Wednesday 14 January 2015

ரமணஜோதி 51

ரமணஜோதி 51

பக்குவம்

ஞிமிறுபோ நீயு மலர்ந்திலை யென்றே
நேர்நின் றனையென் னருணாசலா
நான் இன்னும் பக்குவப்படவில்லையென்று  நீ என்னை அனுக்ரஹிக்காமல் தாமதிக்கிறாயே,அருணாசலா?இது நியாயமா? சூரிய உதயத்திற்கு பின்னும் தாமரை மொட்டு மலரவில்லை என்று வட்டமிடும் தேனீ போல் நீ என்னர்கே வந்தும் கூட என்னுள் வந்து என்னை ஆசீர்வதிக்க மாட்டேனென்கிறாயே,அருணாசலா?இப்படி நமக்காக அரற்றுகிறார் பகவான் ரமணர்
இதன் மூல பகவான் சூசகமாக அறிவுறுத்துவதென்னவென்றால், பரமாத்மாவின் அருள் இல்லாமல் நாம் என்ன முயன்றாலும் ஆத்மசாக்ஷாத்காரம் ஏற்படாது என்பதைத் தான்.

அந்த அருணாசலன் தான் நம்மை பக்குவமடைய செய்ய்ய வேண்டும்.அப்படியிருக்க ‘நீ பக்குவப் படவில்லை .ஆகவே நீ என்னுடை ஐக்கியமாக முடியாது’ என்று சொல்வதில் என்ன அர்த்தம்?
இதே கருத்தை ஸ்ரீ அருணாசல பதிகத்திலும் காணலாம்:
கருணயா லென்னை யாண்ட நீ யெனக்குன்
                   காட்சிதன் தருளிலை யென்றா
          லிருணலி யுலகி லேங்கியே பதைத்திவ்
                   வுடல்விடி லென்கதி யென்னா
          மருணனை காணா தலருமோ கமல
                   மருணனுக் கருணனா மன்னி
          யருணனி சுரந்தங்க் கருவியாய்ப் பெருகு
                   மருணமா மலையெனு மன்பே
.”உனது கருணையால் என்னை அனுக்கிரகித்த நீ இப்பொழுது எனக்கு உன் தரிசனம் தரவில்லையென்றால்,நான் ஆத்ம தரிசனம் கிடாய்க்காமல் இந்த பூத உடலை
  விட்டுப் போக நேர்ந்தால்,அந்த துர்க்கதியை என்னவேன்று கூறுவது? அருணமலை எனும் கரூணா ஸாகரமே,வற்றாத நீர் வீழ்ச்சியென அருவியாய் பெருக்கெடுத்து  ஓடும் அறுணாசலா,நீ ஏன் என்னை கடாக்ஷிக்க மாட்டேனெங்கிறாய்? ஆதவனுக்கெல்லாம் ஆதவனாய் இருக்கின்ற  நீ என் இதயத் தாமரையை மலரச் செய்யக் கூடாதா? நீ நினைத்தால் தானே நான் பக்குவப் பட முடியும்?”
பக்தி மார்க்கத்தில் சஞ்சரிக்கின்ற எல்லாருக்கும் பரமனின் அனுக்கிரகம் வேண்டியுள்ளது. அதில்லாமல் பக்தியால் மட்டுமே ஆத்ம ஸாக்ஷாத்காரம் பெற இயலாது.
பக்தியே பலவிதமாக புராணங்களிலும் உப்னிஷத்துக்களிலும் வகைப் படுத்தப்
பட்டுள்ளது.
முக்கியமாக ஐந்து பிரிவுகள் உள்ளன

.1 ஞான பக்தி,
2.சுத்த பக்தி,
3.ப்ரேமி பக்தி,
4.ப்ரேமபரபக்தி,
5.ப்ரேமாதுர பக்தி
துருவன் நாராயணனை வேண்டி ஆறு மாதம் “ஒம் நமோ பகவதே வாசுதேவாயா” என்ற மந்திரத்தை ஜபித்து நாராயணனை தரிசிதான்.அன்ன ஆஹாரமின்றி அவனுடைய தவத்தை மெச்சி நாராயணன் அவனுக்கு தரிசனம் அளித்தார்.இருந்தும் துருவனது பக்தி தூய பக்தியாக கருதப் படவில்லை.ஏனென்றால் அவன் வேண்டியதெல்லாம் ராஜ்ஜியமும் அரசன் என்ற பதவியும்.அங்கே இகலோக ஆசைகள் அவனது பக்திக்கு களங்கமாகி விட்டன.
நம்மில் பலரும் ஆண்டவனிடம் ‘எனக்கு அது வேண்டும்,இது வேண்டும்’ என்று பிரார்த்திக்கிறோம்.அத்தகைய பகதர்கள் பக்தர்கள் அன்று;அவர்கள் ‘வணிக்குகள்’ அதாவது வியாபாரிகள் என்று பாகவதத்தில் பக்த பிரகலாதன் கூறுகிறான். நாம் பகவானிட பிக்ஷை கேட்பதின் மூலம் பகவானின் ‘சர்வஞ்ன்’ எல்லாம் தெரிந்தவன் என்ற தகுதிக்கு களங்கம் கற்பிக்கிறோம்.
பிரகலாதனிடம் பரமாத்மா தோன்றி ‘உனக்கு என்ன வேண்டும்,கேள்’ என்று கேட்ட பொழுது பிரகலாதன்.,’நான் உன்னை மறவாமலிருக்க வேண்டும்’ என்றானாம்.இதுவல்லவோ உத்தம பக்தி!
பாகவதம் ஏழாம் காண்டத்தில் பிரகலாத மஹாராஜன் பக்தியை ஒன்பது விதத்தில் பாலனம் செய்ய்யலாம் என்று கூறுகிறார்:
ஸ்ரவணம்: பரிக்ஷித் மஹாராஜவை இதற்கு உதாரணமாக கூறலாம்.பாகவதத்தை திரும்பத் திரும்ப ஸ்ரவணம் செய்ததால் அவர் அனுக்ரஹிக்கப் பட்டவராகிறார்.
கீர்த்தனம்: சுக பிரம்ம மஹரிஷியே இதற்கு முன்னுதாரணம்.ஏனென்றால் அவர் தானே பகவதத்தை பரிக்ஷித் மஹாராஜாவிற்கு கூறினார்
ஸ்மரணம்:பிரஹலாதான் இதற்கு சரியான உதாரணமவர் ஊணிலும் உறக்கத்திலும் பகவான் நாராயணன் ஞாபகமாகவே இருந்தார்.
பாத ஸேவனம்:மாதா மஹாலக்ஷ்மியே இதற்கு எடுத்துக்காட்டு.
அர்ச்சனம்:கோவில்களில் பொய் நாம் அர்ச்சனை செய்கிறோம் அல்லவா?மஹராஜா ப்ரது தன் எல்லா சொத்துக்களையும்
பரமனுக்கே அர்ப்பணித்து அர்ச்சனை செய்தார்.
வந்தனம்:  அக்ரூரர் இந்த பிரார்த்தனை முறைக்கு சிறந்த உதாரணம்
தாஸ்யம் . ஹனுமன் இந்த பக்தி முறைக்கு எடுத்துக்காட்டு.
ஸாக்யம் அர்ஜுனனின் பக்தி இதற்கு சிற்ந்த உதாரணமாகும்
ஆத்ம நிவேதனம்  மஹாபலி சக்கரவர்த்தி தனது இராஜ்ஜியத்தை மட்டுமல்ல தன்னையே அர்ப்பணித்தார்
பாகவதம் ஆறாம் காண்டத்தில் அஜாமலானின் கதை பரமனின் அனுக்கிரகத்திற்கு சிறந்த எடுத்துக் காட்டு.பாபங்களை செய்துகூட்டிய மிகவும் பாபியான அஜாமலன் மரணத்திலிருந்து எப்படி தப்பித்தான் தெரியுமா? மரணத் தறுவாயில் தன் மகனை “நாராயாணா” என்று கூப்பிட்டதின் காரணமாக அவனுக்கு தெய்வானுக்கிரகம் கிடைத்தது.
பகவான் ரமணர் பக்தி மார்க்கத்தை குறித்து கூறியுள்ளதை சற்றே பார்ப்போம்:
ஒரு பக்தர் பகவானிடம் கேட்டார்:
ஏதேனும் ஒரு ரூபத்தில் இறைவனை ரூபத்தியானம் செய்ய்யலாமா?
பகவான் சொன்னார்:
ஆஹா,செய்ய்யலாமே !உருவத்தியானம் நல்ல ஆன்மீக முன்னேற்றம் தரும்
பக்தர்:
இறைவனை உருவம் இல்லாதபடி அரூபத்தியானம் செய்ய்யலாமா?
பகவான் ரமணர்:
அரூப தியானமும் நல்ல பலனைத் தரும்
பக்தர்:
 ஆனால் பகவானே,சிலர் உருவத்தியானத்தை விட அரூப தியானம் தான் சிறந்தது என்று கூறுகிறார்களே?
பகவான்:
எந்த வழியில் சென்றாலும் அது ஆன்மீக முன்னேற்றம் தரும்.உங்களுக்கு உகந்த ஏதோ ஒரு வழியினைத் தேர்ந்தெடுத்து அதில் முழு மூச்சுடன் இடுபடுவதைவிட்டு,ஏன் அனாவசியமாக இது உயர்ந்ததா ,அது உயர்ந்ததா என்று கேள்வி கேட்டுக்கொண்டிருகிறீர்கள்.ஏதேனும் ஒரு வழியில் முழு மனதுடன் தீவிரமாக ஈடுபடுங்கள்..வீண் தர்க்கத்தால் பயனேதுமில்லை.



எவ்வளவு தீர்க்க தரிசன பார்வை. வெறும் வரட்டு வேதாந்தம் பேசாமல் நடைமுறைக்கு பொருத்தமான அறிவுரை. 

No comments:

Post a Comment