ரமணஜோதி 67
மாதுர்ய பக்தி
முன்னால் ஒரு மடலில் நாம் பக்தி
மார்க்கத்தைக் குறித்து சிறிது பார்த்தோம்.
மீண்டும் ஒரு முறை ஞாபகப்
படுத்திகொள்வோம்.அப்பொழுது தான் பக்தியில் சிருங்கார பாவத்தைக் குறித்து புரிந்து கொள்ள முடியும்.
பாரதீய கலாச்சாரத்தில் பக்தியை இரண்டு விதமாக பிரித்துள்ளார்கள்:
1.நிராகார/நிர்குண பக்தி—அருவ வழிபாடு
2. ஸகார/ஸகுண பக்தி- உருவ
வழிபாடு.
வேதங்களும்
உபனிஷத்துக்களும் பகவத் கீதையும் இந்த இரண்டு பக்தி மார்க்கங்களையுமே
சிலாகிக்கின்றன.
ஆனால் உபனிஷத்துக்கள்
நிர்குண பக்தியை ஒரு படி மேலாக கருதி பராமரிசிக்கின்றன.
பக்தி இலக்கியங்கள் நிர்குண
–சகுண பக்தி மார்க்கங்களுக்கு இடையேயுள்ள ஒரு விதமான இறுக்கத்தை
வெளிப்படுத்துகின்றன.
கடவுளை ஒரு தத்துவ
பிரதீகமாக மட்டும் பார்த்தால் அதன் தெய்வீக தன்மை நஷ்டப்பட்டு அவனை/அதை பாட முடியாமல் போய்விடும். ஆகவே தத்துவத்தன்மையையும் மீறின ஒரு உருவம் கொடுக்க வேண்டி
வருகிறது. அதே போல் வைணவத்திலும், கடவுளை புருஷோத்தமனாக சித்திரிக்கின்ற அதே
வேளையில் அவனில் ஒரு ‘பராத்துவம்’ நமக்கு அன்னியமான ஒரு சக்தியைக் காணமுடிகிறது..
ஆனால் ஆழ்வார்களின்
பாசுரங்களில் சகுண பக்தியே மேலோங்கி நிற்கிறது.
நாலாயிரம் திவ்ய
பிரபந்தங்கள்-ஆண்டாளின் திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும் உட்பட
---சகுணபக்தியையே பிராதன அடிப்படையாக கொண்டுள்ளது.
ஆனால் எல்லா பக்தி
மார்க்கங்களுக்கும் ஒரு சித்தாந்த அடிப்படையும் உண்டு.
பகவத் கீதையில் காணும்
கீழ்கண்ட சுலோகங்கள் இந்த தாத்துவிக அடிப்படையை விளக்குகின்றன.
1. யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத !
அப்யுதானம்தர்மஸ்ய ததாத்மனாம் ஸ்ரஜாம்யஹம்
2 பரித்ரானாய சாதூனாம் வினாசாய ச துஷ்க்ருதாம்
தர்மசன்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி
யுகே யுகே
3. ஜனம் கரம்ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்துவதஹ : !
த்யக்த்வ தேஹம் புனர்ஜன்ம நைதி மா மேதி சோஅர்ஜுனா
ப.கீ
அத்த் 4 சுலோ 7-9
பகவத் கீதையில்
பராமரிசிக்கப்பட்டுள்ள பக்தி புத்தியை அடிப்படையாககொண்டது. ஆழ்வார்களின் பக்தியோ
உணர்வு பூர்வமானது.
நாரத
பக்திசூத்ரத்தில் கீழ்க்கண்டவாறு கூற்ப்பட்டுள்ளது:
குணமாஹாத்ம்யாசக்தி
ரூபாசக்திபூஜாசக்தி
ஸ்மரண்சக்தி
தாஸ்யாசக்தி
சாக்யாசக்திவாட்சல்யாசக்தி
காந்தாசக்தி
ஆத்மனிவேதனாசக்தி
தன்மயாசக்திபரமவிராஹாசக்திரூப
எக்தாப்யேகதாஷ்த
பவதி
சுவாமி சின்மயானத
கூறுவார் ‘பக்தி அன்பின் வெவ்வேறு விதமான வெளிப்பாடு. .கடவுளை அவனது குணங்களுக்காக
பக்தி செலுத்துவது,அவனது உருவ அழகுக்காக பக்தி செலுத்துவது,, அவனை பூஜிப்பதிலுள்ள
ஆசக்தியினால் உளவாகின்ற பக்தி,அவனை நினைத்து அந்த நினைவிலேயே இன்பம் காணுகின்ற
பக்தி,அவனுக்கு சேவை செய்வதில் பெறுகின்ற இன்பங்காணுகின்ற பக்தி, அவனுடன் நட்பு
பாராட்டி நண்பனாக காணும் பக்தி, குழந்தையாகக்கண்டு வாத்சல்யம் செலுத்தும் பக்தி,
நாயகனாக,காதலனாக காணும் பக்தி, அர்ப்பணிக்கின்ற பக்தி, தானும் அவனும் ஒன்றே என்று
எண்ணுகின்ற பக்தி, அவனை பிரிந்திருக்கின்ற போது ஏற்படுகின்ற விரஹ தாபத்திலிருந்து
உள்வாகும் பக்தி இப்படி பதினோரு விதமாக பக்தி வெளிப்படுகிறது. ஆனால் அடிப்படை
ஆண்டவனிடம் மனிதர்களுக்குள்ள அன்பு, காதால்,பாசம் இவைதான் தான் பக்தியாக
பரிணமிக்கிறது.’
டாக்டர் ஜயராமன்
என்ற அறிஞர் ஆழ்வார்களின் பக்தியையும், இந்தி மொழியில் வெளியாகியுள்ள பக்தி
இலக்கியங்களையும் பரிசீத்த பிறகு பக்தியை ஐந்து வகையாக பிரிக்கலாம் என்கிறார்:
தாஸ்ய, ஸாக்ய,வாத்சல்ய ,மாதுர்ய ,நிர்வேத என்ற, ஐந்து விதமான பக்தி.
நம்மாழ்வாரின்
பாசுரங்களில் தாஸ்ய பக்தியை நாம் காண முடிகிறது
உனக்கு பணிசெய்திருக்கும்
தவமுடையேன்
இனிப்போய்
ஒருவன்;தனக்குப்பணிந்து
கடைதலைனிற்கை;நின்சாயையழிவுகண்டாய்
புனத்தினை
கிள்ளிப்புதுவவிகாட்டி
உன்பொன்னடிவாழ்கவென்று
இனக்குறவர் புதியதுண்ணும்
எழில் மாலிருஞ்சோலை
எந்தாய்.
( பெரியாழ்வார்
திருமொழி—ஐந்தாம்பத்து—455)
ஐந்தாம் பத்தை
ஆரம்பிக்கும்போதே பெரியாழ்வார் கூறுவார்:
நன்மை தீமைகள்
ஒன்றும் அறியேன்
நாரணா ! என்னும் இத்தனையல்லால்
புன்மையால்
உன்னைப் புள்ளுவம் பேசிப்
புகழ்வான் அன்று
கண்டாய் திருமாலே !
ஸாக்ய பக்திக்கு
அர்ஜுன-கிருஷ்ண நட்பை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
பெரியாழ்வாரின்
பாசுரங்களில் வாத்சல்ய பக்தியின் ஆழமான பிரதிபலிப்பையும் காணலாம்
தன்னோராயிரம் பிள்ளைகளோடு, தளர் ந்டையிட்டு வருவான்.
பொன்னேய்
நெய்யோடு பாலமுதுண்டு, ஒரு புள்ளுவன் பொய்யே தவழும்
மின்னேர்
நுண்ணிடை வஞ்சமகள் கொங்கை துஞ்ச வாய் வைத்த பிரானே
அன்னே !உன்னை அறிந்துகொண்டேன்; உனக்கு அஞ்சுவன் அம்மம்
தரவே !
தன்னை தாய் யசோதையாகவே
பாவித்து கொஞ்சும் மொழி பேசும் பெரியாழ்வாரின் மூன்றாம் பத்தில் முதல் பாசுரத்தில்
மேற்க்கண்டவாறு கொஞ்சுகிறார்.
மாதுர்ய பாவம்
சம்போக சிருங்கார் (bridal mysticism) என்றும்
கூறப்பட்டுள்ளது.
இந்த சிருங்கார பாவம்
திரு நங்கை ஆழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள்
இம்மூன்று ஆழ்வார்களின் பாசுரங்களிலும் முந்தி நிற்கிறது.
திருப்பாவையில்
ஆண்டாள் நாச்சியார் பரமனை புகழ்ந்து பாடும்பொது ஒரு பக்தையாக இன்றி ஒரு காதலியாகவே
மாறிவிடுகிறார்கள்
வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச்
செய்ய்யும்கிரிசைகள் கேளீரோ,பாற்கடலுள்
பைய துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றாதோம்
ஐயமும் பிசையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறு எண்ணி உகந்தேலேர் ம்பாவாய் .
காதலியின்
பொறாமையை மற்ற பெண்கள் மீது மட்டுமல்ல உயிரற்ற ஜட பொருள்கள் மீதும் வசை
பாடுகிறார்கள்.பெருமை வாய்ந்த நாச்சியார் திரு
வாய்மொழியில்:
கற்பூரம் நாறுமோ
? கமலப்பூ நாறுமோ ?
திருப்பவள்ச்
செவ்வாய்தான் தித்திக்குமோ ?
மருப்பொசித்த
மாதவன் தன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன்
சொல்லாழி வெண்சங்கே !
அந்த மாதவனின் வாய்ச்சுவையில் கற்பூர வாசனை கிட்டுமோ? தாமரையின் மணம் வீசுமோ? பாஞ்ச்ஜன்யம்
என்ற அந்த வெண்சங்கே,உனக்கு கிடைத்த பாக்கியம் எங்களுக்கு கிடைக்கவில்லையே?நீ என்ன
பேறு செய்தாய் கண்ணனின் செவ்விதழ்களின் இவ்வளவு அருகில் இருப்பதற்கு?
பெண் படையார் உன்மேல் பெரும் பூசல் சாற்றுகின்றார்
பண் பல
செய்கின்றாய் பாஞ்ச சன்னியமே
விரஹ தாபத்தை
எப்படி சொல்கிறார் நாச்சியார் பாருங்கள்:
விண்ணில மேலாப்பு
விரித்தார்ப்போல் மேகங்காள்
தெண்ணீர்பாய்! வேங்கடத்து என் திருமாலும் போந்தானே ?
கண்ணீர்கள்
முலைக்குவட்டில் துளி சோரச் சோர்வேனை
பெண்ணீர்மை
யீடழிக்கும் இது தமக்கு ஒர் பெருமையே?
மாமுத்த நிதிசொரியும் மாமுகில்காள் வேங்கடத்துச்
சாமத்தின் நிறங்கொண்ட தாடாளன் வார்த்தையென்னே
காமத் தீயுள்
புகுந்து கதுவபட்டு இடைக்கங்குல்
ஏமத்தோர் தென்றலுக்கு
இங்கிலக்காய் நானிருப்பேனே
பெரியாழ்வார் தாஸ்ய மாதுர்ய பக்தியை மட்டுமின்றி பூரண சரணாகதி மூலம் பரமாத்மாவுடன் இரண்டற்க் கலக்க்வும் விழைகிறார். அக்கரையென்னுமனத்தக் கடலுள் அழுந்தி உன் பேரருளால் இக்கரையேறி இளைத்திருந்தேனை அஞ்சேலென்று கைகவியாய்
எத்தனைகாலமும் எத்தனையூழியும்
இன்றொடு நாளையென்றே
இத்தனைகாலமும்
போய்க்கிறிப்பட்டேன் இனி உன்னை போகலொட்டேன்
பகவான் ரமணரின்
அக்ஷரமணமாலையில் ‘தொட்டருட்கை பட்டு’ விட்டால் நான் நஷ்டமாய்விடுவேன் என்பது
பெரியாழ்வாரின் மேற்கூறிய கருத்தை ஆமோதிப்பது போலிருக்கிறது
மீண்டும்
சந்திப்போம் அடுத்த மடலில்.
No comments:
Post a Comment