் கீதையின் பின்புலத்தைக் குறித்து கடந்த அஞ்சலில் விவரமாக பார்த்தோம்
இன்னொரு விஷயத்தை தெளிவு படுத்திக் கொண்டு மேலே செல்லலாம்.
கீதைக்கு ஒரு அடிப்படை தத்துவம் உண்டு.அது முப்பரிமாணமான ஒரு சித்தாந்தம்.
கீதை மூன்று காலங்களையும் உள்ளடக்கியதாக உள்ளது-கடந்த காலம், நிகழ் காலம்,  வருங்காலம் என்று மூன்று காலங்களுக்கும் பொருந்தக்கூடிய அறிவுரைகளை உள்ளட.க்கியதாக அமைந்திருக்கிறது.
தனி மனிதன் என்ற அளவில் பார்த்தால் ஜக்ரத், சொப்ன, சுஷுப்தி என்ற மூன்று நிலைகளையும் உட்க்கொண்டதாக உள்ளது. இந்த மூன்று நிலைகளிலும் தனிமனிதன் ஒரேவிதமான எண்ண ஒட்டத்துடன் இல்லையென்றால் அவனுக்கு நிம்மதி கிடைக்காது.
மனிதன் தோன்றிய காலத்திலிருந்து தன்னுடைய சுக பிராப்திக்காக செயலாற்றி வருகிறான்.அவன் அப்படி செயல் படும்பொழுது அவனைச் சுற்றியுள்ள இயற்கை எப்படி பாதிக்க படுகிறது என்பதை அவன் கவனிக்க வேண்டும். அவனது சங்கல்பங்களும் சமஷ்டி அதாவது சமூஹ சங்கல்பங்களும் ஒத்துப் போகவேண்டும்.ஸ்மஷ்டி-சமூகம் என்பது மனித சமூகத்தை மட்டும் குறிப்பிடுவதல்ல்.இந்த ஜகத்திலுள்ள சகல சராசரங்களையும் குறிக்கும்.
ஆனால் மனிதன் அப்படி நடந்து கொள்வதில்லை.தனக்கு எது சாதகமக இருக்கிறதோ அதையெல்லாம் செய்கிறான்;அதை முன்னேற்றம் என்றும் கூறிக்கொள்கிறான்.இது காலங்காலமாக தொடருகிறது. நாயும்,பூனையும் கோழியும் யானையும் எல்லாம் மனிதனின் சக பிராணிகள் என்ற இயற்கை நியதியை மறந்து அவன் செயல்பட  முயலும்பொழுது இயற்கையின் சமனிலை பிறழ்கிறது.நம்முடன் ஓடியாடி வளர்ந்து வந்த ,நாம் சப்பிட்டு மிச்சமிருக்கின்ற உணவை உண்டு வளர்ந்து வந்த  நாய்க்களும்,நம்மை சுற்றியுள்ள் அழுக்கையும்,நமக்கு கேடு வருத்தக் கூடிய விஷக் கிருமிகளை தான் உண்டு தன்னுள்ளேயெ அடக்கி வைத்து நம்மை காப்பாற்றி வந்த பன்றியும்,நாம் சொன்ன வேலைகளை செய்து,நம்மை தன் மேலே ஏற்றிக்கொண்டு அலங்காரமாக ஊர்வலம் வந்த,நம் பின்னால் நம் தாசனை போல் வந்துகோண்டிருந்த யானைகளையும் மனிதன் தன் சுய நலத்திற்காக என்று கொடுமைப் படுத்த ஆரம்பித்தானோ,அவையின் இருப்பிடங்களை தன் சுகபோகங்களுக்காக அழிக்க ஆரம்பித்தானோ இயற்கையை அழிக்க ஆரம்பிதானோ அன்று இயற்கையின் சமழ்டி தத்துவம் பிறழ ஆரம்பித்தது.நாம் எங்கோ ஒரு நாயயை யானையை கொடுமைப்படுத்தும்பொழுது நமது செயலிலுள்ள குரூரம் அனத வர்க்கத்தில் உயிர்கொள்ள்கின்ற பிற்கால சந்ததிகளில் பதின்மடங்காக பிரதிபலிக்கின்றது.அதனால்த்தான் நாம் இன்று கேள்விப்படுகின்ற நாய் குழந்தையை கடித்து குதறியது,யானை யானைப்பாகனை மிதித்துக் கொன்றது போன்ற செய்திகள் உதயமாகிறது.
நம்மிடமில்லாத பொருளை அடுத்தவர்களிடம்,-சொந்த நாட்டனோ பிற நாட்டானோ யாரிடமிருந்தாலும் கேட்டு வாங்குவது, கேட்டும் கிடைக்காவிட்டால் விலை கொடுத்து வாங்குவது,அதுவும் முடியாவிட்டால் ஆக்கிரமித்து தட்டி பறிப்பது என்ற கலாச்சாரத்தை –கலாச்சர சீரழிவை இன்றைய மனிதன் உருவாக்கியுள்ளான்.
பகவத் கீதையின் பின்புலமும் ஏறக்குறைய இதையொட்டித்தான் உள்ள்து.
தான் எய்த அம்பு/அஸ்திரம் அவன் குறிவைத்த இலக்கை சென்று அடையும் முன் அதன் வழியிலுள்ள எல்லாவற்றையும் நாசம் செய்து இலக்கைத் தாக்கி விட்டு அனுப்பினவனிடமே வந்து சேருகின்ற ஆயுதங்கள் சம்பந்தமான விஞ்ஞானம் மஹாபாரத காலத்திலேயே. .வளர்ந்திருந்தது..அதைப் பற்றிய முழு விவரங்களும் மஹாபாரதத்திலுள்ளது.
அம்மாதிரியான வளர்ச்சியின் விளைவு தான் கீதையின் விளை நிலமான குருக்ஷேத்திர போர்க்களம். சுகத்தையும் சந்தோஷத்தையும் கொடுக்க வேண்டிய வளர்ச்சி நாசத்திற்கு வழிகோலுவது மஹபாரத காலத்திலேயே இருந்தது.
மஹாபாரத யுத்தம் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடந்த போர் என்று நாம் சொல்லக் கேட்டுள்ளோம்.ஆனால் மஹாபாரத போரில் ஆளுமை தேடும் அரசவம்சங்களிடையே நடந்த போர் தான்.அந்தப் போரில் எந்த விவசாயியும் வியாபாரியும் பங்குகொள்ளவில்லை.சாதாரண் மக்களின் நன்மைக்காக ஏற்பட்ட போர் அல்ல.ஆட்சியுரிமை தங்களது பிறப்புரிமை என்று கொண்டாடி வந்த குடும்பங்களிடையே நடந்த அதிகாரத்திற்கான போர் அது.
(ஜனனாயகம் எல்லோருக்கும் ஆளுவதற்கான உரிமையை அளித்துள்ளதால்,    நாமெல்லொறும் சேரி பிரிந்து அதிகாரத்திற்கு போரிட்டுக் கொண்டிருக்கிறோம் இன்று.)
இரு கூட்டத்தினிருடைய அதிகார துர்மோஹத்தால் விளைந்த போர் குருக்ஷேத்திரப் போர்..அந்த போர்க்களத்தில் நின்று கொண்டு கீதாச்சாரியன் பார்த்தனுக்கு கூறும் அறிவுரைகள் தான் கீதா சுலோகங்கள்.
கீதையின் முதல் அத்தியாயத்தில் அர்ஜுனனுடைய தர்ம சங்கடத்தையும் அதனால் எழுந்த கேள்விகளையும் நாம் காண்கிறோம்
இரண்டாம் அத்தியாயத்தில் கண்ண்னின் சாங்கிய யோகதைக் குறித்துள்ள் பொதுவான கருத்துகளை காண்கிறோம்.
மூன்றாம் அத்தியாயம் ஒன்பதாவது சுலோகத்திலிருந்து தான் கீதையின் இதய கவாடம் திறக்கப்படுகிறது..கீதையின் இதயம் விஸ்வானர தத்துவத்தை அதிஷ்டிதமாக கொண்டுள்ளது.
அந்த ஒன்பதாவது சுலோகத்தைதான் நாம் போன அஞ்சலின் முதலில் குறித்திருந்தோம்.
இன்னொரு முறை ஞாபகப் படுத்திக்கொள்வோம்:
          யக்ஞார்தாத் கர்மணோ-அன்யத்ர லோகோயம்  கர்மபந்தன:!
          ததர்த்தம் கர்ம கௌந்தேய முக்தஸன்க: சமாசர: !!
யக்ஞத்தை அடிப்படையாக கொள்ளாத கர்மங்கள் நம்மை பந்தனத்திற்குள்ளாக்குகின்றன.
யஜ என்றால் சம்ஸ்கிருதத்தில் கொடுப்பது-தானம் செய்வது என்று பொருள். யஜனம் என்றல் அம்மாதிரியான செயல்கள் என்று பொருள்.
கர்மங்கள் மூன்று வகைப் படும்: பறித்தல்,பங்கிடுதல்,கொடுத்தல் அல்லது படைத்தல்.
சக பிராணிகளின் உணவை,இருப்பிடத்தை,அவைகளுக்கு உரிய பொருள்களை தன் நன்மைக்காக தட்டிப் பறிப்பது, தன்னுடைய உடைமைகளை சக பிராணிகளுடன் பகிர்ந்து அனுபவித்தல் ( என் குழந்தை பருவத்தில் எங்கள் கிராமத்தில் கீரை விதையை வெயிலில் காய வைப்பார்கள்.அப்பொழஉது எங்கள் அம்மா கீரை விதையுடன் கொஞ்சம் அரிசியையும் கலந்து காயப் போடுவார்கள். கேட்டால் உணவைத் தேடி வருகின்ற எறும்புகள் ஏமாந்து போகக்கூடாது ,பார்,;அதற்காகத்தான் அரிசியை கலக்கிறேன்.அவை அரிசியை எடுத்துக் கொண்டு போகும். என்பார்கள்.
இன்னொரு சம்பவம்: எங்கள் வீட்டு கொல்லையில் ஒரு பலா மரம் இருந்தது. அது வரிக்கை பலா. பலாப்பழம் வெட்டும் காலத்தில் எங்கள் வீட்டு வேலைக்காரிக்கும் நாலைந்து சுளை கொடுப்பார்கள் எங்கள் அம்மா. வேலைக்காரி வீட்டில் விட்டு விட்டு வந்துள்ள தன் பையனுக்காக அதை தன் சேலை தும்பில் முடிந்து கொள்ள தொடங்கும் போது அம்மா சொல்வாள்: “ நீ இதை சாப்பிடு.கோவிந்தனுக்கு நீ போகும் பொழுது வேறே தரேன்” இது பகிர்ந்துண்ணுதலுக்கு அந்தக்கால பண்பாட்டிற்கு எடுத்துக்காட்டு.)
இன்றோ நாம் கீரை விதையை எறும்பு தின்னாமலிருக்க பூச்சி மருந்தை கலந்து வைக்கிறோம்.இது நமது வளர்ச்சி. தண்ணீர் தேடி வரும் யானைகளை தடுக்க மின்சார வேலிகள் அமைக்கிறோம். இது நமது சுய நலத்தில் ஊன்றி நிற்கும் கலாச்சாரம்.
மூன்றாவது வகை கர்மம் தனக்கு இருக்கிறதோ இல்லையோ மற்றவர்களுக்கு படைத்து அவர்கள் அடையும் சந்தோஷத்தை தன் சந்தோஷமாக அனுபவிக்கின்ற மனோபாவம் இதுதான் யக்ஞம். இந்த மனோபாவத்துடன் செய்கின்ற கர்மங்களெல்லாம் யக்ஞம்.
பொது நலத்தில் தன் நலம் அடங்க்யிருக்கிறது என்ற அசையாத நம்பிக்கை,தியாகபுத்தியோடு செய்யும் சேவை, உலகத்தின் நன்மைக்கென்றே செய்யப்படுகின்ற கர்மங்கள் இவையெல்லாம் ஈசுவர ஆராதனைக்கு ஒப்பாகும்;அவை யக்ஞ்ங்களே. கௌந்தேயா நீ இந்த மாதிரி யக்ஞங்கள் மூலம் இசுவரனை காண்பாயாக,எங்கிறான் கண்ணன் கீதையில்.

மூன்றாம் அத்தியாயம் பத்தாவது சுலோகத்தில் கிருஷ்ண பரமாத்மா இதை இன்னும் விளக்குகிறார். அதை அடுத்த அஞ்சலில் பார்ப்போமா?

No comments:

Post a Comment