|
2015
|
|
அஷ்டவக்கிர மணிகள்
|
|
|
மணி ஒன்று ஓசை 2
ஏட்டுச் சுரக்காய்
கறிக்குதவுமா?
இந்த
நூலின் தோற்றத்தைக் குறித்து வேறுபட்ட கருத்துக்கள் சொல்லப்பட்டு வருகின்றன.
ராதா
கமல் முகர்ஜீ என்ற சமூக விஞ்ஞானி பகவத்கீதையின்
காலத்தையொட்டியே தான் இந்த நூல் எழுதபட்டிருக்க வேண்டும் என்று
அபிப்பிராயப்படுகிறார்.அதாவது யேசுனாதர் பிறப்பதற்கு 500 வருடங்களுக்குமுன்னால்
எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று அபிப்பிராயப்படுகிறார்..அதற்கு
ஆதாரமாக இரண்டு கீதையிலும் கூறப்பட்டுள்ள கருத்துக்களை உதாரணமாக
எடுத்துக்காட்டுகிறார்.
ஆனால் எடின்பரோ பல்கலை கழகத்தில் சம்ஸ்கிருத பேராசிரியராக இருந்த J.L. ப்ரோகிங்க்டொன்
என்பவரோ இந்த நூல் ஆதி சங்கரர் காலத்திற்கு பின் A.D.800களில் எழுதப்பட்டிருக்கலாம் என்கிறார். ஏனென்றால் இதில்
கூறிப்பட்்டுள்ள கருத்துக்கள் ஆதிசங்கரரின் கருத்துக்களை ஒட்டியே உள்ளது என்பதால்.
சுவாமி சாந்தானன்தபுரி
அத்வைதத்தின் மூலக்கருவான அஜாத வாதத்தின் விளக்கவுரையான மாண்டூக்ய காரிகையின் தத்துவங்களே இதிலும்
காணப்படுவதால் மாண்டூக்கிய காரிகையெழுதிய கௌடபாதருடைய காலத்தைச் சேர்ந்ததாகத்தான் இருக்க வேண்டும் அஷ்டாவக்கிர
கீதை என்கிறார்.
அஷ்டவக்கிர கீதை என்ற பெயரிலிருந்து இந்த
நூல் அஷ்டாவக்கிரர்
என்பவர் எழுதியது என்று
தெரிகிறது .
யார்
இந்த அஷ்டாவக்கிரர் யார்?
“ஏட்டுச் சுரைக்காஇ கறிக்குதவாது”
என்ற வழக்கு மொழியை நாமெல்லாம் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கேட்டிருப்போம். இந்த
வழக்கு மொழியை தன் தாயின் கர்ப்பத்திலிருக்கும் பொழுதே கர்ஜித்தவர் அஷ்டவக்கிரர்
என்று சொல்லப்படுகிறது. அதுவும் யாரைப் பார்த்து அவ்வாறு கூறினாரென்றால் தன்
தந்தையைப்பார்த்து—,தந்தையின் அவரது மாணாக்கர்களுக்கான உப்தேசங்களை கேட்டு.
.
.
அவர் தந்தையோ,மிகுந்த அறிவாளி, முனிசிரேஷ்டர் உத்தாலகரின் பிரியத்துக்குரிய
சீடர்;அவரது அறிவைக்கண்டு மெச்சி குருவே
தன் புத்திரியை மணம் முடிக்கப்பெற்றாவர். அப்படிப்பட்ட வேத விற்ப்பன்னரின்
விளக்கங்களில் குறை கண்டது தாயின் கர்ப்பத்திலிருந்த இன்னும் இந்த மண்ணில் பிறவாத
சிசு.
உத்தாலக
முனிகள் தனது ஆசிரமத்தில் பிரம்மசாரிகளுக்கு வேதம் சொல்லிக்கொடுத்துக்
கொண்டிருந்தார். என்று சாண்டோக்ய உபனிஷத்தில் வருகிறது.
ககோடகன்
என்ற ஒரு மாணவன் அவரிடம் வேதம் பயின்று வந்தான். அவன் எல்லா மாணாக்கர்களையும் விட திறைமைசாலியாகவும்
,புத்திகூர்மையுள்ளவனாகவும் இருந்தான். ஆகவே குருவுக்கு அவனை மிகவும்
பிடித்திருந்தது.
அது
உத்தாலகர் தன் மகள் சுஜாதாவை ககோடகனுக்கு கன்னிகாதானம் செய்து கொடுப்பதில் முடிந்தது.
சுஜாதா
கருவுற்றாள்.
சுஜாதாவிற்கு
தனது மகனை வேதங்களிலும் வேதாந்த்திலும் சிறந்த பண்டிதனாக்க வேண்டும் என்ற
விருப்பம் எழுந்தது.
கருவுற்றிருந்த
சுஜாதா தனது கணவர் நடத்தும் வகுப்புகளில் தவறாமல் ஆஜராக ஆரம்பித்தாள்.
வேத
காலங்களிலேயே கருவிலிருக்கும் சிசு மாதா கேட்கும் பாடங்கள், அனுபவிக்கும்
அனுபவங்கள் எல்லாவற்றையும் புரிந்துகொள்ளக் கூடும் என்று நமது முன்னோர்கள் அறிந்து
வைத்திருந்திருந்தார்கள்.
கருவிலிருந்த
சிசு தன் தந்தையான ககோடகன் சிஷ்யர்களுக்கு சொல்லிக்கொடுக்கும் வேத
வேதாந்தங்களையும் மந்திரங்களையும் கேட்டு கோபம் கொண்டது.
”இது
என்ன? வேத விற்பன்னரான தன் தந்தை புராணங்களிலும் கிரந்தங்களிலும் சொல்லப்பட்டவையை
அறிவு என்று போதிக்கிறார்? ஞானம் என்பது தான் யார் என்று உணருவதல்லவா?”
இப்படி
எண்ணிய குழ்ந்தையின் கூக்குரல் ககோடகனுக்கும் கேட்டது; புரிந்தது.
மேலும்
ககோடகன் ஏதாவது தவறாகச் சொல்லிவிட்டால் மாதாவின் கருப்பையிலிருக்கும் சிசு திருத்த
முற்பட்டதாம்..ஓரு நாள் ககோடகனால் ஒரு சிசு பிறப்பதற்கு முன்பே தன்னை திருத்த
முற்படுவது பொறுக்க முடியாமல் குழந்தையை சபித்து விடுகிறார், “ நீ
எப்படி அஷ்டகோணலாக நெளிந்து கொண்டிருக்கிறாயோ அப்படியே பிறக்கக் கடவது”
இங்கே
தான் அஷ்டாவக்கிர கீதை பிறந்தது.
ஞானம்
என்பது ஏட்டறிவல்ல என்ற அஷ்டவக்கிரரின் கூக்குரலும், அறிவாளியான தந்தைக்கு தன்
அறிவின் மீதும் தன் மீதும் உண்டான மமதையும் சேர்ந்து அஷ்டாவக்கிர கீதை பிறக்க
காரணமாயிற்று.
ஞானம்
என்பது யாது? நான் யார்? மமதை எனும் அஹங்காரம் விளைவிக்கும் கேடுகள் இவை தான்
அஷ்டாவக்கிர கீதையின் மையக் கருத்துக்கள்.
அறிவாளியான
தந்தையின் அஹங்காரத்தினால் குழந்தை அப்படியே அஷ்டகோணலாகப் பிறந்தது. என்பது கதை.
இதே
போல் பிற பெரிய மஹான்களின் பிறப்புகளைக் குறித்தும் கதைகள் உண்டு.
புத்தர்
பிறந்தது அவரது தாய் மரத்தடியில் நின்று கொண்டிருக்கும் பொழுது என்றும் தாய்
நின்று கொண்டே பிரசவித்ததால் குழந்தை தரையில் கால் பதிய பிறந்தது. பிறந்ததும்
எட்டு அடிகள் எடுத்து வைத்து நடந்தது என்றும் கூறுகிறார்கள். இந்த எட்டு அடிகள்
புத்தரின் எட்டு சீரிய கருத்துக்களை குறிப்பிடுவதாக நம்பப் படுகிறது.
‘சீன
நாட்டிலுதித்த ‘தாவொயிச’ த்தின் தந்தையான ‘லாவோட்சே’ பிறக்கும்பொழுதே 80
வயதுடையவராக பிறந்தார் என்பது கதை.அவர் 80 வயதுக்கான ஞானத்துடன் பிறந்ததாக
கூறப்படுகிறது. இந்தக் கதை குறிப்பால் உணர்த்துவது ஞானம் பெற நீண்ட காலம் தேவை
என்பதாகும்.
ஆகவே
இப்படிப்பட்ட கதைகளிலுள்ள ‘myth’ ஐ மறந்து விட்டு இந்த
மஹான்கள் நமக்கு அருளியுள்ள கருத்துக்களில் கவனம் செலுத்துவோம்.
மற்ற குறிப்புகள்
இதிஹாசங்களில் இரண்டு இடங்களில் அஷ்டவக்கிரரைப்
பற்றிய குறிப்பு காணப்படுகிறது.
வால்மீகி ராமாயணத்தில் யுத்த
காண்டத்தில் ராம ராவண யுத்தம் முடிந்த பின் தசரதர் வானுலகத்திலிருந்து ராமனை காண
பூலோகம் வருகிறார்..
அந்த
சந்தர்ப்பத்தில் தசரதர் கூறுவார்,”
“மகனே,
நான் உன்னால் தன்யனானேன். பெற்றவற்கு பெருமை சேர்த்த மகன்
நீ. எப்படி அஷ்டவக்கிரர் தனது தந்தை ககோடரை வந்தியின் பிடியிலிருந்து விடுவித்தாரோ
அதே போல் நீ என்னை பாப சுமையிலிருந்து விடுவித்து விட்டாய்.”
அத்யாத்ம ராமாயணத்தில் ஆரண்ய
காண்டத்தில் ராமரும் இலக்குவனும் கபந்தன் என்ற அரக்கனை வதம் செய்த பொழுது, கபந்தன்
கந்தர்வனாக உருமாறி தன் கதையை கூறுகிறான்.
தான்
முன்பொருமுறை அஷ்டவக்கிர முனிவரைப் பார்த்துச் சிரித்ததாகவும் அவரின் சாபம்
நிமித்தமாகத்தான் இந்த உரு எடுக்க வேண்டி வந்தது.
த்ரேதா யுகத்தில் ராமனால் நீ கொல்லப்படுவாயென்றும் அப்பொழுது உனக்குக்கு சாப
விமோசனம் கிடைக்கும் என்று அஷ்டாவக்கிரர் கூறினாராம்.
அஷ்டம்
என்றால் எட்டு. ஆஷ்டாவக்கிர முனிவரின் உடல் அஷ்ட கோணலாக இருக்குமாம். அந்த
விசித்திரமான உடலைப் பார்த்து தான் கபந்தன் சிரித்தான்.
மஹாபாரதத்தில்
வனபர்வத்தில் அஷ்டவக்கிரரை பற்றிய குறிப்பு வருகிறது.
சூதாட்டத்தில்
தோற்றுப் போன பாண்டவர்கள் திரௌபதியுடன் வன வாசம் செல்கிறார்கள். வனத்தில் அவர்கள்
லோமச முனிவரை சந்திக்கிறார்கள். முனிவர் யுதிஷ்டிராதிகளை மதுபிலா நதியில்
நீராடினால் உங்கள் கஷ்டங்கள் எல்லாம் நீங்கும் என்று கூறுகிறார்.
மதுபிலாவிற்கு
இன்னொரு பெயர் ‘ஸமங்கா’.
முனிவர்
மேற்க்கொண்டு சொன்னார், “ இந்த
சமங்காவில் நீராடியதால்த் தான் அஷ்டவக்கிர முனிவரின் அஷ்ட கோணலாயிருந்த உடல் நேரானது”.
யுதிஷ்டிரர்
கேட்டுக்கொண்டதற்கு இணங்கி,லோமச முனிவர் அஷ்டாவக்கிரரின் கதையை பாண்டவர்களுக்கு
கூறினார்.
மஹாபாரதத்தில்
மூன்று அத்தியாங்களில் அஷ்டவக்கிரரின் பெருமைகள் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment