Sunday, 15 February 2015

Ashta vakara maanikaL

மணி ஒன்று---ஓசை 1
முன்னுரை

ஆலயங்களில் மணியடிக்கும் பொழுது அதில் ஒரு தாளம் இருக்கும்.ஒரு முறை ஆலய மணியை அடித்தால் அப்பொழுது எழும் ஓசை சில வினாடிகளுக்கு ரீங்கரித்துக்கொண்டிருக்கும். அந்த ரீங்காரம் ஓயும் முன் அடுத்த மணி ஒலிக்க ஆரம்பிக்கும்..தொடர்ந்து மணியின் ஓசை கேட்டுக்கொண்டே இருக்கும்.

ஆலயத்தில் தீபாரதனை நேரத்தில்  ஆலய மணிகளின் ரீங்காரம் நம்  காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.அந்த ரீங்காரம் நம் மன அழுக்குகளைய்எல்லாம் நீக்கி நம்மை புனிதப்படுத்தும்.
அது போல் அஷ்ட வக்கிர கீதை அல்லது  அஷ்டாவக்கிர சம்ஹிதை அல்லது அஷ்டாவக்கிர ஜனக சம்வாதம் நமது மனதை புனிதப் படுத்தி ஆத்மசாக்ஷாத்காரம் அடைவதற்கு உதவும்.
இந்த கீதையில் ஜனகர் கேட்கும் தெள்ளத் தெளிவான கேள்விகளும்,அஷ்டாவக்கிர முனீவர் அளிக்கின்ற  நெற்றியடி போன்ற பதில்களும் ஏற்படுத்துகின்ற  ரீங்காரம் நமது  காதுகளில் நீண்ட நாட்களுக்கு ஒலித்துக் கொண்டேயிருக்கும்.அது ஏற்படுத்துகின்ற தாக்கம் நம்மை சிந்திக்க வைத்து நாம் யார் என்ற உண்மையை   வெளிக்கொணரும். 

இப்படிப்பட்ட நூலினுள் புகுந்து அதன் மணி  நாதம் எழுப்பும் சங்கீதத்தை அனுபவிக்கும் முன் நாம் இந்த நூலப் பற்றி சில விவரங்களைத் தெரிந்து கொள்வோம்
இந்த கீதை பகவத் கீதையைப் போல் அவ்வளவு பிரபலமானதல்ல. இதற்கு எழுதப் பட்டுள்ள வியாக்கியானங்களும் பகவத் கீதையோடு ஒப்பிடும்பொழுது எண்ணிக்கையில் மிக குறைவே.
இதற்கு முக்கியமான காரணம் இதில்கூறப்பட்டுள்ள ஞானமார்க்க விசாரங்கள் யாருடைய வாழ்க்கையையும்   
அடிப்படையாக கொண்டதல்ல. இதில் அரசியல் இல்லை;ராஜ தந்திரங்கள் இல்லை;போட்டாப்போட்டிகள் இல்லை. இதில் உணர்ச்சிகளுக்கு இடமில்லை. கால தேச பாகுபாடுகள் இல்லை.
இது ஒரு முனை வாள். இந்த கீதையில்  சமரசம் இல்லை.
பகவத் கீதை பக்தி மார்க்கம்,கர்ம மார்க்கம்,மற்றும் ஞான மார்க்கம் மூன்றின் ஒருங்கிணைந்த சமரச வேதாந்தம்.ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு வேண்டியதை எடுத்துக்கொள்ளலாம். அவரவர் மனோ தர்மப் படி வியாக்கியானமும் செய்து கொள்ளலாம். செய்திருக்கிறார்கள். இரண்டு எதிர் மறையான வியாக்கியானங்களை மட்டும் நினைவு படுத்திக்கொள்ளலாம்.பகவத் கீதை ஒரு யுத்தத்தை ஊக்குவிக்கும் நூல் என்று ஒரு சாராரும்,பகவத்கீதை சமாதானத்திற்கும் மனித சாந்திக்கும் வழி வகுக்கும் நூல் என்று இன்னொரு சாராரும் வாதிடுகிறார்கள். நீதிமன்றங்களின் படிகளேறுகிறார்கள்.
அஷ்டவக்கிர கீதையில் மாற்று வியாக்கியானங்களுக்கு சற்றும் இடமில்லை.அஷ்டவக்கிரர் உண்மையின்-உண்மையின்  மட்டுமே  வக்காலத்து வாங்குகிறார்.
பகவத் கீதை துவைதிகளுக்கும், அத்வைதிகளுக்கும் விசிஷ்டாத்வைதிகளுக்கும் ஏன் நாத்திகர்களுக்கும் கூட இடமளிக்கிறது. சகுணோபாசனை, நிற்குணோபாசனை இரண்டையும் எற்றுக்கொள்கிறது,
அஷ்டாவக்கிரர் கேட்பவனைக் குறித்து அதிகம் கவலை கொள்ளவில்லை. கேட்பவன் புரிந்துகொண்டால் அவனுக்கு நல்லது;புரிந்து கொள்ளாவிட்டாலும் உண்மை உண்மையல்லாமலாகி விடாது.
.
புரிந்துவிட்டது என்றாலும் அவர் விடுவதாயில்லை.கேட்பவர் புரிந்துகொண்டுவிட்டார் என்று அவருக்கு நிரூ`பணமாக வேண்டும். அஷ்டாவக்கிரரிடமிருந்து நமக்கு எந்த விதமான மத கோட்பாடுகளும் கிடைப்பதில்லை.நாம் அதில் ஒன்றையும் சேர்க்க இயலாது.நம்மை இழந்தால் தான் அவர் சொல்லுகின்ற உண்மை நமக்குப் புரியும்.
ஆகவே இந்த பயணம் ஒரு வித்தியாசமான பயணம்.
 நவீன இந்தியாவின் சிற்பிகளில் யாரும் திலகரோ, காந்திஜியோ, அரவிந்தரோ வினோபாவோ யாரும் அஷ்டாவக்கிரரை மேற்கோள் காட்டியதில்லை.
அஷ்டாவக்கிரர் ஒரு நிர்மலமான ஆகாயம்;அதில் மேகங்கள் இல்லை;சூரிய சந்திரர்க்ளில்லை;உண்மை மட்டுமே உள்ளது.
நாம் எல்லா நாம ரூபங்களையும் அவிழ்த்து விட்டு நிர்வாணமாக இருக்க வேண்டும் .அப்பொழுதுதான் உண்மை கண்ணுக்குத் தெரியும்.
அஷ்டாவக்கிரரை புரிந்துகொள்ள நாம் எந்த விதமான தியானமும் செய்ய வேண்டாம்;கண்ணை மூடிக்கொண்டோ திறந்துகொண்டோ, துளசிமணி மாலையை உருட்டிக்கொண்டோ உருட்டாமலோ ராம நாமமோ வேறு எந்த நாமமோ ஜபிக்கவேண்டாம்..நாம் சாக்ஷி மாத்திரமானால் போதும்.
அஷ்டாவக்கிர கீதைக்குள் நுழையும் முன்  நாம் தெரிந்துகொள்ள வேண்டிய சில விவரங்கள் கீழ்க்காணும் கேள்விகளுக்கான பதில்களிலுள்ளது.

  • இந்த நூல் எந்த காலகட்டத்தில் எழுதப்பட்டது? பகவத் கீதைக்கு முன்னா? பின்னா ?
  •  

    • இதை எழுதியது யார் ?
    •  
    • இந்த நூலின் தன்மை எப்படிப்பட்டது?
    •  
    • இந்த நூல் மற்ற வேதாந்த கிரந்தங்களிலிருந்து எப்படி மாறுபடுகிறது?
    •  
    • இதன் உள்ளடக்கம் யாது
    இவைகளுக்கான பதில்களை அடுத்த ஓசையில் கேட்போம்.

No comments:

Post a Comment