Wednesday 14 January 2015

ரமணஜோதி 52

ரமணஜோதி 52

அத்வைத சாரம்


தானே தானே தத்துவ மிதனைத்
         தானே காட்டுவா யருணாசலா

ஆத்மா தான் நிஜம்.வெளியுலகம் எல்லாம் மித்யா என்பது பகவான் ரமணரின் உபதேசம். அந்த  உண்மையான சொரூபத்தை எனக்கு காட்டுவாயருணாசலா என்கிறார் பகவான் இந்த சுலோகத்தில். ‘நான்” எனும் ஜீவாத்மா பரமாத்மவின் ஒரு பகுதிதான் என்பதுதான் உண்மை.
 நாம் போன அஞ்சலில் கீதை 10 ஆம் அத்தியாயத்தில் கிருஷ்ணர் தான் தான் எல்லாவற்றின் உள்ளும் இருந்து இயக்கிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்வதைக் கண்டோம்.
ஸ்ரீ ஏகான்ம விவேகம் நூலில் கீழ்க்கண்டவாறு கூறுகிறார் பகவான் ரமணர்:
          தன்னை மறந்து தனுவே தானாவெண்ணி
          யெண்ணில் பிறவி யெடுத்திறுதி-தன்னை
          யுணர்ந்துதா நாத லுலகஞ் சாரக்
          கனவின் விழித்தலே காண்க-வனவரதம்
இந்த உடலே ‘நான்; என்று உண்மையான ‘தன்னை’ மறந்து இந்தப் பிறவி முழுவதும் வீணாக்கிவிட்டு கடைசியில் உண்மையான் ‘தன்னை”-பரமாத்மாவின் அம்சமான ஜீவாத்மாவை உணர்ந்து கனவிலிருந்து விழித்தெழுந்து  நிரந்தரம் லயித்திருக்க வேண்டும் என்கிறார் பகவான்.
ஆதி சங்கரர் விவேக சூடாமணியில் இந்த தத்துவத்தை இரத்தின சுருக்கமாக இப்படி கூறியுள்ளார்:
     ப்ரமமம் சத்யம், ஜகன் மித்ய,ஜீவோப்ரஹ்மைவனபரஹ  
பிரமம் மட்டும் தான் நிஜம்;இந்த உலகம் எல்லாம் மித்யா; ஜீவாத்மா பரமாத்மாவிலிருந்து வேறல்ல என்கிறார் ஆதி சங்கரர்.
இது தான் கேவலாத்வைதம். பிரம்மம் சுத்த சித்; அதற்கு பிரிவுகள் கிடையாது; குணங்கள் கிடையாது; உருவம் கிடையாது; அதற்கு எந்த விதமான பரிமிதிகளும் (வரையறைகளும்) கிடையாது, ஆதியும் இல்லை; அந்தமும் இல்லை. அது சுயம் பிரகாசிக்கின்ற ஒன்று; அது சர்வ வ்யாபி.
ஜீவாத்மா பரமாத்மாவிலிருந்து வேறல்லாததால் அதுவும் சுத்த சித் தான்.
நமது ஜீவாத்மாவின் சொரூபமும் சத் சித் ஆனந்தம் தான்.
அத்வைதம் நமக்கு சொல்லிக் கொடுப்பது எல்லாம் ஜீவாத்மாவை மாயையால் ஏற்பட்ட பந்த பாசங்களிலிருந்து விடுவித்து நமது சுய சொரூப  சுபாவத்தை-ஸத் சித் ஆனந்தத்தை உணர்த்துவது தான்.
ஞானமாகின்ற அக்னியில் அவித்யயின் எல்லா கிளைகள், வேருகள் எல்லாவற்றையும் எரித்து ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் ஒன்றாக லயிப்பிப்பதுதான். அத்வைதத்தின் இலட்சியம்.
இந்த ‘நான் யார்’ என்ற விசார மார்க்கத்தில் நாம் அறிய வேண்டிய நாலு அம்சங்கள் :
*       விவேகம்
*      வைராக்யம்
*      ஷட் சம்பத்தி
*      முமுக்ஷுதா
இதையேதான் அஷ்டாவக்கிர கீதையில் கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது:
          யாரொருவன் மோக்ஷத்தை விரும்புகிறானோ,அவன் இந்திரியங்களின் இச்சைகளுக்கு தீனி போடுகின்ற எல்லா சாதனங்களையும் வெறுத்து ஒதுக்க வேண்டும்;அவன் க்ஷமை,சத்யம்,தயை,போதும் என்ற மனம்,உண்மையுணர்வு என்கின்ற குணங்களுக்கும் உடமையாயிருக்க வேண்டும்”
அத்வைத வேதாந்த தத்துவத்தை தாண்டவராயன் பிள்ளை கைவலிய நவனீதம் என்ற தனது நூலில் கீழ்க்கண்டவாறு பரமரிசித்துள்ளார்;
          நித்திய வனித்தி யங்கணிண்ணயன் தெரிவி வேக
          மத்திய விகபரங்கள் வருபோகங்களினி ராசை
          சத்திய முரைக்க வேண்டுஞ் சமாதியென் றாறு கூட்ட
          முத்தியை விரும்பு மிச்சை மொழிவர்சா தனமின் நான்கே
நித்தியவனித்திய வஸ்துக்களை தரம் திரித்து அறியும் விவேகம் அத்துவத தத்துவத்தின் முதற்படி. அதாவது ஆத்மா நித்தியம் தேகாதிப் ப்ரபஞ்சம் அனித்தியம் என்று வேறுபிரித்தறிதால் தான் விவேகம் எனப்படுகிறது
இரண்டாவது படி: சிருஷ்டிக்கு முன்னும் சிருஷ்டிக்குப் பின்னுமிராது,சிருஷ்டிக்குப்பின்னும் சம்ஹாரத்திற்கும் முன்னுமிருப்பதான இகலோக பரலோகங்ககளில் கரும ஜன்னியமாக வருகின்ற போக சுகங்களில் ஆசையின்மை யாகும்.
மூன்றாவது படி, சமம், தமம், விடல், சகித்தல், சமாதானம், சிரத்தை என்கின்ற சமாதி சட்க சம்பத்தியாம்
நாலாவது படி முக்தியை விரும்பும் முமுக்ஷத்துவம்

இந்த தத்துவங்களெல்லாம் பரமாத்மாவின் அனுக்கிரகம் இருந்தால் மட்டுமே 

புரியும்; தெரியும். அது பகவான் ரமணருக்கு சிறு வயதிலேயே கிடைத்தது. 

நமக்கும் அந் த அனுக்கிரகம் கிடைக்குமாறாகட்டும்

No comments:

Post a Comment