ரமணஜோதி 40
சீரும் வேண்டாம் சிறப்பும் வேண்டாம்
சீரை யழித்துநிர் வாணமாச் செய்தருட்
சீரை யளித்தரு ளருணாசலா
சீரை அழித்து என்று கூறுவதன் மூலம் பகவான் தன் உடைகளை களைந்து கோவணாண்டியானதை நினைவு கூறுகிறார் என்று மேலோட்டமாக பார்க்கும்பொழுது நமக்குத் தோன்றும்.அது ஒருவிதத்தில் சரியும் கூட.பகவானுக்கு பூரண ஞானம் உண்டானவுடன் அவருக்கு உலக ரீதியான சீர்கள் எதுவும் தேவைப் படவில்லை.
சிறிது ஆழமாக சிந்தித்துப் பார்த்தோமானால், பகவான் ஆத்மாவை ஆவரணம் செய்துள்ள மாயைய்த்தான் சீர் என்று கூறுகிறார் என்று புரியும். மாய வலையை அகற்றி ஆத்மாவின் சுபாவ சொரூபத்தை காண்பிக்கும்படி வேண்டுகிறார் பகவான் இந்த வரிகளில். நிர்வாணம் என்பது எந்த விதமான ஆவரணங்களும் இல்லாமல் இருக்கும் சுத்த சைதன்யத்தை குறிக்கிறது.
சுத்த சைதன்யமான சத் சித் ஆனந்த்தை நமக்கு காட்டித் தருவதின் மூலம் அருணாசலன் தனது பூரண அருளை நமக்கு அளிக்க வேண்டும் என்று பகவான் பிரார்த்திக்கிறார்.
பகவானிடம் ஒரு முறை பக்தர் ஒருவர் கூறினார், ”பகவான், குளிர் அதிகமாக உள்ளதே? ஒரு கம்பளியை எடுத்து ம்ற்லே போர்த்திக்கொள்ளக் கூடாதா?.”
பகவான் சிரித்துக்கோண்டே கூறினார் “எற்கனவே ஐந்து போர்வைகளால் போர்த்தப் பட்டுள்ளேன். இன்னுமொரு போர்வை தாங்காது.”
பகவான் எந்த ஒரு சின்ன விஷயம் கூறினாலும் கூட மிகப் பெரிய தத்துவம் அதில் அடங்கியிருக்கும்.
பகவான் ஐந்து போர்வை என்றது ‘பஞ்ச கோசங்களைத்தான்.
பஞ்ச கோசங்கள் என்பன:
அன்னமய கோசம்
பிராணமய கோசம்
மனோமய கோசம்
ஞானமய கோசம்
ஆனந்தமய கோசம்
நாம் உட்கொள்ளுகின்ற உணவு எலும்பாகவும்,சதையாகவும்,இரத்தமாகவும் உருமாறி நமது உடல் உருவாகிறது..இதுதான் அன்னமய கோசம்
நாம் உள்ளே இழுத்து விடும் மூச்சுக் காற்று நமது உடலுக்கும் மனதிற்கும் உயிர்சக்தியை அளிக்கிறது.அது இல்லாவிட்டால் நம் உடலும் சலிக்காது;மனமும் இயங்காது.இது தான் பிராணமய கோசம்.ஆனால் அதற்கு வேறு எந்த விதமான உணர்வும் கிடையாது.
நமது மனம் ஐம்புலங்களின் மூலம் நமக்கு ஸ்பரிச,மணம்,,கேட்கும் சக்தி,காணும் சக்தி முதலிய புலனுணர்வுகளை கொடுக்கிறது..இந்த புலன் உணர்வுகள் நம்மை பிரமனிடமிருந்து அகற்றுகிறது. இது மனோமய கோசம்
ஆனந்த மய கோசம் என்பது சூக்ஷ்ம சரீரம் ஆகும். இதுவும் நானாகாது. இதற்கும் ஒரு ஆரம்பம் உண்டு,முடிவு உண்டு.இதுதான் ஆரம்ப அவித்யா எனப்படுவது. விவேகம் கைவரும்பொழுது அவித்ய மரிக்கிறது;அது தான் அதன் முடிவு.நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்,வருத்தமாக இருக்கிறேன், என்பது போன்ற உணர்வுகள் ஆனந்தமய கோசத்தினால் உருவாகிறது. இதுவும் நிரந்தரமானதல்ல.
இந்த ஐந்து கோசங்களும் ஆத்மா ஆகாது.
எப்படி புளியம்பழத்தை அதன் ஓடு மூடியிருக்கிறதோ அது போல் ஆத்மாவை இந்த ஐந்த கோசங்களும் மூடி மறைத்து இருக்கின்றன.
நாம் அவித்யயின் காரணம் அன்னமயகோசம் எனப்படும் ஸ்தூல சரீரத்தை ஆத்மாவாக நினைக்கிறோம்.
“நான் ஆண்” “ நான் பெண்” நான் வளருகிறேன்” நான் ஒடுகிறேன்” என்றெல்லாம் கூறுகிறோம்
நமது உடல் அவையவங்களுடன் ஆத்மாவை ஒன்றாக்கிப் பார்க்கிறோம். ஆனால் உடலின் எந்த ஒரு அங்கத்தை இழந்தாலும் “நான்” அழிவதில்லை. உடலின் குணங்களை ஆத்மாவின் குணங்களாக காண்கிறோம்.
எப்படி நெல்லிலிருந்து உமியை நீக்கி, தவிட்டைதுடைத்து எடுத்து,அரிசியாக்குகிறோமோ,படைப்பதற்கு தகுதியானதாக ஆக்குகிறோமோ அதுபோல் ஆத்மாவை இந்த ஐந்து கவசங்களில்ருந்து விடுவித்து ஆத்ம சாக்ஷாத்காரத்திற்கு தயார் செய்ய்ய வேண்டும்.;
சீர் என்பதின் இன்னொரு பொருள் சிறப்பு என்பதாகும். நாம் எதிலாவது சிறந்து விளங்குகிறோம் என்றால் நாம் சீருடன் இருக்கிறோம் என்று லௌகீகமாக கூறுகிறோம்.
இந்த மாதிரியான “சீர்” பொருள்களினால் உண்டாகலாம், கல்வியினால் உண்டாகலாம், பதவியினால் உண்டாகலாம், குடும்ப பாரம்பரியத்தினால் உண்டாகலாம்; உடல் அழகால் உண்டாகலாம்; சௌந்தரியவதியான மனைவியினால் உண்டாகலாம்; செல்வந்தர்களான உற்றார் உறாவினரால் உண்டாகலம்..
மேலே கூறியவையெல்லாம் நிலையற்றவை.அழிவுடையது. அது பற்றுதல் உண்டாக்கக் கூடியது. பற்று உண்டானால் நாம் முந்தைய அஞ்சல்களில் பார்த்தது போல் காம,குரோத சம்மோஹங்களுக்கு ஆளாகி மன சாந்தியை இழந்து விடுவோம்..
இம்மாதிரியான பற்று ஏற்பட்டு விட்டால் அதற்கு முடிவே இல்லை.ஒருபொழுதும் திருப்தி ஏற்படாது.
சமீபத்தில் கேள்விப்பட்ட ஒரு கதை சரியான உதாரணமாகும்.
ஒருவன் பிரமனை நோக்கி நீண்ட நாட்கள் தவமிருந்து பிரமன் அவன் முன் தோன்றி ,”பக்தா, உன் பக்தியைக்கண்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம்.என்ன வரம் வேண்டும்,கேள், தருகிறோம்.” என்றாராம்.
பக்தனும் மிகவும் ஆர்வத்துடன், “எனக்கு நிறைய தங்கம் வேண்டும்.” என்றான்.
பிரமனும் ,”அப்படியே செய்வோம். எதை தங்கமாக்க வேண்டும்,சொல்.” என்றார்.
பக்தனும் ஒவ்வொரு பொருளாக அந்த அறையிலிருந்த எல்லாப் பொருள்களையும் சுட்டிக்காட்ட பிரமனும் அந்த பொருள்களின் மீது தன் சுட்டு விரலை வைக்க அந்த பொருள்கள் எல்லாம் தங்கமாக மாறின.
ஆனால் பக்தன் முகத்தில் பூரண மகிழ்சி தென்படவில்லை.
பிரமன் அதன் காரணத்தை பக்தனிடம் வினவினார்,”இன்னும் என்ன வேண்டும் கேள், தருகிறேன்.” என்றார்,
பகதன் கூறினான்,” எனக்கு உங்கள் சுட்டு விரல் வேண்டும்”.
இது தான் ஆசையின் போக்கு.
ஆகவே எல்லா “சீரையும்” அழித்து உன்னுடைய “அருட்சீரை” மட்டும் கொடு அருணாசலா என்று பகவான் வேண்டுகிறார்.
No comments:
Post a Comment