ரமணஜோதி 61
நானே கடவுள்
தெய்வமென் றுன்னைச் சாரவே யென்னைச்
சேர வொழித்தா யருணாசலா !
‘நான் உன்னயன்றி வேறு எதையும் நினையாமல் உன்னிடம் அடைக்கலம் புகுந்தேன்; நீ என்னை அழித்து உன்னோடு சேர்த்துக் கொண்டாய், அருணாசலா’ என்கிறார் பகவான் ரமணர் இந்த சுலோகத்தில்.
பக்தியும் ஞானமும் ஒன்று சேர்கின்ற ஒரு காட்சியை இங்கு நாம் காணுகின்றோம். பக்தியின் பரமோன்னத நிலை பூரண சரணாகதி..அப்படி ஒரு நிலையை நாம் அடைந்து விட்டால் பிறகு நாம் இருக்க மாட்டோம்.நான் நீ என்ற வேறுபாடு அழிந்து ஜீவாத்மா பரமாத்மாவில் லயித்துவிடும் என்கின்ற உயர்ந்த அத்துவைத தத்துவத்தை பகவான் எடுத்துரைக்கிறார் இந்த சுலோகத்தில்.
பக்தியின் ஆரம்ப
நிலைகளில் நான் வேறு கடவுள் வேறு என்ற மன நிலை இருக்கும். பக்தி வழியில் மேலே செல்லச் செல்ல நானுக்கும் கடவுளுக்கும்
உள்ள இடைவெளி குறைந்து நெருக்கம் அதிகரிக்கும்.கடைசிப் படியில் சென்றடையும் பொழுது
இடைவெளி மறைந்து நானும் கடவுளும் ஒன்றாகிவிடும்.
இந்தக் கருத்தை
மாணிக்கவாசகரும் வெளிப்பஉத்தியிருக்கிறார்.:
இன்றமைக்கருளி இருள் கடிந்தூள்ளத்தே
எழுகின்ற ஞாயிறே போன்று
நின்ற நின்தன்மை நினைப்பற நினைத்தே
நீயலால் பிறிது மற்றொன்றில்லை
சென்று சென்று அணுவாய் தேய்ந்து தேய்ந்து ஒன்றாம்
திருப்பெருந்துறை
சிவனே!
ஒன்று நீ! மற்று ஒன்றில்லை !
யாருன்னை அறியகிற்பாரோ!
நான் யார் என்று
விசாரித்து விசாரித்து கடவுளை பரமனை நெருங்கும்பொழுது நாம் கொஞ்சம் கொஞ்சமாக
தேய்ந்து இல்லாமலேயே ஆகிவிடுகிறோம்.
இதே கருத்தை
பகவான் ரிபுகீதையிலும் காண்கிறார்:
‘பரப் பிரம்மம்
தனக்கயலாய்க் காண்பானில்லை
பரப் பிரம்மம்
தனக்கயலாய் காட்சியில்லை
பரப் பிரம்மம் தனக்கயலாய் யாருமில்லை!
ரிபு கீதை 17-17
பகவான் பலமுறை
சரணாகதி என்பதை மறுத்துக் கூறியுள்ளார். ‘யார் யாரிடம் சரணாகதியாவது? நானே
பிரம்மமாயிருக்கும்போது நான் எப்படி பிரம்மத்திடம் சரணடைய முடியும்?”
‘நாமே வெல்லப்
பிள்ளையார்.நம்மைக் கிள்ளி நம்மையே அர்ச்சித்துக் கொள்ளவேண்டியது தான்.” என்பார்
ரமணர்.
ஆகவே தான் நான்
யார் விசார மார்க்கத்தில் சஞ்சரித்து சஞ்சரித்து
நான் இல்லதாகிறோம்.
வேறு வேறாக
காண்பது மித்யை அதிஷ்டான பிரம்மத்தை கண்டுகொண்டு விட்டால் பிரம்மத்திற்கு
அன்னியமாய் ஒன்றுமில்லை என்ற சத்யம் வெளிப்படும்.
திருமூலர்
கூறுவார்:
நானென்றும்
தானென்றும் நாடினேன் நாடலும்
நானென்றுன்
தானென் றிரண்டில்லை யென்பது
நானென்ற ஞான
முதல்வனே நல்கினான்
நானென்று நானும்
நினைப்பொழித்தேனே
திருமந்திரம் 2820
பகவான் ரமணர்
சொல்வார், “ தன்னை விட்டொழித்தால் மட்டும் தான் கடவுளைக் காணமுடியும். அல்லாமல்
கடவுளை தான் கண்டதாக தோன்றினால் அது ஒரு மனோமய தரிசனமாகத் தான் ,கற்பனையாகத் தான்
இருக்க முடியும். ‘நான் யார்’ என்று விசாரித்து அறிந்து ஆன்மாவை அடையாளம்
கண்டுகொண்டால்த் தான் கடவுளைக் காணமுடியும்.அப்படியொரு நிலை வரும் பொழுது ‘நான்’
மடிந்து போயிருக்கும்.அங்கு ‘நான்; இருக்காது; கடவுள் மட்டும் தான் இருக்கும்”.
காணுன் தன்னைவிட்டுத் தான்கடவுளைக் காணல்
காணு மனொமயமாங்
காட்சிதனைக் –காணுஅவன்
றான் கடவுள்
கண்டானாத் தன்முதலைத் தாண் முதல்போய்த்
தான் கடவு
ளன்றியில தாலுயிராத்---தான் கருதும்
உள்ளது நாற்பது சுலோ 20
இதையே தான் உபதேச
உந்தியார் 25 ஆம் சுலோகத்திலும் பகவான் சொல்கிறார்:
ஒன்றல்லாமல்
வேறொன்றில்லை என்பது சரியென்றால்,’நான்
யார்” என்ற விசார மார்க்கத்தில் சென்று கடைசிப் படியில் சென்றடையும்பொழுது,
‘நானும்; பரமனும் வேறல்ல என்று உணரும்பொழுது ‘நான்; எப்படி கடவுளைக் காண முடியும்?
நானே கடவுள் ஆகிவிட மாட்டோமா? நான் கடவுளால் விழுங்கப்பட்டு கடவுள் மட்டும் தானே
அங்கேயிருப்பான்?
இந்த சந்தேகம்
ஏன் வருகிறது என்றால் ‘நான் யார்’ என்று அறிவதும் கடவுளைக் காண்பதும் இரு வேறு
செயல்கள் –ஒன்றன் பின் ஒன்றாக நிகழ்வது என்ற நம்து கற்பனையினால்த் தான்.
இந்த மாதிரியான
மனோமயக்கம் கைவல்ய நவனீதம் படிக்கும்பொழுதும் ஏற்படும்.
கைவல்ய நவனீதம்
தத்துவ விளக்க படலத்தில் பதிமூன்றாம் சுலோகத்தில் ஸ்ரீமான் தாண்டவரயன்
பிள்ளையவர்கள் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:
தன்னையுன் தனக்கா
தாரத் தலைவனை யுங்கண் டானேல்
பின்னையத் தலைவன் றானாய்ப் பிறப்புத் தீர்வ
நுன்னைநீ யறிந்தா யாகி லுனக்கொரு கேடுமில்லை
யென்னைநீ கேட்கை யாலே யீதுப தேசித் தேனே
தன்னையறிவதால் ஒரு கேடும்
விளைவதில்லை.தன்னையறிமலிருந்தால்த் தான் கெடுகிறான் மனிதன். தன்னையறிந்துவிட்டாலோ
தானேயிருக்க மாட்டான் தன்னையெ
அர்ச்சிக்கத் தானிருந்தால் தானே?
இதே கருத்தை
பகவான் ஒரு கதை மூலம் விளக்குவார். ஒருவன் ஒரு புலியைக் காணவேண்டுமென்று
விரும்பினான். கிராமம் கிராமமாக விசாரித்து சென்று கடைசியில் புலியொன்று ஒரு
கிராமத்திலுள்ள குகை ஒன்றில் வசித்து வருவதாக அறிந்தான்.ஆனால் புலிக்கு மிகவும்
வயதாகி விட்டதால் அது குகையை விட்டு வெளியே வருவதில்லை என்றும் அறிந்தான். எதாவது
இரைகள் தானாக் குகைக்குள் சென்றால் மட்டுமே அதற்கு உணவு கிடைக்கும். புலியைக் காண
விரும்பி அந்த கிராமத்திற்கு வந்து சேர்ந்த அந்த மனிதன் மெல்ல அந்த குகை வாயிலை
அடைந்து மெதுவாக குகைக்குள் எட்டிப் பார்த்தான்.ஒரே இருட்டாக இருந்தது. ஒன்றும்
தெரியவில்லை.மெல்ல மெல்ல குகைக்குள்ளே சென்றான்.ஒன்றுமே தெரியவில்லை,ஒரே இருட்டு.
திடீரென்று அந்தப் புலி அவன் மீது பாய்ந்து அவனை கபளிகரம் பண்ணிவிட்டது. இதே
போல்த் தான் கடவுளைத் தேடும் மனிதனும் கடைசி முஹூர்த்தம் வரை கடவுளை காண இயலாமல்
தவிப்பான். ஆனால் அவனின் அகக்குகையிலே இருக்கும் பரமனோ அவன் வருகையைக் காத்து
இருப்பான்
’நான் யார் நான்
யார்’ என்று விசாரித்து அறிந்துகொள்ளும் அந்த நிமிடம் ‘நான்’ இல்லாமல்
போய்விடுவான்.
இதை பகவான் உள்ளது நாற்பது 21-22 சுலோகங்களில்
கூறியுள்ளார்:
தன்னைத்தான் காண
றலைவன் றனைக்காண
லென்னும்பன்
நூலுண்மை யென்னையெனின்—ற்ன்னைத்தான்
காணலெவன்
றானொன்றற் காணவொணா தேற்றலைவற்
காணலெவ நூணாதல்
காணெவையுங் காணும்
மதிக்கொளி தந்தம் மதிக்கு ளொளிரு
மதியினை யுள்ளே
மடக்கிப்---பதியிற்
பதித்திடுத
லன்றிப் பதியை மதியான்
மதித்திடுத லெங்ஙன் மதியாய்--மதியிலதால்
No comments:
Post a Comment