Sunday 5 July 2015

ரமணஜோதி 111

ரமணஜோதி 111

ரமணன் யார்?

ரமணனென் றுரைத்தேன் ரோசங் கொளாதெனை
     ரமித்திடச் செயவா வருணாசலா
ராப்பக லில்லா  வெறுவெளி வீட்டில்
     ரமித்திடு வோம்வா வருணாசலா
இந்த இரு சுலோகங்களிலுமாக பகவான் ஆத்ம சாக்ஷாத்காரம் அடைந்தவர்களுக்கு கிடைக்கும் நித்திய சாந்தியை விளக்குகிறார்.
ரமணன் என்றால் ‘ரம்மியத்தை’ தரக்கூடியவன். ரம்மியம் என்றால் ஸ்ந்தோஷம்; ஆத்ம திருப்தி.ஆத்ம திருப்தியடைந்து விட்டால் பிறகு நமக்கு வேறு எதுவும் வேண்டாம். ஆக்வே அப்படிப்பட்ட உள நிறைவை தருகின்ற அருணாசலனை ரமணன் என்று அழைக்கிறார்கள் பக்தர்கள்.
ரமிப்பிப்பது’ என்ற பத சிருங்கார ரசம் சம்பந்தப்பட்டது.அப்படிப்பட்ட லாஸ்ய பதத்தை பரமனை குறிப்பதற்கு பயன் படுத்துவது தரக்குறைவாகி விடாதா என்று நாயகி பாவத்தில் நின்று கொண்டு பகவான் சஞ்சலமடைகிறார். அது பக்தியை ‘கொச்சைப் படுத்துவதாகிவிடாதா என்று சந்தேகப்படுகிறார்.
பிறகு தன்னையே தேற்றிக்கொண்டு, அழகும் சுந்தரமும் அபின்னம்; அவை ஒன்று சேரும்பொழுது சுகக்கடல் பொங்கும்; சொல்லுணர்வு அடங்கும்;என்றெல்லாம் முன்னே சொன்ன பகவான் நாயகணாகப்பட்ட பரமனிடம்  வேண்டுகிறார்,” அருணாசலா, நான் இப்படியெல்லாம் அழைக்கிறேனே என்று கோபங்கொள்ளாமல், எனக்கு நித்திய சாந்தியை அளிக்க வருவாய்” என்று.

அப்படி அருணாசலன் வந்து விட்டால், ஒன்றல்லாமல் வேறில்லை என்றாகிவிட்டால்,இரவேது, பகலேது, உள் ஏது, வெளி ஏது, அந்தமில்லாத, ஆதியும் முடிவும் இல்லாத திறந்த வெளி அது. அப்படிப்பட்ட நிலையை எனக்கு தருவாய்,அருணாசலா என்று வேண்டுகிறார் அடுத்த இரண்டு வரிகளில்..

No comments:

Post a Comment