Friday 27 March 2015

ரமணஜோதி 104

ரமணஜோதி 104


பரமன் எளியோர்க்கினியன்

மேன்மேற் றாழ்ந்திடு மெல்லியர்ச் சேர்ந்து  நீ

               மேன்மையுற் றனையென் நருணாசலா


“ அருணாசலா, நீ மேலுக்கு மேல் பணிவான,அடக்கமான,எளிமையான பக்தர்களுடன் இணைந்து மேலுக்கு மேல் புகழ் சேர்த்துக் கொள்கிறாய்.” என்கிறார் பகவான் ரமணர் இந்த சுலோகத்தில்.
‘மேலுக்கு மேல் பணிவான’ என்ற சொற்றொடர் மூலம் பகவான் குறிப்பிடுவது,” நான்: எனும் அஹந்தையை முற்றிலும் அழித்துவிட்டு உள் முகமான விசாரணையின் மூலம் பரமனைத் தேடி பரமாத்மாவை அடையாளம் கண்டுகொண்ட பகதர்களை. வெளி விஷயங்களை அறவே விட்டு விட்டு ‘நான் யார்’ என்ற விசார மார்க்கத்தில் செல்கின்ற பக்தர் கூட்டத்தினுடன் தான் பரமாத்மா ஐக்கியமாகிறார்; ஆத்மசாக்ஷாத்காரம் அடைவதற்கு ஏதுவாகிறார்.
இன்னொருவிதத்தில் சொல்லப் போனால் யாரொருவன் தன்னை அழித்துக் கொண்டு நிஷ்காமிய கர்மத்தில் ஈடுபடுகிறானோ, எவனொருவனுக்கு தான், தன்னுடையது என்ற மமாகாரம் இல்லாமலிருக்கிறானோ அவனைத்தான் பகவான் தன் அருளுக்கு பாத்திரமாக்குகிறார்.
பரமாத்மா கருணாமயன் தான்;; அதில் சந்தேகப்பட ஒன்றுமில்லை.ஆனால் தன் கருணையை அதற்கு தகுதியுள்ளவர்களுக்கு மட்டும் தான் வழங்குகிறான்
எப்படி தகுதியுடையவனாவது? பகவத் கீதையில் விளக்கங்கள் வழங்குகிறார் பகவான் கிருஷ்ணர்.
பதின்மூன்றாம் அத்தியாயம் 24 ஆம் சுலோகத்தை பாருங்கள்:
     த்யானேனாத்மனி பஸ்யந்தி கேசிதாத்மானமாத்மனா !
     அன்யே ஸாங்கியேன யோகேன கர்மயோகேன சாபரே !!
சிலர்  தியானம் செய்து ஆத்மாவை அறிகிறார்கள்; மற்றும் சிலர் ஞானத்தால் ஆத்மாவை காண்கிறார்கள்;இன்னும் சிலர் நிரந்தரம் நிஷ்காமிய கர்மங்கள் இயற்றுவதன் மூலம் ஆத்மாவை காண்கிறார்கள். எப்படிப் பார்த்தாலும் ஆத்மாவை அடையாளம் காண்பது தான் நமது குறிக்கோளாக இருக்கிறது.
ஆத்மபோதம் அல்லது ஆத்ம ஞானம் பெறுவது தான் பரமனை அடைவதற்கான மார்க்கம். அப்படி தேடுகிறவர்களுடன் தான்  நான் இருக்கிறேன் என்கிறார் கிருஷ்ணர்.
ஞானம் என்றால் என்ன?
ஆதி சங்கர பகவத்பாதாள் தனது ஆத்ம போதம் என்ற நூலில் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்:
          போதோஅன்யஸதனேப்யோ ஹி
          ஸாக்ஷான்மோக்ஷைக ஸாதனம்
          பாகஸ்ய வஹ்னிவக்ஞானம்
          வினா மொக்ஷோ ந சித்யதி
இந்த இஹலோஹ வாழ்விலிருந்து முக்தி கிடைக்க வேண்டுமென்றால் ஒரே உபாயம் ஆத்ம போத்த்தை அடைவது தான். எப்படி உணவு சமைப்பதற்கு நெருப்பு அவசியமோ அது போல் மோக்ஷத்திற்கு ஆத்ம ஞானமும் அவசியம்
இதையே பகவான் ரமணர் தமிழில் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்:
          அறிவொன்றே நேர்முக்தி சாதன மாகும்
          பிறசா தனங்களின் பேறா--- மறிவின்றி
          யாகாது முக்   அறியாமைக் குப்பகை யன்றனாற் கன்ம
          மறியாமை தன்னை யகற்றா—தறிவே
          யழிக்குமறி யாமையொளி யந்த காரக்கும்
          பொழிக்குமா றென்றே யுணர்வாய்—முழுதும்தியுற லக்கினியி றிப்பாக
          மாகாத வாறென் ற்றிவாய் நீ---மோக
பகவான் தொடருகிறார்:
       
கர்மங்கள் மோகங்களிலிருந்து உள்வாய் மேலும் மேலும் மோகங்களை உளவாக்குவதாலும்,கர்மங்களும் அறியாமை எனும் அவித்யையும் கூட்டாளிகளாக இருப்பதாலும் கர்மங்கள் அறியாமையை ஒழிக்காது;ஒடுக்காது.எப்படி பிரகாசம் (ஒளி) இருளை இல்லாதாக்குமோ அது போல் ஞானம் ஒன்றே அவித்யையைப் போக்கடிக்கும்.
          அவிரோதிதயா கர்ம நா வித்யாம் வினிவர்தயேத்
          வித்யாவித்யாம் நிஹந்தேவ தேஜஸ்திமிரஸங்கவத் !!
                           ஆ.போ சுலோ 3
அறியாமை அகலும் பொழுது மேகங்களால் மறைந்திருந்த சூரியன் வெளிக்காண்பானோ, அதுபோல் சுத்த சைதன்யமான ஆத்மாவும் தானாகவே விளங்குவான். ஆகவே அறியாமையை ஒழிப்பது ஒன்று தான் ஆத்மாவை காண்பதற்கான வழி.
          பரிச்சன்ன இவாஞானாத்
          தன்னாசே ஸதி கேவல:
          ஸ்வயம் ப்ரகாசதே ஹ்யாத்மா
          மேகாபாயேம்சுமானிவ !!
                     ஆ.போ சுலோ 4
          அறியாமை யான்மறை வானதுபோ லான்மா
          வறவேய: தேகமதாகி----நிறைவா
          யிலகுமே தானா யிரியவே மேக
மிலகுமா தித்தனென வே நன்---குலகில்
பகவான் ரமணரும் அதையே தமிழ்ப் படுத்தியுள்ளார் மேற்கண்டவாறு.
ஆத்மபோத்த்தை அடைவது அவ்வளவு சுலபமானதல்ல, என்பதால் பகவான் கிருஷ்ணர் அர்ஜுன்னிடம் கூறுவார்:” ஆத்மஞானத்தை அடைவதற்கான மார்க்கத்தை உனக்கு காட்டுகிறேன்; அதற்குப் பின் இந்த உலகில் தெரிந்து கொள்வதற்கு ஒன்றுமே இராது.”
ஞானம் தே அஹம் ஸவிக்ஞ்னானமிதம் வக்ஷ்யாம்ய சேஷத:
யஜ்ஞாத்வா நேஹ பூயோஅன்யஜ்ஞாதவ்யமசிஷ்யதே !!
                     ப.கீ. அத்.7 சுலோ 2
“சாஸ்த்ரோக்தமான இந்த ஞானத்தை உனக்கு கூறுகிறேன்;இதை அறிந்த பின் அறியவேண்டியது வேறு ஒன்றுமிராது” என்கிறார் கிருஷ்ணர்
‘சாஸ்திரோக்தம்’ என்ற வார்த்தை மூலம் கிருஷ்ணர் தெளிவாக கூறுகிறார் இந்த ஞானம் வெறும் ஏட்டுச்சுரைக்காய் அல்ல, இது நடைமுறைப் படுத்தவேண்டிய அறிவு. நடைமுறை அனுபூதி கிடைத்தவனுக்கு மேற்கொண்டு தெரிவதற்கொன்றுமில்லை.
மேலும் கீதையில் பகவான் தெளிவுறக் கூறுவார்:
          அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்த: ஸர்வம் ப்ரவர்த்தே !
          இதி மத்வா பஜந்தே மாம் புதா பாவ ஸமன்விதா: !!
                                அத்த்.10 சுலோ 8
‘நானே இந்த உலகிலுள்ள எல்லா ஜீவஜாலங்களின் உற்பத்தி ஸ்தானமாக இருக்கிறேன். என் சக்தியால்த் தான் எல்லாமே செயலாற்றுகின்றன;.இதை உணர்ந்து ஞானிகள் அஹங்காரத்தை விட்டு ஒருவருக்கொருவர் அன்புடன் வாழ்கிறார்கள்; என்னை வழிபடுகிறார்கள்.
          மச்சித்தா மத்கதப்ராணா போதாயந்த: பரஸ்பரம் !
          கதயந்தஸ்ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச !!
                                     சுலோ 9
என் மீது சித்தம் வைத்தவர்கள் ஒருவருக்கொருவர் சொருமிப்புடன் வாழ்ந்து திருப்தியடைந்தவர்களாகிறார்கள்; அவர்களுக்கு மேற்கொண்டு மோகங்கள் எதுவும் இராது
தமிழ் மண்ணிலுதித்த சைவ சித்தாந்த பெரியோர்களும் மேற்படிக் கருத்துக்களை வலியுறுத்தியுள்ளார்கள்.
மாணிக்கவாசகர் திரு வாசகத்தில் கூறுகிறார்:
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே
“எந்த ஞானமும் இல்லாத என்னைப் போன்ற அறிவிலிகளையும் அறிவீனத்தைப் போக்கி முக்தியளிக்கும் சிவபெருமானே” என்று விளித்து பிரார்த்திக்கிறார் மாணிக்கவாசகர்
ஆக்கம்,அளவு அறுதி இல்லாய்,அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
‘ஆதியும் அந்தமும் இல்லாத அளப்பற்கரிய பெருமையுடைய சிவபெருமான் ஐம்பெரும் தொழில்-ஆக்கல், காத்தல்,அழித்தல்,அறிவீனத்தை போக்குதல்,அருள் தருதல்--,  புரிகிறார்’ என்று மாணிக்கவாசகர் கூறுகிறார். “அப்படிப் பட்ட பெரியோனாகிய பெருமானே நீ என்னுடைய அறிவீனத்தைப் போக்கி உன் உலகில் புகுவதற்கு அருள்வாய்” என்கிறார்.
              திருவாசகம் 1.41-43
திருமூலர் தனது திருமந்திரத்தில் கூறுவார்:
          அன்பு சிவமிரண் டென்பர் அறிவிலார்
         அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
       அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
      அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே
                 முதல் திருமந்திரம் 27 அன்புடைமை
“அறிவிலிகள் பரமனும் அன்பும் வெவ்வேறு என்று எண்ணுகிறார்கள்.அன்பே சிவம் என்பதை அவர்கள் அறியார்.அன்பே சிவம் என்பதை தெரிந்து கொண்டு விட்டாலோ அவர்கள் எல்லோரிடமும் அன்பு செலுத்த ஆரம்பித்து விடுவார்கள்.அவர்கள் பரமனுக்கு நெருக்கமானவர்களாகிவிடுகிறார்கள்.
பட்டினத்தார் பாடுகிறார்:
     கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையு நினையாப் பிழையும், நின்னஞ் செழுத்தைச்
சொல்லாப் பிழையுந்,துதியாப் பிழையும்,தொழாப்   பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே
‘கல்லாப் பிழை—எதையும் கற்றறியாத தவறும், ஏதேனும் கற்றிருந்தால் அதை சொல்லாத-மனனம் செய்யாத தவறையும், உன்னை நினைத்து மனமுருகி தவறை உணர்ந்து உன் முன்னால் நில்லாத தவறையும்,உன் நாமத்தை-பஞ்சாக்ஷர மந்திரத்தைச் சொல்லாத தவறையும் உன்னைத்துதித்து பாடாத தவறையும்,உன்னை வணங்காத பிழையையும்—இவ்வாறு எண்ணிலடங்கா தவறுகள் இழைத்த என்னை மன்னித்து எனக்கருள்வாய் காஞ்சி ஏகாம்பரனாதனே’ என்று வேண்டுகிறார்.
      பொன்னை மாதரைப் பூமியை நாடிடேன்
என்னை நாடிய என்னுயிர் நாதனே
உன்னை நாடுவன் உன்னருள் தூவெளி
     தன்னை நாடுவன் தன்னந் தனியனே. 1.
தாயுமானவர் கூறுகிறார்  ‘நான் பொன்னை வேண்டேன்; மாதரை நாடேன்; உன்னை மட்டும் நாடுவேன்;உன்னருள் மட்டும் தேடுவேன்.நீ என்னை நாடி என்னுயிருக்கு நாதானாகி என்னை முக்தியடைய அருள்வாய்’
     தன்ன தென்றுரை சாற்று வனவெலாம்
     நின்ன தென்றனை நின்னிடத் தேதந்தேன்
     இன்னம் என்னை யிடருறக் கூட்டினால்
     பின்னை யுய்கிலன் பேதையன் ஆவியே. 2.
‘தன்னது’ என்னுடையது என்று சொல்ல மாட்டேன்; அதாவது நான் எனும் அஹந்தையை விட்டு விடுவேன்.இதையெல்லாம் விட்டு விட்டு என்னையே உன்னிடம் தந்து விடுகிறேன்;இதன் பிறகும் எனக்கும் முக்தியளிக்காமல் எனக்கு இடையூறு விளைவிப்பேயானால் இந்த பேதை என்ன செய்வேன்?” என்று அங்கலாய்க்கிறார் தாயுமானவர். அப்படி செய்யமாட்டார் பரமன் என்ற நம்பிக்கை இந்தப் பாடலில் முந்தி நிற்கிறது.
 
          ஆவி யேயுனை யானறி வாய்நின்று
     சேவி யேன்களச் சிந்தை திறைகொடேன்
     பாவி யேனுளப் பான்மையைக் கண்டுநீ
     கூவி யாளெனை யாட்கொண்ட கோலமே. 3.
‘உன்னை தெரிந்து கொள்கின்ற அறிவை எனக்கருளி-அந்த அறிவே நீயாகி- அதைப் புரிந்துகொள்ள எனக்குத் திறைமை அளிப்பா “ஆவியே யான்”. அதாவது ‘ஆன்மாவே நான்’ என்ற ஆறிவுதான் ஞானம் என்று புரிந்துகொண்ட எனது இந்த உளப்பாங்கைக் கண்டு என்னை ஆட்கொள்வாய்” என்று தாயுமானவர் தொடர்ந்து பிரார்த்திக்கிறார்.
     கோல மின்றிக் குணமின்றி நின்னருள்
   மின்றிச் சிறியன் பிழைப்பனோ
   ஆல முண்டும் அமிர்துரு வாய்வந்த
   கால மெந்தை கதிநிலை காண்பதே. 4.
                     தாயுமானவர் 18 பொன்னை மாதரை
‘நற்குணங்கள் எதுவுமின்றி, உன்னை நினைக்கின்ற பழக்கமுமின்றி,வாழும் இந்த அவலமான சிறியேன் பிழைப்பேனோ? ஆலகால விஷத்தை உண்டும் அமிருதமாக மாறி என் போன்ற எளியோர்களை வாழ்விக்கின்ற காலமாகிய நீ என் பரிதாப நிலை காணவில்லாய்யா?’ என்கிறார் தாயுமானவர்.
இப்படி எல்லா ஞானிகளும் பரமன் ஏழைக்கு-எளிமையானவர்களுக்கு இரங்குபவன், அருளுபவன் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்கள்.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பு போல் கீதையில் கண்ணான் சொல்கிறான்
பத்ரம் புஷ்பம்  பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி
ததஹம் பக்த்யுபஹ்ருதமஸ்னாமி ப்ரயதாத்மன:!!
ப.கீ அத் 9 சுலோ 26
யாரொருவன் எனக்கு இலை,புஷ்பம் பழங்கள் அல்லது வெறும் னீரை பக்தியோட படைக்கிறானோ அந்த தூய மனத்துடன் அளிக்கும் அன்பளிப்புதான் மிகவும் பிரியமானது என்கிறான் கண்ணபிரான்.ஜகத்துக்கெல்லாம் நாதனான பரமாத்மா அன்பிற்கு மட்டுமே கட்டுப்படுகிறான்.இந்த உலக ரீதியான விலைமதிப்பு அவனுக்கு ஒரு பொருட்டேஅல்ல. விதுரர் அளித்த கஞ்சியை அமிழ்தென அருந்தினான்; சுதாமா அளித்த அவலை வலிய பிடுங்கி உண்டான்;சபரி கொடுத்த உலர்ந்த காய்கனிகளை பிரியமுடன் உண்டான்.கண்ணப்பனது உமிழ்னீரும் அவன் மென்ற மாமிசமும் சிவனாருக்கு நைவேத்தியமாயின.
இதையே தான் பகவான் மிகவும் சுருக்கமாக- இரத்தின சுருக்கமாக- கூறுகிறார்.
     மேன்மேற் றாழ்ந்திடு மெல்லியர்ச் சேர்ந்து நீ
          மென்மையுற் றனையென் னருணாசலா
:

          

ரமணஜோதி 103

ரமணஜோதி 103

ஜீவாத்மா-பரமாத்மா லயனமே முக்தி


                   மெய்யகத் தின்மன மென்மல ரணையினா
                        மெய்கலந் திடவரு ளருணாசலா
இந்த சுலோகம் வாச்சியார்த்தமாக பார்த்தால் காதலியொருவள் காதலனனிடம் கொஞ்சி கெஞ்சும் சிருங்கார வேண்டுதலாக தோன்றும். “ உடலெனும் வீட்டில் மனமெனும் மலர் மெத்தையில் நாம் கலந்திடுவோம் அருணாசலா” என்று காதலி காதலனாகிய அருணாசலனிடம் வேண்டுவது போல் எழுதப்பட்டிருக்கும் இந்த சுலோகத்தில் பொதிந்திருக்கும் உள்ளர்த்தம் மிகவும் ஆழமானது; தத்துவார்த்தமானது.
மெய் என்றால் உடம்பு (தேஹம்) என்று ஒரு அர்த்தம்; உண்மை என்பது இன்னொரு அர்த்தம்.
‘அகம்’ என்பதற்கு ‘நான்’ என்று ஒரு அர்த்தம்; வீடு என்று இன்னொரு அர்த்தம்.
“மெய்யகம்” உண்மையான ‘ நான்’ என்றும் பொருள் கொள்ளலாம்; ‘உடலாகிய வீடு’ என்றும் கொள்ளலாம்.
மனமாகிய ஜீவாத்மா உண்மை நானோடு கலந்து உண்மையை உணருவதற்கு அருளருணாசலா என்று தத்துவார்த்தம் .
மலரணை என்கின்ற பதம் மூலம் பகவான் பக்குவமான மன நிலையிலுள்ளேன்; கலவிக்கு இது சரியான தருணம்; ஆகவே என்னோடு கலந்து ஆத்மசாக்ஷாத்காரம் பெறுவதற்கு நீ அருளவேண்டும் அருணாசலா என்று வேண்டுகிறார் பகவான் இந்த சுலோகத்தில்.
 பரமனை காதலனாகக் கருதி பக்தி செலுத்துவது பக்தியின் மேலான நிலை. ஆழ்வார்கள் பாசுரத்தில் இந்த நிலை முந்தி நிற்கக் காணலாம்.முக்கியமாக கோதை நாசியாரின் திருவாய் மொழிகளில் விரஹ பக்தி முனைந்து நிற்கும்.மேலோட்டமாக பார்த்தால் அது சிருங்கார ரசமாகத் தோன்றினாலும் அதன் உட்பொருள் பரமாத்மாவுடன் இணவதற்கான ஜிவாத்மாவின் விழைதல் தான் காதலாக வெளிப்படுகிறது என்பதை உணரலாம்.
உதாரணத்திற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள பாசுரத்தை பாருங்கள்.கோதை தனக்கு தானே தைரியம் வரவழைத்துக் கொள்கிறாள் பரமனோடு இணைவதற்கு.
                   நாணியினியோர் கருமமில்லை
                        நாலயலாரும் அறிந்தொழிந்தார்
                   பாணியா தென்னை மருந்து செய்து
                             பண்டுபண் டாக்க வுறுதிராகில்
                   மாணி யுருவா யுலகளந்த
                             மாயனைக் காணில் தலைமறியும்
                   ஆணையால் நீரென்னைக் காக்கவேண்டில்
                             ஆய்ப்பாடிக் கேயென்னை யுய்த்திடுமின்
‘இனிமேல் நான் வெட்கப் பட என்ன இருக்கிறது. அயலார் எல்லோரும் உன்னிடம் நான் மயங்கி விட்டேன் என்று அறிந்துகொண்டு விட்டார்கள்.
‘திருமணமாகாத என்னை மருந்துகொடுத்து மாற்ற நினைக்கின்ற அவர்களிடமிருந்து என்னை காக்க வேண்டுமென்றால் ஆயர்பாடிக்கே என்னை அழைத்துச் சென்று விடு,உலகளந்த பெருமானே’என்கிறார் கோதை   நாச்சியார்.
இந்த இஹலோஹ இன்பதுன்பங்களில் எனக்கு எந்த ஈடுபாடுமில்லை;’உண்மையான நான்யார் என்று தெளிந்துகொண்டு விட்டேன்; என்னை பிச்சி ( பைத்தியம்)என்றெண்ணி இந்த உலகத்தவர் என்னை திருத்த முயலுவர்.அவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்ற வேண்டுமென்றால் என்னை உன்னுடன்  லயிக்க விட்டு உன் ஆஸ்தானத்திற்கே என்னைக் கொண்டு போய்விடு,;ஆத்ம்ஞானம் நிரந்தரமாக என்னிடம் தங்குவதற்கு அருள் பாலிப்பாயாக[A1] 
          தந்தையும் தாயுமுற்றாரும் நிற்கத்
                             தனிவழி போயினாள் என்னும் சொல்லு
                   வந்தபின் நைப்பழி காப்பரிது
                             மாயவன் வந்துருக் காட்டுகின்றான்
                   கொந்தள மாக்கிப் பரக்கழித்துக்
                             குறும்பு செய்வானோர் மகனைப்பெற்ற
                   நந்தகோ பாலன் கடைத்தலைக்கே
                             நள்ளிர்ட் கணென்னை யுய்த்திடுமின்.
அடுத்த பாசுரத்தில் இன்னும் தெளிவாக கூறுகிறார் ஆழ்வார்:
                   
இப்படியாக ஆழ்வார்கள் சிருங்கார ரசம் ததும்பும் பாசுரங்கள் மூலம் ஆத்ம சாக்ஷாத்காரத்தை வேண்டியுள்ளார்கள்.
ஆத்ம சாக்ஷாத்காரத்திற்கு, -பரமனிடம் கலப்பத்ற்கு-லயிப்பதற்கு நாம் எப்பொழுது பக்குவமாகிறோம் என்பதை பகவத் கீதையில் கிருஷ்ண பகவான் அருமையாக சொல்லுவார்:
         
சரேயோ ஹி ஞானமப்யாஸாத் ஞானாத் த்யானம் விசிஷ்யதே த்யானாத் கர்மபல்த்யாகஸ்த்யாகாச் சாந்திரனந்தரம் !!
                ப்.கீ.அத் 12 சுலோ 12
அப்யாசத்தைவிட ஞானம் சிறந்தது;ஞாத்தைவிட த்யானம் மேலானது;தியானத்தைக்காட்டிலும் கர்மபலத் தியாகம் அல்லது நிஷ்காமிய கர்மம் மேலானது; தியாகம் செய்வதால் சாந்தி கிடைக்கிறது.
அதே போல் தன்னை மறந்து பரமனில் ஐக்கியமாகி அவனே எல்லாம் என்ற பக்தியின் பரமோன்னத நிலையை அடைவது தான் நமது இலட்சியம்.அம்மாதிரி நிலையை அடையும் பொழுது  ஒன்றைத் தவிர வேறொன்றில்லை என்று புரியும்.அந்தப் புரிதலை நோக்கி நாம் நடக்கிறோம், உண்மையான பக்தனோ எந்த வித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் தன்னையே தந்து அவனில் ஐக்கியமாகி விடுகிறான்.அப்படி செய்ய்யும் பொழுது அவன் எல்லா கர்மபலங்களையும் தியாகம் செய்து விடுகிறான்.அதுவே உத்தம்மான நிலை என்று கிருஷ்ணர் கூறுகிறார்.இந்த அர்ப்பண பாவம் தான் ஆழ்வார்களின் பாசுரங்களில் ஓங்கி   நிற்கிறது.
துஞ்சத்து ராமானுஜ எழுத்தச்சன் தனது ‘சிந்தா ரத்னம்’ என்ற மலையாள புத்தகத்தில் கூறுகிறார்:
          பவஸாகரம் கடக்கேணமெங்கிலோ பக்த்யா
          பவசேவயெ செய்துகொள்ளேணம் வழிபோலெ
          யுவதீமணே! நினக்கக்னானமோஹவசால்
          விவசபாவமுள்ளிலுள்ளது நீங்கீடுவான்
          பரமேசுவரபாதபஜனம் செய்தீடுக.
          பரமாம்ருதம் நாமகீர்த்தனம் சொல்லீடுக.
          பரமேசுவரனுடெ பாதஸேவையை கொண்டு
          பரமானந்தமாய பதத்தே லபிச்சீடாம்.
இந்த சம்சாரம் எனும் கடலை கடப்பதற்கு பகவத் சேவையை விட சிறந்தது ஒன்றுமில்லை யுவதீமணீ ( சிந்தா ரத்னம் நூல் ஆசாரியன் தன்னுடைய சிஷ்யைக்கு உபதேசிக்கின்ற பாணியிலுள்ளது.) அவித்யயால் உன்னுள்ளே உண்டாகியுள்ள விவச பாவம்-மனோ விஷமம் நீங்க வேண்டுமென்றால் பரமேசுவரனுடைய பாத சேவை செய்வாயாக. மிகவும் உத்தமமான நாம சங்கீர்த்தனம் செய்வதன் மூலம் நீ பர்மோன்னத நிலையை அடைவாய். அதாவது ஆத்ம சாக்ஷாத்காரம் பெறுவாய் என்கிறார் ராமானுஜ எழுத்தச்சன்.
இங்கு தாஸ்ய பக்தி மிகுந்து நிற்கிறது.
     தாஸ்யபக்தியை ஆழ்வார்களின் பாசுரங்களிலும் காணலாம்
           வழக்கொடு மாறுகொள் அன்று அடியார் வேண்ட
                   இழக்கவும் காண்டுமிறைவ-இழப்புண்டே
                   எம்மாட்கொண்டாகிலும்யான் வேண்டேங்கண்கல்
                   தம்மால் காட்டு உன்மேனிச்சாய்
                        பாசுரம் 13
‘ பெருமானே, எனது வேண்டுகோள் எந்தவிதத்திலும் நியாயமற்றது அன்று. நன்மை னிறைந்த யஜமானர்கள் அடியார்களின் வேண்டுதல்களை தனக்கு  உண்டாகக்கூடிய கஷ்ட நஷ்டங்களைப் பொருட்ப்படுத்தாமல் நிறைவேற்றுவது உலக வழக்கம்.ஆகவே என்னை உன் அடியானாக ஏற்றுக்கொண்டு உன் திரு உருவத்தை எனக்கு காண்பிப்பாயாக.”
துபிரகடப் படுத்தினாலும்—ஆண்டான்-அடிமை—பாவம் முந்தி நின்றாலும் கல்லுக்குள் நீர் போல் அத்துவைத சித்தாந்தம் ஒளிந்து கிடக்கிறது. ‘ஆண்டவா, நீ உந்திரு உருவத்தை காண்பித்து என்னை உன்னுடன் சேர்த்துக்கொள்; எனக்கு ஆத்ம சாக்ஷாத்காரம் பெறச் செய்” என்பது உள்ளர்த்தம்.

எம்பெருமானின் திரு உருவம் என்பது ஞான ஸ்வரூபம்,சுயம் பிரகாசமானது; அந்த ஞான சொரூபம் நம்முள் பிரகாசித்துவிட்டால் மற்றவை எல்லாம் மறந்து விடும்.எங்கு ஞான உள்ளதோ அங்கு அக்ஞானம் மறைந்து விடும். நம் உள்ளம் இருளடைந்து கிடக்கும்பொழுது தான் இந்த பொய்யான ஜகத்-மித்யா பிரபஞ்சம் வெளிப்படுகிறது. நாராயணனின் திரு உருவம் நம்முள் பிரகாசிக்க ஆரம்பித்தால் பிரபஞ்சம் மறைந்து விடும்.
எவ்வாறு இருளில் நாம் பாம்பு என்று பயந்த பொருள் வெறும் கயிறு தான் என்று வெளிச்சம் வரும்பொழுது தெரிகிறதோ,வெள்ளி எனனினைத்த பொருள் வெறும் சிப்பி தான் என்று தெரிய வருகிறதோ அது போல் நாராயணன் நம்முள் பிரகாசிக்கும்பொழுது மற்ற எல்லா கவலைகளும் மறைந்து போய்விடும்.
ஆகவே ரமணர் வேண்டுகிறார், “ என்னை அணைத்து உன் உள்ளமாகிய மலர்ப்படுத்தியில் கிடத்திக்கொள்;அல்லது எனது உள்ளமாகிய போதத்தில் நீ வந்து அமர்ந்து கொள் அருணாசலா; என் அக்ஞானத்தை களைந்து விடு அருணாசலா,”.என்கிறார்.




 [A1]