Wednesday 16 September 2015

ரமணஜோதி 121

ரமணஜோதி 121

பிரபஞ்ச ரகசியம்காண்பவனும்,காணும் பொருளும், காட்சியும் எகல்லாம் ஒன்றே


வெளிவிட்டே நுன்செயல் வெறுத்திடா துன்னருள்
          வெளிவிட் டெனைக்காவருணாசலா
வேதாந் தத்தே வேறற விளங்கும்
          வேதப் பொருளரு ளருணாசலா

“வேதங்களின் சாரமான பொருளே ‘ஒன்றல்லாமல் வேறில்லை’ என்பது தான். அந்த பிரகிருதி இரகசியத்தை வெளிவிட்டதற்காக என்னை வேறுத்திடாமல் எனக்கருளவேண்டும், அருணாசலா,” என்று பகவான் ரமணர் அருணாசலனிடம் வேண்டுகிறார்.
இதற்கு முன்னாலுள்ள சுலோகங்களில் பகவான் அரூணசலனின் கருணையையும் வேதாந்தத்தின் சாரப்பொருளான ‘நான் யார்” விசாரமார்க்கத்தை குறித்தும் விளக்கியிருந்தார். அவர் தனது வாழ்  நாள் முழுவதும் இந்த உலக வாழ்க்கையின் அடிப்படை தத்துவங்களையும் அதிலிருந்து முக்தி பெறுவதற்கான மார்க்கங்களையும் சில நேரங்களில் வார்த்தைகளிலும், பல நேரங்களில் மௌனத்தின் வழியாகவும் தனது வாழ்வின் உதாரணத்தைக்கொண்டும் ஞானோபதேசம் செய்து வந்தார்.
அவர் தம் உபதேசங்களின் சாரத்தை சற்றே பார்ப்போம்.
ஞானம் என்பது என்ன என்று சாமானியர்களுக்கும் புரியும்படி பகவான் விளக்கி கூறியுள்ளார். காண்பவன், காணும் பொருள், காணும் பிரபஞ்சம், காண்பதற்கு உதவும் வெளிச்சம் எல்லாமே ஒண்றின் பல ரூப நாம பேதங்களே. நான் எனும் அகந்தையின் விசார-விகார வெளிப்பாடுகளே என்றுள்ளார் பகவான்.
‘உள்ளது நாற்பது ‘ எனும் நூலின் மங்கல சுலோகங்களில் பகவான் கூறியுள்ளது மேற்கூறிய தத்துவத்தை புரிந்துகொள்ள உதவுகிறது.
                   உள்ளதல துள்ளவுணர் வுள்ளதோ வுள்ள பொரு
       ளுள்ளலற வுள்ளத்தே யுள்ளதா—லுள்ளமெனு
       முள்ளபொருளுள்ளலெவ நுள்ளத்தே யுள்ளபடி
       யுள்ளதே யுள்ள லுணர்வாயே
நித்தியமான,மாற்றத்திற்குள்ளாகாத, சுயம் பிரகாசமான,’சத்- சித்என்பதே உண்மையான பிரம்மம்.அந்த பிரம்மம் எல்லோர் உள்ளத்திலும்  இருந்து கொண்டேயிருக்கிறது. இந்த உண்மையை அடிக்கோடிட்டுக் காண்பிப்பதற்காக பகவான் இந்த சுலோகங்களை பயன் படுத்தியுள்ளார்.

உள்ளதல  --என்ற பத பிரயோகத்தின் பொருள் உள்ளதுஎன்பது இல்லையென்றால்அதாவது நம்முள் அந்த சத்சித் ஆனந்தமான பிரம்மம் இல்லாவிட்டால்,
நாம் எப்படி அந்த “உள்ளதை-அந்த சத் பொருளை உணர முடியும்?
உள்ளலற  சுத்த சத் சிதான பிரம்மம் நிச்சிந்தையான எந்த சிந்தனையுமே இல்லாத நிலையில்த்தான் வெளிப்பட முடியும். ஆகவே இதயமானது வேறு வெளியுலக சிந்தனையே இல்லாத பொழுது தான் பிரம்மத்தை உணர முடியும்.
ஆனால் “உள்ளலே” ( சிந்தையே )இல்லாமல் இருந்தால், பிறகு எப்படி அந்த “உள்ளதை” தியானிக்க முடியும்? அதை உணரத்தான் முடியுமா? ஆனால் நாம் எல்லாம் “நான்’ எனும் நிஜமான சொரூபம் நம்முள்ளே இருக்கிறது என்று உணருகீறோம்.ஆகவே எல்லோர் உள்ளிலும் பிரம்மம் குடிகொண்டிருக்கிறது.
இதையே உப்தேச உந்தியாரிலும் பகவான் விளக்குகிறார்.”
          உள்ள துணர வுணர்வுவே றின்மையி
               நுள்ள துணர்வாகு முந்தீபற
                   வுணர்வேநா மாயுள முந்தீபற
உள்ளது-----எது ஒன்று நிலையாக இருக்கின்றதோ
உணர--------உணர்ந்துகொள்ள-அறிந்துகொள்ள
உணர்வு ----மனசு—உள்ளுணர்வு—ஆத்மா—பிரம்மம்
வேறு ----   மற்றொன்று
இன்மையின்-----இல்லாதிருப்பதால்
உள்ளது-----------எது ஒன்று இருக்கின்றதோ
உண்ணர்வு------மனசு-உள்ளுணர்வு—ஆத்மா-பிரம்மம்
 நம்முள் குடிகொள்ளும் ஆன்மாவை உணர அந்த ஆத்மாவைத் தவிர மற்றொன்று இல்லாமலிருப்பதால், உள்ளேயிருக்கின்ற ஆன்மாவே நாமாவோம்.அதுவே சித் எனப்படும். பகவான் சொல்வதெல்லாம் எங்கே மனோ  நாசம் சம்பவிக்கின்றதோ,அங்கே ஆன்மா சுயம்பிராகாசமாக ஒளிருகிறது.ஆன்மாவைப் புரிந்துகொள்ள ஆன்மாவே போதும்; வேறொன்றால் புரிந்து கொள்ள முடியாது.அதுவே சத்.ஆகவே சத்தும் சித்தும் ஒன்றே. ஒன்றன்றி வேறில்லை.
உணருவதே அந்த நித்திய பிரம்மத்தின் உண்மையான அணிகலன். வேறு குண விசேஷங்கள் எதுவும் சத்-சித்திற்கு கிடையாது.
          ---------------------------------------பார்வைசேர்
     நாமுலகங் காண்டலா நானாவாஞ் சத்தியுள்
          வோர்முதலை யொப்ப லொருதலையே-நாமுருவ்ச்
          சித்திரமும் பார்ப்பானுஞ் சேர்படமு மரொளியு
          மத்தனையுன் தானா மவனுலகு-------
‘உள்ளது நாற்பது நூலின் முதல் சுலோகத்தில் மேற்கண்ட கருத்தை அடிக்கோடிட்டு விளக்குகிறார் பகவான்
நாம் இந்த உலகை காண்பதே, அந்த ஆதி சக்தி ஆத்மா-பிரம்மம் நானாவித ரூப நாமங்களாக தெரிவதாக ஏற்றுக்கொள்வதினால் தான். அப்படிக் காண்பதற்கு, அந்தராத்மா அவசியம்.அதுள்ளதால்த் தான் காணமுடிகிறது.  நாம் காணுகின்ற உலகின் சித்திரமும் காணுகின்ற,பிரபஞ்சமும், சினிமாத் திரையில் காணுகின்ற படம் போல்த் தான். .. ஒளி மறைந்து விட்டால் அவையும் ஒளியுடன் ஐக்கியமாகி விடும் ப.டமும், திரையும் எல்லாம் அந்த ஒளி உள்ள வரை தான்.எல்லாமே அந்த ஒளியில் அடக்கம். எல்லாமே அந்த பரபிரம்மத்தின் தோற்றங்கள் தான்.
இந்த உண்மையை விசாரித்து அறிந்து கொண்டு விட்டால் ராக துவேஷாதிகளிலிருந்து முக்தமாகிவிடுவோம்.
இந்த பேருண்மையை சாமானியர்களுக்கும் புரியும் வகையில் விளக்கிக் கூறி வாழ்ந்து காட்டினார் பகவான் ரமணர்.
இந்த பேருண்மையை—பிரபஞ்ச ரகசியத்தை வெளிச்சம் போட்டுக்காட்டியதற்காக என்னை தண்டித்து விடாதே அருணாசலா என்று வேண்டுகிறார்.பகவான் இந்த சுலோகங்களில்.
மறைமுகமாக பகவான் கூறுவது என்னவென்றால் இந்த பேருண்மையை தெரிந்துகொண்டுவிட்டால் நாமெல்லாம் அருணாசலனின் கருணைக்கு பாத்திரமானவர்களாவோம் முக்தியடைந்தவர்களாவோம் என்பது தான்


,