ரமணஜோதி 125
உன் அருள்-என் முயற்சி-ரமணஜோதி
                             என்புரு கன்பர்த மின்சொற்கொள் செவியுமென்
                                  புன்மொழி
கொளவருணாசலா
                             பொறுமையாம் பூதர புன்சொலை நன்சொலாப்
                                      பொறுத்தௌ ளிஷ்டம் பின்னருணாசலா
அக்ஷரமணமாலையின் கடைசி இரண்டு செய்யுள்களில் பகவான் தான் இயற்றியுள்ள பாக்களில்
ஏதேனும் பிழைகள் இருந்தால் பொறுத்து அருளும்படி அருணாசலனிடம் வேண்டுகிறார். 
மாணிக்க
வாசகர் போல் சிறந்த புலவர்களின் பாடல்களைக் கேட்ட நீ என் பாக்களில் நிறைய குறைகள்
காணலாம். இருந்தாலும் என் மீது கருணைகூர்ந்து இவைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும்
என்கிறார். 
இதே கருத்தை சௌந்தரிய லஹரியின் கடைசி சுலோகத்தில் ஆதி சங்கரரும்
வெளிப்படுத்தியுள்ளார்.
प्रदीपज्वालाभिर्द्वस्कर् नीराजन्विधि:
सुधासूतेश्चन्द्रोपलजललवैररध्य रचना,
स्व्कीयैर्म्भोभि: स्लीलनिधि सौहित्यकरणम्
त्वदीयाभिर्वाग्भिस्तव् जननि वाचाम् स्तुतिरियम्
ப்ரதீபஜ்வாலாபிர்திவசகர
நீரஜ நவிதி:
ஸுதாஸூதேஸந்த்ரோபலஜலலவைராக்ய
ரசனா
ஸறகீரம்போபி: ஸலிலனிதி
ஸௌஹித்யகரணம்
த்வ்தீயாபிர்வாக்பிஸ்தவ
ஜன்ஸ்னி வாசாம் ஸ்துதிரியம்
.”கைவிளக்கின் ஒளியால் நித்ய ப்ரகாசியான சூரியனை வெளிச்சம் போட்டு காட்டுவது போல், சந்திரகாந்த கல்லிலிருந்து உமிழும் குளிர்மையினால் சந்திரனை குளிர்விப்பது போலவும் சமுத்திரத்தை சிறு நீர்த்திவலகளினால் நனைப்பது போலவும் இருக்கிறது வாக்தேவதையான உன்னை நான் புகழ்ந்து பாடுவது.” 
125 மடல்களாக பகவான் ரமணரின் அக்ஷரமணமாலை குறித்து நான் எழுதி வந்த இந்த
மின்னஞ்சல் பரம்பரை முடிவிற்கு வரும் இந்த தருணத்தில் நானும் பகவான் ரமணர்
கூறியதைப்போல், பகவானின் திரு வசனங்களிலிருந்தும் அவரது அன்பர்கள் எழுதிய
நூல்களிலிருந்தும் பாரத தேசத்து வேத-வேதாந்தங்களிலிருந்தும் நிறைய உதவிகள் பெற்று,
எனது சிற்றறிவிற்கு எட்டிய விளக்கங்களையும் அளித்து எழுதியுள்ளேன்.ஆகவே அதன்
நிறைகளுக்கு நம் முன்னோர்களும் பகவனும் அருளிய ஆசியும் தான் காரணம்.
பல அன்பர்கள் அளித்த ஊக்கமும் என் முயற்சி திருப்தியளிக்கும் வகையாக முடிக்க
உதவின. குறிப்பாக, திரு ஆனந்த் வாசுதேவன், திரு பட்டாபி ராமன், ஷெண்பகம் ராமசந்திர
மாமா, Dr.. ஸுந்தரம், திரு T.H. ஐயர், இன்னும் பலர் எனது நன்றிக்கு உரித்தாவார்கள்.
பகவான் ரமணர் அக்ஷர மணமாலை ஆரம்பிக்கும்பொழுது கூறினார்:
                             அருணாசல வரற்கேற்ற வக்ஷரமண மாலைசாற்றக்
                             கருணாகர கணபதியே கரமருளிக்காப்பாயே
நானும் இந்த மின்னஞ்சல் பரம்பரை முடிக்க எனக்கு தைரியமும் சக்தியும் தந்த
கருணாகர கணபதிக்கு என் நமஸ்காரத்தை அர்ப்பணிக்கிறேன்.
                             மாலை யளித்தருணாசல ரமணவென்
                   மாலை யணிந்தரு
ளருணாசலா
என்று பகவான் அக்ஷர மணமாலையை முடித்தார். நானும் அருணசலனை பிரார்த்திக்கிறேன்:’
என்னுடைய இந்த எளிய காணிக்கையை அதன் குறை நிறைகளுடன் ஏற்றுக்கொண்டு அருளவேண்டும் ‘
தாயுமானவரின் ஒரு பாடலுடன் இந்த அஞ்சலை பூர்த்தி
செய்கிறேன்:
                                      அங்கிங் கெநாதபடி எங்கும் ப்ரகாசமாய்
                        ஆனந்த
பூர்த்தியாகி
                   அருளொடு நிறைந்தெது
தன்னருள் வெளிக்குள்ளே
                        அகிலாண்ட
கோடியெல்லான்
                   தங்கும் படிக்கிச்சை
வைத்துயிர்க் குயிராய்
                        தழைத்ததெது
மனவாக்கினில்
                   தட்டாமல் நின்றதெது
சமயகோ டிகளெலான்
                        தந்தெய்வம்
எந்தெய்வெமென்
                   றெங்குன்
தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது
                        எங்கணும்
பெருவழக்காய்
                   யாதினும் வல்லவொரு
சித்தாகி இன்பமாய்
                        என்றைக்குமுள்ள்
தெதுஅது
                   கங்குல்பக லறனின்ற
எல்லையுள் தெதுஅது                 
கருத்திற் கிசைந்ததுவே
                   கண்டன
வெலாமோன வுருவொளிய தாகவுங்
                             கருதியஞ்
சலிசெய்குவாம்
