Wednesday, 18 March 2015

ரமணஜோதி 95

ரமணஜோதி 95

மரணம்----? 2


கடந்த மடலில்   வாஜ்ரவசு கௌதமர் சர்வமேதம் அல்லது சர்வ தக்ஷிணா யாகம் நடத்தியதையும்,அதில் அவர் தானமாக உப்யோகமற்ற பொருள்களை அளித்ததைக் கண்டு கோபமுற்ற அவர் மகன் நசிகேதஸ்               “என்னை யாருக்கு தானமாக அளிக்கப் போகிறீர்கள்?” என்று மூன்று முறை கேட்டதினால் பொறுமை இழந்த கௌதமர் ,” உன்னை யமனுக்கு தானமாக அளிக்கப் போகிறேன்” என்று கூறினதையும் கண்டோம்.
மேலும் தந்தையின் வாக்கை உண்மையாக்குவதற்காக யமபுரியை அடைந்த நசிகேதஸ் யமனைக் காண மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டி வந்ததையும்,அந்த மூன்று நாட்களும் அவன் அன்ன ஆஹாரமின்றி இருந்ததையும் திரும்பி வந்த யம தர்ம ராஜன் தன் வீட்டிற்கு வந்த அதிதி பட்டினியாக இருந்ததை தெரிந்து மனம் வருந்தி  நசிகேதஸிடம் மன்னிப்புக் கேட்டு அவனுக்கு மூன்று வரங்கள் தருவதாக கூறியதையும் கண்டோம்.
யமராஜனின் வேண்டுதலுக்கிணங்கி நசிகேதஸ் மூன்று வரங்களை கேட்கிறான்.அவையில் முதல் இரண்டு வரங்களை யமதர்மன் தயக்கமில்லாமல் வழங்குகிறான்.
முதல் வரம், “ என்னுடைய தந்தையாகிய கௌதமர் யமராஜனிடம் சென்ற மகன் என்ன செய்கிறானோ என்ற கவலைகள் ஏதுமில்லாமல் சாந்தியோடு என்னிடம் எந்த விதமான கோப்முமில்லாமல் மரண வாயிலிலிருந்து திரும்பி செல்கின்ற என்னைக் கண்டு,மகிழ்ச்சியோடு வரவேற்க வேண்டும்”
இந்த வரத்தை சிறிதும் தயங்காமல் மரணத்தின் அதிபனான யமன் நசிகேதசுக்கு வழங்கினான்.
நசிகேதசு தன்னுடைய இரண்டாவது வரமாக, ‘ சுவர்க்க லோகத்தில் தேவர்கள் முதலியோர் பசியோ தாஹமோ,ஜரா நரையோ மரண பயமோ வேறு எந்த விதமான துக்கங்களோ இல்லாமல் வாழுகிறார்கள். அப்படிப்பட்ட சுவர்க்க லோகத்தை அடைவதற்கு ஏதுவான அக்னியை நீவிர் ஆராதிக்கின்றீர்.அந்த அக்னி தத்துவத்தை எனக்கு தாங்கள் உபதேசிக்க வேண்டும்.இதுவே எனது இரண்டாவது வரம் “ என்கிறான்.
யமதர்மன் அக்னி தத்துவத்தை நசிகேதசுக்கு உபதேசிக்கிறான். மேலும் யமதர்ம ராஜன் அருளுகிறான் ,” இனிமேல் அக்னி உன் பெயரால் போற்றப்படும்.”
நசிகேதசஸ் தன் மூன்றவது வரத்தை கூறுகிறான்:
          யேயம் ப்ரேதே விசிகில்ஸா மனுஷ்யே
          அஸ்தித்யேகே நாயமஸ்தீதி சைகே
          ஏடத்வித்யாமனுசிஷ்டஸ்த்வயா அஹம்
          வராணாமேஷ வரஸ்த்ரீய:
                     மந்திரம் 20
இரண்டாவது வரத்தினால் இறப்பின்மையை சம்பாதித்துக்கொள்ளும் வழிமுறையை யமதர்ம ராஜனிடமிருந்து தெரிந்து கொண்டாலும் இறப்பு அல்லது மரணம் என்பது ஒரு ஆன்மாவின் முடிவு என்று சிலரும்,மரணத்திற்குப் பின்னும் ஆன்மா இருக்கத்தான் செய்கிறது என்று வேறு சிலரும் கூறக்கேட்டுள்ள நசிகேதஸ்,இந்த சந்தேகத்திற்கு விடை தெரிய வேண்டும் என்பதை தனது மூன்றாவது வரமாக கேட்கிறான்.  ஆத்மஞானம் கிடைத்தாலின்றி இரண்டாவது வரம் பலனளிக்காது என்று நசிகேதசுக்குப் புரிகிறது..ஆகவே இந்த வேண்டுதல்.
இந்தக் கேள்வி யமதர்ம ராஜனுக்கு தர்ம சங்கடத்தை உண்டாக்குகிறது. மரணத்தின் இரகசியத்தையல்லவா இவன் கேட்கிறான் என்று அங்கலாய்க்கனானான் ம்ரித்யுராஜன்.
ஆத்மஞானம் என்பது எல்லா கர்ம பந்தங்களிலிருந்து விடுபட்டு ஆசைகளெல்லாம் நசித்து பற்றற்ற நிலையை அடைந்தவனுக்கு மட்டுமே தெரிந்து கொள்ள முடியும்.
பகவான் ரமணர் கூறியுள்ளதைப் போல் “பௌதிகமாம் பூதவுடல் பற்றற்ற்வனுக்குத் தான் ஆத்ம ஞானத்திற்கு அருகதை /அதிகாரம் உண்டாகிறது.
அடுத்த 21,23,24,25 மந்திரங்களில் யமதர்மராஜபன் நசிகேதசை ஆத்ம ஞானம் பெறும் முயற்சியிலிருந்து திருப்பிவிட பல விதமான பௌதிக சுகங்களை அளிக்கக் கூடிய பொருள்களையும் நீண்ட ஆயுளையும் தருகிறேன் என்று ஆசைகாட்டுகிறான்.
யமதர்ம ராஜன் சொன்னான்: “ பிரபஞ்சத்தின் ஆதியில் தேவர்களுக்கு கூட இந்த சந்தேகத்திற்கு விடை தெரிந்ததில்லை. மரண ரகசியம் சாதாரண மானிடர்களுக்கு சொன்னாலும் புரியாது. ஏனென்றால் ஆன்மா என்பது மிகவும் சூக்ஷ்மமான விஷயம்..ஆகவே வேறு ஏதாவது கேள் கொடுக்கிறேன்.நீண்ட ஆயுளையுடைய புத்திர பௌத்திரர்கள் வேண்டுமா,நிறைய தன,தான்யம் வ்ஏண்டுமா, பிரபஞ்சத்திலேயே பெரிய நாடு வேண்டுமா, னீ விரும்பும் அளவிற்கு ஆயுள் வேண்டுமா,, நீ விரும்புகின்ற எல்லா சுகங்களும் கிடைக்க  வேண்டுமா, அழகான பெண்டிர் வேண்டுமா, எது வேண்டுமோ கேள்;தருகிறேன்.மரணத்தைக்குறித்துள்ள இரகசியத்தை மட்டும் கேட்காதே.””
ஆனால் நசிகேதஸோ விடுவதாயில்லை,; “ மரணத்திற்கெல்லாம் அரசனாயிருக்கின்ற தர்மராஜனே, நீ தருகிறேன் என்று சொல்லுவதெல்லாம் நாளை இல்லாமல் போகக்கூடியவை.இந்திரியங்களின் தூண்டுதலின் பேரில் உளவாகும் ஆசைகளை அவை தாற்காலிகமாக திருப்தி படுத்தினாலும்,அந்த இந்திரியங்களையே நாசம் அடைய செய்யக்கூடிவை; பலவீனபடுத்தக் கூடியவை. எல்லாமே நாசமடையக் கூடியவை.ஆகவே எனக்கு ஆத்மஞானம் தான் வேண்டும்.”
நசிகேதஸுக்கு தெரிகிறது ஆத்மஞானம் ஒன்று மட்டும் தான் ஒருவனுக்கு  நிரந்தர சாந்தியை அளிக்க முடியும் என்று.
யமதர்ம ராஜனுக்கு நசிகேதஸ் பிரம்மஞானம் பெற தகுதியுடையவன் தான் என்று புரிந்தது
அடுத்துவரும் மந்திரோபதேசங்களில் படிப்படியாக யமதர்ம ராஜன் நசிகேதசுக்கு ஆத்மஞானத்தை உபதேசிக்கிறான்
.         அன்யச்சேயோ அன்யதுதைவ ப்ரேய
          ஸ்தே உபே நானார்த்தே புருஷம் சினீத:
          தயோ: ஸ்ரேய ஆததானஸ்ய ஸது பவதி
          ஹீயதே அர்தாத்ய உப்ரயோ வ்ருணிதே
                     அத் 1 வல்லி 2 மந்த் 1
மோக்ஷத்திற்கு வழிவகுக்கும் ஞானம் வேறு; இகலோக வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கு உபயோகப்படக்கூடிய ஜ்யோதிஷ்டோமாதி அறிவு வேறு. முதலில் கூறியது வித்யை எனப்படும்.இரண்டாவது கூறியது அவித்யை எனப்படும். அவித்யை மானுடனை பலவித பந்தனத்திற்கு ஆட்படுத்துகிறது. முதல் ஞானத்தினால் உளவாவது ஸ்ரேயஸ்ஸும் இரண்டாவது கூறிய அறிவினால் உளவாவது ப்ரேயஸ்ஸும் எனப்படுகிறது.
ஸ்ரேயஸ்ஸின் மற்றும் ப்ரேயஸ்ஸின் கூக்குரல் நம் மனதில் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டு தானிருக்கிறது.ஒன்று மற்றதை அடக்க முயலுகின்றது.இதனால் ஒரு மாபெரும் புயலே சில நேரங்களில் உருவாகிறது. நாம் இருதலை கொள்ளி எறும்பு போல் தவிக்க நேரிடுகிறது.
ஸ்ரேஅஸ் எப்பொழுதும் பற்றின்மையை போதிக்க முயலுகிறது. ப்ரேயஸ்ஸோ இந்த்ரிய ஜனித அனுபவ ங்களிருந்து கிடைக்கக் கூடிய சிறிதும் பெரிதுமான சுகங்களை நினைவு படுத்தி நம்மை மேல்மேலும் இகலோக சுகங்களை இச்சிக்க வைக்கிறது.
பெரும்பான்மையானோர் ப்ரேயஸ்ஸை விரும்பி இகலோக சுகங்களை நாடுகிறார்கள்.
          ஸ்ரேஸ்ச ப்ரேயஸ்ச மனுஷ்யமேத-
          ஸ்தௌ ஸாம்பரீத்ய விவனக்தி தீர:
          ஸ்ரேயோ ஹி தீரோ அபி ப்ரேயஸோ வ்ருணீதே
          ப்ரேயோ மந்தோ யோகக்ஷேமாத்வ்ருணீதே.
                     மந்த் 2
ஏனென்றால் அந்த சுகங்களைத் தரும் பொருள்களை நாம் காண முடிகிறது. ஸ்ரேயஸ்ஸினால் நமக்கு கிடைக்கும் ஆனந்தம் கண்ணுக்கு-நம் புலங்களுக்கு புலப்படாதது. ஸ்ரேயச்சுக்கான மார்க்கம் கடினமானது. இகலோக சுகங்களுக்கான வழி அந்த நேரத்தில் எளிதாக த்தோன்றுகிறது. அதன் விளைவுகள் தான் துன்பம் விளைவிக்கின்றது.
ஸ்ரேயஸ்ஸை வேண்டுகிறவன் அறிவாளி;ப்ரேயஸ்ஸை விரும்புகிறவன் மூடன்
இதையெல்லாம் ஆராய்ந்துதான் நசிகேதஸ் ஸ்ரேயஸ்சுக்கான மார்க்கத்தை கேட்கிறான்.இது யமதர்ம ராஜனுக்கும் புரிகிறது..
          நசிகேதஸ்சின் அறிவைப் பாராட்டிவிட்டு யமதர்ம ராஜன் மேலும் கூறுகிறான்:
          ந நரேணாவரணே ப்ரோக்த ஏஷ
ஸுவிஜ்னேயோ பஹுதா சிந்த்யமான:
அனன்யப்ரோக்தே கதிரத்ர நா—
ஸ்த்ருணீயான் ஹ்ருதக்க்யமணுப்ரமாணாத் ஏரா
இந்த மந்திரத்திலிருந்து மிருத்யு  ராஜன் ஆத்மாவை குறித்து கூற ஆரம்பிக்கிறான். இது தான் மரணத்தை புரிந்துகொள்வத்ற்கான முதல் படி.ஆன்மா இருக்கிறது என்றும் இல்லை என்றும் வாதிடுப்வர்கள் ஏராளம்.சிலர் சொல்வர் ஆன்மாதான் எல்ல கர்மங்களுக்கும் கர்த்தா ; மற்று சிலர் சொல்வர் ஆன்மாவிற்கு கர்த்ரித்வம் கிடையாது.அது அகர்த்தா/ என்பார்கள். அது சுத்த சைதன்யம் என்பார்கள் சிலர்; அது மாயையால் களங்கப்பட்டுள்ளது என்பார்கள்/ இன்னும் சிலர்.
ஆகவே மமதை அடங்காத சாதாரணர்களால் இது என்ன என்று உபதேசிக்க முடியாது..
தானன்றி வேறில்லை என்று உணர்ந்த ஞானி ஒருவனால்த் தான் ஆத்மோபதேசம் செய்ய இயலும்.அப்படிப்பட்ட குருவிடமிருந்து உபதேசம் பெறுபவன் தான் பயனுமடைய முடியும். அம்மாதிரி ஞானி தானே பிரம்மம் என்று உணர்ந்தவனாயிருப்பான்.அப்படிப்பட்ட ஆசாரியனிடமிருந்து உபதேசம் பெறும்பொழுது,சுத்த-அசுத்த,கர்தா-அகர்த்தா  விகல்பங்களெல்லாம் உள்வாகாது.ஏனென்றால் எல்லா விகல்பங்களும் அந்த பரமாத்மாவில் லயித்து விடும்.அந்த மாதிரி ஆத்மசாக்ஷாத்காரம் அடைந்தவர்களுக்கு தெரிந்துகொள்வதற்கு வேறு ஒன்றுமில்லையல்லவா?
அப்படிப்பட்ட ஆசாரியனிடமிருந்து உபதேசம் பெரும்பொழுது சீடனும் பிரம்மமாகவே ஆகி விடுகிறான். அவனுக்கும் ‘அஹம் ப்ரம்மாஸ்மி’ என்ற போதம் உண்டாகிறது. அது தான் முக்தி அல்லது மோக்ஷம்.
ஆத்மா என்பது அணுவிலும் சிறிதாக இருப்பதால் அவ்வளவு எளிதாக விளக்கவும் முடியாது;விளங்கிக்கொள்ளவும் முடியாது.
ஆத்மா வெறும் காரண காரிய வாதங்களால் விளக்க முடியாது.ஆத்ம சாக்ஷாத்காரம் என்பது விளக்கத்திற்கப்பார்ப்பட்ட து.
அத்மாவை தன் புத்தியினால் மட்டும் புரிந்து கொள்ள முடியாது.
அதே போல் அனசுவரமான நாசமில்லாத ஆத்மாவை நசிக்ககூடிய பௌதிக பொருட்களை அர்ப்பிபதன் மூலம் அடைய முடியாது.
தர்மத்தின் தலைவன் மேலும் கூறுகிறாண்:
          காமஸ்யா அப்திம், ஜகத:,ப்ரதிஷ்டாம்,
          க்ரதோரனந்த்யமபயஸ்ய பாரம்
          ஸ்தோமமஹதுருகாயம் ப்ரதிஷ்டாம்
          த்ரிஷ்ட்வா த்ரித்யா தீரோ நசிகேதோ அத்யஸ்ராக்ஷீம்
“சகலவிதமான ஆசைகளின் முடிவும்,அதற்கு மேல் பயப்படுவதற்கு ஒன்றுமில்லாததும் ஆகிய ஹிரணியகர்ப ஸ்தானம் கிடைத்தும் அதற்கும் மேல் மரணத்தின் இரகசியத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற திட நிச்சயத்தில் மன உறுதியோடு நிற்கிறாயே நீ அறிவாளி தான்.. இதற்கு மேல் யாரும் தருவதற்கொன்றுமில்லை என்று உணர்ந்த பொழுதும் நீ உறுதியோடு நிற்கின்றாயே ,நீ ஆத்ம ஞானம் பெற் தகுதியானவன் தான்”.

இவ்வண்ணம் கூறிவிட்டு யமதர்மராஜன் ஆத்மக்ஞானோபதேசம் ஆரம்பிக்கிறார்..அதை அடுத்த மடலில் காண்போம்.

No comments:

Post a Comment