Thursday, 19 March 2015

ரமணஜோதி 97

ரமணஜோதி 97


மாமருந்து


          மலைமருந் திடநீ மலைத்திட வோவருண்
               மலைமருந் தாயொளி ரருணாசலா
 அருணாசலா, என் மன மயக்கத்திற்கு மருந்திட தயங்கலாமா? அதுவும் நீயே மருந்து மலையாக இருக்கும்பொழுது? நீயே மருந்தாக இருக்கும் பொழு நான் ஏன் மதி மயக்கத்திற்கு ஆளாக வேண்டும்? இந்த கேள்விகளை கேட்கின்ற பகவான் இரண்டு மையக் கருத்துக்களை மீண்டும் தெளிவு படுத்துகிறார்: ஒன்று அருணாசலனின் தயவு இருந்து விட்டால் நம்மை அவித்யை எனும் அஞானம் தாக்காது. இரண்டு: நம்து மயக்கத்திற்கு மருந்தும் நாமே தான். அதாவது ‘நானும்”   பிரம்மௌம் ஒன்று தான் என்று ஆன பிறகு, நமக்கேது மயக்கம்.நான் யார் என்ற கேள்விக்கு விடை கிடைத்து விட்டால் அவித்யை மாயமாய் மறந்து போய்விடும்.ஆகவே, அருணாசலனை அறிவது தான் மருந்து; அந்த அருணாசலனே தான் “னான்: என்ற அறிவு ஏற்படுவதளே வைத்தியனும் அவனே. மருந்தும் அவனே;மருத்துவனும் அவனே எங்கிறார் பகவான்.
சரணாகதி தத்துவத்தின் மற்றொரு விளக்கமாக இந்த சுலோகத்தை எடுத்துக் கொள்ளலாம்.
பகவானுக்கு ஞானம் உண்டானது மதுரையில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்.எந்த குருவின் உபதேசமும் கேட்டு பகவான் ஞாம் பெறவில்லை.
தானாகவே தன்னை அறிந்து கொண்டதினால் ஏர்பட்ட ஞானம்.
பகவானுக்கு குரு அரஊணாசலனே தான். இதை முந்தைய ஒரு சுலோகத்தில் விளக்கியுள்ளார்.
          குற்றமுற் றறுத்தெனைக் குணமாய்ப் பணித்தாள்
      குருவுரு வாயொளி ரருணாசலா
இந்த சுலோகத்தில் அருணாசலனையே தனது குருவாகௌரைக்கிறார் பகவான்.
நம்து துன்பத்திற்கெல்லாம் காரணமான வியாதி “நான்” எனும் மமதாகாரம் தான். “நான்,எனது,” என்ற எண்ணத்தினால்,ஜீவாத்மாக்கள் பொருளாசை, பதவியாசை,புகழாசை,பெண்ணாசை முதலிய ஆசைகள் பீடிக்கப்படுகிறோம்.இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமென்றால் இந்த உடல் தான் “நான்” எனும் எண்ண்த்தால் ,இந்த உடலின் தேவைகள் “என்னுடைய” தேவைகள் என்றும்,இந்த உடலின் பந்தங்கள் “எனது” பந்தங்கள் என்றும் இந்த உடலுக்கு ஏற்படுகின்ற சாதக பாதகங்கள் “எனக்கு” ஏற்பட்ட சாதக பாதகங்கள் என்றும் எண்ணுகிறோம்..ஆகவே துன்பமும் இன்பமும் உண்டாகின்றது.யாருக்கு? இந்த உடலுக்கு.
“நான்” தான் “பிரம்மம்”; ஆகவே நானும் மற்றவர்களல்ல்; மற்றவர்களுக்கு-மற்றவர் என்று  ஒன்றில்லை- ஆகவே யாருக்கு துன்பம் ஏற்பட்டாலும் அது எனக்க் ஏற்பட்ட துன்பம் தான்; வசுதைவக குடும்பகம் என்ற தத்துவத்தை புரிந்துகொண்டால் நமது துன்பங்களெல்லாம் நீங்கும்;நிரந்தரமான சாந்தியுளவாகும் என்பது பகவானின் கருத்து.
பகவான் தனது வாழ்வில் ஞானம் பெற்ற பின் இந்த தத்துவத்தை ஒரு விரதமாகவே கொண்டிருந்தார் என்று கூறலாம். இதற்கெடுத்துக்காட்டாக ஒரு சில நிகழ்ச்சிகளை இங்கே குறிப்பிடுகிறேன்.

சென்னை மாகாணத்தின் முதலமிச்சராயிருந்த திரு குமார சாமி ராஜாவின் குடும்பத்தைச் சேர்ந்த ராஜபாளயம் ரமண்இயம்மாள், ரமண்விஜயம் புத்தகத்தைப் படித்து விட்டு ரமணரால் இர்க்கப் பட்டு வீட்டை விட்டு திருவண்ணாமலை வந்து சேர்ந்தார்கள். ஆனால் அங்கு வந்த பிறகு மிகுந்த மனக்குழப்பத்திற்கு ஆளானார்கள்.வீட்டை விட்டு வந்தது தவறு என்ற குற்ற உணர்வு அவர்களை வாட்டியெடுத்தது, எத்ற்கும் வந்தது தான் வந்தாகிவிட்டது பகவான் ரமணரை பார்த்துவிட்டு ஊர் திரும்பிவிடலாம் என்று தீருமானித்து ஆசிரமம் சென்றடைந்தார்கள். அன்று ஆசிரமம் இன்றைய போல பெரிதாக இல்லை. அங்கு யாரிடமோ கேட்ட பொழுது,பகவான் கிணற்றடியிலுள்ள கீற்றுக் கொட்டகையில் இரிக்கிறார் தெரிந்துகொண்டார்கள். கிணற்றடிக்கு சென்றடைந்த பொழுது கீற்றுகொட்டைகை தீ பற்றி எரிந்துகொண்டிருந்தது.சுற்றுவட்டாரத்தில் யாரையும் காணவில்லை. என்னை செய்வது என்று தெரியாமல் மிகவும் குழம்பி போய்விட்டார்கள் ராஜாமணி அம்மாள். அப்பொழுது கொழுந்து விட்டெரியும் நெரிப்பிலிருந்து பகவான் வெளிவருவது தெரிந்தது.பகவானின் சிறுவயது உருவத்தை ‘ரமண விஜயம்”

No comments:

Post a Comment