எங்கே தேடுவேன் என் குருவை?
குற்றமுற் றறுத்தெனைக் குணமாய்ப் பணித்தாள்
குருவுரு வாயொளி ரருணாசலா
இதற்கு முந்தைய பகுதியில் நம்மிடமிருக்கக்
கூடிய குறைகள் என்ன என்ன என்று பார்த்தோம். இரண்டாவது அடியில் பகவான் அருணாசலரை
குருவாக மதித்து குற்றங்களை முற்றிலுமாக அறுத்து குண்முடையவனாக மாற்றும்படி
வேண்டுகிறார்.
நமக்கெல்லாம் தெரியும் பகவான் ரமணர் எந்த ஒரு குருவின் வழிகாட்டுதலும் இன்றி ஞானம்
பெற்று திரு அருணையை அடைந்து இகலோக வாழ்வின் கடைசி நாள் வரை அருணையிலேயே
இருந்தார். ஆனால் அந்த மாதிரியான பாக்கியம் எல்லாருக்கும் கிடைத்து விடாது.
பகவானிடமே பலர் குருவின் உதவி இல்லாமல் ஆத்மசக்ஷாத்காரம் பெற முடியுமா என்று
கேட்டுள்ளார்கள்.
பகவான் மிகவும் தெளிவாக கூறியுள்ளார் “சாத்தியமில்லை” என்று.
“ஆஹா, சந்தேக்மென்ன?
குரு கிருபை அத்தியாவசியமே. அதனால்த்தான் தாயுமானவர் பத்து பாடல்களில் குருவை
துதித்துள்ளார்.”
தொடர்ந்து நாம் எப்படி குருவை அடையாளம் காண
முடியும் என்ற கேள்விக்கு பகவான் கீழ்க் கண்டவாறு சொல்லியுள்ளார்,
“யார்
மீது உன் மனம் லயிக்கிறதோ அவர் தான் குரு—
.சத் குரு இவர் தான் என்று எப்படி
தீர்மானிப்பது?
அவர் சொரூபம் எப்படிப் பட்டது என்றால், சாந்தமும்
அடக்கமும் கட்டுப்பாடும் உடையவராய் காந்தக்கல்போல் தன் பார்வையாலேயே ஆகர்ஷிக்கும்
சக்தி படைத்தவராய் எல்லோரிடமும் நிலையான,சமமான நோக்கம் கொண்டவராய் இருப்பது தான்.”
பகவான் அதோடு நிறுத்தவில்லை. மேலும்
தொடருகிறார்:
“குரு
ஸ்வரூபம் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் முதலில் தன் ஸ்வரூபம் என்னவென்று தெரிந்து
கொள்ளவேண்டும். தன் ஸ்வரூபம் யாதென்று தெரியாத போது,குரு ஸ்வரூபம் எப்படி
தெரியும்? குரு ஸ்வரூபத்தை காண வேண்டுமென்றால் உலகனைத்தையும் குரு ஸ்வரூபமாக காண
வேண்டும்.”
இந்த தத்துவத்தை ஸ்ரீமத் மஹா பாகவதத்திலும்
விளக்கமாக கூறப்ப்ட்டுள்ளது.
பாகவதம் ஏகாதச(பதினொன்றாம்) ஸ்கந்தம் ஏழாவது
அத்தியாயம் 33 லிருந்து 35 வது சுலோகம் வரை இந்த விஷயம் விளக்கப் பட்டுள்ளது.
ஒரு முறை யது என்ற அரசர் தத்தாத்ரேய அவதூதரை
காட்டில் சந்த்திதார். அரசர் அவரிடம் இவ்வாறு வினவினார்:
“பிரபோ,
நீங்கள் மிகவும் புத்திசாலியாகவும் உற்சாகமுள்ளவராகவும் காணப்படுகிறீர். தாங்கள்
மிகவும் திறமை சாலியாகவும் காணப்படுகிறீர்கள். அப்படியிருந்தும் தாங்கள் ஏன்
உற்றார் உறவினரிடமிருந்து பிரிந்து எந்த விதமான ஆசைகளும் இல்லாமல் தனியனாக இந்த
வனத்தில் சுற்றித் திரிகிறிர்கள்? இருந்தும் தாங்கள் மிகவும் திருப்தி
உள்ளவராகவும் அனுக்கிரகிக்க்கப் பட்டவராகவும் காணப்படுகிறிர்கள்/அது எவ்வாறு
சாத்தியமாகிறது?”
தத்தாதிரேயர் கூறினார்:
மனத் திருப்தி எனது
ஆத்மசாக்ஷாத்காரத்திலிருந்து உண்டாவது. ஆத்ம ஸாக்ஷத்காரம் இந்த பிரபஞ்சத்திலுள்ள
சகல சேதன-அசேதன வஸ்த்துக்களிடத்தினிருந்தும் கற்றுகொண்ட ,பெற்றுக் கொண்ட அறிவின்
பயன் தான்”
“உதாரணத்திற்கு
நான் இருபத்தி நாலு குருமார்களையும் அவர்களிடமிருந்து கற்றுக்கொண்ட ஞானத்தையும்
உனக்கு அறிமுகப் படுத்துகிறேன்.
1. பூமித்தாய்
2. காற்று,
3. ஆகாயம்,
4. நெருப்பு,
5. ஆதவன்,
6. புறா,
7. கடல்,
8. மலைப்பாம்பு,
9. விட்டில்பூச்சி,
10. யானை,
11. எறும்பு,
12. மீன்,
13. பிங்களா எனும் வேசி,
14. கொல்லன்,
15. விளையாடும் குழந்தைகள்,
16. நிலா,
17. தேனீ,
18. மான்,
19. கழுகு,
20. கன்னிப்பெண்
21. நாகம்,
22. சிலந்தி,
23. குழவி,
24. நீர்
மேற்கூறிய வஸ்த்துக்களிடமிருந்து
தத்தாதிரேயர் பெற்ற அறிவும் பாகவதத்தில் விரிவாக கூறப்பட்டுள்ளது. அதை இங்கே
மீண்டும் விளக்க வேண்டாம் என்று எண்ணுகிறேன்
குருவின் குணங்களைக் குறித்து ஸ்கந்தபுராணத்தில் வருகின்ற குரு கீதையிலும் கூறப்பட்டுள்ளது
குரு கீதை உலகத்தின் தாயான பார்வதி
தேவிக்கும் சாக்ஷாத் பரமசிவனுக்கும் இடையே நடந்த
சம்பாஷணை உருவத்தில் ஸ்கந்தபுராணத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒருமுறை மஹாதேவன் பரம குருவை வணங்குவதை
கண்டாள்.
अछिन्थ्याव्यक्थरूपाय निर्गुणाय गुणाथ्मने
शमस्थ जगथाधार्मूर्थिये ब्र्म्हणे नम: !!
அசிந்த்யாவ்ய்க்தரூபாய நிர்குணாய குணாத்மனே !
ஸமஸ்த ஜக்தாதாரமூர்தயே ப்ரஹ்மணே நம்: !!
நினைத்துப் பார்க்க முடியாத,வெளிக்குதெரியாத
முக்குணங்களுக்கும்
(ரஜோ,தமோ,சத்வ)மேலான,ஆனால் குணங்களே ஆன்மாவாக இருக்கும் சமஸ்த
பிர்ம்மாண்டத்திற்கும் ஆதாரமாக இருக்கும் பிரம்மனே,உன்னை வணங்குகிறேன்
ஸம்ஸ்த தெய்வங்களுக்கும் தேவனாக இருக்கும்
மஹாதேவன் மேற்கூறியாவாறு வணங்குவதைக்கண்டு பார்வதி மிகவும் ஆச்சர்யமடைந்தாள்.அன்னை
பரசக்தியின் இந்த ஆச்சர்யத்துடன் குரு கீதை ஆரம்பமாகிறது.
பரமசிவன் அன்னைக்கு பரம குருவின்
மஹத்துவத்தைக் குறித்து விளக்கி கூறுவது தான் குரு கீதையின் சாரம். குரு கீதையில் மஹாதேவன் சொல்கிறார்,” குருவும் பிரம்மனும், ஆன்மாவும் ஒன்றே”
சிவ்க்ரோதாத்,குருஸ்த்ராதா குருக்ரோதாச்சிவோ
ந ஹி!
தஸ்மாத்சர்வ ப்ரயத்னேன் குரோராஞா ந்
லங்க்\யேத்!!
சிவ கோபத்திற்கு ஆளானால் குரு காப்பாற்றுவார்;
குருவின் கோபத்திற்கு ஆளானால் யாரலும் காப்பாற்ற முடியாது.
குரு கிதையில் ஏழு விதமான குருக்களைக்
குறித்து கூறப்பட்டுள்ளது.
1. ஸூசகா
2. வாசக
3. போதகா
4. நிஷித்த குரு
5. விஹித குரு
6. கார்ணாக்ய குரு
7. பரம குரு
பரம குரு அல்லது சத் குரு கிடைத்து விட்டால்
நாம் தன்யரானோம் என்று கருதலாம்.
பரம குருவாகப்பட்டவர் உடலை ஜடமாக
கருதுபவரும்,ஆன்மாவும் பரமான்மாவும் ஒன்றே என்று அறிந்தவருமான ஞானியாவார்.
ஸத் குருவின் சொரூபம் எப்படிப் பட்டது
என்றால்,சாந்தமும் அடக்கமும் கட்டுப்பாடும் உடையவராய் காந்தக்கல்போல் தன்
பார்வையாலேயே ஆகர்ஷிக்கும் சக்தி படைத்தவராய் இருக்கவேண்டும் என்று பகவான்
கூறினார் என்று முன்னால் பார்த்தோமல்லவா? அதற்கு உதாரணமாக தக்ஷிணாமூர்த்தியின்
கதையை ஒரு முறை பகவன் ரமணர் பக்தர்களுக்கு விளக்கி கூறினார்.
அதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
No comments:
Post a Comment