ரமணஜோதி 69
எல்லாம் ஒன்றே
நாணிலை நாடிட நானா யொன்றி நீ
தாணுவா நின்றனை யருணாசலா
“நாணமில்லாமல் உன்னைத் தேடி
வந்தேன் .உன்னை கண்டுகொண்டேன். ஆனால் நீ அசையாமல் தூண்
போல் நிற்கின்றாய் உனக்கு இது வெட்க்க் கேடாகத் தோன்றவில்லை.நானென்
செய்ய்?” என்று கேட்கிறார் பகவான் இந்த சுலோகத்தில்
கொஞ்சம் ஆழ்மாக
யோசித்தோமென்றால் அத்வைத தத்துவத்தின் சாரம் இந்த சுலோகத்தில் வெளிக்கொணருகிறார்
பகவான்.’உன்னைத்தேடி வந்த நான் வேறு, நீ வேறு என்று என்னியிருந்தேன். ஆனால் உன்னை க் கண்டவுடன் புரிந்துகொண்டேன்
நீ எல்லாவற்றிர்கும் ஆதாரமான அசலமான அருணாசலமேதான் என்று. அருணாசலம் எப்படி சர்வ
வியாபியாக உள்ளதோ அது போல் நீயும் சர்வ வியாபியாக் உள்ளாய்”.
அதர்வ வேதத்தில்
காணும் ஸ்க்தம்ப சூக்தத்தில் பரமனை இந்த உலகத்தை தாங்கி நிறுத்தியியுக்கும் தூணாக
கூறப்பட்டுள்ளது.
பகவத் கீதை 9ஆம்
அத்தியாயம் ராஜவித்யா ராஜகுஹ்ய யோகத்தில் பகவான் கிருஷ்ணர் கூறுகிறார்,:
“ஸமோ-அஹம் ஸர்வபூதேஷு ந மே த்வேஷ்யோஅஸ்தி ந ப்ரிய: !
யே பஜந்தி து மாம் பஜந்த்யா மயி தே தேஷுசாஅபியஹம் !!
சுலோ
20 அத் 9
“ நான் எல்லா
உயிர்களிடத்திலும் சமமாயிருக்கிறேன்,. எனக்கு பகைவனுமில்லை; நண்பனுமில்லை; ஆனால் என்னை
பக்தியோடு பஜிக்கிறவர்கள் என்பால் உள்ளர்; நான் அவர் பால் உள்ளேன்”
ஸூரிய ஒளி எல்லா
வஸ்துக்களின் மீது ஒறே மாதிரி படிகிறது;ஆனால் சிலது கருமையாகத் தெரிகிறது,சிலது
வெண்மையாகத் தெரிகிறது.நீறம் மாறுவது அந்த அந்த பொருள்களின் தூய்மையைப் பொறுத்து
உள்ளது.
தூய்மை
களங்கமடைவது பிரகிருதியில் கிடைக்கின்ற ரஜோ தமோ சாத்விக் குணங்களல் உண்டாகிறது.
திரு அருட்பா
நாலாம் பாகம் 61ஆம் சுலோகத்தில் இராமலிங்க
அடிகளார் கூறுவார்:
கண்ணெல்லாம்
நிரம்பப் பேரொளி காட்டிக்
கருணைமா மழைபொழி முகிலே
விண்ணெல்லாம் நிறைந்த விளக்கமே என்னுள்
மேவிய மெய்மையே
மன்றுள்
எண்ணெலாம் கடந்தே இலங்கிய பதியே
இன்று நீ ஏழையென்
மனத்து
புண்ணெல்லாம்
தவிர்த்து பொருளெல்லாம் கொடுத்துப்
புகுந்தெனதுளங்கலந்தருளே 1
‘நீ உன் கருணை
மழயால் என்னுள்ளத்து புண்ணெல்லாம் ஆற்றி என்னுள்ளே மறைந்து கிடக்கும் அந்த
மெய்மையை சத் ஆனந்தனை எனக்கு காட்டுவாய் ‘ எங்கிறார்.
உள்ளது நாற்பது
துவக்கத்தில் பகவான் ரமணர் கூறுவார்:
“ பார்வைசேர்
நாமுலகங் ண்டலா நானாவாஞ் சத்தியுள
வோர் முதலை யொப்ப
லொருதலையே-----நாமவுருச்
சித்திரமும்
பார்ப்பானுஞ் சேர்படமு மாரொளியு
மத்தனையுமூ தானா
மவன்
புறக்கண்ணை மூடி
அககண்ணை திறந்து பார்ப்பவர்களுக்கு எல்லாருடைய அந்தக்கரணத்திலும்
ஒளிவிட்டுக்கொண்டிருக்கின்ற முழுமுதற் சக்தியைக் காணமுடியும்;அந்த சக்தியின் பல
உருவங்களும் நாமங்களும் எல்லாம் ஒன்று தான் என்றும் தெரியும்.பார்க்கப்படுகின்றா
படமும்,பார்ப்பவனும் படம் தெரிகின்ற பிரபஞ்சமான திரையும் அந்தக் காட்சிகளை நமக்கு
காட்டுகின்ற ஒளியும் எல்லாம் ஒன்றே—பிரம்மமே என்று புரியும்.
பலதாக தெரிந்து
ஒன்றான அந்த பிரம்மத்தை மறிக்கும் மாயையும் அதுவே என்று புரியும்.
இதையே ஸ்ரீ
நாராயண குருதேவன் ஞான நவரத்ன மஞ்சையில் கீழ்க் கண்டவாறு கூறியுள்ளார்:
ஆராயுகில் திரகள்
நீராயிடுன்னு ஃபணி
நாராயிடுன்னு குடவும்
பாராயிடுன்னு நேராயிடுன்னுலக
மோராய்கிலுண்டகிலவும்
வேராய
நின்கழலிலாராதனம்ம் தரண-
மாராலிதின்னொரு வரம்
நேராய் வன்னிடுக
வேறாருமில்ல கதி
ஹே! ராஜயோகஜனனீ!
விவகார உலகில் ஒரு காரியம் இருந்தால் ஒரு காரணம்
இருக்கும் என்று நாம் நம்புகிறோம்.
காரணங்கள் சிலனேரங்களில் வெளிப்படையாகத் தெரியும்;சில நேரங்களில் ஆராய்ந்து
பார்த்தால் தான் தெரியும்.. இந்த விவகார உண்மையை நாராயண குரு தேவன் அழகுற கவிதை
வடிவில் கூறியுள்ளார்;
“சிறிது
ஆராய்ந்து பார்த்தால் அலைகள் எல்லாம் நீரே என்று புரியும்;உருவம் தான்
மாறுபடுகிறது. . இருட்டில் நாம் காணுகின்ற ஃபணி ( பாம்பு ) விளக்கின் உதவியோடு
பார்க்கும்போது கயிறு என்ற ஊண்மை தெரிகிறது. பானைகல் எல்லாம் மண் தான் என்று
யோசித்துப் பார்த்தால் புரியும்.ஒரே பொருள் பல உருவில் தெரிகிறது.அப்படித்தான்
இந்த பிரபஞ்சமும்.இந்த பிரபஞ்சத்திற்கும் ஒரு ஆதாரம்
அவரே இருக்க வேண்டும்;எப்படி பானகளுக்கெல்லாம் மண் மூலமாக இருக்கிறதோ அது போல். அந்த மூலம் தான் சத் எனும் பிரம்மம்;எல்லாருள்லும் ஒளிர்ந்துகொண்டிருக்கின்ற சுயம் பிராகாசமான பரமாத்மா..இதை புரிந்து கொள்ள எனக்கு அருள வேண்டும்,தாயே,ஜகன்மாதா” என்று நாராயண குருதேவன் வேண்டுகிறார்.
எல்லாம் ஒன்றே என்ற உண்மை புரிந்துவிட்டால் நாமக்கல் கவிஞர் கூறியது போல்:கடவுளை அறிந்தவராவர்
எல்லாம் ஒன்றே என்ற உண்மை புரிந்துவிட்டால் நாமக்கல் கவிஞர் கூறியது போல்:கடவுளை அறிந்தவராவர்
அனைவரும் மதித்திட தகுந்தவராவார்
எவர்
“துன்பப் படுவோர் துயரம் சகியோர்
துடி துடித் தோடி துணை செய்ய புகுவார்
இன்பம் தனக்கென எதையும் வேண்டார்
யாவரும் சேவைகள் பூண்டார்
பசியால் வாடின எவரையும் பார்த்துப்
பட்டினி தனக்கெனப்
பரிதபித்தார்த்து
விசையாய்
முடிந்ததை விருப்புடன் கொடுப்பார்
வீண் உபசாரம் விளம்புதல்
விடுப்பார்.
No comments:
Post a Comment