Friday, 2 January 2015

About Harihara Sarma

About Harihara Sarma 


Born in a tiny hamlet namely Pathiyoor in Kerala state in India ,as fifth child to Ramaiyer Krishnammal.
Rama and Krishna are one and the same and may be therefore they christened the child as Hari Haran meaning Siva and Vishnu are one and the same.
Till his twnentififth year he grew up in the left oriented Kerala environment. After the early demise of his father when he was nine years, his family faced a lot of economic difficulties. In the circumstances he could not continue formal college education.Thinking if he could complete some short vocation course he can start earning and help his brothers who were struggling to support the family of nine brothers and sisters.
It is at this juncture , he met the deciple of Mahathma Gandhi Mrs Sountharam Ramachandran, who was athe Deputy Education Minister in the Union Cabinet and the founder of Gandhigram Rural Institute. With her support and encouragement  he joined the graduation course in the Gandhigram Rural University.
His stay in Gandhigram brought about a sea change in his outlook.
His meeting with Pandit Jawaharlal Nehru, the first Prime minister of India, Chakravarthi Raja gopalachari ( Rajaji),Pa. Jeevanantham versatile and genuine communist leader,U.N. Debar,prof. Manamathan and the like influenced his thinking  and brought about a new dimension to his leftist thinking.
Through Rajaji he was initiated to Anmika thoughts; Nehru instilled in him a deep national Spirit;Jeevanantham brought a human touch to his communist thinking. But these seeds did not germinate for many years.
He got a job in Reserve. Bank of India; got married to beautiful Lalitha and became father of two cute children.
After his son-daughter got married  and he retired from active service, he became restles despite having all the comforts of this world.  Then someone said, “Instead of going around  temples and different holy places,  go to Thiruvannamalai Ramanasiramam and stay for a few days;  You will have peace of mind. ” He  immediately  sent a long e-mail to the Ramanasiramam administrator.  He went without knowing anything about Bhagavan Ramanar and when he returned to Chennai a week later he was a new man.

 Went to Thiruvannamalai again and again.  He read books about Bhagavan  Ramanar.  He became involved in Advaita ideology.

 He studied Sankara, Ashtavakrar and Vashishtar. He further got clarified Ramana's path of inquiry.

 He listened to the lectures of Brahmasri Nochur Venkataraman, Swami Udit Chaitanya, Swami Paramarthananda etc.

 He read books by Swami Chinmayananda, Swami Sivananda, Swami Vivekananda etc.

 The idea was to share what he had learned from others, so that he would have a chance to correct his mistakes;

 If there is any useful information in what is going to be written here, the credit goes to the great souls  who have beenn mentioned above.  If there are any mistakes, they are of  Hariharan only who wrote this.

 கேரளக்கரையில் பத்தியூர் எனும் குக்கிராமத்தில் இராமய்யர்-கிருஷ்ணம்மாள் தம்பதியனருக்கு ஐந்தவது குழந்தையாக பிறந்தான் இந்த வியாக்கியானங்களின் தொகுப்பாளன்..


ராமனும் கிருஷ்ணனு ஒன்று தான் என்பது போல் ஹரியும் ஹரனும் ஒன்று தான் என்று தோன்றியதோ என்னவோ அந்தக் குழந்தைக்கு ஹரிஹரன் என்று பெயரிட்டு அழைத்தார்கள்.இருபத்தி ஐந்து வயது வரை கேரளக்கரைக்கே உரித்தான இடதுசாரி மனோபாவத்துடன் வளர்ந்து வந்தான்.


ராமனும் கிருஷ்ணனு ஒன்று தான் என்பது போல் ஹரியும் ஹரனும் ஒன்று தான் என்று தோன்றியதோ என்னவோ அந்தக் குழந்தைக்கு ஹரிஹரன் என்று பெயரிட்டு அழைத்தார்கள்.
தந்தையின் மறைவிற்கு பின் அவனது குடும்பம் பொருளாதாரத்தில் மிகவும் நலிவடைந்த காரணத்தால் அவனது கல்லூரிப் படிப்பு தொடர முடியாத நிலையேற்பட்டது..
குறுகிய கால படிப்பு எதையாவது முடித்து விட்டு ஏதாவது வேலையில் சேர்ந்தால் தனது அண்ணன்மார்களுக்கு உதவியாக இருக்கலாமே என்று முடிவிற்கு  வந்த தருணத்தில்—காந்திக்கிராமத்தின் நிறுவனரும் காந்திஜியின் உத்தம சிஷ்யையும் அன்றைய மத்திய மந்திரி சபையில் துணை கல்வி மந்திரியுமாயிருந்த  திருமதி சௌந்தரம் ராமச்சந்திரன் அவர்களை சந்திக்க நேரிட்டது. அவர்களது ஊக்கத்தாலும் உதவியாலும் காந்திக்கிராம கிராமீண பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பிற்கு சேர்ந்தான் ஹரிஹரன்.
காந்திக்கிராமத்தில் அவன் தங்கியிருந்த நான்கு வருட காலம் அவனில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
பண்டித   நேரு, இராஜாஜி, ப.ஜீவானந்தம், யூ.என்.தேபர்,பேராசிரியர்.மன்மதன் போன்ற பல தலைவர்களை சந்திக்கவும் பழகவும் சந்தர்ப்பம் கிடைத்தது.
கீதாச்சாரியனின் தர்மோபதேசங்களும் காந்திஜியின் கர்ம சன்யாசமும் நேருவின் நாட்டுப்பற்றும் ஜீவானந்தத்தின் தன்னம்பிக்கையும் அவனது இடதுசாரி மனோபாவத்தில் புதிய பரிமாணத்தை உருவாக்கியது  ஆன்மீக சிந்தனைக்கு ஒரு ஆழ்மான விதை ஊன்றப் பட்டது.
ஆனால் 26 ஆவது வயதில் திருமணம்,அழகான மனைவி, நான்கு வருடங்களில் ஒரு மகன்,ஒரு மகள், இந்திய ரிசர்வு வங்கியில் நல்ல ஒரு உத்தியோகம், 65 வயது வரை அந்த விதை முளைக்கவில்லை.
மகன்-மகள் திருமணம் முடிந்து உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றபின் இகலோக பார்வையில் எல்லா வசதிகளும் இருந்தும் அவனுக்கு மன நிம்மதி இல்லை. அப்பொழுது யாரோ ஒருவர், “இப்படி கோவில் குளங்கள் என்று சுற்றி வருவதற்கு பதிலாக திருவண்ணாமலை ரமணாசிரமம் சென்று சிறிது நாட்கள் தங்கிவிட்டு வா; உனக்கு மன நிம்மதி கிடைக்கும்”  என்று சொல்ல அவனும் ரமணாசிரம நிர்வாகிக்கு ஒரு நீண்ட மின்னஞ்சல் அனுப்ப உடனேயே அழைப்பு வந்தது. ரமணரைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் சென்ற அவன் ஒருவாரம் கழித்து சென்னை திரும்பிய பொழுது ஒரு புது மனிதனாகியிருந்தான்.
மீண்டும் மீண்டும் திருவண்ணாமலை சென்றான். ரமணரைப் பற்றிய புத்தகங்களை படித்தான். அத்வைத சித்தாந்தத்தில் ஈடுபாடுகொண்டான்.
சங்கரரையும் அஷ்டவக்கிரரையும் வசிஷ்டரையும் படித்தான்.ரமணரின் விசார மார்க்கத்தை மேலும் தெளிவுபடுத்திக்கொண்டான்.
பிரம்மஸ்ரீ நொச்சூர் வெங்கடரமன்,ஸ்வாமி உதித் சைதன்யா,ஸ்வாமி பரமார்த்தானந்தா முதலியவர்களின் உபன்யாசங்களை கேட்டான்.
ஸ்வாமி சின்மயானன்தா, ஸ்வாமி சிவானந்தா, ஸ்வாமி விவேகானந்தர் முதலியவர்களின் புத்தகங்களை படித்தான்.
தான் தெரிந்துகொண்டதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உதித்தது.அப்படி பகிர்ந்துகொள்வதன் மூலம் தனது தவறுகளை திருத்திகொள்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்;தான் தெரிந்து கொண்டது மேலும் மனதில் உறுதிப்படும் என்று எண்ணினான்.அதன் விளைவு தான் இந்த எழுத்துக்கள்.
இங்கே எழுதியிருப்பவைகளில் எழுதப் போவதில் எதேனும் உபயோகமான தகவல்கள் இருந்தால் அந்த பெருமை மேலே கூறிய-கூறாமல் விட்டுப் போன பெரியோர்களையே சாரும். ஏதேனும் தவறுகள் இருந்தாலோ இதை எழுதிய ஹரிஹரனையே சாரும்.



            


No comments:

Post a Comment