Sunday, 25 January 2015

ரமணஜோதி 60

ரமணஜோதி 60

குணத்ரயம்


தூய்மன மொழியர் தோயுமுன் மெய்யகன்
தோயவே யருளென்னருணாசலா
ஆத்மசாக்ஷாத்காரம் அடைய வேண்டுமென்றால் மனம் விஷய வாசனைகளையெல்லாம் துடைத்தெறிந்துவிட்டு சுத்தமாக இருக்க வேண்டும். தூய்மனம் படைத்தவர்கள் மட்டும் தான் பரமனின் பாதங்களை சரணடியமுடியும்..
தூய்மனம் எப்படி நேடுவது?
நாம் பகவத் கிதையின் துணை  நாடுவோம்.
எல்லா ஜீவராசிகளும் பிரகிருதியின் கர்ப்பாசையத்திலிருந்து பிறக்கின்றன..அவைகளின் தந்தை பரமனே என்கிறார் கிருஷ்ண பரமாத்மா கீதை பதினாலாம் அத்தியாயம் நான்காவது சுலோகத்தில்.
          ஸர்வயோனிஷு கௌந்தேய மூர்த்ய: ஸம்பவந்தி யா: !
          தாஸாம் ப்ரம்ம: மஹத் யோனிரஹம் பீஜப்ரத: பிதா !!
தேவர்கள்,அசுரர்கள்,மனிதர்கள்,விலங்குகள்,பறவைகள்,புழு,பூச்சிகள் இவையெல்லாம் வேறு வேறு கர்ப்பாசயங்களிலிருந்து பிறந்தாலும் எல்லாவற்றிற்கும் தாயாயிருப்பவள் பிரகிருதி தான். தந்தை பரமாத்மாவே தான். அப்படியிருக்கும் பொழுது எப்படி ஜிவாத்மாக்களில் அழுக்கு படிகிறது?
கிருஷ்ண பரமாத்மா சொல்கிறார்:
ஸத்வம் ரஜஸ்தம இதி குணா: ப்ரக்ருதிஸம்பவா: !
நிப்தனந்தி   தேஹேதேஹினமவ்யயம் !
ஸத்வம்,ரஜஸ்,தமஸ் ஆகிய முக்குணங்களும் பிரகிருதியின் சொரூப குணங்களாகிறது. பிரகிருதியின் பரிச்சின்னங்களான சகல ஜீவராசியிலும் இந்த குணங்கள் பிரதிபலிக்கிறது.
பிரகிருதி க்ஷேத்திரமானால் பரமாத்மா க்ஷேத்திரஞ்சனாகிறான். நிர்குணனான.க்ஷேத்திரஞ்சனை எப்படி பிரகிருதியின் குணங்கள் பாதிக்க முடியும்? முடியாது.
பாதித்தது போல் ஒரு பொய்யான தோற்றத்தை உளவாக்கிறது. நீரில் தெரியும் சந்திர பிம்பம்  நீர் அசையும் பொழுது சந்திர பிம்பமும் ஆடும்;அசையும்.ஆனால் நிஜச் சந்திரன் ஆடாமல் அசையாமல் வானத்தில் நின்று கொண்டிருப்பான். அது போல் பிரகிருதியின் முக்குணங்களும் ஆத்மாவை பிணைத்தது போல் தோற்றம் அளிக்கும்,.
கிருஷ்ணர் க்ஷேத்திரம் என்றால் என்ன,க்ஷேத்திரஞ்சன் யார் என்று பதிமூன்றாம் அத்தியாயத்திலே கூறியுள்ளார்.
பதிமூன்றாம் அத்தியாயம் முதல் சுலோகத்திலேயெ பகவான் கூறுகிறார்:
          இதம் சரீரம் கௌந்தேய க்ஷேத்ரமித்யப்தீயதே !
          ஏததயொ வேத்தி தம் ப்ராஹூ: க்ஷேத்ரக்ஞ இதி தத்வித: !!
எது கெட்டு போகமல் காப்பாற்றப் படுகிறதோ அது க்ஷேத்ரம். இந்த உடல் வயலுக்கு ஒப்பானது.இதில் எதை விதைக்கிறோமோ அதையே கொய்வோம்.விதைப்பதும் கொய்வதும் அவரவர் கர்ம பலனைப் பொறுத்து இருக்கிறது. ஜீவாத்மாவிற்கு தர்மக்ஷேத்ரமாக விளங்குவது உடல்.இந்த உண்மையை  அறிகிறவன் க்ஷேத்ரஞ்சன் எனப்படுகிறான்.
எல்லா ஜிவாத்மாக்களும் பரமாத்மாவின் அம்சங்களே என்று  அடுத்த சுலோகத்தில் கிருஷ்னர் சொல்லுகிறர்.
          க்ஷேத்ரஞம் சாபி மாம் வித்தி சர்வ க்ஷேத்ரேஷூ பாரத !
          க்ஷேத்ரக்ஷேத்ரக்ஞ்யோர்ஞானம் யத்தஜ் ஞானம் மதம் மம !!
க்ஷேத்ரங்களனைத்திலும் நானே இருக்கிறேன்.க்ஷேத்ரங்களைக் குறித்தும் க்ஷேத்ரஞனைக் குறித்துமுள்ள இந்த அறிவே உண்மையான ஞானம்.
பிரகிருதியின் குணங்கள் ஜிவனுக்கு ஜீவன் மாறுபடுகிறது. குணபேதங்கள் கணக்கிலடங்கா. பிரகிருதியின் குணபேதங்கள் பரம புருஷனை பாதிப்பதில்லை.ஆனால் பாதித்தது போல் தோன்றுகிறது. ஸ்படிகத்தின் அருகில் வைத்த புஷ்பத்தின் நிறம் ஸ்படிகத்தை பாதிக்காது ஆனால் ஸ்படிகம் புஷ்பத்தின்  நிறமாகத் தோன்றும். ஜீவாத்மாக்களும் இந்த மாதிரி பாதிக்கப்பட்டு எண்ணிக்கையில் அனந்தமாக உள்ளது.
இந்த உலகில் பிற்க்கின்ற ஒவ்வொரு ஜிவனும் சுதந்திரனாக பிறப்பதாக எண்ணிக்கொள்கிறான். சுதந்திரம் என்றால் சுயேச்சையாக கர்மங்கள் செய்வது என்றும் நினைக்கிறான்.அப்படி சுயேச்சையாக கர்மங்கள் செய்யும்பொழுது அந்த கர்மங்கள் ஒரு யஞங்கல்பத்துடன் இருக்கவேண்டும் என்று கீதாசாரியன் கூறுகிறான். யக்ஞத்திலிருந்து வழுதி கர்மங்கள் செய்ய்யும் பொழுது தானும் துக்கத்தில் மூழ்கி மற்றவர்களையும் துக்கத்திலாழ்த்தி துக்கமான பலனை அடைகிறான்..அதே நேரத்தில் பரேச்சயால் உந்தப்பட்டு கர்மங்கள் இயற்று பவனோ கர்மங்கள் நிகழும் பொழுதும் ஆனந்தப் படுகிறான்,மற்றவர்களையும் ஆனந்தப்படுத்துகிறான் இந்த கர்மங்களின் பலனும் ஆனந்தமாகவே இருக்கிறது..
தத்ர ஸத்வம் நிர்மலத்வாத்ப்ரகாசகமனாமயம் !
ஸூக ங்கேன பத்னாதி ஞானஸ்ங்கேன சானக !!.
                                     ப.கீ.அத்த்.14 சு 6
ஜீவாத்மா இந்த உலகில் பிறக்கும் பொழுது நிர்மலமான ஒரு கண்ணாடியைப் போல் உள்ளது.அதில் அழுக்கு படியாத வரை அதன் மூலம் அதற்கு பின்னால் உள்ள நிர்மலமான ஆகாசம் தெரியும்.ஆனால் அதில் உலக சுக சௌக்கியங்கள் என்ற அழுக்கு படியும் போது காட்சிகள் மங்குகின்றன.சுக சங்கத்தால் பதனம் அல்லது வீழ்ச்சி உண்டாகிறது. ஆனால் ஞானத்தால் அவனுக்கு நல்லது விளைகிறது.
அதே நேரத்தில் ரஜோகுணம் ஆசை வடிவுடையது.அது மனித இகலோக சுக சௌகரியங்களில் பற்றுதல் உண்டாக்கிறது. அப்படி வினைப் பற்றுதல் உண்டாகும் போது தேஹி பந்தனஸ்தனாகிறான். அவனுக்கு கிடைத்த பொருளை விட மனம் வராது.மேலும் மேலும் வேண்டும் என்ற தாஹத்தை ஏற்படுத்தும ரஜோகுணம் எரிகிற விறகின் மீது எண்ணையை வார்த்தது போல் ஆசை எனும் அக்னியை வளர்க்கிறது. தான் செய்யாத கர்மத்திற்கு தான் தான் கர்த்தா என்ற மனோ பாவத்தை உண்டாக்கிறது.அஹங்காரத்தை விருத்தி அடைய செய்கிறது. உண்மையான நானை மறக்கடித்து பொய்யான நானை வலுவடைய செய்கிறது. ரஜோகுணம் இருக்கும் வரை கர்த்திருத்வ மனோபாவம் ஜீவாத்மாவை விட்டுப் போகாது
இதை கீதாச்சாரியன் அடுத்த சுலோகத்தில் கீழ்க் கண்டவாறு விளக்குகிறான்.
ரஜோ ராகாத்மகம் வித்தி த்ருஷ்ணாசங்கசமுத்பவம் !
தன்னிபத்னானி கௌந்தேய கர்மசங்கேன தேஹுனம் !!
ப்.கீ அத்த்.14 சுலோ 7
தமோகுணமோ அக்ஞானத்திலிருந்து உற்பத்தியாகிறது அது ஜீவாத்மாக்களை
நிரந்தர மயக்கத்திலாழ்த்துகிறது. விவேக ஞானத்தை நசிப்பிக்கிறது. அவை அசட்டை,உறக்கம்,சோம்பல் முதலிய சகல துர்க்குணங்களுக்கும் இருப்பிடமாக உள்ளது. போட்டி,பொறாமை,குரோதம்,நிராசை முதலிய உணர்வுகளின் விளை நிலமாக உள்ளது
ஆகவேதான் கிருஷ்ண பரமாத்மா இரண்டாம் அத்தியாத்தில் 63 வது சுலோகத்தில் கூறினார்:
          க்ரோதாத்பவதி ஸம்மோஹ: ஸம்மோஹாத்ஸ்ம்ரிதிவிப்ரம:!
          ஸ்ம்ரிதிப்ரம்சாத்புத்தினாசோ புத்தினாசாத்ப்ரணஸ்யதி!!
இப்படிப்பட்ட சத்துவ ரஜோ தமோ குணங்களிடையே ஒரு போட்டியே நடக்கிறது;யார் யாரை அடக்குவது என்பதில்.அவரவர் கர்ம பலன்களின்படி ஜீவாத்மாக்களில் இந்த முக்குணங்களும் பிரகடமாகிறது.

நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் இந்த போராட்டத்தில் சத்வம் வெல்வதற்கு ஏதுவாய் ஜீவாத்மாவின் சொரூப சுபாவத்தை அறிந்து சுத்த சைதன்யமான சத் சிதானாந்தத்தை கண்டறிய வேண்டும்.அதற்கு ஒரேவழி  நான் யார் என்று கண்டறிந்து என்னில் அந்தர்யாமியாயுள்ள சைதன்யம் தான் எல்லோர் உள்ளிலும் உள்ளது என்று புரிந்து அந்த சைதன்யத்தை தவிர எதும் அக்ஷரம் இல்லை,எல்லாம் தாற்காலிக சுகத்தை மட்டும் தரும். நிரந்தரமான ஆனந்தம் பெற வேண்டுமென்றால் பரமாத்மாவுடன் ஐக்கியமாக வேண்டும் என்ற உண்மையை புரிந்துகொள்ளவேண்டும் அதற்கு அருள் செய் அருணாசலா என்கிறார் பகவான் ரமணர்.; ..

No comments:

Post a Comment