Wednesday, 4 March 2015

ரமணஜோதி 87

ரமணஜோதி 87

பூரணத்துவம்


பூமண  மாமனம் பூரண மணங்கொளப்
பூரண மணமரு ளருணாசலாபூமணம்—பூலோகத்தொடர்புள்ள வாசனைகள்- அற்றுப் போய் பூரணனா
ன பரமனை மணந்துகொள்ள பூரணமான அருளை நல்கவேண்டும் ,அருணாசலா என்று பகவான் ரமணர் வேண்டுகிறார் இந்த சுலோகத்தில்.
இன்னொரு விதத்தில் கூறினால் உன்னோடு பூரணமாக லயிக்க—பூரணமணம் புரிந்து கொள்ள—அருளவேண்டும்.அப்படி அருளினால் என்னால் இந்த பூலோக வாசனைகளிலிருந்து பூரண விடுதலை பெற முடியும்; பூரணத்தை நான் அடைய முடியும்.
பூரணம் என்பது ‘சத்’ வாசனை.; பூரணம் என்றால் அதை தவிர வேறொன்றில்லை என்று பொருள்.
ஆத்மசாக்ஷாத்காரம்-பூரண லயம் சம்பவித்து விட்டால் அங்கு பிரம்மத்தை தவிர வேறொன்றிருக்காது.
அவித்யயில் மூழ்கியிருக்கும் அஞ்ஞானியின் உள்ளில் மித்யையான உலகத்திலுள்ள விஷயங்களில்தான் நமது மனம் பூரணமாக ஈடுபட்டிருக்கும்.
உலக வாசனைகளிலுள்ள ஆஸக்தி துன்பங்களைத் தான் நல்கும்.;முடிவில்லா துன்பன்கள் தான் பலன்.
அப்படிப்பட்ட துன்ப சுழலிலிருந்து விடுதலை பெற வேண்டுமென்றால் இந்த இஹலோக வாசனைகளை விட்டொழித்தால்த் தான் முடியும்.
ஒரு வாசனை விலக்கப்பட்டால்த் தான் இன்னொரு வாசனையை  பிடித்துக்கொள்ள முடியும். பூவுலக வாசனைகளை விட்டால்த்தான் பரமாத்மாவைப் பிடித்துக்கொள்ள முடியும்.
பூரணனான பரமன் நம்முள் இடம் பிடித்துவிட்டால் அங்கு வேறு எதற்கும் இடமிருக்காது.
அப்படிப்பட்ட மணம் நிகழ்ந்து விட்டால் ஒன்று இன்னொறில் கரைந்து சேர்ந்துவிடும்.ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றாகிவிடும்..
ஒம் பூரணம் அத: பூரணம் இதம் பூரணாத் பூரணம் உதச்யதே
பூரணஸ்ய பூரணமாதாய பூரணம் எவாஶியதே
ஒம் சாந்தி சாந்தி சாந்தி
இந்த உபனிஷத் வாக்யத்தின்படி பரமாத்மா பூரணன்;அவனிலிருந்து உண்டாகின்ற ஜீவாத்மாவும் பூரணமே.ஒரு பாத்திரம் நிறைய சுத்தமான பால் இருக்கிறது எனறு வைத்துக்கொள்ளுங்கள்; அதிலிருந்து ஒரு குவளை பாலை எடுத்தால் அதுவும் சுத்தமான பாலாகத்தான் இருக்கும். மீதி அந்த பெரிய பாத்திரத்திலுள்ள பாலும் சுத்தமானதாகவே இருக்கும். பூரண சந்திரனை மேகம் மறைத்தாலும் மேகம் நீங்கும் பொழுது சந்திரன் களங்கமற்றவனாகவே இருப்பான்.
அவ்வாறு ஜீவாத்மாவின் பூ மணம்—இகலோக வாசனைகள் எனும் களங்கம் நீங்கும் பொழுது பரமாத்மாவும் அதுவும் ஒன்றாகவே இருக்கும்..
இதை திருவள்ளுவரும் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்:
     பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை
   பற்றுக பற்று விடற்கு
இந்திரியங்களை கட்டுப்படுத்தி  உலகப் பற்றை விட்டொழித்தலன்றி பரமனை பற்றிக்கொள்ள முடியாது; பரமனை பற்றிக்கொண்டால் மற்ற பற்றுக்கள் எல்லாம் தானாக நம்மை விட்டு விலகிவிடும்.

இதையே நம்மாழ்வார் சொல்லுவர்:
     அற்றது பற்றெனில் உற்றது வீடு உய்வார்
   செற்றது வந்தூறில் அற்று இறைபற்றே
இதே கருத்தை நாம் பகவத்கீதையிலும் காணலாம்:
     விஷயா வினிவர்தந்தே
    நிராஹாரஸ்ய தேஹின:
    ரஸவர்ஜம் ரஸோஅப்ரிஸ்ய:
    பரம் த்ருஷ்ட்வா நிவர்ததே
இந்திரியங்களுக்கு உணவு கிடைக்காதாகும் பொழுது தேஹி—ஜீவாத்ம் விஷய வாசனைகளிலிருந்து விடுபட்டது போன்று தோன்றும்.. ஆனால் விஷய வாசனைகளின் விதை அவனுள் இருந்துகொண்டே இருக்கும்; அது பூரணமாக நசிக்க வேண்டுமென்றால் –இல்லாதாக வேண்டுமென்றால் நாம் பரமாத்மாவை அடைய வேண்டும். அப்பொழுது தான் அது மறுபடியும் கிளைத்தெழாது.
மாணிக்கவாசகர் கூறுகிறார்:
     முத்தினெறியறியாத மூர்க்கரோடு முயல்வேனை
    பத்தினெறி அறிவித்து---------
முக்திக்கான நெறிமுறைகளை அறியாத மூர்க்கரிடம் பக்தி நெறிகளை ப் பற்றி சொல்லி  என்ன பயன் என்கிறார் மாணிக்க வாசகர்.
இங்கு ‘மூர்க்கர்’”  என்ற பதம், நம்முள்ளேயுள்ள அஹங்காரம்,ஆசை,விஷயவாசனைகள் என்பவைகளைக்  குறிக்கும்.

னாம் இகலோகப் பற்றுக்களை பரமனிடம் ஏற்படும் பற்றினால் நீக்கி ஆத்ம ஸாக்ஷாத்காரம் நேடவேண்டும்.அதற்கு அருணாசலனின் அருள் வேண்டும்.

No comments:

Post a Comment