Sunday, 28 December 2014

ரமணஜோதி 38

ரமணஜோதி 38

காமனும் சோமனும்

சித்தங்குளிரக் கதி ரத்தம்வைத் தமுதவா
யைத்திற வருண்மதி யருணாசலா

நமது சித்தம் உஷ்ணத்தால் தபித்துக் கொண்டிருக்கிறது.அதை குளிரவைப்பதற்கு  எல்லாம்வல்ல அருணாசலனின்  நிலவின் ஒளிக்கதிர்கள் போன்ற ஹாஸ்த ஸ்பரிசம் வேண்டும். ஆகவே அருணசலா,உனது கருணைக் கரங்களை எங்கள் மீது வைத்து எங்களை குளிர வைஎன்று பகவான் வேண்டுகிறார்.
இதில் இரண்டு விஷயங்களை சற்று விளக்கமாக பார்க்க வேண்டும்
ஒன்று: நமது சித்தம் ஏன் உஷ்ணத்தில் தபிக்க வேண்டும்?
இரண்டு: நிலவின் ஒளிக்கதிர்கள் விழும் பொழுது எப்படி குமுத மலர் வாய் திறக்கிறது?

ஆழ்வார்கள் வைஶ்னவ ஸம்பிரதாயங்களை விளக்கும்பொழுது தத்துவ த்ரயம் என்ன என்று விளக்கமாக கூறியுள்ளார்கள்.
ஆழ்வார்களில் மிக போற்றத் தகுந்தவர் மணவாள மாமுனிகள்.அவர் நமக்கு அளித்துள்ள தத்துவ த்ரயத்தின் விளக்கம் நாம் எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.
அனாதி காலம் முதல் ஜீவாத்மா இகலோக வஸ்துக்களின் மீதுள்ள ஈடு பாட்டினால் ஒரு விதமான இருளில் மூழ்கியிருக்கிறது..அதை அவித்யை மாயை அறியாமை என்றெல்லாம் வியாக்கியானித்திருக்கிறார்கள்
.சித் (ஜீவாத்மா),அசித் (லௌகிக போக பொருள்கள்), ஈஸ்வரன் (பரமாத்மா)என்பது தத்துவ த்ரயத்தின் சாரம். அசித் ஜீவாத்மா பரமாத்மாவை சென்றடைய விடாமல் தடுக்கின்றன
மாயையில் சிக்கியிருக்கும் பொழுது ஜீவாத்மாவின் உண்மை நிலை  நமக்கு விளங்குவதில்லை. பகவானை சரணடையும் பொழுது ஏற்படக்கூடிய பரமானந்தம்  நமக்கு தெரிவதில்லை.

ஜீவாத்மா எப்பொழுதும் தேவோஹம் மனுஶ்யோஹம்--

நானே தேவன், நானே மனுஶ்யன்-

இந்த ஸ்தூல ஸரீரமே நான்  என்று நினைத்துக் கொண்திருக்கிறது.
அப்படியே நான் வேறு சரீரம் வேறு என்று  புரிந்து கொண்டாலும் ஈஸ்வரோஹம்  அஹம்போகி என்று மமதை கொள்கிறது. என்னால் எதையும் கட்டுபடுத்த முடியும்;எல்லாவற்றையும் அனுபவிப்பவனும் நானேஎன்று இறுமாந்திருக்கிறது.,

"யோன்யதா ஸன்தமானம் அனன்யதா ப்ரதிபத்யதே கிம்தேன  க்ருதம்பாபம் சோஓரேனாத்மாபஹாரிணா"

நாம் செய்கின்ற பாபங்களிலேயே மிக பெரிய பாபம் பரமாத்மாவினுடைய சக்தி ஜீவாத்மாவிற்கு உண்டு என்று நம்புவதாகும்.
ஆமாம், நாம் பலமுறை ஆத்மா,ஜீவாத்மா,பரமாத்மா என்று கூறுகிறோமே?அத்வைத சித்தாந்த்த்தின் படி எல்லாம் ஒன்றே அல்லவா? சரி.அப்புறம் எப்படி இத்தனை பிரிவினைகள்?
ஆதி சங்கர்ர் தனது ஆத்ம்போதம் நூலில் ஆத்மா என்பதை விளக்கிக் கூறியுளார். அதன் சாரத்தை இப்படி கூறலாம்:
எது ஒன்று எங்கும் இருக்கிறதோ,எல்லாவற்றிலும் இருக்கிறதோஎப்பொழுதும் இருக்கிறதோ,எல்லாவற்றிற்கும்சாக்ஷியாக இருக்கிறதோ ,அது தான் ஆத்மா
அது சுத்த சைதன்யம்; சுயம் பிரகாசமானது; அதுவே எல்லாவற்றிற்கும் மூலாதாரம்.சொரூப ஞானம்
ஆனால் அவித்யா எனும் மாயை ஆத்மாவை ஆவரணம் செய்து ஒரு கற்பனையான உலகத்தை நம்மைச்சுற்றி உருவாக்குகிறது.

தூமேனாவரியதே வஹ்னிர்யதாதர்சோ மலேன
யதோல்பேனாவ்ருதோ கர்பஸ்த்தா தேனேதமாவ்ருதம்
                                                                                                கீதை அத்தி:3 சுலோ:37
எவ்வாறு நெருப்பை புகைமண்டலம் மூடி அதன் ஒளியை வெளியே தெரிய விடாமல் இருக்கிறதோ,அழுக்கும் தூசியும்கண்ணாடியை மூடி நம்மை (ஆத்மாவைபார்க்கவிடாமல் செய்கின்றதோ தாயின் கருப்பையில் இருக்கும் சிசுவைஎப்படிக் காண்முடியாதோ அவ்வாறு த்மாவை சுத்த சைதன்யத்தை காணமுடியாமல் மாயை நம்முடைய கண்ணை(அகக் கண்ணைறைத்து விடுகிறது
ஆசை எனும் திரையினால் ஆத்ம சொரூபம் மூடப்பட்டு இருக்கிறது.
ஆசை மூன்று விதமானது என்று இந்த கீத சுலோகம் விளக்குகிறது.
நெருப்பை மூடியிருக்கும் புகை காற்றடித்தால் அகன்று விடும்.அது சத்வ குணத்தை அடிப்படையாக கொண்ட்து.
கண்ணாடியின் மீது படிந்துள்ள அழுக்கை சிரமப் பட்டுத் தான் நீக்க முடியும்.அது ஜோ குணத்தை ஆதாரமாகக் கொண்டது.
மூன்றாவது ஆசையோ தமோகுணத்தை போன்றது. காலக்கிரமத்தில் தான் சிசு கருப்பையிலிருந்து விடுவிக்க படும்.தமோ குணத்தை அடிப்படையாக்கொண்ட ஆசை நீங்க காலமும் மிகுந்த பிரயாசையும் வேண்டும்
தாண்டவராயன் பிள்ளை கூறினார், கவருடை புவனமெல்லாம் கற்பிதம்” என்று.
அந்த மாயயின் லீலைகளினால் ஆத்மாவே பல உருவங்களில் தோன்றுகின்றன.
குயவன் கை பட்ட மண் சட்டியாகவும், பானையாகவும்,பொம்மைகளாகவும் பல உருவங்களில் பிரத்தியக்ஷமாவது போல்;
பொற்கொல்லர் கையில் தங்கம் வளையல்களாகவும் மாலையாகவும் அட்டிகையாகவும் உருவகப் படுவது போல்.
சிந்தித்துப் பார்த்தால் குயவன் உருவாக்குகின்ற எல்லா பாண்டங்களும் மண் தான்;பொற்கொல்லர் உருவாக்குகின்ற எல்லா ஆபரணங்களும் தங்கம் தான்.
அதே போல்த் தான் எல்லா ஆத்மாக்களும் பரமாத்மாவின் அம்சங்கள் தான்,
ஆனால் வாசனைகளின் தாக்கத்தால்,ஆசாபாசங்களின் ஊக்கத்தால் மனித மனம் உண்டாக்குகின்ற சஞ்சலங்களால் ஜீவாத்மா தபித்துக் கொண்டிருக்கிறது.அந்த ஆசாபாசங்கள் உண்டாக்குகின்ற தாபம்( உஷ்ணம்) அவ்வள்வு எளிதில் தணியாது.ஆனால் அந்த தாபத்திற்கு மனம் எனும் மாயையின் தாபம் தான் காரணம்.ஆசைகள் நசித்து விட்டால் மனிதாத்மாவிற்கு ஞானம் உண்டாகிவிடும்.ஆத்ம சாக்ஷாத்காரம் லபித்துவிடும்.
இதை விளக்கி பகவத் கீதையில் நிறைய சுலோகங்காள் உள்ளன அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.
பகவான் கிருஷ்ணர் பகவத் கீதை இரண்டாம் அத்தியாயம் 55ஆம் சுலோகத்தில் கூறுகிறார்:

ப்ரஜஹாதி ய்தா காமான் ஸர்வான் பார்த்த மனோகதான்
ஆத்மன்யேவாத்மனா துஷ்டஸ்திதப்ரக்ஞஸ்ததோஸ்யதே !!

மனதிலெழுகின்ற ஆசைகளையெல்லாம் அகற்றி விட்டு ஆத்மாவில் ஆத்ம திருப்தியடைகிறாயோ அப்பொழுது தான் ஆத்மாவின் ஆனந்த சொரூபம் விளங்கும்.
"’விசித்ராதேஹா ஸம்பத்திற் ஈஸ்வராயா னிவேதிதம் பூர்வமேவ க்ருதா ப்ரம்ஹன் ஹஸ்த பாதாதி ஸம்யுதா".
அது நிகழ வேண்டுமென்றால் நாம் பிரம்மனிடம் பூரண சரணாகதியடைய வேண்டும்.
ஆனால் அந்த நிலையை அடைய வேண்டுமென்றால் நாம் ஆசைகளையெல்லாம் ஒழிக்க வேண்டும்.ஆசைகள் ஒழியும் வரை ஏற்படும் உஷ்ணமும் மன அழுத்தமும் நம்மை மிகவும் அலட்டும்.
சித்தம் குளிர வேண்டுமென்றால் பல சாதனா முறைகளை நாம் பின்பற்றவேண்டும் அல்லது அந்த அருணாசலனின் பரம அருள் பெற வேண்டும்.
ஆசைகள் அழியும் வரை நமக்கு ஏற்படும் அல்லல்களை பகவத் கீதையில்  நிறைய சுலோகங்களில் கூறப்பட்டுள்ளது அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.
த்யாயேதோ விஷயான்பும்ஸ்ஸங்கஸ்தேஷூபஜாயதே
ஸங்காத் சாஞ்ஜாயதே காம்காமாத்க்ரோதோபிஜாயதே
                அத் 2 சுலொ 62
 முதலில் நமது கவனம் பரமனிடமிருந்து சிதறி மற்ற பொருள்களின் மீது திரும்பும். அன்த கவனச்சிதறல் பற்றாகவும் பற்று ஆசையாகவும் ஆசை நிறைவேறாத பொழுது கோபமாகவும் மாறி நம்முள் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தும்.அந்த அழுத்தம் நம்மை தபிக்கவும் தகிக்கவும் ஆரம்பிக்கும்.

க்ரோதத்பவதி சம்மோஹ: சம்மோஹாத்ஸ்ம்ருதிவிப்ரம்:
ஸ்ம்ருதிப்ரம்ஸாத்புத்தினாசோ புத்தினாசாத்ப்ரணஸ்யதி
                                           சுலோ: 63
கோபம் ஏற்படும்பொழுது மனம் குழம்புகிறது;சரி ஏது தவறேது என்பது மறந்து போகிறது.மனக்குழப்பம் ஏற்படுகிறது மறதியால் அவதிப் படுகிறோம்.
மறதியின் விளைவாக புத்தி நாசம் ஏற்படுகிறது.புத்தி நாசத்தால் சர்வனாசம் சம்பவிக்கிறது. இப்படி நம் மன அழுத்தமும் அதனால் ஏற்படக்கூடிய உஷ்ணமும் அதிகரிக்கிறது
ஆவுருதம் ஞானமேதேன ஞானினோ நித்யவரிணா
காரூபேண கௌந்தேய துஷ்பூரேணான்லேன
                     சுலோ 39 அத் 3
நமது ஆசைகளை பூரணமாக ஒரு பொழுதும் திருப்தி படுத்த முடியாது. ஆசைஅல்லது,காமம் தான் நமக்கு நித்திய சத்துரு.அவை எப்பொழுதும் ஆன்மாவை சூழ்ந்துகொண்டு ஆத்ம சாக்ஷாத்காரம் அடைவதை தடுக்கிறது.அம்மாதிரியான எதிர்ப்பினால் உண்டாகின்ற உரசலில் ஏற்படுகின்ற உஷ்ணம் நம்மை தபிக்கிறது,தஹிக்கிறது.அந்த சூட்டை தணிப்பதற்கு சோமனின் உதவி தேவைப் படுகிறது.
சோமனைக் குறித்து மேலும் அடுத்த அஞ்சலில் பார்ப்போம்.


No comments:

Post a Comment