Thursday, 19 March 2015

ரமணஜோதி 96

ரமணஜோதி 96


மரணம்----? 3.


கடோபனிஷத்தின் iraNtAm pakuthi 12 –வது மந்திரத்தில் ஆத்மஞானம் பெறுவதற்கு வைராக்யம் மிகவும் இன்றி அமையாதது என்பதை யம தர்ம ராஜன் நசிகேதஸ்ஸுக்கு விளக்குகிறான்.
          தம் துர்தசம், கூடமனுப்ரவிஷ்டம்
          குஹாஹிதம்,கஹ்வரேஷ்டம்,புராணம்,
          அத்யாத்மயோகாதிகமனே தேவம்
          தத்வஆ தீரோ ஹர்ஷசொகௌ ஜஹாதி.
                     மந்த் 12
நீ தெரிந்து கொள்ளத்  துடிக்கின்ற ஆன்மா எனப்படுவது,அணுவிலும் சூக்ஷ்மமானதால் அதை காண்பது அவ்வளவு எளிதல்ல,; அது இருக்குமிடமும் மிகவும் மறைவான குகை போன்ற இடம், ( பகவான் ரமணரின்,” இதய குஹர மத்யே,அஹமஹம்நினைவு கூரவும்.);
அந்த ஆத்மா தோன்றும்பொழுது ராகம் துவேஷம் முதலிய இந்திரிய உற்பன்னங்களான விகாரங்களால் உற்பத்தியாகின்றன.  இன்ப  துன்பங்களின்  சுழலில் சிக்குவதால், அதன் பாதையில் கல்லும் முள்ளும் நிறைந்தும் கிடக்கின்றது; ஆகவே ஆத்மாவை  தேடிக் கண்டுபிடிப்பதற்கான ஒரே மார்க்கம் அத்த்யாத்மிக யோகம் தான். நான் யார்என்று தேடிச் சென்று ஆன்மாவை கண்டுவிட்டால்,அதோடு கண்டுபிடிப்பவனுக்கு இருந்த சந்தோஷம் துன்பம்  முதலிய விகாரங்கள் நீங்கி விகார விசார ரஹிதனாகிறான்; அத்யாத்மிக யோகம் என்பது நமது  கவனத்தை முழுவதுமாக  மற்ற எல்லா விஷயங்களிலிருந்தும் விடுவித்து ஆத்மா என்கின்ற ஒன்றில் மட்டும் ஊன்றி சிந்திப்பதாகும்அந்த ஆத்மா யார் ( நான் யார் ) என்று தெரிந்து கொண்டு விட்டாலோ   நம் உயர்ச்சியோ மற்றவர்களின் விழ்ச்சியோ எதுவும்  நம்மை ( ஆத்மாவை) பாதிக்காது.ஆகவே இன்பமும் கிடையாது; துன்பமும் கிடையாது; அப்பொழுது  நாம் காண்பது எல்லாம் ஆத்மாவே தான்; நம்மிலும்,நாம்  காண்கின்ற  எல்லாவற்றிலும் ஆத்மாவை –அதாவது பிரம்மத்தை காண்போம்; இதற்கப்புறம் மரணமும் கிடையாது ;ஜனனமும் கிடையாது; இன்னொரு விதத்தில் சொன்னால் இது தான் நிஜமான மரணம்’ நான்’ இங்கு இல்லாதாகிவிடுகிறது..ஆகவே இது தான் மரணம்.
அதற்கு பின் யமதர்ம ராஜன் ஓம் எனும் ப்ரணவ மந்திரத்தை உபதேசிக்கிறான்.
பகவான் ரமணர் கூறுகிறார் மறு பிறப்பு அவித்யயிலிருந்து உண்டாகிறது;
நாம் கற்பனை செய்கின்ற ‘மரணம்”,மமாகாரத்தால் உந்தப்பட்டு, ஆத்மாவை நமது ஸ்தூல சரீரத்துடன் ஒன்றாக்கி பார்ப்பதன் மூலம் உண்டாவது
.நமது உள் மனத்தில் ஆசைகளும் அதனால் ஏற்படக்கூடிய பந்தங்களும் நிரந்தரம் முளைத்துக் கொண்டேயிருக்கும். ஒரு  நேரத்தில் இந்த ஸ்தூல சரீரத்தினால் இயங்க முடியாமல் போய்விடுகிறது. ஒரே காரை (car) பல வருடம் உபயொகித்துகொண்டிருப்பவன்,மீண்டும் மீண்டும் மரமத்து பார்த்தும் ஒரு நிலை வரும் பொழுது காயலான் கடைக்கு அதை அனுப்ப வேண்டி வரும்.அது போல் நமது ஸ்தூல சரீரமும் ஒரு நேரத்தில் உபயோகமில்லாமல் போய்விடும்.ஆனால் நிறைவேறாத ஆசைகள் ஆத்மாவை அவித்யயின் ( அஞானத்தின்) காரணம் அலைக்கழித்துக்கொண்டிருக்கும்.ஆத்மா இன்னொரு வாடகை வீட்டைத்  தேடி போகும்; அந்த வீட்டில் குடியேறும்; மீண்டும் அந்த சக்கர சுழற்சி ஆரம்பிக்கும்; நாம் ஆத்மாவின் உண்மையான சொரூபத்தை அடையாளம் காணும் வரை நாம் வீடு மாறிக் கொண்டேயிருக்க வேண்டியது தான். எப்பொழுதும் ஏதாவதொரு குறை ( நிறைவேறாத ஆசை ) இருந்துகொண்டேயிருக்கும்.ஆகவே “புனரபி ரணம்,புனரபி ஜனனம்’ என்ற சுழலிலிருந்து நாம் தப்பிக்க முடியாது .இவை மரணமும் அல்ல; ஜனனமுமல்ல. நாம் சந்தோஷிக்கவும் வேண்டாம்; துக்கிக்கவும் வேண்டாம். ஆத்ம சாக்ஷாத்காரம் அடைந்து விட்டாலோ நாம் திரும்பி வராத நிலைக்கு சென்று விடுகிறோம்.அதன் பின் மரணமும் கிடையாது;ஜனமும் கிடையாது.அல்லது நிஜமான மரணம் சம்பவிக்கிறது.
இதைத்தான் பகவத் கீதயில் இரண்டாம் அத்தியாயத்தில் 22ஆம் சுலோகத்தில் பகவான் கிருஷ்ணர் கூறுகிறார்:
          வாஸாம்ஸி ஜீர்ணானி யதா விஹாய
                   நவானி க்ருஹ்ணாதி நரோபராணி
          ததா சரீராணி விஹாய ஜீர்ணன்
                   யன்யானி ஸம்யாதி நவானி தேஹீ
மனிதன் ஆடைகள் பழையதாகும் பொழுது அவைகளை களைந்துவிட்டு புதிய உடைகளை அணிந்து கொள்வது போல் ஆத்மாவானது பழைய உடல்களை நீத்துவிட்டு புதியன புகுகிறது. இந்த ஸ்தூல சரீர மாற்றத்தை நாம் இறப்பு-பிறப்பு என்கிறோம்.
பகவான் ரமணரும் இதே கருத்தை மீண்டும் மிண்டும் உறுதிப் படுத்தியுள்ளார்.
‘சத்’ எனும் ஆன்மா நாசமில்லாததாக இருந்தும் ஸ்துல சரீரத்தோடு இணைத்துப் பார்ப்பதால், ஸ்தூல சரீரத்தின் நாசம் ஆத்மாவை பாதிப்பதாக நமக்கு ஒரு மயக்கம் ஏற்படுகிறது. ஸ்தூல சரீரத்தின் நாசம் ஆத்மாவின் நாசமாக நினைக்கிறோம்.ஆத்மா இல்லாமல் ஸ்தூல சரீரத்திற்கு -,இந்த பஞ்ச பூதங்களாலான உடலுக்கு -அஸ்தித்துவம்—இருப்பு கிடையாது. ஆனால் இந்த பூத உடல் இல்லாமல் ஆத்மா இருக்க முடியும்..உதாரணத்திற்கு நாம் ஸுஷுப்தி நிலையில் இருக்கும் பொழுது ஸ்தூல சரீரம் இயக்கமின்றி நிஸ்சலமாக இருக்கும்.ஆனால் அப்பொழுதும் ஆத்மா நம்முள் இருக்கத்தான் செய்கிறது.
ஆகவே தான் பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறுகிறார்:

            நைநம் சித்தந்தி சஸ்த்ராணி   நைநம் தஹதி பா வக:

            ந சைனம் க்லேதய ந்யாபோ ந சோஷயதி மாருத:


ஆத்மாவை எந்த ஆயுதங்களும் காயப் படுத்தாதுல் அக்னி அதை எரிக்காது; நீர் நனைக்காது; காற்று அதை பலவீனப்படுத்தாது.
இங்கு பஞ்ச பூதங்களில் நாலை மட்டும் கீதாச்சாரியன் குறிப்பிட்டுள்ளான். ஏனென்றால் ஆகாயம் சலனமற்றது;அது நிஷ்க்ரியம்; ஆகாயத்தை விட்டுவிட்டான் கண்ணன்.
சுருக்கமாக கூறினால் ஆத்மா எதோடும் பந்தப்படாதது.  எப்பொழுது சரீரம் தான் ஆத்மா என்று நினைக்கின்றோமோ அப்பொழுது எல்லாவித பாதகங்களும்,மரணமும் உண்டாவது போல் நாம் அனுபவிக்கிறோம்.
 மேலும் கீதாசாரியன் கூறுகிறான்:

            அத சைனம் நித்ய ஜாதம் நித்யம் வா மன்யசேம்ருதம் !

            ததாபி த்வம் மஹாபாஹோ  நைனம்  சோசிதுமரஸி !!

நித்தியமானது எதுவுமில்லை இந்த உலகில்;ஆகவே ஆத்மா அழிவுள்ளதானால் கூட நீ வருந்தலாகாது அர்ஜுனா என்கிறார் பகவான். இந்த சுலோகத்தின் மூலம் ஆத்மா அழிவுள்ளது என்று பகவான் கூறவில்லை.அப்படியிருந்தால்கூட நீ வருந்தலாகாது; எனென்றால் இந்த உலகில் எதுவும் நித்தியமல்ல.

            ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர்த்ருவம் ஜன்ம ம்ருதஸ்ய ச !

            தஸ்மாதபரிஹார்யேஅர்த்தே ந த்வம் சொசிதமரஸி !!

                                ப.கீ. அத்.2 சுலோ 27
இறப்பும் பிறப்பும் உண்டென்றால் யாராலும் அதை தடுத்த நிறுத்த முடியாது;அப்படி நம்மால் இயலாத ஒரு செய்கைக்காக நாம் வருந்தலாகாது
இந்த கருத்து பிரபல மலையாள கவிஞ்சர் துஞ்சத்து எழுத்தச்சனின் அத்யாத்ம இராமாயணத்திலும் லக்ஷ்மண ஸாந்த்வனம்என்ற பகுதியில் காணப்படுகிறது.

            தேஹேந்த்ரியப்ராண புத்யாதிகள்க்கெல்லா-

      மாஹந்த மேலே வஸிப்பதாத்மாவு கேள்

            சுத்தஸ்வயம்ஜ்யோதிரானந்தபூர்ண்ணமாய்

            தத்வார்தமாய் நிராகாரமாய் நித்யமாய்

            நிர்விகல்பம் பரம் நிர்விகாரம் கனம்

            ஸர்வைககாரணம் ஸர்வஜகன்மயம்

            ஸர்வைவக ஸாக்ஷிணம் ஸர்வஞமீசுவரம்

            ஸர்வதா சேதஸீ பாவிச்சு கொள்க நீ


“ஆன்மா என்பது தேகம், இந்த்ரியங்கள், புத்தி இவைகளுக்கெல்லாம் மேலே வஸிப்பதாகும்.அது சுயம் பிரகாசமான சுத்த சத் சிதானந்தம். அது ததுவார்த்தமானது.அதற்கு உருவம் கிடையாது. அது நித்யம். அதற்கு விகல்பங்கள் கிடையாது. விகாரங்கள் கிடையாது. அதுவே உலகில் நடப்பைவைகளுக்கெல்லாம் காரணம்; அதுவே உலகம் முழுவதும் நிறைந்து நிற்கிறது;ஆனால் எதினாலும் பாதிக்கப் படாமல் சாக்ஷி மாத்திரமாய் நிற்கிறது; அதற்கு எல்லாம் தெரியும்;புரியும்; அதை மட்டும் நினை,இலக்குமணா.” எங்கிறாற் ஸ்ரீரமன்.

            கர்மேந்திரீயங்களால் கர்த்தவ்யமொக்கவே

            நிர்ம்மாயமாசரிச்சீடுகென்னே வரூ

            கர்ம்மங்கள் ஸங்கங்களொன்னிலும் கூடாதெ

            கர்ம்மஃபலங்களில் காம்ங்க்ஷயும் கூடாதெ

            கர்மங்களெல்லாம் விதிச்சவண்ணம் பர-

            ப்ரம்மணி நித்யே ஸமர்ப்பிச்சு கொள்ளணம்

    
“இந்த உலகில் நமக்கு ஆற்றவேண்டிய கடைமைகள்-கர்மங்கள் உண்டு.அந்த கர்மங்களையெல்லாம் எந்தவித கலக்கமுமில்லாமல் நியதிப்படி செய்யவேண்டும். ஆனால் கர்மங்களில் எந்த ஸங்கமும் இல்லாமல் பந்தங்களும் உண்டு பண்ணாமல் கர்மங்களின் பலன்களிலும் பற்று வைக்காமல் பரமனுக்கு அர்ப்பணித்து விட்டு செயலாற்றுவாயாக” என்று ஸ்ரீ ராமன் இலக்குவனுக்கு உபதேசிக்கிறான். உபதேசம் இலக்குவனுக்கு மட்டுமல்ல; நமக்கும் தான்.
மேலும் ஸ்ரீரமபிரான் கூறுகிறார்,:

            நிர்மலமாயுள்ளோராத்மாவு தன்னோடு

     கர்ம்மங்களொன்னுமே பற்றுகயில்லேன்னால்

     ஞானிப்பரஞ்சதெல்லாமே தரிச்சு த்த்-

     ஞானஸ்வரூபம் விசாரிச்சு ஸந்ததம்  நிலை கொள்ளுஜக”

மானத்தையொக்கெ த்யஜிச்சு நித்யம் பர-

      மானந்தமுள்க்கொண்டு மாயா விமோஹங்கள்

      மானஸத்திங்கல் நின்னாசு களக நீ

“நிர்மலமாயிருக்கின்ற ஆசபாசங்களால் பாதிக்கப் படாத ஆத்மாவை  கர்மங்களெதுவும் கட்டுப்படுத்தாது. அதனால் எந்த விதமான பந்தங்களும் உளவாகாது. நான் இப்பொழு கூறியதையெல்லாம் கவனத்தில்க் கொண்டு,நீ உன் ஆத்மஸ்வரூபத்தை மட்டும் நினைத்து எப்பொழுதும் மனத்தில் எந்த விதமான அபிமானத்திற்கும் இடம் கொடாமல் ,மாயையினால் உளவாகக்குடிய எல்லா ஆசைகளையும்  களைந்து விட்டு நீ யார் என்று மட்டு ஆராய்ந்து  நீ உன்னிலேயே  நிலை கொள்வாயாக. அதனால் உனக்கு இடைவிடாத பரமானந்தம் கிடைக்கும்.”       
இப்படி எங்கு பார்த்தாலும் ஆத்மஞானம் ஒன்று மட்டுமே நிரந்தரமான,நாசமற்ற ஆனந்தைத் தர முடியும் என்று கூறப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட ஞானம் கிடைக்க வேண்டுமென்றால் பூதவுடல் தான் நான் என்ற நினைப்பை ஒழித்துக் கட்ட வேண்டும்.அந்த முயற்ச்சி வெற்றிபெற அருணசலனின் அருள் வேண்டும். அதைத் தான் பகவான் றமணர் இந்த சுலோகத்தில் கூறியுள்ளார்:

            பௌதிக மாமுடற்  பற்றற்று நாளுமுன்


பவிசுகண் டுறவரு ளருணாசலா

No comments:

Post a Comment