சுபாவ சொரூப லக்ஷணம்.
காந்த மிரும்புபோற் கவர்ந்தெனை விடாமற்
கலந்தெனோ டிருப்பா யருணாசலா
காந்தம் ஒரே இடத்திலிருந்து கொண்டு இரும்புதுகள்களை
தன்னிடம் ஈர்த்து ஒட்டிவைத்துக்கொள்ளூம். ஒட்டிக்கொண்டால் காற்றடித்தாலும் மழை பெய்தாலும்
இரும்புத் துகள்கள்
காந்த்ததை விட்டுப் போகாது. காந்தத்தின் மற்றும் இரும்பு துகளின் சுபாவ சொரூப
லக்ஷணம்.
இந்தக் கருத்தை சிவானந்த லஹரியில் ஆதி சங்கரர்
கீழ்கண்ட சுலொகத்தில் விவரமாக கூறியுள்ளார்.
“அங்கோலம
நிஜ பீஜ ஸந்ததிர்- அயஸ்காந்தோபலம் ஸூசிகா
ஸாத்வீ நைஜ விபும் லத கிதி-ருஹம் ஸிந்துஹ்-ஸரித்-வல்லபம்
ப்ராப்னோதீஹ யதா ததா பூபதேஃ பாதாரவிந்த- த்வயம்
சேதோவ்றூத்திர்-உபத்ய தி டதி ஸதா ஸா
பக்திர்-இதி உச்யதே”
அங்கோல மரத்தின் விதைகள் எப்படி கீழே விழாமல்
மரத்தின் உடலிலும் வேருகளிலும் ஒட்டிபிடித்துக்கொண்டு மீண்டும் முளைத்து வருகிறதோ,
ஊசி எப்படி காந்தத்தினால் ஈர்க்கப்பட்டு,அதனிடம் சென்று ஒட்டிக்கொள்கிறதோ, எப்படி
பதி விரதையான மனைவி கணவனையே சதா சர்வகாலமும் நினைத்துகொண்டிருக்கிறாளோ, எப்படி நதி
நீரானது எங்கெல்லாம் சென்றாலும் கடைசியில் கடலைச் சென்று அடைகின்றதோ அது போல்
ஜீவாத்மாவும் பரமாத்மாவை சென்று அடைந்து விட்டால் திரும்ப வராது.
அங்கோல மரம் என்பது 2500 வருடங்கள் பழமையான
மரம்.
இதை எழுச்சில் என்று
தமிழில் கூறுவார்கள்.
இந்த மரத்தை காணவேண்டுமென்றால் சின்னக் காவாணம்
என்ற ஊருக்குச் சென்றால் அங்குள்ள சிவன் கோவிலில் காணலாம்..இந்த கோவிலின் இன்னொரு விசேஷம்
என்னவென்றால் 108 கண்பதி உருவங்கள் சேர்ந்து உருவானது இங்குள்ளா சிவ லிங்கம்..
அப்பனும் மகனும் ஒன்றே என்ற தத்துவத்தை விளக்குவதற்கோ என்னமோ லிங்கம் அப்படி
அமைந்துள்ளது.
சின்னக் காவணம் சென்னையை அடுத்து 9 கிலோமீட்டர்
தூரத்திலுள்ளது. இந்தக் கோவிலின் ஸ்தல விருக்ஷம் அங்கோலம்.
சஹஜ சுபாவ லக்ஷணம் என்பது நமது இயற்கையான சுபாவத்தை
குறிக்கும்.
கடல் நீர் சூரிய வெப்பத்தினால் ஆவியாகி மேகமாகி
காற்றினால் உந்தப்பட்டு மழையாகி பூமியை வந்தடைந்து நதியாகி கடலிலேயே சென்றடைகிறது.
அது போல் ஜிவாத்மாவும் எத்துணை பிறைவி
எடுத்தாலும் கடைசியில் பரமாத்மாவை சென்றடைய வேண்டியது தான் இயற்கை.
இதைத்தான் பகவான் ரமணர் இந்த சுலோகத்தின் மூலம்
அறிவுறுத்துகிறார்.
No comments:
Post a Comment