Wednesday 29 July 2015

ரமணஜோதி 115

ரமணஜோதி 115

உனை நாடியவருக்கு படியளப்பாய் அருணாசலா


              வரும்படி சொலிலை வந்தென் படியள
              வருந்திடுன்  றலைவிதி யருணாசலா
“ அருணாசலா, நீ என்னை வரும்படி அழைக்கவில்லை; இருந்தாலும், நான் உன்னை நாடி வந்துள்ளேன்;எனக்கு படியளக்க வேண்டியது உன் கடமை; அதில் நீ வருந்தி பயனில்லை.” என்கிறார் பகவான் ரமணர் இந்த சுலோகத்தில்.
பகவானுக்கு பரமனிடம் உள்ள உரிமை ஒரு நாயகிக்கு நாயகனிடமுள்ள உரிமை போல்; ஒரு பிரஜைக்கு அரசனிடம் உள்ள உரிமை போல், ஒரு பக்தனுக்கு பகவானிடம் உள்ள உரிமை போலாகும்.
பரமன் நம்மை அழைக்க வேண்டிய அவசியமில்லை;அழைப்பு எல்லோருக்கும் எப்பொழுதும் உளது.அவனை எப்பொழுது எப்படி நாடி செல்கிறோம் என்பது அவரவர் பிராப்தத்தைப் பொறுத்தது. முன்சன்ம கர்ம பலனைப் பொறுத்தது.
ஆனால் நாம் பகவானை-பரமனை நாடிப் போய் விட்டால், நம்மாய் காப்பது அவன் கடமை.கண்டிப்பாக அவன் நமக்கு அடைக்கலம் அளித்தே ஆக வேண்டும்.அளிப்பான். அதில் ஐயப் படவேண்டியதில்லை.
அவனை நாடிச் சென்றால் முக்தி கிடைக்குமா,கிடைக்காதா என்ற சந்தேகத்திற்கு இடமே கிடையாது. ஏனென்றால் ‘அஹம் நாஸ்தி’ என்ற ஞான,ம் பிறந்து விட்டால் நான் அவனில் அடைக்கலமாகி விடுகிறோம். அவனே ‘நானா’கியிருக்கும்பொழுது.-‘தத்துவமஸி’- யார் யாருக்கு அடைக்கலமளிக்கிறது;  யார் யாருக்கு படியளப்பது? நித்திய சாந்தியும் பரமானந்தமும் ஆத்மஞானம் உண்டான உடனையே தோன்றிவிடும்.ஆகவே ‘நான் யார்’ என்ற விசார மார்க்கத்தில் சென்று ஆத்ம ஞானம் தேடுங்கள் என்று சொல்லாமல் சொல்கிறார் பகவான் ரமணர்.
இதையே கிருஷ்ண பகவான் பகவத் கீதையில் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்:
     யஜ்ஞாத்வா ந புனர்மோஹமேவம் யாஸ்யஸி பாண்டவா!
   யேன பூதான்யசேஷேண த்ரக்ஷ்யஸ்யாத்மன்யதோ மயி !!
                           ப.கீ. அத் 4 சுலோ 35
ஞானத்தைப் பெற்றபின் ஒருவன் மன கலக்கம் அடையமாட்டான்; எல்லா உயிர்களிலும் தன்னையே காண்பான்;எல்லா உயிர்களையும் தன்னையும் பரமனிடத்தில் காண்பான். எல்லாம் ஒன்றே; ஒன்றன்றி வேறில்லை என்ற பரம சத்யத்தை புரிந்து கொள்வான்.
ஒன்றாக காண்பது ஞானம்;பலவாக காண்பது அக்ஞானம் “ என்கிறார் ஸ்ரீ ராமகிருஷ்ண பரம ஹம்சர்
மேலும் பகவான் கிருஷ்ணர் கூறுவார்,” ஞானம் அடைந்தவன், முன்னால் செய்த எல்லா பாபங்களையும் அழித்தவனாகிறான். பாப பலன்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு ஆத்ம ஞானம் பெறுவது ஒன்றே மார்க்கம்.ஆத்ம ஞானம் என்ற தோணி கிடைத்து விட்டால் எந்த பாப சமுத்திரத்தையும் கடந்து விடலாம்
          அபி சேதஸி பாபேப்ய: ஸர்வேப்ய: பாபக்ருத்தம: !
      ஸர்வம் ஞானபலவேனைவ வ்ருஜினம் ஸந்தரிஷ்யஸி!!
                     ப.கீ. அத் 4 சுலோ 36
சுடர் விட்டெரியும் ஞானாக்னியானது எல்லா கர்ம பலங்களையும் எரித்து சாம்பலாக்கிவிடும்;ஏனென்றால் எல்லாம் ஒன்றே; எல்லா ஜீவாத்மாக்களிலும் பரமாத்மாவே இருக்கிறான் என்ற உண்மை புரிந்துவிட்டால் தன்னலம் என்பதற்கு இட்மேயிராது, பொது நலமே தன்னலமாகி விடும்.பொதுவுடமை வாதத்திற்கெல்லாம் பிறப்பிடம் கிருஷ்ண்பகவானின் இந்த அருள் வாக்கு தான். பொதுவுடமைக்கு தந்தை காரல் மார்க்சோ ஏங்கல்ஸோ லெனினோ அல்ல; கிருஷ்ண பகவான் தான்
யதைதாம்ஸி ஸமித்தோ அக்னிர்பஸ்மஸாத்க்ருதோ அர்ஜுன !
ஞான-அக்னி ஸர்வ-கர்மாணி பஸ்மஸாத்க்ருதே ததா!!
                ப.கீ. சுலோ 37
கிருஷ்ணர் மேலும் சொல்லுவார்:
     யோஅந்த: ஸுகோஅந்தராராமஸ்ததாந்தர்ஜ்யோதிரேவ ய: !
   ஸ: யோகி ப்ரஹ்மனிர்வாணம் ப்ரஹ்மபூதோஅதிக்ச்சதி !!
ஆத்ம ஞானத்தை அடைந்த யோகிக்கு வெளியுலக விஷயங்கள் ஒன்றும் தேவையில்லை;அவன் ஆத்மாவில் மூழ்கி, ஆத்மாவிலேயே ஒளியைக் கண்டு தானே அந்த பிரம்மமாகி விடுகிறான்.இதுவே பிரம்ம நிர்வாணம்.
அப்படிப்படவனுக்கு யார் படியளக்க வேண்டும்? ஆகவே அருணாசலா “எனக்கு அந்த ஆத்ம ஞானத்தை அளிப்பது உன் கடமை. அழையாமலேயே உன்னை நாடி வந்துள்ளேன்.ஆத்ம ஞானம் எனும் ஆசியை நீ எனக்கு அருள்வாய் .அதில் எனக்கு கிஞ்சித்தும் சந்தேகம் இல்லை” என்கிறார் ரமண பகவான்.
.


No comments:

Post a Comment