ரமண ஜோதி 64
தீக்ஷை
தொட்டருட் கைமெய் கட்டிடா
யெனிலியா
னட்டமா வேனருளருணாசலா
“ அருணாசலா, நீ
என்னை கைபிடித்து, அணைத்துக் கொள்ளவில்லையென்றால் நான் என் செய்வேன்? எனக்கு வேறு
கதி ஏது?”என்று பகவான் தன்னை பரமனின் மணப்பெண்ணாக பாவித்துக் கொண்டு கேட்கிறார்.
இன்னொரு
விதத்தில் பார்த்தால்,பகவான் சீடனாக பரமாத்மாவிடம் ஸ்பரிச தீக்ஷை தருமாறு
கேட்கிறார்.
இந்த சுலோகத்தில்
இரண்டு விதமான பாவங்களை பகவான் கொண்டு
வருகிறார்.:
ஒன்று: தீக்ஷா
பாவம்( குரு-சிஷ்ய பாவம்)
இரண்டு: : நாயகீ
நாயக பாவம்
முதலில் தீக்ஷா
பாவத்தைப் பார்ப்போம்.
குரு, சிஷ்யனின்
தலையில் கைவைத்து ஆசீர்வதிக்கும் போது
சீடனுக்கு ஞானம் லபிக்கிறது..
தீக்ஷா என்பது
குரு தனது சக்தியை சீடனுக்கு பரிமாற்றம் செய்வதாகும்.இது சீடனின் ஆன்மீக சக்தியை
உத்போஷிப்பதற்கு சமானம்
.’பாட்டறியை (Battery ) ரீசார்ஜ் பண்ணுவது போல்.
தீக்ஷை அளிக்கும்
முறை குருவிற்கு குரு மாறுபடும்.
ஸ்பரிச
தீக்ஷா, நயன தீக்ஷா, மானச தீக்ஷா என்று
மூன்று விதமான தீக்ஷா சம்பிரதாயம் உள்ளது..
ஸ்பரிச தீக்ஷா
என்பது குரு சீடனின் தலையில் கை வைத்து தீக்ஷை அளிக்கும் முறை
நமது பண்டைய கலாச்சாரத்தில் சாதாரணமாக
பெரியவர்கள் சிறியவர்களை ஆசீர்வாதம் செய்யும்போது கூட தலையில் கைவைத்து ஆசீர்வாதம்
செய்வார்கள். இன்றைய காலத்தில் நமது இளம் தலைமுறையினர், சிகையலங்காரம்
கலைந்துவிடும், என்று கூறி தலையில் கைவைக்க விட மாட்டார்கள்.
தற்போது ஒரு மேலை
நாட்டு விஞ்ஞானி ஒருவர் தலையில் கைவைக்கும் போது ஒருவர் மனதிலுள்ள நல்லாசிகள் ( positive vibration) மற்றவருக்கு பரிமாற்றம் செய்யப்படுகிறது என்று
கூறியுள்ளார். இனிமேல் ஒருவேளை நமது இளைய தலைமுறை-நமது ஸ்ருதி-ஸ்ம்ரிதி
அதிஷ்டிதமான பண்புகளை மூட நம்பிக்கை என்று
பரிஹசித்த இளையவர்கள்—விஞ்ஞானபூர்வமானது என்று அங்கீகரிப்பார்களோ என்னவோ ?
அதே போல தான்
நமஸ்கரிப்பது.. நமது கலாச்சாரப்படி நம்ஸ்கரிப்பது நமது அஹங்காரத்தை அழிப்பதற்கு அறிகுறியாகும்.
நமஸ்காராம் என்றால் சாஷ்டங்கமாக நமஸ்கரிப்பதாகும்.சாஷ்டாங்கம் என்றால் எட்டு
அங்கங்களும் பூமியில் பதியும்படி கீழே விழுந்து வணங்குவதாகும்.
பகவான் ரமணர் கூறுவார்:
“ அகந்தை தலை
குனிதலே,அதாவது, அடங்கலே,நமஸ்காரத்தின் தாத்பரியம். அதாவது ,அகந்தை தன்
மூலத்தொடுங்கலே நமஸ்காரம். உடலை மட்டும் கீழே கிடத்தலால் ஈசனை ஏமாற்றிவிட
முடியாது.. அகந்தை அற்ற இடத்தேதான் அருளொளி மிளிரும்” (வசனாம்ருதம் ஈ பக் 105)
“நமஸ்காரம்
என்பது ஆத்ம சமர்ப்பண மனோபாவத்தை வருவியதற்காக,அதற்கு,அறிகுறியாய்,முன்னோர்களால்
கையாளப் பட்டு வந்தது. ஆனால் காலக்கிரமத்தில் மாந்தர் அதன் உட்கருத்தை
உணராது,பக்தி பாவமொன்றுமில்லாமல் உடலைக் கீழே கிடத்தியெழும் ஒரு தேகாப்யாசமாக
செய்துவிட்டனார்.
உள்ளத்தூய்மையின்றி
அவ்வுத்தேசம் கூட, இல்லாமல் கீழே விழுந்தெழுவதால் என்ன பயன்?
அகத்தே ஆயிரம்
தீய நினைவுகளை வைத்துக் கொண்டு உடலைக் கீழே கிடத்தி எழுவதால் கடவுளோ, குருவோ ஏமாற
மாட்டார்.
அவ்வாறு என் முன்
யாராவது நமஸ்கரித்தால் அது என்னை அடிப்பது போலிருக்க்கிறது.
உள்ளத்தைத்
தூய்மையாக வைத்துக் கொண்டால் அதுவே பணிவும்,நமஸ்காரமும் ஆகுமே.” என்பார் பகவான்
ரமணர்.( வச. 2 /241
நாம் தீக்ஷையை
பற்றிக் கூறிக்கொண்டிருந்தோமல்லவா? ஸ்பரிச தீக்ஷைக்கு சிறந்த உதாரணம் இராமகிருஷ்ண
பரமஹம்சரும் ஸ்வாமி விவேகானந்தரும்.
இளம் நரேந்திரன் இராமகிருஷ்ணரிடம் கடவுளை
காண்பிக்கும்படி கேட்டுக்கொண்டபோது ,இராமகிருஷ்ணர் நரேந்திரனின் தலையில் கை வைத்தார்
அதன் பலன்,
நரேந்திரன் கடவுளை பார்த்தான் என்பது மட்டுமல்ல,அவன் உலகத்தை கீழடக்கிய ஸ்வாமி
விவேகானந்தரும் ஆனான்
மாதா
அமிருதானந்தமயி எல்லோரையும் அன்புடன் அணைத்து தீக்ஷை வழங்குகிறார்.
பகவான் ரமணர் நயன
தீக்ஷை முறையை பின்பற்றினார்;(அவர் அப்படி கூறவில்லையென்றலும்). அவர் முன்னால்
மௌனமாக உட்கார்ந்திருந்து விட்டு எல்லாம் புரிந்து விட்டதாக கூறிச்
சென்றுள்ளார்கள்.டாக்டர்.இராதாகிருஷ்ணன்,ஸ்ரீ நாராயண குரு போன்றவர்கள் ரமணரை
தரிசிக்க வந்து விட்டு ஒன்றுமே பேசாமல் ஒன்றிரண்டு நாட்கள் ஆசிரமத்தில்
தங்கிவிட்டு சென்றுள்ளார்கள்.
காஞ்சி பரமாச்சாரியர்
யாரையும் தொடுவது மிகவும் அபூர்வம்.அவர் தன் அருள் பார்வை மூலமாக பலருக்கும் அருள்
பாலித்தார்.
மானச தீக்ஷைக்கு
சிறந்த உதாரணம் தக்ஷிணாமூர்த்தியே.
நமது பண்பாட்டு
கிருதிகள் பறைவைகளை ஸ்பரிச தீக்ஷைக்கும் மீன்களை நயன தீக்ஷைக்கும்,ஆமையை மானச
தீக்ஷைக்கும் உதாரண்மாகக் கூறுகின்றன.
பறைவைகள்
முட்டைகளின் மீது அடைகாத்து குஞ்சு விரிப்பதும், மீன்கள் முட்டைகளை நெருங்காமலே
கடலிலிருந்து கண்ணால் பார்த்தே குஞ்சு பொரிப்பதும், ஆமைகள் முட்டை இட்டபின் அவைகளை
திரும்பிக் கூட பார்க்காமல் இருக்கும் ஆனால் முட்டை விரிந்ததும் குஞ்சுகள் தாயை
நோக்கி ஓடி வரும்
தீ (dhI) என்றாள் சம்ஸ்கிருதத்தில் கொடுப்பது
என்றர்த்தம். ‘க்ஷ’ என்றால் அழிப்பது என்று பொருள். அருளைக் கொடுத்து அஞ்ஞானத்தை
அழிப்பது தீக்ஷை.
குரு அளிக்கும்
தீக்ஷயின் அழகு என்னவென்றால் கொடுப்பதால் குரு ஒன்றையும் இழப்பதில்லை;
மாறாக,மேலும் ஞானியாகிறார்..
தொட்டனைத்தூறும் மணர்க்கேணி
கற்றனைத்தூறும் கல்வி மாந்தர்க்கு
ஈசாவாசம்
கூறுகிறது:
பூரணமத:
பூர்ணமிதம்
பூரணத்
பூரணமுதச்யதே
பூரணஸ்ய பூரணமதய
பூரண்மேவ
வஷிஷ்யதே
ஓம் சாந்தி: ஓம் சாந்தி: ஓம் சாந்தி:
பகவானின் முதலில்
எடுத்துக் காட்டிய செய்யுள் மற்றொரு புறம் நாயிகா நாயக பாவத்தை எப்படி வெளிப்படுத்துகிறது
எப்படி என்று காண்போமா?
‘தொட்டருட்கை’ என்கின்ற பதம் மூலம்
பகவான் திருமணங்களில் முக்கிய சடங்கான பாணிக்கிரகணத்தை குறிப்பதாக தோன்றுகிறது.
பாணிக்கிரகணம் முடிந்து சப்தபதி என்கின்ற சடங்கையும் முடித்து விட்டு சொல்கின்ற
மந்திரங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவையே
“நாம் இன்று ஒரு சபதம் எடுத்துக் கொள்வோம்.நாம் அன்பை பகிர்ந்து கொள்வோம்; நமது பலம்,பலவீனங்கள்,விருப்பங்கள் எல்லாம் ஒன்றாகட்டும் .நமக்கு இன்று முதல் ஒரே மனம், .நான் ஸாமவேதமென்றால் நீ ரிக் வேதம், நான் மேலுலகம் என்றால் நீ பூமியாவாய். நான் சுக்கிலம் என்றால் நீ அதை வாங்கி தாங்கிக் கொள்ளும் தாயாவாய். நாம் இருவரும் சேர்ந்து சந்ததிகளை பெறுவோம்.,செல்வம் சேகரிப்போம்,”
“நாம் இருவரும்
சேர்ந்து ஏழு அடிகள் கடந்து விட்டோம் நீ
இன்று முதல் என்னுடையவள் நாம் இருவரும் பங்காளிகள். நான் உன்னுடையவனாய்விட்டேன். நீயில்லாமல்
இனிமேல் நானில்லை. நீயும் நானில்லாமல் வாழ மாட்டாய். எல்லா இன்பங்களையும் நாம்
ஒருமித்து அனுபவிப்போம். நான் வார்த்தை என்றால் நீ அதன் பொருள். பொருளில்லாமல்
வார்த்தை இல்லை; வார்த்தை இல்லாமல் பொருளில்லை.நான் சிந்தனை நான் என்றால்
நீ ஒலி. இரவும் பகலும் நமக்கு தேனாக இனிக்கட்டும். பூமியும் ஆகாயமும்
இனிக்கட்டும். சூரியனும் தாவரங்களும் இனிக்கட்டும். கோமாதாக்கள் தேன் போல்
இனிக்கும் பால் தரட்டும். ஆகாயம், பூமி, மலைகள் இந்த பிரபஞ்சம் முழுவதும் எப்படி
சாசுவதமாக இருக்கிறதோ அது போல் நானும் நீயும் சிரஞ்சீவிகளையிருப்போம்.”
இந்த பாரத
பூமியில் விவித பாகங்களில் நடக்கும் விவகங்களில் உச்சரிக்கப்படும் மந்திரங்களின்
சாராம்சம் மேலே கூறியது. இதில் பொதிந்து கிடக்கின்ற ஒரு உண்மை ஜீவாத்மா- பரமாத்மா
உறவை பிரதிபலிக்கின்றது. ஆத்மசாக்ஷாத்காரத்திற்குப் பின் ஆத்மா இப்படியொரு
நிலையிலிருக்கும் என்பதை பகவான் ரமணர் குறிப்பிடுவது போல் தோன்றுகிறது..
நாயகி-நாயக பாவம்
வைஷ்ணவத்தில் கோதை நாச்சியாரின் கிருதிகளில் இன்னும் வ்யக்தமாக புலனாகிறது.அதை
அடுத்த மடலில் பார்ப்போம். .
No comments:
Post a Comment