Friday, 6 March 2015

ரமணஜோதி 89

ரமணஜோதி 89

 

பேய்களை விரட்டுவோம்


பேய்த்தனம் விடவிடாப் பேயாப் பிடித்தெனைப்
          பேயனாக்கினையென் னருணாசலா
“ என்னைப் பிடித்திருந்த பேய் ஒரு வழியாக விட்டதென்”று நினைத்தால், விடாத பேயாய் நீ என்னைப் பிடித்துக் கொண்டு என்னை பித்தனாக்கி விட்டாய், அருணசலா “ என்று பகவான் ரமணர் இந்த சுலோகத்தில் நிந்தா ஸ்துதி செய்கிறார்.
முதலில், நம்மைப் பிடித்துகொண்டு தொந்திரவு செய்து வந்த அந்த பேய்கள் எவை என்று பார்ப்போம்.
கைவல்ய நவ நீதத்தில் தாண்டவராயன் பிள்ளை, இந்த பேய்களை, “பொன்னில மாதராசை” என்று வருணிக்கிறார்.
எந்த ஒரு விஷய வாசனையாகட்டும் அது ஒன்று பொன் –பொருள், அல்லது நிலம்  சம்பந்தப்ப்ட்டதாக இருக்க வேண்டும்; இல்லை அது பெண் சம்பந்தப் பட்டதாக இருக்க வேண்டும்; அல்லது  
இராமாயண காவியமே இராவணனின் தங்கை சூர்ப்பணகையின் ‘பாலின” இந்திரிய வாசனையாலும், பிறகு அவள் தூண்டுதலின் பேரில் இராவணனில் எழுந்த பெண்ணாசையாலும் உண்டானது. அதற்கு சற்று முன்னால் சென்று பார்த்தால்,இராமனின் வனவாசம் கைகேகியின் மண்ணாசையால்—தன் புத்திரனான பரதனுக்கு இராஜ பதவி வேண்டும் என்ற ஆசையால் விளைந்தது.
மஹாபாரதம் முழுவதும் பெண்ணாசையும் மண்ணாசையும் தாண்டவமாடுகின்றன.
பீஷ்மர் காசிராஜனின் பெண்களை சிறை எடுத்து வந்தது தனது சகோதரனின் பெண்ணாசைக்காக ! ஏன் ? பீஷ்மர் சபதம் செய்ததே தன் தந்தையின் பெண்ணாசைக்காகத் தானே ! ..பாண்டவ-கௌரவ போரே மண்ணாசையால் விளைந்தது.அது குருக்ஷேத்திரப் போரில் சென்று முடிந்தது;சர்வ நாசம் விளைந்தது.
பொன்-பெண்-நிலம் என்ற முன்றின் மீதுள்ள பற்றே பேய்த்தனமாக நம்மை பிடித்து ஆட்டுகின்றன. ஏன் இந்த மூன்றை மட்டும் குறிப்பிட்டு கூறவேண்டும்?
உலகில் விஷய  வாசனைகள் அனேகமாக இருந்தும் ஏன் இந்த மூன்றை மட்டும் குறிப்பிட வேண்டும்?
ஏனென்றால் எல்லா ஆசைகளும் ஏதோ ஒரு விதத்தில் இந்த மூன்றில் அடக்கமாக இருப்பதால்த் தான்.
யோக வாசிஷ்டத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது:
     மனைவியு மகரும் பொன்னு மமதைசெய் தமுதம் போல
     நினைவினா னேயஞ் செய்து  நீணிலத் துள்ள  வெல்லா
     மனையவர்க் காக செய்வர்---
பெண்ணிற்காகவோ பொருளுக்காகவோ எதர்க்காகவென்றாலும் அது மமதையால்- மமாகாரத்தால்- அஹம்காரத்தால் விளைகிறது..என்கிறது வாசிஷ்டம்
இதே கருத்து பாகவதத்திலும் கீழ்க்கண்டவாறு சொல்லப்பட்டுள்ளது:
     விழைவெனப்ப டுகின்றது மென்மெல
     வழல்விரிந்த கனகத் தரும்பிமென்
     மழலை மாதர் மருங்கிற் படர்ந்துபைங்
     குழவி மீதுகொழுந்துவிட்டொங்குமால்

அருண்கிரினாதரும் இதையே கூறியுள்ளார். “மூவேடணையென் றுமுடிந்திடுமோ” என்று.
பட்டினத்தாரும் இதையே நினைத்து புலம்புகிறார்:
     கன்னிவன நாதா கன்னிவன நாதா
     மூலமறியேன், முடியும் முடிவறியேன்
     ஞாலத்துள் பட்டதுயர் நாட நடக்குதடா !
     அறியாமை யாம்மலத்தால் அறிவுமுதற்கெட்டனடா !
     பிரியா வினைப்பயனால் பித்துப் பிடித்தனடா.
     தனுவாதி நான்கும் தானாய் மயங்கினடா
     மனுவாதி சத்தி வலையிலகப்பட்டனடா
     மாமாயை யென்னும் வனத்தில் அலைகிறண்டா
     தாமாய் உலகனைத்தும் தாது கலங்கிறண்டா
     கன்னி வன நாதா! கன்னிவன நாதா !
     மண்ணாசைப் பட்டேனை  மண்ணுண்டு போட்டதடா
     பொன்னாசை பெண்ணாசை போகேனே என்குதே
     மக்கள்சுற்றத் தாசை மறக்கேனே யென்குதே
     திக்கரசாம் ஆசையது தீறேனே யெங்குதே
     வித்தைகற்கு மாசையது விட்டொழிய மாட்டேனே யென்குதே!

ஸ்வாமி வித்யாரண்யர் இதே கருத்தை வேறு வித மாகக் கூறுகிறார்: விஷய வாசனைகள் மூன்று வகைப் பட்டவை :
1.புகழாசை
2.அறிஞர் என்று போற்றப் பட வேண்டும் என்ற ஆசை
3.தேஹ வாசனை
முதலில் கூறிய இரண்டும் நடைபெற இயாலாத ஆசைகள். ஒரு நாளும் ஒருவரும் எல்லாராலும் போற்றப்பட மாட்டார். யாராவது சிலர் குறை சொல்லுவர். போற்றுவர் உண்டென்றால் தூற்றுவரும் உண்டு..ஸக்ஷாத் மஹாலக்ஷ்மியின் அவதாரமான ஸீதா பிராட்டியாரையும் குறை கூறினர் சிலர் ராமாயண காலத்தில்..எல்லோரையும் எப்பொழுதும் யாராலும் திருப்திப் படுத்த முடியாது. ஆகவே நம்மை பாராட்டுவர்களிடம் பிரியமும், குறைகாண்பவர்களிடம் வெறுப்பும் உளவாவது உலக இயற்கை.
கல்வியறிவும் இதே மாதிரித் தான். கல்விக்கான தாஹமும் மூன்று வகைப் பட்டது.
ஒன்று எல்லாம் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற தாகம். எல்லாம் தெரிந்துகொள்வது சாத்தியமான காரியமல்ல. இதற்கு நமது சாஸ்திரங்களிலும் புராணங்களிலும் நிறைய உதாரணங்கள் காணலாம். பரத்வாஜ முனிவர் சிறந்த அறிஞர்.மூண்று ஜன்மங்கள் போதவில்லை அவருக்கு வேதங்களையும் சாஸ்திரங்களையும் புரிய வைப்பதற்கு, தேவேந்திரன் வர வேண்டி வந்தது; கற்பதற்கு..அவருக்கு இது இயலாத காரியம் என்று புரிய வைப்பதற்கு
இரண்டாவது வேதங்களிலும் வேத புத்தகங்களிலும் ஏற்படுகின்ற ஆழமான பற்றுதல். துர்வாச முனிவர் எல்லா வேதபுத்தகங்களையும் கற்றறிந்து, எடுத்துக்கொண்டு பரமேசுவரனைக் காணச் சென்றார். இதை கண்ணுற்ற  நாரதர், “ என்ன  முனிஸ்ரேஷ்டரே, இப்படி கழுதை போல் பொதி சுமந்து கொண்டு வருகிறீரே?” என்று கேலி பேசினார்.
துர்வாச முனிவரின் இயல்பு கண்மூடித்தனமான கோபம். அவர் நாரதரின் கிண்டலைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் எல்லா கிரந்தங்களையும் சமுத்திரத்தில் தூக்கி எறிந்து விட்டார்.
மஹாதேவன் அவரை சமாதானப் படுத்தி தான் யார் என்று உண்ர்வதே சிறந்த அறிவு; புத்தக ஞானம் இதற்கு உதவவில்லையென்றால் அந்த அறிவினால் பலனே இல்லை என்று புரிய வைத்தார்.
மூன்றாவது வாசனை,சற்றும் வளைந்து கொடுக்காத சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுத் தான் நடந்துகொள்ள வேண்டும் என்ற நம்பிக்கை. விஷ்ணு புராணத்தில் வரும் தாஸுரனின் கதை இதற்கு உதாரணம். சற்றுக் களங்கப் படாத இடத்தில் யாகாதி கர்மங்கள் செய்திட தாசுரன் உலகம் முழுவதும் சுற்றி வந்தும் ஒரு இடம் கூட கர்மங்கள் செய்வதற்கு லாயக்கில்லை என்று யாகமே செய்ய முடியாத நிலைக்குத் தள்.ளப்பட்டான்.
இதையெல்லாவற்றையும் விட மிகவும் கொடூரமான வாசனை தேஹ வாசனை.இந்த தேஹமே தான் என்று எண்ணி தேஹத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அலைய வைக்கும் வாசனை.தேஹத்தின் தேவைகள் இந்திரியங்களின் ஆற்றலிலிருந்து உளவாவது.அதை ஓருகாலும் திருப்தி செய்ய முடியாது.நெருப்பிலிட்ட விறகு போல் அது மேலும் மேலும் விறகைக்  கேட்டுக் கொண்டேயிருக்கும். ஒருமுறை தேஹ சுகத்திற்கு அடிமையாகிவிட்டால் மீண்டும் இந்த அந்த சுகத்தைத் தேடிக்கொணேயிருக்கும். அந்த தேடல் அவனுக்கு அளிக்கும் சுகத்தை விட துக்கமே  மிகுதி.. இவையெல்லாம் சேர்ந்து நம்மை பேய் பிடித்தது போல் தாண்டவமாடவைக்கும்.அது ஆனந்த தாண்டவமாயிராது என்பது மட்டும் உண்மை.
மது அருநத துவங்குமுன் எல்லா குடிகாரர்களும் சொல்வார்கள்,” எனக்கு நல்ல சக்தி உண்டு.எப்பொழுது வேண்டுமென்றாலும் என்னால் இந்தப் பழக்கத்தைலிருந்து விடுபட முடியும்.” என்று.எவ்வளவு பொய்யான நம்பிக்கை !
இப்படிப்பட்ட பேயாட்டத்திற்கு நாம் ஆளாவது ஏன்? இதே கேள்வியை அர்ஜுனனும் கிருஷ்ண பரமாத்மாவிடம் கேட்கிறான் பகவத் கீதையில்.
          

அத கேன ப்ரயுக்தோஅயம் பாபம்சரதி புருஷ:!
           அனிச்சன்னபி வார்ஷ்ணேய் பலாதிவ நியோஜித: !!
                           ப்.கீ அத்.3 கர்ம யோகம் சுலோ 36
“ நீயே இந்த மனிதர்களையெல்லாம் நடத்திக்கொண்டு போவதாக இருந்தும்,ஏன் அவர்கள் இச்சையில்லாமலிருந்தும் இம்மாதிரி பேயாட்டத்திற்கு ஆளாகிறார்கள்?”

பகவானின் பதில்களை அடுத்த மடலில் பார்ப்போம்.

Wednesday, 4 March 2015

ரமணஜோதி 86

ரமணஜோதி 86

ரமணர் புகட்டும் நல்லாறிவு


 நாமுலகங் காண்டலா நானாவாஞ் சத்தியுள
வோர்முதலை யொப்பலொருதலையே----நாமவுருச்
சித்திரமும் பார்ப்பாஞ் சேர்படமு மாரொளியு
மத்தனையுந் தானாமவனுல்கு---கர்த்தனுயிர்
உள்ளது நாற்பது நுலின் முதல் சுலோகம் மேலே கொடுக்கப் பட்டுள்ளது. இந்தசுலோகத்தில் பகவான் ரமணர்,
“ எல்லாவற்றிற்கும் அடித்தளமாக ஒன்றே ஒன்று தன் உள்ளது அதுவே பலவாக தோ.ற்றமளிக்ககூடிய சக்தியுடையது. அந்த ஒன்று தான் ஆத்மா. அந்த ஒன்றே தான் காண்பவனாகவும் காணும் காட்சியாகவும்,காணுகின்ற இந்திரியமாகவும் இயங்குகிறது. அது தான் முப்படிமானம் எனப்படுகிறது.”
இரண்டவதிலிருந்து ஆறாவது சுலோகம வரை இந்த முதல் பொருளின் –ஆன்மாவின் குண்கணங்களை விவரிக்கிறார் பகவான்.
இரண்டாவது சுலோகத்தில் பகவான் உறுதியாக கூறுகிறார்,’ எது உள்ளது-ஆன்மாவா,கடவுளா, நாம் வெளியே காணும் உலகமா- என்ற சந்தேகம் எல்லாம் ‘நான்’ எனும் அஹம் உள்ளவரைத் தான்.அஹம் அடங்கிவிட்டால் நமக்கு ‘நானிலிருந்து’ வேறு ஒன்றுமில்லை என்பது தெளிவாகும்.”
     மும்முதலை யெம்மதமு முற்கொள்ளு மோர்முதலே
    நிற்குமென்று மும்முதலு---மும்முதலே
   யென்னலகங் கார மிருக்குமட்டே யாங்கெட்டுத்
    தன்னிலையி னிற்ற  றலையாகுங் ----கொன்னே
மூன்றாவது சுலோகத்தில் மேற்கூறிய கருத்தை மீண்டும் வலியுறுத்துகிறார் பகவான்.இந்த உலகத்தைக்குறித்துள்ள பொய்-மெய் விகாரங்கள்,தன்னைவிட்டு வேறு ஒரு உலகம் இல்லை என்று உணருவது நம்மிலுள்ள நான் அழியும்பொழுது தான் என்கிறார் பகவான்.
நாலாவது சுலோகத்தில் நம்மிலிருந்த வேறுபட்ட உருவத்தையும், உலகத்தையும்  காணுபவன் எவன் என்று சற்றே சிந்த்தித்து பார்த்தால் பார்க்கும் அந்தக் கண்ணிலிருந்து வேறல்ல அந்தக் காட்சி;அது போல் காணுகின்ற கண் முடிவில்லாத கண் என்றும் விளங்கும். நமக்கு உருவமில்லையென்றால் நாம் காணும் உலகிற்கும் உருவம் இருக்காது.
ஐந்தாம் சுலோகத்தில் நமது உடல் தான் நாம் என்று எண்ணும்பொழுது உடலை உருவகப்படுத்தியுள்ள பஞ்ச கோசங்களும் உடல் தான்,;அந்த பஞ்ச கோசங்கள் இல்லையென்றால் –பஞ்ச பூதங்கள் இல்லையென்றால் இந்த உலகம் எங்கிருந்து வரும்?
ஆறாவது ஏழாவது சுலோகங்களில் பகவான் நம் மனதிலிருந்து வேறாய் ஒரு உலகம் கிடையாது எங்கிறார்.உலகம் நம் மனதிலிருந்து எழுகிறது,.மனம் ஒடுங்கி விட்டால் சிந்தனைகள் அடங்கிவிடும்;உலகமும் காணாமல் போய்விடும்..
     உலகைம் புலங்க ளுருவேறன் றவ்வைம்
   புலனைம்பொறிக்கு புலனா-முலகைமன
   மொன்றைம் பொறிவாயா லோர்ந்திடுத லான்மனத்தை
   யன்றியுல குண்டோ வறைநேரே –நின்ற
பத்தாவது சுலோகத்தில் பகவான் அறியுதால் அறியாமை என்று இரண்டும் தனிதனி யில்லை;அறியாமை இருந்தால்த் தான் அறிவு வரமுடியும்.எடை அறியாமல் இருந்தோம் என்று யோசிக்கும்பொழுதே அரிந்துகொள்ளுதல் அறியமை எனும் நாணயத்தின் மறுபக்கம் தான் என்பது விளங்கும் எங்கிறார்.பகவான்.
அதே போல் யார் அறிந்துகொள்ளவேண்டுமோ அவனை( அதை ) அறிந்துகொள்ளாமல் தனக்கு அன்னியமானதை அறிய முயல்வது அறியாமை என்கிறர் பகவான் ரமணர்.
     அறியாமை விட்டறிவின் றாமறிவு விட்டவ்
வறியாமை யின்றாகு மந்த----வறிவு
மறியா மையுமார்க்கென் றம்முதலான் தன்னை
     றியு மறிவே யறிவா
அது போல் 13 ஆம் சுலோகத்தில் “
ஞானமாந் தானேமெய் நானாவா ஞாம்ஞ்
க்னமாம்”
என்கிறார்.
தானே உள்ளது-உண்மை—மற்ற பல பொருள்களை அறிவதெல்லாம் அஞானமே என்கிறா.
இப்படி உள்ளது நாற்பது முழுவதும் நல்லறிவு எது புல்லறிவு எது என்பதை விளக்குகிறார்.





ரமணஜோதி 85

ரமணஜோதி 85

நல்லறிவு-2


புல்லறி வேதுரை நல்லறி வேதுரை
புல்லிட வேயரு ளருணாசலா
சென்ற மடலில் இந்த சுலோகத்தில் வரும் நல்லறிவு என்றால் என்ன என்பதை ஆராய்ந்துகொண்டிருந்தோம்.
பகவத் கீதையில் சாங்கிய யோகம் அத்தியாயத்தில் பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு அளித்த அருளுரைகள் நல்லறிவின் விளக்கமாக அமைகிறது என்று கண்டோம்
பகவத் கீதையில் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு அருளிய அறிவுரைகளை தொடர்ந்து பார்ப்போம்.
இரண்டாம் அத்தியாயம் பதின்மூன்றாம் சுலோகத்தில் கீதாசாரியன் கூறுகிறான்:
தேஹி னோ: அஸ்மின் யதா தேஹே கௌமாரம் யௌவனம் ஜரா!
ததா தேஹ-அந்தரப்ராப்திர் தீரஸ்தத்ர முஹ்யதி !!”
எவ்வாறு நம் உடல் இளமையும்,யௌவனமும்,மூப்பும் அடைகிறதோ அது போல் ஒரு நாள் அது உயிரற்றதாகி ஜடமாகி விடுறது .இது ஒரு அவஸ்தா பேதம்தான்.
பால்யத்திலும்,கௌமாரத்திலும்,யௌவனத்திலும்,வயோதிகத்திலும் எப்படி ஆத்மா ஒன்றேயுள்ளதோ அது போல் உடலின் உபயோகம் தீர்ந்ததும் அந்த ஆத்மா வேறு உடலைத் தேடிப் போகிறது. அதற்கு யாரும் வருந்தவேண்டியதில்லை.
ஞானியாகப்பட்டவன் –இந்த உண்மையை உணர்ந்தவன், மனக் கலக்கம் அடைவதில்லை.
நாமும் அதே போல் ஒரு மன நிலையை அடைய பழக்கப் படுத்திக்கொள்ள வேண்டும். அதுவே நல்லறிவிற்கு இலக்கணம். மாற்றங்கள் எல்லாம் உடலிற்குத் தான்; ஆத்மாவிற்கல்ல என்ற உண்மையை அறிவது தான் நல்லறிவு.
ஆத்மா நித்திய பொருள்; உடல் அனித்தியம்.இது நல்லறிவு.
இதைதொடர்ந்து பகவான் கிருஷ்ணர் கூறுகிறார் எவனொருவன் இந்த உடலே தான் என்று எண்ணுகிறானோ அவன் நிச்சயமாக துன்பத்தை வரவழைத்துக் கொள்கிறான். பொருள்களை புலங்களின் வாயிலாக சேர்த்துக் கொள்வதால் இந்த பூதவுடலிற்கு இன்பதுன்பங்கள் வந்து சேரும்.
தான்( நான்) இந்த பூதவுடலிலிருந்து வேறுபட்டு ஆத்மசொரூபம் என்று உணர்ந்து கொண்டவனுக்கு துன்பங்களுமில்லை இன்பங்களுமில்லை.
. அவனுக்கு பூரண மனத்தெளிவு உண்டாகிறது. சஞ்சலங்கள் அறவே அற்றுப் போகின்றன..
அது நல்லறிவின் இலக்கணம்.
          யம் ஹி வ்யதயந்த்யேதே புருஷம் புருஷர்ப !
     ஸமது:கஸூகம் தீரம் ஸோ அம்ருதத்வாய கல்பதே !!
                     ப.கீ அத் 2 சுலோ 15
சிதோஷ்ணங்களை-சுகதுக்கங்களை ஒரு போல் எண்ணுபவனுக்கு எந்த சஞ்சலமும் கிடையாது; அவனை எதுவும் அசைக்காது.அவன் அமரனாகிறான்; சாகா வரம் பெற்றவனாகிறான்; ஆத்மசாக்ஷாத்காரம் அடைந்தவனாகிறான்.
ஆத்மா நித்தியமானது அதற்கு பிறப்பும் கிடையாது;இறப்பும் கிடையாது.
இருபத்தி ஐந்தாவது சுலோகத்தில் பகவான் சொல்லுவார்,” இவ்வாத்மா நம் புலன்களுக்கு தென்படாதது.கண்களால் காண முடியாதது; காதால் கேட்க முடியாதது; கைகளால் ஸ்பரிசிக்க முடியாதது. அவ்யக்தமானது. சிந்தித்து பார்த்து தெரிந்து கொள்ள முடியாத ஒன்று.ஆதற்கு விகாரங்கள் கிடையாது;அது மாற்றத்திற்கு உள்ளாகதது. இந்த உண்மைகளை புரிந்து கொண்டு விட்டால்,  உனக்கு துன்பங்கள் கிடையாது.”
          அவ்யக்தோஅயம சிந்த்யோஅயமவிகார்யோஅயமுஸ்யதே !
          தஸ்மாதேவம் விதித்வைனம் நானுசோசிதுமரஸி !!
                ப.கீ.அத் 2 சுலோ 25
ஆத்மா இந்திரியங்களுக்கு விஷயமாகாது;ஆகவே மனதிலும் படியாது.அதனால் அதை அவ்யக்தம் அசிந்த்யம் என்கிறார் கிருஷ்ண பரமாத்மா. காற்று, நீர்,நெருப்பு, நிலம் ஆகிய நாங்கு பூதங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை. ஆனால் ஆகாயம் மாறாதது;எல்லையில்லாதது.ஏனென்றால் ஆகாயத்திற்கு அவயவங்கள் இல்லை.ச்சிதாகாசமாகிய ஆத்மாவிற்கும் அவயவம் இல்லை.
இப்படி பகவத் கீதஈ பூராவும் நல்லறிவுக்கான இலக்கணங்கள் விவரிக்கப் பட்டுள்ளன.
பகவான் ரமணர் கூறியுள்ள உபதேசங்களும் நல்லறிவுக்கு சரியான விளக்கங்களே. குறிப்பாக மஹரிஷியின் ‘உபதேச உந்தியார் ‘ மற்றும் ‘உள்ளது நாற்பது” நூல்களில் அவர் அருளிய உபதேசங்கள் ஈடு இணையில்லாதது. முக்கியமாக ‘உள்ளது நாற்பதிலுள்ள உபதேசங்களை கொஞ்சம் பார்ப்போம்.
‘உள்ளது நாற்பது’ மஹரிஷி 1928 லிருந்து 1930-கள்  வரையான காலங்களில் அவ்வப்போதாக இயற்றிய நாற்பது சுலோகங்களின் தொகுப்பே.
முருகனார் பகவானிடம் முக்தியடைவதற்கு என்ன மார்க்கம் என்றும் உண்மையின் நிஜ உருவம் என்ன என்று கேட்டதற்கு பகவான் அளித்த பதில்களே இந்த தொகுப்பு.
     முருகனார் கேட்கிறார்:
          மெய்யினியல்புமதை மேவுந்திறனுமெமக்
          குய்யும் படிமுருக நேதுகெனப்—பொய்யுலகின்
          கள்ளமறு மாற்றாற் கனரமணன் கட்டுரைத்தா
          நுள்ளது நாற்பதுவந்து.
 ‘உள்ளது என்றால் எது ஒன்று இருக்கின்றதோ அதுஇருக்கின்றது என்று பொருள். அந்த உள்ளதைக் குறித்து பகவான் நாற்பது சுலோகங்கள் இய்ற்றினார்.அவைகளே நல்லறிவு.
இந்த நல்லறிவை சாங்கோபங்கமாக பகவான்  மங்கல சுலோகத்திலேயே தந்து விடுகிறார்.அதன் விவரணம் தான் மற்ற நாற்பது சுலோகங்களும்.
அப்படி என்ன சொல்லுகிறார் பகவான் மங்கல சுலோகத்தில்?
பகவான் கேட்கிறார்—
உள்ளதல துள்ளவுணர் வுள்ளதோ” உள்ளது அல்லாமல் அது இருக்கின்றது என்ற உணர்வு எப்படி ஏற்படும்?
உள்ளதைக் குறித்துள்ள அறிவு ஒரு அறிவே அல்ல ;நான் இருக்கின்றேன் என்பது யாரும் சொல்லித் தெரிய வேண்டுமா? அதற்கு யாருடைய உதவியும் தேவையில்லை.
இரண்டாவது வரியில் சொல்லுகிறார்,
உள்ள பொருள் உள்ளல்-அற உள்ளத்தே உள்ளதல்”
மேற்கூறிய வார்த்தைகள் மூலம் “ சிந்தனையேதுமற்ற உள்ளாத்தில் அந்த உள்ளது வசிக்கிறது” என்று விளக்குகிறார்.ஆத்மா உள்ளது என்பதை உணருவதற்கு உள்ளத்தில எந்த சிந்தனையும் தேவையில்லை. ஏனென்றால் உணருவதும் உணரப்படுவதும் ஒன்றேயல்லவா?
“உள்ளது” ‘நான்’ ஒன்றே; நான் என்பது தான் ஆத்மா; அந்த ஆத்மாவிற்கு விசார விகாரங்கள் கிடையாது. பகவத் கீதையிலும் இதையே தான் கூறப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட ‘உள்ளதை” எப்படி உணருவது? அடுத்த இரண்டு வரிகளில் பகவான் விளக்குகிறார்.
ஒரு கேள்வியுடன் துவங்குகிறார் தனது சுருக்கமான விளக்கத்தை,
உள்ள பொருள் உள்ளல் எவான்?” உள்ளதை-ஆத்மாவை எப்படி நாம் உள்ளிலாக்குவது?மனதிலாக்குவது ? எப்படி உணர்ந்து கொள்வது ? தன்னை தானே எவ்வாறு த்யானம் செய்வது?
அதற்கு அவரே பதில் கூறுகிறார்:
          “உள்ளத்தே உள்ளபடி உள்ளதே உள்ளல் உணர்வாயே”
உணருவதற்கு தனியாக சிந்தனையொன்றும் தேவையில்லை. நாம் அதுவாகவே இருக்க வேண்டியது தான்.- ‘உள்ளபடி  என்ற வார்த்தை தான் இங்கு முக்கியம். எந்த விசாரமும் இல்லாமல் என்பது ஆத்மாவின் இயற்கை இலட்சணம்.
இப்பொழுது நாம் அந்த மங்கல சுலோகத்தை முழுமையாக பார்ப்போம்:
உள்ளதல துள்ளவுணர் வுள்ளதோ வுள்ளபொரு
ளுல்ளலற வுள்ளத்தே யுள்ளதா—லுள்ளமெனு
முள்ளபொரு ளுள்ளலெவ நுள்ளத்தே யுள்ளபடி
யுள்ளதே யுள்ள லுண்ர்வாயே--- யுள்ளே
ஆகவே முக்தியடைவதற்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றே –நித்தியமான-உள்ளதான—உண்மையை—அதைத்தவிர வேறொன்றும் உண்மையல்ல என்ற உண்மையை---அறிய வேண்டும். அந்த அஹம் ஒன்றே சத்யம்; மற்றவையெல்லாம் மித்யா என்ற மஹா வாக்யத்தின் பொருளை உணர வேண்டும்.
பிரம்மம் சத்யம்; ஜகன் மித்யா
என்ற ஆதி சங்கரரின் மஹாவாக்யத்தை   நினைவில் கொள்வோம்.
ஆத்மாவே பிரம்மம்.ஆகவே அதுவே உண்மை.
பகவான் தன்னுடைய “ நான் யார்” என்ற நூலில் பதின்மூன்றாம் பாராவில் இந்த உண்மையை விளக்கியுள்ளார்:
எவனொருவன் ஆத்ம நிஷ்டையில் மூழ்கி ,வேறு எந்தவொரு சிந்தனைக்கும் இடம் கொடாமல், ஆத்ம சிந்தனை மட்டுமாக இருக்கிறானோ அவன் பரமாத்மாவிடம் பூரண சரணாகதியடைந்தவனாகிறான். அப்படி சரணாகதி அடைவது மூலம் நாம் நமது முழு பொறுப்பையும் அவனிடம் ஒப்படைத்து விடுகிறோம். உலகம் முழுவதையும் தாங்கி நடாத்திக்கொண்டு வருகின்ற பரமேசுவர சக்தி –பரமாத்மா—எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வான்.பிறகு நாம் எதற்கு இப்படி செய்ய வேண்டுமா,அப்படி செய்ய வேண்டுமா என்று சிந்திக்க வேண்டும்? நாம் பரமாத்மாவிடம் நம்மையே ஒப்புவித்த பிறகு நாம் ஆனந்தத்தை மட்டும் அனுபவிப்போம்.நமது பாரம் முழுவதும் சுமப்பவன் அவனே. ரயிலில் ஏறின பிறகு நமது பெட்டி-படுக்கைகளை நம் தலையில் வைத்து ஏன் சுமக்க வேண்டும்? அதை ரயிலில் ஒரு மூலையில் இறக்கி வைத்து விட வேண்டியது தானே?
எவ்வளவு பெரிய உண்மையை எவ்வளவு எளிதாக விளக்கியுள்ளார்,பகவான்?
இரண்டாவது மங்கல சுலோகமும் முக்கியமானதே.
          மரணபய மிக்குளவம் மக்களர ணாக
          மரணபவ மில்லா மகேசன்---சரணமே
          சார்வர்தஞ் சார்வொடுதாஞ் சாவுற்றார் சாவெண்ணஞ்
          சார்வரோ சாவா தவர்நித்தர்---பார்வை சேர்
மரண பயம்  னம்மை பீடித்து ஆட்கொள்ளுகிறது.அந்த மரணபயத்தை விட்டு பரண பாவமே இல்லாத மகேசனை சரணடைவோம். மித்யா நானுக்குத் தான் மரண பவம்.ஆன்மாவிற்கோ-பரமாத்மாவிற்கோ  மரணபவம் கிடையாது.ஆத்ம பரமாத்மாவில் லயித்துவிட்டால் நமக்கும் மரண பயம் தேவையில்லை.
முதலாவது சுலோகத்தில் விசார மார்க்கம் மூல நான் யார் என்று புரிந்து கொண்டு உணர்ந்துகொண்டு,தன்னை விட்டு வேறொன்று இல்லை என்ற ஞானம் பெற்றுவிட்டால் நாம் முக்தனாகி விடுகிறோம் என்கிறார் பகவான்.
இரண்டாவது சுலோகத்தில் பக்தி மார்க்கம் உபதேசிப்பது போல் பூரண சரணாகதி அடைந்து விட்டால் எஞ்சியிருப்பது ஆனந்தமே என்கிறாற் பகவான்.

உள்ளது நாற்பதில் கூறியுள்ளா முக்கியமான உபதேசங்களின் விவரங்களை அடுத்த மடலில் பார்க்காலாம்.

ரமணஜோதி 87

ரமணஜோதி 87

பூரணத்துவம்


பூமண  மாமனம் பூரண மணங்கொளப்
பூரண மணமரு ளருணாசலாபூமணம்—பூலோகத்தொடர்புள்ள வாசனைகள்- அற்றுப் போய் பூரணனா
ன பரமனை மணந்துகொள்ள பூரணமான அருளை நல்கவேண்டும் ,அருணாசலா என்று பகவான் ரமணர் வேண்டுகிறார் இந்த சுலோகத்தில்.
இன்னொரு விதத்தில் கூறினால் உன்னோடு பூரணமாக லயிக்க—பூரணமணம் புரிந்து கொள்ள—அருளவேண்டும்.அப்படி அருளினால் என்னால் இந்த பூலோக வாசனைகளிலிருந்து பூரண விடுதலை பெற முடியும்; பூரணத்தை நான் அடைய முடியும்.
பூரணம் என்பது ‘சத்’ வாசனை.; பூரணம் என்றால் அதை தவிர வேறொன்றில்லை என்று பொருள்.
ஆத்மசாக்ஷாத்காரம்-பூரண லயம் சம்பவித்து விட்டால் அங்கு பிரம்மத்தை தவிர வேறொன்றிருக்காது.
அவித்யயில் மூழ்கியிருக்கும் அஞ்ஞானியின் உள்ளில் மித்யையான உலகத்திலுள்ள விஷயங்களில்தான் நமது மனம் பூரணமாக ஈடுபட்டிருக்கும்.
உலக வாசனைகளிலுள்ள ஆஸக்தி துன்பங்களைத் தான் நல்கும்.;முடிவில்லா துன்பன்கள் தான் பலன்.
அப்படிப்பட்ட துன்ப சுழலிலிருந்து விடுதலை பெற வேண்டுமென்றால் இந்த இஹலோக வாசனைகளை விட்டொழித்தால்த் தான் முடியும்.
ஒரு வாசனை விலக்கப்பட்டால்த் தான் இன்னொரு வாசனையை  பிடித்துக்கொள்ள முடியும். பூவுலக வாசனைகளை விட்டால்த்தான் பரமாத்மாவைப் பிடித்துக்கொள்ள முடியும்.
பூரணனான பரமன் நம்முள் இடம் பிடித்துவிட்டால் அங்கு வேறு எதற்கும் இடமிருக்காது.
அப்படிப்பட்ட மணம் நிகழ்ந்து விட்டால் ஒன்று இன்னொறில் கரைந்து சேர்ந்துவிடும்.ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றாகிவிடும்..
ஒம் பூரணம் அத: பூரணம் இதம் பூரணாத் பூரணம் உதச்யதே
பூரணஸ்ய பூரணமாதாய பூரணம் எவாஶியதே
ஒம் சாந்தி சாந்தி சாந்தி
இந்த உபனிஷத் வாக்யத்தின்படி பரமாத்மா பூரணன்;அவனிலிருந்து உண்டாகின்ற ஜீவாத்மாவும் பூரணமே.ஒரு பாத்திரம் நிறைய சுத்தமான பால் இருக்கிறது எனறு வைத்துக்கொள்ளுங்கள்; அதிலிருந்து ஒரு குவளை பாலை எடுத்தால் அதுவும் சுத்தமான பாலாகத்தான் இருக்கும். மீதி அந்த பெரிய பாத்திரத்திலுள்ள பாலும் சுத்தமானதாகவே இருக்கும். பூரண சந்திரனை மேகம் மறைத்தாலும் மேகம் நீங்கும் பொழுது சந்திரன் களங்கமற்றவனாகவே இருப்பான்.
அவ்வாறு ஜீவாத்மாவின் பூ மணம்—இகலோக வாசனைகள் எனும் களங்கம் நீங்கும் பொழுது பரமாத்மாவும் அதுவும் ஒன்றாகவே இருக்கும்..
இதை திருவள்ளுவரும் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்:
     பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை
   பற்றுக பற்று விடற்கு
இந்திரியங்களை கட்டுப்படுத்தி  உலகப் பற்றை விட்டொழித்தலன்றி பரமனை பற்றிக்கொள்ள முடியாது; பரமனை பற்றிக்கொண்டால் மற்ற பற்றுக்கள் எல்லாம் தானாக நம்மை விட்டு விலகிவிடும்.

இதையே நம்மாழ்வார் சொல்லுவர்:
     அற்றது பற்றெனில் உற்றது வீடு உய்வார்
   செற்றது வந்தூறில் அற்று இறைபற்றே
இதே கருத்தை நாம் பகவத்கீதையிலும் காணலாம்:
     விஷயா வினிவர்தந்தே
    நிராஹாரஸ்ய தேஹின:
    ரஸவர்ஜம் ரஸோஅப்ரிஸ்ய:
    பரம் த்ருஷ்ட்வா நிவர்ததே
இந்திரியங்களுக்கு உணவு கிடைக்காதாகும் பொழுது தேஹி—ஜீவாத்ம் விஷய வாசனைகளிலிருந்து விடுபட்டது போன்று தோன்றும்.. ஆனால் விஷய வாசனைகளின் விதை அவனுள் இருந்துகொண்டே இருக்கும்; அது பூரணமாக நசிக்க வேண்டுமென்றால் –இல்லாதாக வேண்டுமென்றால் நாம் பரமாத்மாவை அடைய வேண்டும். அப்பொழுது தான் அது மறுபடியும் கிளைத்தெழாது.
மாணிக்கவாசகர் கூறுகிறார்:
     முத்தினெறியறியாத மூர்க்கரோடு முயல்வேனை
    பத்தினெறி அறிவித்து---------
முக்திக்கான நெறிமுறைகளை அறியாத மூர்க்கரிடம் பக்தி நெறிகளை ப் பற்றி சொல்லி  என்ன பயன் என்கிறார் மாணிக்க வாசகர்.
இங்கு ‘மூர்க்கர்’”  என்ற பதம், நம்முள்ளேயுள்ள அஹங்காரம்,ஆசை,விஷயவாசனைகள் என்பவைகளைக்  குறிக்கும்.

னாம் இகலோகப் பற்றுக்களை பரமனிடம் ஏற்படும் பற்றினால் நீக்கி ஆத்ம ஸாக்ஷாத்காரம் நேடவேண்டும்.அதற்கு அருணாசலனின் அருள் வேண்டும்.