Wednesday 29 July 2015

ரமண்ஜோதி 113

ரமணஜோதி 113

யாருக்கு யார் குறி வைக்கிறார்கள்?


லட்சியம் வைத்தரு ளஸ்திரம் விட்டெனைப்
பட்சித்தாய் பிராண்னோ டருணாசலா
நமது வேத வேதாந்தங்களிலும் உபனிஷதுகளிலும் ஜீவாத்மாக்களாகிய நாம் பரமபுருஷனாகிய பிரம்மத்தை லட்சியமாகக் கொண்டு முயற்சித்தோமென்றால் ஆத்ம சாக்ஷாத்காரம் அடையலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த சுலோகத்தில் பகவான் ரமணர் அருணாசலன் நம்மை குறிவைத்து தனது அருள் எனும் அஸ்த்திரத்தை எய்து பிராணனோடையே நம்மை தன்னுள் அடைக்கலாமாக்கிகொள்கிறான் என்று கூறி என்னே அவன் கருணை என்று வியக்குகிறார்.
அருணாசலன் கருணை இருந்து விட்டால் எல்லாம் சுலபம் என்று கூறாமல் கூறுகிறார் பகவான்.
உபனிஷதுக்களில் ‘ஓம்” எனும் ப்ரணவ மந்திரத்தை வில்லாகவும், ஆத்மாவை அம்பாகவும் குறிப்பிட்டு, பிரம்மத்தை குறிவைத்து எவனொருவன் தியானிக்கிறானோ அவன் ஆத்மசாக்ஷாத்காரம் நேடிடுவான் என்று கூறப்பட்டுள்ளது.குறி தவறக்கூடாது என்பது முக்கியம். அம்பின் இலக்கணம் குறி தவறாமல் இலட்சியத்தை சென்றடைவது.அது போல் ஜீவாத்மாக்களும் குறி தவறாமல் பிரம்மத்தை தியானிக்க வேண்டும் என்று உபதேசிக்கிறது உபனிஷத்.
இந்த சுலோகத்தில் அதே கருத்தை தான் பகவான் கூறியுள்ளார்.ஆனால் சிருங்கார பாவத்தில் எழுதப்பட்டிருப்பதால் ஜீவாத்மாவை நாயகி யாகவும் பரமனை நாயகனாகவும் பாவித்து அம்பு நாயகனால் எய்யப்பட்டு நாயகியை சென்றடைந்து தன் வயப்படுத்திக்கொள்கிறது என்கிறார் பகவான்.அப்படிப்பட்ட அன்பை/ கருணையைப் பெற நாம் பாக்கியம் செய்திருக்க வேண்டும்
பரமனின் அம்பு ஜிவாத்மாவை தாக்கிவிட்டால் அது ஜீவாத்மாவை அழிக்காமல் விடாது. ஜீவாத்மாவின் அழிவில் ‘ஒன்றன்றி வேறில்லை” என்ற உண்மை வெளிப்படும். இந்த அழிவில் ஆனந்தம் நிரம்பி நிற்கிறது; சாந்தி உளவாகிறது.’இதைத்தான் ‘இரண்டறக் கலத்தல்’ எங்கிறார்கள்.
இதே கருத்தை பகவான் கிருஷ்ணரும் பகவத் கீதையில் அர்ஜுனனிடம் கூறுகிறார்.
          யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம் !
      மம வர்த்மானுவர்தந்தே மனுஷ்யா: பார்த்த ஸர்வச: !!
                             ப.கீ அத் 4 சுலோ 11
யார் என்னை எப்படி வழிபட்டாலும் அவர்களுக்கு நான் அருள் புரிகிறேன்.ஆகவே எல்லோரும் என்னையே பின்பற்றுகிறார்கள; அடைய விரும்புகிறார்கள்.
முக்தியை நாடினால் முக்தி கிடைக்கிறது. போகத்தை விரும்பினால் போகப் பொருள்கள் கிடைக்கிறது. நமது முயற்சிக்குத் தகுந்த பலன் கிடைக்கிறது. பிராரப்தங்கள் கழிவதும் கூடுவது நம் கையில்த் தான் உளது.

ஆகவே அருணாசலனின் அருளை வேண்டினால் அந்த அருள் நம்மை வந்தடையும்; நமக்கு முக்தி தரும்.

No comments:

Post a Comment