Thursday 13 November 2014

ரமணஜோதி

ரமணஜோதி 

தாயன்பே இறையன்பு


அருணாசலத்தின்
 பலனை எதிர்பாராமல் அரவணைக்கும் கருணையை பகவான் அடுத்த ஈரடிகளில் தாயின் கருணையோடு ஒப்பிடுகிறார்.

ஈன்றிடு மன்னையிற் பெரிதருள் புரிவோ
யிதுவோ வுனதரு ளருணாசலா

 நாம் ஏற்கனவே ரமணரின் தாயின் மீதுள்ள அன்பை அவரது செய்கைகளில் கண்டோம். அதை இங்கே அவர் வார்த்தைகளில் சொல்கிறார்.
தாய் எந்த பிரதிபலனையும் எதிர் பாராமல் அன்பை செலுத்துகிறாள்.தன் கடமைகளை நிறைவேற்றுகிறாள்.. பத்து மாதம் தன்னுள்ளே சுமந்து, தான் உண்ணும் உணவின் ஒரு பகுதியை அந்தக் குழந்தைக்கு அளித்து, தான் இழுக்கும் ஒவ்வொரு மூச்சின் மூலம் அதற்கு உயிர் மூச்சை அளித்து பெற்றெடுக்கிறாள்..பெற்றெடுத்த பின்னும் குழந்தையை தன்னிலிருந்து வேறுபடுத்திப் பார்க்காமல் தன்னின் ஒரு பாகமாகவே காண்கிறாள்..
எப்படி நாம் அனைவரும் அந்த சத் சித் ஆனந்த்தின் ஒரு பகுதியோ அது போல். அந்த சத் சித் ஆனந்தமும் நம்மை கை விடார் என்று பகவான் இந்த ஈரடிகள் மூலம் உணர்த்துகிறார்.

கர்ப்பப் பையில் குழந்தையை சுமக்கும் போது அவள் குழந்தைக்கு உணவும் உயிர்மூச்சும் மட்டுமல்ல கொடுக்கிறாள்..
அவள் காண்கின்ற கனவுகள்,பார்க்கின்ற காட்சிகள்,செய்கின்ற செயல்கள் ,ஏன் நினைக்கின்ற எண்ணங்கள் கூட அந்த குழந்தையில் தாக்கத்தை உண்டு பண்ணுகிறது.. ஆகவே தான் தாய்மையடைந்திருக்கும் போது
அவர்கள் கோரமான/கொடுமையான காட்சிகளைப் பார்க்கக் கூடாது,தவறான வார்த்தைகள் பேசக்கூடாது என்று நம் பெரியோர்கள் கூறினார்கள். பலாக்காயை,பூசணிக்காயை கர்ப்பிணிகள் துண்டு போடக்கூடாது என்றார்கள்.
அப்படி துண்டாடும் போது அவள் தெரியாமலையே அறுக்கின்ற விதைகளும், அவை அறுபடும்போது அவள் கர்ப்ப பையில் இருக்கின்ற குழந்தையில் ஏற்படுத்துகின்ற தாக்கமும் அந்தக் பிஞ்சு சிசுவின் பிற்கால வாழ்வைப் பாதிக்கக் கூடும் என்பதால் தான் அவர்கள் அப்படிக் கூறியிருக்கக் கூடும்
ஆனால் இன்று தொலைக்காட்சி தொடர்களில் வருகின்ற மனிதர்களையும் அவர்கள் காட்டிக்கூட்டுகின்ற கோமாளித்தனங்களையும் இரவென்றும் பகலென்றும் பாராமல் பார்த்துக் கொண்டிருக்கின்ற இன்றைய தலமுறை அடுத்த தலமுறையின் மீது ஏற்படுத்துகின்ற எதிர்மறையன விளைவுகளை நினைத்தால் கவலைப் படாமல் இருக்க முடியாது.
இவைகளை மூட நம்பிக்கை என்று எள்ளி நகையாடுபவர்கள் ஏராளம்..நமக்குத் தெரியாத உண்மைகள் எல்லாம் மூட நம்பிக்கை தான்.
கலீலியோ உலகம் உருண்டை என்ற போது அவரைப் பார்த்து பைத்தியம் என்று கூறிய உலகம் தானே இது.
அது இருக்கட்டும்..
அப்படிப்பட்ட தாயின் பேரன்பிற்கு மேலான அன்பு இந்த அருணாசலரின் அன்பு..
ஆகவே தான் அவரை தாயுமானவர் என்று கூறுகிறோம். அதே காரணத்தினால்த் தானோ என்னவோ பகவான் தன் தாயரின் சமாதி மீது கட்டப்பட்ட கோவிலில் மாதுருபூதேஸ்வரரை பிரதிஷ்டை செய்தார்.
https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif


No comments:

Post a Comment