ரமணஜோதி 70
ஞான மார்க்கமும் பக்திமார்க்கமும்-ரயில் தண்டவாளங்கள்
நின்னெரி யெரித்தெனை நீறாக்கிடுமுன்
னின்னருண் மழைபொழி யருணாசலா
உன் நெற்றிக்கண்
கொண்டு ‘என்னை” எரித்து சாம்பலாக்கிவிடு அருணாசலா;அப்படி எரித்தபின் அந்த சூட்டைத்
தணிக்க என் மீது உன் அருள் மழையை பொழி அருணாசலா “ என்கிறார் பகவன் இந்த
சுலோகத்தில்.
“ நான் யார் “
என்ற விசார மார்க்கத்தில் சஞ்சரித்து நாம் பரமனை அடையாளம் கண்டு கொள்ளும் நிலை
வரும் பொழுது, “ நான் “ எரிந்து போய்விடுகிறேன். ஞானம் பெற்றுவிட்டால் நான் எனும்
அஹம் அழிந்துவிடும் என்று கூறுகிறார்.
ஞானம் என்றால்
என்ன? ஜீவான்மாவும் பரமான்மாவும் ஒன்று என்ற அறிவே ஞானம். அந்த ஞானம் தவம் மூலம்
கிடைக்கப் பெறுகிறது. ‘தபித்தல்’ என்றால் சம்ஸ்கிருதத்தில் உஷ்ணமாகுதல்,சூடு
அனுபவப்படுதல் என்று பொருள். நான் யார் என்ற விசார மார்க்கமாகட்டும் வேறு எந்த
தவமாகட்டும் உஷ்ணத்தை உளவாக்குகிறது. அந்த
தாபத்தில்,சூட்டின் வலிமையால் நமது இகலோக வாசனைகள் எல்லாம் எரிந்து போய்,’ நான்”
என்ற எண்ணமும் எரிந்து போய் எல்லாமே பிரம்மம் தான் மற்றவையெல்லாம் மாயை யினால்
அவித்யையினால் உளவான சிதாபாசமே என்ற உணர்வு ஏற்படுகிறது. அம்மாதிரி ஒரு அனுபூதி
உண்டாகின்ற போது சாமானியர்களால் அந்த சூட்டைத் தாங்கிக்கொள்ள முடியாது
அம்மாதிரியான ஒரு அனுபவத்தை தரணம் செ ய்துவிட்டால் பரமானந்தமே. அதற்கு வேண்டிய
சக்தியை அந்த பரமன் ஒருவனால் மட்டுமே அருள முடியும். ஆகவே தான் பகவான் இந்த
சுலோகத்தில் கண்ட பிரார்த்தனையை முன் வைக்கிறார்.
இந்த பிரார்த்தனை
மூலம் பகவான் ஞான மார்க்கத்தையும் பக்தி மார்க்கத்தையும் இணைக்கிறார். நா
ன் யார் விசார மார்க்கத்தின் மூலம் ஞானம் அடைந்தாலும் பகவானின் கருணை இல்லாமல் ஆத்ம சாக்ஷாத்காரம் நிரந்தரமாகாது.அதற்கு பக்தி மார்க்கத்தில் சஞ்சரித்துத் தான் ஆகவேண்டும்.
. பீஜம் மாம் ஸர்வபூதானாம் வித்தி பார்த்த சனாதனம் !
புத்திர்புத்திமதாமஸ்மி தேஜஸ்தேஜஸ்வினாமஹம் !1
ப .கீ அத். 7 சுலோ 10
பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் ஞான விக்ஞான யோகத்தை
அர்ஜுனனுக்கு உபதேசிக்கும் பொழுது கூறுவார். “பார்த்தா, நான் எல்லா உயிர்களுடைய
மூலாதாரமாக இருக்கிறேன்; நான் தான் எல்லா உயிர்களும் உருவாவதற்கான பீஜமாக,விதையாக
இருக்கிறேன்.நானே அறிவாளிகளின் அறிவாகவும் தவ வலிமையுடையவர்களுடைய தேஜசாகவும்
இருக்கிறேன்”
இதை எவனொருவன்
தெரிந்துகொள்கிறானோ அவனே ஞானி என்கிறார் கிருஷ்ணன். அதாவது எல்லா உயிர்களிலும்
பகவானே இருப்பதை யாரொருவன் அறிந்துகொள்கிறானோ அவனே அறிவாளி;அதுவே ஞானம் என்கிறார்.
அடுத்த
சுலோகத்தில் பகவான் கிருஷ்ணர் கீதையில் சொல்வார்,
“நான் ( பரமாத்மா ) எனும் அறிவு காமத்தையும்
ராகத்தையும் உயிர்களிடமிருந்து நீக்கிவிடுகின்றன;தர்மத்திற்கு முரண்படாத காமமாக
பரமாத்மாவான நானே இருக்கிறேன் “
பலம் பலவதாஸ்மி
காம விராக விவர்ஜிதம் !
தர்மாவிருத்தோ பூதேஷு காமோ-அஸ்மிபரதர்ஷப
!
ப்.கீ. அத் 7 சுலோ 11
கைக்கெட்டாத
பொருள் மீது ஆசை வைப்பது காமம் எனப்படும், கைக்கெட்டும் தூரத்தில் அந்த பொருள்
வந்து விட்டாலோ அதன் மீது தீராத ஒடுங்காத பற்றுதல் ஏற்படுவது ராகம் எனப்படும்.
நான் யார் என்று அறிந்துகொண்டு விட்ட ஞானிகளிடம் காம ராகத்திலிருந்து
விடுபடுவதற்கான சக்தியாக நான் விளங்குகிறேன். அதே நேரத்தில் யக்ஞ
சங்கல்ப்பத்திற்கு உட்ப்பட்ட காமங்களுக்கு நான் உறுதுணையாகவும் இருக்கிறேன்.
எல்லா உயிர்களும்
பரமனே என்ற அறிவு ஏற்பட்டு விட்டால் எல்லா
உயிரினங்களின் தர்மத்திற்கு விரோதமில்லாத ஆசையை நிறைவேற்றுவதற்கு தடையேதும்
கிடையாது. ஞானியாகப்பட்டவன் யக்ன சங்கல்பத்திற்கு உட்பட்டு கர்மம் இயற்றவேண்டும்
என்று பொருள்
ஆனால் அந்த
ஞானத்தை எப்படி அடைவது? அடைந்துவிட்டால் அதில் எப்படி உறுதியாக நிற்பது?
ஒரு சிறந்த
பக்தனால் மட்டுமே அப்படிப்பட்ட ஞானத்தை அடைய முடியும்.பகவத் கீதை 12 ஆம்
அத்தியாயத்தில் பக்தனது இலக்கணங்களை விவரிக்கும் போது பகவான் கிருஷ்ணர் கூறுவார்:
“அத்வேஷ்டா ஸர்வபூதானாம் மைத்ர: கருண ஏவ ச !
நிர்மமோ நிரஹங்கார: ஸமது: கஸூக: க்ஷமீ !!
ஸந்துஷ்ட: ஸததம்
யோகீ யதாத்மா த்ருடனிஸ்சய: !
மய்யர்பிதமனோபுத்திர்யோ
மத்பக்த: ஸ மே ப்ரிய: !!
ப.கீ அத் 12 சுலோ 13-14
உயிர் அனைத்திடத்தும் வெறுப்பின்றி ,நட்பும் கருணையும் உடையவனாய் ,மமகாரம்
அகங்காரம் அற்று, இன்ப துன்பங்களை சமமாக யாரொருவன் கருதுகிறானோ எப்பொழுதும்
பொறுமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறானோ தன்னடக்கமுடையவனாகவும் திட சித்தமும்
உள்ளவனாய் இருக்கிறானோ----“ இதுவரை நாம் கண்டது ஞானியின் லக்ஷணங்கள்.
இந்த லக்ஷணங்கள்
உள்ளவன் யாரோ அவன் பரமாத்மாவிடம் தன் மனம் ,புத்தி இரண்டையும் சமர்ப்பித்து
சரணாகதி அடைகிறானோ அவன் சிறந்த பக்தனுமாகிறான்.
இப்படி ஞானமும்
பக்தியும் ஒருங்கிணைந்து ஒரு மஹோன்னதமான நிலை அடையும்போது ஆத்ம சாக்ஷாத்காரம்
சம்பவிக்கிறது.
மேலும் கிருஷ்ணர்
பக்தனைப் பற்றி கூறுகிறார்:
“யஸ்மான்நோத்விஜதே
லோகோ லோகான்னோத்விஜதே ச ய: !.
ஹர்ஷாமர்ஷ
பயோத்வேகைர் முக்தோ ய: ஸ சமே ப்ரிய: !
ப.கீ.12
அத் 15 சுலோ
யாரொருவனிடமிருந்து
உலகிற்கு இடர் இல்லையோ யார் உலகத்தினின்று இடர் படுவதில்லையோ ,யார் களிப்பு, கோபம்,
அச்சம், கலக்கம் இவைகளினின்று விடுபட்டவனோ—(அதாவது எவன் ஒருவன் சரியான ஞானியாக
இருக்கிறானோ ) அவனே எனக்கு உகந்தவனாகிறான்.(அதாவது சிறந்த பக்தனாகிறான்.)
அனபேக்ஷ:
சுசிர்தக்ஷ உதாசினோ கதவ்யத: !
ஸர்வாரம்பபரித்யா
கீ யோ மத்பக்த: ஸ மே ப்ரிய: !!
ப.கீ அத்.12 சுலோ 16
எவனொருவன் இந்திரியங்களின் தூண்டுதலுக்கு இரையாகாமல், அதன் விளைவாக உளவாகும் ஆசைகளிடமிருந்தும் தப்பித்து, தோஷமில்லாதவனாக தூயவனாக இருக்கிறானோ,தனது இஷ்டத்திற்காக கர்மம் இயற்றாமலிருக்கி(றானோ ( அவன் ஞானி யகிறான்) அவனே எனக்கு இனியவனாகிறான். நல்ல பக்தனாகிறான்.)
எவனொருவன்,இன்பத்தையும்
,துன்பத்தையும் ப்ரியாப்ரியங்களையும் !நன்மை தீமைகளையும் சமமாக பாவிக்கிறானோ ( அவனே ஞானி) அவனே சிறந்த பக்தனாகிறான்.
பகவான் கிருஷ்ணர், தான் இது வரை சொன்னதை கோர்த்து முடிவுரையாக கூறுகிறார் ,”
சுபா சு யோ ந ஹ்ருஷ்யதி ந த்வேஷ்டி ந சோசதி ந காங்க்ஷதிபபரித்யா கீ பக்திமான்ய: ஸ மே ப்ரிய: !!
ப.கீ. அத்.12 சுலோ. 17
எவனொருவன்
பகயையும் நட்பையும் மானத்தையும் அவமானத்தையும் குளிரையும் வெப்பத்தையும்,
இன்பத்தையும் துன்பத்தையும், இகழ்ச்சியையும் புகழ்ச்சியையும் சமமாக கருதுகிறானோ
கிடைப்பதைக் கொண்டு எவனொருவன் திருப்தியடைகிறானோ அவனே ( சிறந்த் ஞானி) சிறந்த
பக்தன்;
ஸம: சத்ரௌ ச
மித்ரே ச ததா மானாபமானயோ: !
சீதோஷ்ணஸூகது:கேஷு
ஸம: ஸங்கவிவர்ஜித: !!
துல்ய
நிந்தாஸ்துதிர்மௌனீ சந்துஷ்டோ யேன கேனசித் !
அனிகேத:
ஸ்திரமதிர்பக்திமான் மே ப்ரியோ நர: !!
ப. கீ.அத் 12 சுலோ 18-19
இவ்வண்ணம் பகவத்
கீதையில் விரிவாக ஞானியின் லக்ஷணங்களையும் பக்தனின் லக்ஷணங்களையும்
கூறப்பட்டுள்ளதை பகவான் இரத்தின சுருக்கமாக நமக்கு வெளிவாக்குகிறார் இந்த
சுலோகத்தின் மூலம்.
நின்னெரி
யெரித்தெனை நீறாக்கிடுமுன்
நின்னருண் மழைபொழி யருணாசலா
பக்தியும்
ஞானமும் ரயில் தண்டவாளங்கள் போல் சேர்ந்தே போய்கொண்டிருக்கும்.ஒன்று மட்டுமிருந்தால்
ஊர் போய் சேர முடியாது.
No comments:
Post a Comment