Sunday, 28 December 2014

ரமணஜோதி 37

 ரமணஜோதி 37

வயிற்றுப் பசியும் ஞானப் பசியும்


சாப்பா டுன்னைச் சார்ந்துணவாயான்

சாந்தமாய்ப் போவ நருணாசலா

நாமெல்லோரும் அந்த பரமனை அணுகுவது நம்முடைய தேவைகளை பூர்த்திசெய்துகொள்வதர்க்குத் தான்.அதில் சந்தேகமேயில்லைஆனால் அந்த தேவைஎப்படிப் பட்டது என்பது தான் கேள்வி.
நமது தேவைக்காக கடவுளை வேண்டுவதோ கடவுளின் மீது பக்தி செலுத்துவதோதவறல்லநமது தேவைகள் பூர்த்தியானதும் அவனை மறந்து விடுவது தான் தவறு.

நாம் பக்தி மார்க்கத்தில் சஞ்சரித்து நமது தேவைகளை பூர்த்தி செய்யும் அதேவேளையில் அந்த பரமாத்மா எங்கிருக்கிறான் அவன் யார் என்பதை புரிந்துகொண்டோமானால் நமக்கு கண்டிப்பாக சாந்தி கிடைக்கும் என்கிறார் பகவான்ரமணர்அதாவது அவன் நமக்குள்ளேயே தான் இருக்கிறான்நாமும் 

அவனும் வேறல்ல என்பதை புரிந்து கொண்டால் நாமும் மற்றவர்களும்வெவ்வேறல்ல.குணமும் தோஷமும் வேறல்லசுகமும் துக்கமும் வேறல்ல;எல்லாம் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் தான்என்பது புரியும்.

அறியாமை இருந்தால்த் தான் ஞானம் உண்டாகும்ஞானம் உண்டான பின்னால்த்தான் நாம் அறியாமையில் மூழ்கியிருந்தோம் என்பது தெரிய வரும்.ஆகவேவித்யா’ வும் ‘அவித்யாவும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் தான்

நாம் நமது இகலோக பூத உடலுக்கு தேவையான உணவு ஏனைய பொருள்களுக்காகபரமனை தேடுகிறோம்வேண்டுகிறோம்

அந்த தேடும் படலத்தின் பொழுது நம்மை அறியாமலையே நாம் அந்த பரமனின்உணவாகி அவனில் கலந்து விடுகிறோம்அப்படியொரு ஆத்ம சாக்ஷாத்காரம் கிடைத்து விட்டால் நமக்கு நிரந்தரமான சாந்தி கிடைத்துவிடும் என்கிறார் பகவான்.

வயிற்றுப் பசிக்காக அணுகும் நம்மை நம்முடைய ஞானப் பசியைத் தீர்த்து நம்மைஆட்கொண்டு சாந்தப் படுத்துவாய் அருணாசலா என்று நமக்காக வேண்டுகிறார்பகவான்.

முதிர்ந்த அத்வைதியான பகவான் இம்மாதிரி  பாமரத்தனமான் பக்தியைஉபதேசிக்கிறாரே என்று நம்மில் சிலருக்கு சந்தேகம் ஏற்படலாம்.

பகவான் ஒருபொழுதும் தன்னை  எந்த ஒரு தத்துவத்திலும் பந்தித்துக் கொண்டதுகிடையாதுபரா பக்தி அல்லது ஞானனந்தர பக்தி எல்லோருக்கும் எளிதில் கைவராத ஒன்றுஆகவே பகவான் அவரவருக்கு பொருத்தமான மார்க்கத்தைஉபதேசிக்கிறார்.

சாதனா பக்தி என்பது மிகவும் கஷ்டமான ஒரு மார்க்கம்ஆகவேதான் பகவான்எல்லோரும் அவரவர் இடத்திலேயே இருந்துகொண்டு அவரவர்களுடையகர்மங்களை செய்துகொண்டு  பரமனில் பூரண சரணாகதிக்கு முயற்சிக்க வேண்டும்என்று சொல்லியுள்ளார்.

அந்தர்யாமியான பரமனை அடையாளம் காண்பதற்கு உருவ வழிபாடு உதவும்என்றால் அதுவும் தவறில்லை என்பதை பகவான் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளார்ஏன்,பகவானே தனது தாயாரின் சமாதி மீது மேரு சக்கிரத்தைப்பதித்து  மாத்ருபூதேஸ்வரர் ஆலயத்தை எழுப்பியுள்ளார்.
;நான்எனும் அகந்தை சிறிதேனும் இருப்பினும் அந்தர்யாமியை காணஇயலாது.'அகத்தைநைவேத்தியமாக அதாவது உண்வாக படைத்து அந்த அகத்தைஅழித்தால்த் தான் நாம் ஆத்மசாக்ஷாத்கரம் அல்லது முக்தி பெறமுடியும்.இதையேதான் பலர் தன்னிழப்பு,பூரண சரணாகதி,ஊணாதல்,பிரபத்தி,சர்வ ஜீவத்துவ நாசம்என்று கூறுகிறார்கள்.
உணவு நமது ஸ்தூல சரீரதின் அடிப்படைதாய் தந்தை சாப்பிடும் உணவு விந்தாகவும் கருவாகவும் உருப்பெற்று உயிர்ப்பெற்று மனிதர்கள் உருவாகிறார்கள்.ஆகவே உணவு இல்லையெனில் நாம் இல்லை.

அது போல் ஜீவாத்மாவை உணவாக அளித்து ஒரு புது சரீரத்தை-- சூக்ஷ்ம சரீரத்தை-- உருவாக்குகிறோம்ஒன்று அழிந்தால்த் தான் இன்னொன்று உருப் பெறமுடியும்
அருணாசலம் ஞானாக்னியின் உருவகம்அந்த ஞானக்னியில் நம்மை எரித்து அருணாசலத்துடனே லயித்து விடவேண்டும் என்கிறார் பகவான்.

திரு அருணை அல்லது திருவண்ணாமலையின் மகத்துவத்தை குறித்து பகவான் தனது முடிவான கருத்தை ஒரு முறை சிறந்த சிவபக்தரான ஒரு ஞானியிடம் கீழ்க்கண்டவாறு விளக்கியுள்ளார்.
அகந்தை எனும் அரக்கனை அழிதுவிட்டு அதனால் ஏற்பட்ட/ ஸ்புரித்த ஆன்ந்த்த்தில் காணக்கிடைக்காத ஒரு ஆன்ந்த நடனத்தை ஆடிக்கட்டிய இடம் சிதம்பரம். அப்படிப்பட்ட ஆன்ந்த ஸ்புரணையும் அடங்கி அமைதியின் வடிவமாக பரமசிவன் வீற்றிருக்கும் ஸ்தலம் திரு அருணை. சிதம்பரத்திலாவது உலக மாதாவான சக்தி ஈசனிடம் போட்டியிட்டு நடனமாடினார்.ஆனால் திரு அருணையிலோ அந்த சக்தி மாதா ஈசனிடம் அடைக்கலமாகி அவனின் ஒரு பகுதியே ஆனாள்.(அர்த்த நாரீசுவரர் கதையை ஏற்கனவே  நாம் அறிந்தூள்ளோம்). அப்படிப்பட்ட திரு அருணையை விட மேலான ஒரு ஸ்தலம் கிடையாது.’
மேற்கூறிய  பகவானின் கூற்றிலிருந்து நாம் இன்னொரு உண்மையையும் அறிந்து கொள்ள முடிகிறது.

எந்த ஒரு உணர்ச்சியானாலும் அது நம்முள்ளேயெ எழுந்து நம்முள்ளேயே அடங்கிவிடுகிறது; எப்படி பரமசிவனின் ஆன்ந்த ஸ்புரணை அவருள்ளே எழுந்து அடங்கிவிட்ட்தோ அது போல்.
இந்த கருத்தை பகவான் அருணாசல நவமணிமாலையிலும் கூறியுள்ளார்.

அசலனே யாயினும் அச்சபை தன்னில்
அசலையாம் அம்மை எதிராடும்அசல
உருவில் அச்சத்தி ஒடுங்கிட ஓங்கும்
அருணாசலம் என்று அறி
இதே கருத்தை திரு முருகனாரும் ஸ்ரீ ரமண சன்னிதி முறையில் கூறியுள்ளார்:

சோணம் என உலகம் புகழ் துரியத்தலம் உறைவான்
ஊணம் என் அடியேன் உயிர் ஒருங்கு உண்டன்ன்

சாப்பா டு என்ற வார்த்தைக்கு இன்னொரு விதமான விள்க்கமும் கொள்ளலாம்.  சா என்றால் சாவுமரணம் பாடு என்றால் அனுபவம்.  மரணானுபவம் ஏற்பட்டுவிட்டால் நமக்கு ஞானம் பிறந்து விடும்.அந்த அனுபவம் ஏற்படும்பொழுது நமக்கு னமக்கு நமது உண்மை சொரூபம் புரியும்.மரணம் நமக்கு ஏற்படுவதில்லை;இந்த ஸ்தூல சரீரத்திற்கு தான் ஏற்படுகிறது  பஞ்ச பூதங்களான இந்த
ஜீவாத்மா உன்னோடு லயித்து ஆத்ம ஸாக்ஷாத்காரம் ஏற்பட்டு விடுகிறது அருணாசலா.அதற்கு அருள் புரிவாய் அருணாசல என்று பகவான் வேண்டுகிறார். இங்கே பகவனின் மதுரை அனுபவம்னினைவு கூற்த் தகுந்தது.
இதே கருத்தை உள்ளது நாற்பதில் பகவான் இங்கனம் கூறுகிறார்.:

தலைவற் காணல் எவன் ஊணாதல் காண்
                 .நா 21

மதியினை உள்ளே மடக்கிப்பதியிற்
பதித்திட்தலின்றிப் பதியை மதியால்
மதித்திடுதல்  எங்கன் மதி.
                 .நா 22



No comments:

Post a Comment