Thursday 19 March 2015

ரணஜோதி 98

ரமணஜோதி 98


ஹஸ்தாமலகம்---உள்ளங்கை நெல்லிக்கனி


மானங்கொண் டுறுபவர் மானத்தை யழித்தபி
          மானமில் லாதொளி  ரருணாசல
இந்த உடல் தான் ‘நான்’ எனும் பற்றுதலால் ஜீவாத்மா மேலும் மேலும் பலவிதமான பந்தங்களை உண்டாக்கிக்கொண்டு அவைகளிலேயே உழல்கின்றன. அப்படிப்பட்ட பரிதாபமான நிலையில் இருக்கும் ஜீவத்மாக்களை எந்த விதமான பற்றுதலும் இல்லாமலிருக்கின்ற பரமேசுவரனாகிய அருணாசலன் தான் பற்றுதல்களையெல்லாம் அழித்து தன்னுடன் இணைத்துக்கொள்ள வேண்டும் என்கிறார் பகவான்.
உடல் தான் ‘நான்’ எனும் மித்யா போதத்தினால் தான் இந்த உலகில் எல்லா விதமான பந்தங்களும் உண்டாகின்றன..பஞ்ச பூதங்களினால் உருவாகியுள்ள இந்த சரீரம் ஒரு ஸ்த்ரீயின் கர்ப்பத்தில் உருவாய் அவளிலிருந்து பிரிந்து இவ்வுலகில் ஜனிக்கும்பொழுது  தாய்- மகன் எனும் பந்தம் உண்டாகிறது. அந்த கர்ப்பத்திற்கு காரணமான புருஷன் தந்தையுமாகிறான்.இந்த இரண்டு பந்தங்கள் இயற்கையிலேயே ஜீவாத்மாவிற்கு கிடைக்கின்ற பந்தங்கள். மற்றதெல்லாம் பிறரால் கூறப்பட்டு ஸ்ரவணத்தல் உண்டான பந்தங்கள்.அந்த தாய்-தகப்பனின் மற்ற புத்திர-புத்திரிகள் ஜிவாத்மாவின் சகோதர-சகோதரிகள் ஆகின்றானர்.அவனுக்கு திருமணம் என்ற சடங்கை நிகழ்த்தி மனைவி என்ற ஒரு பந்தத்தை உருவாக்குகிறது இந்த உலகம் .அந்த உறவிலிருந்து இந்திரிய சேஷ்டைகளால் குழந்தைகள் பிறக்கின்றது; புத்திர-புத்திரி பந்தங்கள் உண்டாகிறது. சிலந்தி வலை போல் பந்தங்கள் விரிந்து கொண்டே போகின்றது.
இன்னொரு பக்கம் பிறப்பால் குல பந்தம்-ஜாதி பந்தம் சிருஷ்டிக்கப்படுகிறது,.
பொருள் சேரும்பொழுது இருப்பவன் இல்லதவன் என்கின்ற வேற்றுமை தோன்றி பொருள் உள்ளவன் மற்ற பொருள் உள்ளவர்களோடு பந்தம் காண்கிறான்.
கற்றுக்கொள்ளும் ஏற்றுக்கொள்ளும் தொழில் மூலம் இன்னொரு சங்கம் உண்டாகிறது..அதுவும் பந்தம் தான். .நான் மேஸ்திரி, நான் தச்சன் ,நான் சலவை தொழிலாளி, நான் மென்பொருள் இஞ்சினீயர், நான் மருத்துவர், நான் பல் மருத்துவர், நான் இதய நிபுணர், நான் எலும்பு முறிவு வைத்தியர் இப்படி பல பல.பிரிவுகள்; பந்தங்கள்
அரசியல் கொள்கையால் வேறுபட்டு சங்கம் சேர்வது, மற்றொருவிதமான பந்தந்தை சிருஷ்டிக்கிறது.
பொழுதுபோக்கின் அடிப்படையில் சிலர் ஒன்று சேரும்பொழுது அதும் சங்கமாகி பந்தமாகிறது.
கடவுள் வழிபாட்டில் கூட ஒரே கடவுளை வழிபடுகிறவர்கள் சங்கம் சேர்ந்து வைணவர்கள், சைவர்கள்,ஜைனர்கள் ,என்று பல சங்கங்களும் பந்தங்களும் உருவாகின்றன.
மொழியால் உண்டாகும்  சங்கங்கள்,நாட்டின் பெயரால் உண்டாகும் பந்தங்கள்,மதத்தின் பெயரால் உண்டாகும் சங்கங்கள்.
எங்கெங்கு சங்கங்கங்கள் உண்டாகின்றனவோ,அங்கெல்லாம் ஒரு புது பந்தம் முளைக்கின்றது.எதிர் சங்கங்களும் உருவாகின்றன.போட்டியும் பொறாமையும் உளவாகின்றன. விருப்பும் வெறுப்புமோடியெத்துகின்றன. சங்கங்களின் சட்டதிட்டங்கள் மனிதனை மனசாட்சிப் படி இயங்க அனுமதிக்காமல் உண்மையை காவு கொள்கின்றன.
உடல்கள் தான் வெவ்வேறு; உள்ளே இருக்கின்ற சைதன்யம் ஒன்று தான் என்று அறிந்துகொள்ளாததால் விளைகின்ற அஞ்ஞானத்தின் விளைவு தான் இந்த பந்தங்கள்.
ஆதி சங்கரர் இயற்ரிய விவேக சூடாமணியில் மைய க்கருத்து  இந்த மித்யா போதத்தை களையும் படி ஜீவாத்மாக்களை வலியுறுத்துவதே
     பிரம்மம் ஸத்யம், ஜகன் ,மித்யா, ஜிவோபிரம்மாய்வானபரா:
எனும் மஹாவாக்கியம் விவேக சூடாமணியை துல்லிய சூக்ஷ்மமாக சொல்கிறது.
இந்த் உலகமே பொய்; பிரம்மம் மட்டும் தான் சத்யம்; ஆத்மா பிரம்மத்திலிருந்து வேறல்ல என்பதே இதன் பொருள்.
இந்த உண்மையை அறிந்து கொள்ள வேண்டுமென்றால் நமக்கு எது நித்யம் எது அனித்யம் என்கின்ற  பகுத்தறிவு வேண்டும்.அதை விவேகம் என்று கூறினார்கள் நமது முன்னோர்கள்.
நமது முன்னோர்கள் இந்த உண்மையை மூன்று அடிப்படை தத்துவங்கள் வழியாக நிரூபிக்கிறார்கள்.
முதல் தத்துவம்: எது ஒன்று மாற்றத்திற்குள்ளாகின்றதோ அது உண்மையாக இருக்க முடியாது. லோகாயதமாக பார்த்தால் மனிதனால் உருவாக்கப் படுகின்ற எதும் நாசமற்றதல்ல; அவை மாற்றத்திற்குட்பட்டதே என்ற உண்மை நமக்கு எல்லோருக்கும் தெரியும். ஆகவே பொருள், பதவி, அந்தஸ்து, செல்வம்,எல்லாமே அழியக்கூடியது; முடிவில் துன்பத்தை தரக்கூடியது.
          தேஹ ஏவஹிஸம்ஸாரவ்ருக்ஷமூலம் த்ருடம்ஸ்ம்ருதம்
          தன்மூல:புத்ரதாராதிபந்த:கிம் தேஅன்யதாத்மன:
ஆனால் ஜீவாத்மாவிற்கு ஜன்மம், ம்ருத்யு, ஜரா நரை வயோதிகம் எதுவும் கிடையாது.,இந்த துன்பங்களையெல்லாம் தருகின்ற சம்சார விருக்ஷத்தின் ஆணிவேர் தேகம்  “தேகம் தான் நான்  எனும் அஞ்ஞானம் உண்டாகும்பொழுது---அதாவது ஆத்மா தேகத்துடன் ஐக்கியம் பிராபிக்கும்பொழுது  தேகாபிமானம் உண்டாகிறது. அது தான்  துக்கத்திற்கெல்லாம் காரணம். அதாவது தேகம் தான் நான் என்ற அபிமானம் தான் துன்பத்திற்கெல்லாம் காரணம்.
நாராயணீயத்தில் பட்டதிரிப்பாடு கூறுகிறார்:
          “ கஷ்டா,தே,ஸ்ருஷ்டிசேஷ்டா”
‘நான் இறந்த பிறகு எனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு கொடுக்கவும்” என்று எழுதி வைப்பது இன்று வழக்கமாகி விட்டது. ‘நான் இறந்த பிறகு என்னை மருத்துவ ஆராய்ச்சிக்கு கொடுக்கவும்” என்று யாரும் எழுதி வைப்பதில்லை. இதிலிருந்து ஒரு உண்மை வெளிப்படுகிறது; நான் வேறு; என் உடல் வேறு; என்ற உண்மை இந்த உண்மை நமக்கு தெரிந்தும் இருக்கிறது.
 நமக்கு ‘சவ’த்தைக் குறித்து ஞானம் உள்ளது;ஆனால் உள்ளிலிருக்கும் சிவத்தைக் குறித்து ஞானம் இல்லை.. எப்பொழுது “சவஞானம்” போய் “சிவ ஞானம்” வருகிறதோ அன்று தான் மோக்ஷம்.
சிவம்” என்ற நான் உள்ளிலிருப்பதால் தான் நாம் பேசுகிறோம்,உணவை ருசிக்கிறோம்,நறுமணத்தை முகருகிறோம்,ஸ்பரிச சுகத்தை அனுபவிக்கிறோம்.
          மனோபுத்தியஹம்காரசித்தானினாஹம்
          நசஸ்ரோத்ர ஜிஹ்வேனசக்ராணனேத்ரே
நசவ்யோமபூமிர்னதேஜோனவாயு:
          சிதானந்தரூபசிவோஹம் சிவோஹம்
மனஸு, புத்தி, கண், காது, முதலிய பஞ்ச பூதங்களான “சவ நான்” உண்மயில்லை. உண்மை சிதானந்த ரூபமான ‘சிவ நான்” தான்.
அத்தாமலகன் (ஹஸ்தா மலகன்) ஆதி சங்கரரின் உத்தம சீடனாகும். முதன் முதலில் அத்தாமலகன் ஆதி சங்கரரை சந்திக்க வந்த பொழுது சங்கரர் கேட்டார்:
          கஸ்தவம் சிசோ, கஸ்ய குடோஅஸி கந்தா
          கிம் நாமா தே த்வம் குத ஆகாதோஅஸி
          அயோக்தம் வத சார்பக்த்வம்
மத்ப்ரியதயே ப்ரீதிவிவர்தனோஅஸி
குழந்தாய், நீ யார்? நீ யாருடைய மகன்?  உன் பெயர் என்ன? எங்கிருந்து வருகிறாய்? என் மீது அன்பு வைத்து நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறு, என் செல்லமே”
அத்தாமலகன் சொன்னான்:
           நாஹம் மனுஷ்யோ, தேவாயாக்ஷா
          ந ப்ராம்மண்க்ஷத்திரியவைஸ்யசூத்ர
          ந பிரம்மசாரி ந கிரகி வனஸ்தோ
          பிக்ஷுர்ன் சாஹம் நிஜபோதரூபஹ:
இதின் தமிழாக்கத்தை  “ஸ்ரீ ரமணாசிரமத் தமிழ்ப் பாராயண்த் திரட்டு” எனும் நூலில் காணலாம்.
                   நரனலன் சுரனி யக்க நானலா  னந்த ணன்மற்
                   ரசனும் வணிகன் சூத்ர  னல்லனற் பிரமசாரி
                   கிரகியும் வான ப்ரத்தன் கேட்கல் சன்னி யாசி
                   நிரையினி லாரு மல்லே நிச போத வடிவனாமே
நான் மனிதனல்ல; நான் தேவனுமல்ல’ யக்ஷனுமல்ல; நான் பிராமணனோ, க்ஷத்திரியனோ வைசியனொ சூத்திரனோ அல்ல;நான் பிரம்மசாரியுமல்ல;கிரகஸ்தனுமல்ல;வானபிரஸ்தனும் அல்ல; சன்னியாசியுமல்ல. பிற்கு யார்? நான் தான் உண்மை போத வடிவம்.அதாவது பிரம்மம்
ஹஸ்தம் என்றால் கை; அமலா  என்றால் நெல்லிக்கனி; உள்ளங்கையில் நெல்லிக்கனியை வைத்திருந்தால் எவ்வளு தெளிவாக தெரியுமோ அவ்வாறு “நான் யார்?” ந்ற உண்மையும் எல்லோருக்கும் தெரியும்;அந்த உண்மை நம் முன்னேயே உள்ளது.ஆனால் நமது தேஹாபிமானம் அதை காண் விடாமல் தடுக்கிறது.
இதையொத்த ஒரு உபதேசத்தை அஷ்டாவக்கிர முனியும் ஜனகனுக்கு அளிக்கிறார்.
                   நத்துவம் விப்ராதிகோவர்ணோ
                   நம் ஸ்ரமீனாஅக்ஷ கோசர:
                   அஸ்அங்கோஅஸி நிராகாரோ
                   விசுவசாக்ஷி சுகீ பவ.
 நீ பிராமணனல்ல; பிரம்ம்சரியம் முதலிய ஆசிரம தர்மங்களினால் கட்டுப்பட்டவனுமல்ல் ;இந்திரியங்களுக்கும் மனதிற்கும் விஷயமான ஒன்றுமேயல்ல நீ; அவையோடு உனக்கு எந்த பந்தமும் இல்லை’; உனக்கு உருவம் இல்லை; நீ எல்லாவற்றிற்கும் சாக்ஷி மாத்திரம் தான்.இந்த உண்மையை உணர்ந்தால் நீ முக்தனும்  நித்ய சுகத்தை யுடையவனுமாகிறாய்.
இதே கருத்து ரிபு கீதை முதலாம் அத்தியாத்திலும் காணப்படுகிறது. ( ரிபு கீதையைக் குறித்து முன்பு ஒரு மடலில் எழுதியுள்ளதை திருப்பிப் பார்க்கவும்0
                   அத்துவித வறிவுருவே பிரமமாகு
                   மதுதானே யகிலவதிட் டான மாகு
                   மித்துவுத மனைத்துக்கு மதீத மாகு
                   மேகபரி பூரணமா யிலங்கா நிற்கு
                   நித்திய நிர்க் குணமாகு நிர்மல் மாகு
                   நிரஞ்சனமா னிட்கிரிய சுபாவ மாகுஞ்
                   சத்திய சிற் சுககனமாஞ் சாந்தமாகுஞ்ச்
        சந்ததமுஞ்ச் சகலர்க்கு மான்மாவாமே
அத்துவிதமான அறிவே பிரம்மம். அகிலத்துக்கும் அதுவே அடிப்படையாகும்.துவுதமாக நாம் சங்கல்பம் செய்கின்ற எல்லாவற்றிற்கும் அதீதமானது பிரம்மம். அது பரிபூரணமானது. அது நித்தியமானது.அது ன நிர்குணம்; சாந்தமானது; நிர்மலமானது; நிஷ்க்ரியமானது; நித்ய சாந்தமானது; அது தான் எல்லாரிலும் ஆன்மாவாக இருக்கிறது.
பகவான் ரமணர் 1935-ல் பக்தர்களொடு உரையாடும் பொழுது கூறினார்:
“ அபிமானத்தை அழிப்பதற்கு பல வழிகள் சொல்லப்படுகின்றன. எந்த வழியை தேர்ந்தெடுப்பது என்பதில் நமக்கு குழப்பம் ஏற்படக்கூடும். யாரும் குழம்ப வேண்டியதில்லை. யாருக்கு எது எளிதாக தோன்ற்கிறதோ அந்த மார்க்கத்தை அனுசரிக்கலாம்.”
இந்தக் கருத்தை மேலும் விளக்குகிறர்:      
“நமது வெளியுலக பந்தங்களை நுண்ணியமாக நோக்கும்பொழுது “வைராக்கியம்” பிறக்க ஏது உண்டு. இந்த உடல் உட்பட எல்லாமே “நானில்லை” .ஆகவே அவைகளுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகள் எதுவும் என்னை பாதிக்காது;என்ற வெளிபாடு உண்டாகிவிட்டால் நாம் விசார மார்க்கத்திற்கு தயாராகிவிட்டோம் என்று பொருள். விசார மார்க்கத்தில் முன்னேற முன்னேற பொருள், புகழ், சிற்றின்பங்கள் இவையில் நாட்டம் குறையும் என்பது மட்டுமல்ல்; வெறுப்பு உளவாக வாய்ப்பு உண்டு. அப்பொழுது “ நான்” யார் என்ற ஞானம் உண்டாகும்..
ஆகவே பகவான் வேண்டுகிறார்:
          மானங்கொண் டுறுபவர் மானத்தை யழித்தபி
          மானமில் லாதொளி  ரருணாசல

    


No comments:

Post a Comment